Share

Jan 28, 2023

கண்ணன் மீதே காதல் கொண்ட பாஞ்சாலி

கண்ணன் மீதே 
காதல் கொண்ட பாஞ்சாலி?
- R.P. ராஜநாயஹம் 

சிவனுக்கும் பார்வதிக்கும் 
மிக பிரபலமான இருவர் தவிர 
இன்னொரு மகனும் உண்டு?

”ஒரிய எழுத்தாளரான பிரதிபா ரேயுடைய ’யக்ஞசேனி’ மகாபாரதத்தை மாறு பட்ட கோணத்தில் சொல்கிறது. 
திரௌபதியாகப்பட்டவள் கர்ணன் மீது மட்டுமல்ல, கண்ணன் மீதே காதல் கொண்டதாக இவரது பார்வை கூறுகிறது.” 



 சிற்பி பாலசுப்ரமண்யம் 
இப்படி சில வருடங்களுக்கு முன்
 ‘தி இந்து’வில் எழுதியிருந்ததை படித்த போது
கிரா சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது

 “கதைக்கு ஆயுள் கூடக் கூட 
சுவாரசியம் அதிகமாக 
வளர ஆரம்பித்து விடும். 
இப்படித் தான் மகாபாரதம் 
விரிந்து கொண்டே இருக்கிறது.”

இப்போது இங்கே ஜெயமோகன் தலையணை, தலையணை, தலையணகளாக மகாபாரதத்தை ’விளக்கெண்ணெயை எடுத்து குண்டி கழுவுவது போல’ எழுதுவது பற்றி நான் முன்னர் குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.
“ இது கலி காலம். கலிகாலத்தில் வியாசர், பரந்தாமன், பீமன், அர்ஜுனன், திரௌபதி, துரியோதனன் ஆகியவர்களை விட மகாபாரதத்தில் ஜெயமோகனுக்குத்தான் வேலை அதிகம்.”

பார்வதிக்கும் பரமசிவனுக்கும் பிள்ளைகளாக பிள்ளையாரையும்,முருகனையும் தான் தெரியும்.

திருச்சூர் குட்டிச்சாத்தான் கோவில் பற்றி 
அறிந்த விஷயம். 

சிவனுக்கும் பார்வதிக்கும் தான் 
குட்டிச்சாத்தான் பிறந்தானாம்.

 பெற்றோர் ஏன் குழந்தையை கை விட்டார்கள். 

எதனால் குட்டிச் சாத்தான் பிறந்ததை மறைக்க வேண்டும்.

An abondened, forsaken child?

திருச்சூர் குட்டிச் சாத்தானுக்கு பெயர் ’விஷ்ணு மாயா’ 

  பெயர்க்காரணம் சுவாரசியமாயிருக்கிறது. குட்டிச்சாத்தான் தன் ஏழாவது வயதில் 
தன் பெற்றோர் யாரென்று கண்டு பிடிக்க வேண்டி மஹா விஷ்ணு வேடம் பூண்டு 
சிவன் பார்வதியிருக்கிற கைலாசத்திற்கே 
வந்து விட்டானாம். 

அதனால் தான் பெயர் 
விஷ்ணு மாயா.

Identity Crisis.


...

மீள் பதிவாக

https://m.facebook.com/story.php?story_fbid=2639375216275928&id=100006104256328&mibextid=Nif5oz

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.