Share

Jan 27, 2023

ஜமுனா

மூன்று நாட்கள் முன் 
24ம் தேதி செவ்வாய் கிழமை 
'சினிமா எனும் பூதம்' ஷுட்டிங்கில் 
ஜமுனா பற்றி தான் பேசினேன்.
 27ம் தேதி ஜமுனா மரணம்.

(முரசு டிவியில் ஞாயிற்றுக்கிழமை காலை
எட்டரை மணிக்கு 'சினிமா எனும் பூதம்'
R.P. Rajanayahem one man show.)

போர்க்குணம் கொண்டவர்.
ஜெமினியை சாவித்திரி திருமணம் செய்த போது உரிமையோடு 
இது சரி வராது என எதிர்த்தவர்.

தெலுங்கு திரை நாயகர்கள் 
என்.டி. ராமராவோடும் நாகேஸ்வர் ராவோடும் மனக்கசப்பு ஏற்பட்ட போது இனி இவர்களோடு  நடிக்க மாட்டேன் என தைரியமாக சொன்னவர்.

1989ம் ஆண்டு ராஜமுந்திரி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்.
பின்னாளில் பா.ஜ.க. பிரச்சாரமும் செய்தார்.

சாவித்திரி biopic ல் எப்படி தெலுங்கு பெண் அல்லாத கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம்? என கோபப்பட்டார்.
சாவித்திரி பற்றி முழுமையாக அறிந்தவர் தானே தான் என்று ஜமுனா சொல்வார். தன்னை கலந்து கொள்ளாமல் சாவித்திரி கதை படமானதில் கடும் அதிருப்தி.

ஜமுனா biopic எடுப்பதற்காக கேட்ட போது
என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ் இவர்களுடனான தன் மோதல் பற்றியும் biopicல் பதிவு செய்ய முடியாவிட்டால் தேவையேயில்லை என்றவர் ஜமுனா 

சாவித்திரியை விட ஒன்பது மாதம் இளையவர். இளமைக்கால தோழி.

'அமுதைப்பொழியும் நிலவே,
நீ அருகில் வராததேனோ'
எப்போதும் திகட்டாத பாடல்.
கண்ணழகி ஜமுனா. தெற்றுப் பல்லும் அழகு.

தமிழில் 
எம். ஜி. ஆருடன் 
தாய் மகளுக்கு கட்டிய தாலி,
' சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம், இனி ஒரு 
பிரிவுமில்லை , இன்பம் பெற தடையுமுண்டோ'

சிவாஜியுடன் நிச்சய தாம்பூலம்,
'பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?'
' மாலை சூடும் மணநாள், இளமங்கையின் வாழ்வில் திருநாள்,

ஜெய்சங்கருடன் 
குழந்தையும் தெய்வமும் 
' அன்புள்ள மான் விழியே,
ஆசையில் ஓர் கடிதம் '
' நான் நன்றி சொல்வேன்
 என் கண்களுக்கு'

சிகை அலங்காரத்தில்
பன் கொண்டை என்பதை சிறப்பாக பயன்படுத்தியவர் ஜமுனா.
இந்த பன் கொண்டை 
சரோஜாதேவிக்கும் ஸ்பெஷல்.

மிஸ்ஸியம்மாவில் 
பாவாடை தாவணியில் ரெட்டைஜடை.

எட்டு வருடங்களுக்கு முன் மறைந்த கணவர் ரமணாராவ் பேராசிரியர்.

மகன் வம்ஸியும் இப்போது பேராசிரியர்.
மகளும் உண்டு. இன்னொரு மகனும்.

1970 வரை சென்னையில் திருமலை பிள்ளை ரோட்டில் இருந்தவர் கணவர் ( திருமணம் 1965) பொருட்டு ஹைதராபாத்தில் 
நிலை பெற்றார்.

கணவர் மறைந்த போது ஜமுனாவின் வியாகுலம் இப்போதும் காணக்கிடைக்கிறது.

முதுமையில் தள்ளாமை காரணமாக தலை ஆடும். 
தலை நடுக்கம்
கடைசி காலக்கொடை. 
ஜமுனாவை வீடியோக்களில் அப்படி காண நேர்ந்தது.

 இருகோடுகள், புன்னகை ஜெயந்திக்கு 
ஜமுனா சாயல் கொஞ்சம் உண்டு.

https://m.facebook.com/story.php?story_fbid=3527334877479953&id=100006104256328&mibextid=Nif5oz

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.