Share

Aug 14, 2022

Acid Wit


இடுப்பில் கூடை, கையில் அகப்பையுடன் பன்னி விட்டை, கழுதை விட்டை பொறுக்கும் பெண்களை
நான் சிறுவனாக இருக்கும் போது  அடிக்கடி பார்த்திருக்கிறேன். 
நன்றாக நினைவிருக்கிறது.

முள்ளுக்காட்டுக்குள்ளே
இப்படி விட்டை பொறுக்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் 
ஒருவன் சுற்றி முற்றி பார்த்து விட்டு  ரகசியமாக கேட்டான்
'வர்றியா? ரெண்டு ரூபா தர்றேன்.'

அவள் காதில் விழாதது போல   அகப்பையால் விட்டை பொறுக்கி,  கூடைக்குள் போடுவதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் போது,
 சற்று குரலை உயர்த்தி சொன்னான்
' ரெண்டு ரூபா, ரெண்டு ரூபா '

அவள் திரும்பி இவனைப் பார்த்து சத்தமாக கேட்டாள்.
'யாருக்கு ரெண்டு ரூபா? ஒங்கொக்காளுக்கா? ஆத்தாளுக்கா?'

Sivakumar Viswanathan Comment:
 "RPR சார். அந்த காலகட்டத்தில்  அவற்றையெல்லாம் இயல்பான விஷயங்களாக கடந்திருப்போம். ஆனால் கடைசியில் வழக்கம்போல் வச்சீங்களே ஒரு நச்.  👌"

Aug 13, 2022

Salman Rushdie stabbed

Salman Rushdie stabbed at New York.

Times of India Head lines.
Full coverage in Page 21.
Stabbing sends literary world into shock.

இந்து தமிழ் திசைக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை.

பதினான்கு பக்கத்தில் சல்மான் ருஷ்டி தாக்குதல் பற்றி செய்தியே காணவில்லை.

இதெல்லாம் தான் The Hindu ஆங்கில செய்தித்தாளில் வருகிறதே. அப்புறம் என்ன?

இந்து தமிழ் திசையில்
தலைப்பு செய்தி நாமக்கல் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வந்த சோதனை.

11ம் பக்கத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் வீட்டில் அணு ஆயுத ஆவணங்களை தேடும் உளவுத்துறை.

Times of India வாங்குறேன்.

இந்த இந்து தமிழிசையை நிறுத்திட்டு   தமிழ் செய்தித்தாள் வேற எத வாங்கலாம்?

Aug 11, 2022

விஜயராணி


மின்மினி

கே.எஸ்.ஜி இயக்கிய 'கண் கண்ட தெய்வம்'.
ரெங்காராவ், எஸ்.வி. சுப்பையா, பத்மினி, சிவகுமார் நடித்த இந்தப்படம் பின்னால் 'படிக்காத பண்ணையார்' என்ற பெயரில் மீண்டும்  கே.எஸ்.ஜி இயக்கத்திலேயே பல வருடங்களுக்குப் பின்னால் கே.ஆர். விஜயாவுக்கு 200வது படமாக வெளி வந்தது. கே. ஆர். விஜயாவின் முதல் படத்தை இயக்கிய கே. எஸ்.கோபால கிருஷ்ணன் தான் முன்னதாக அதே புன்னகையரசியின் நூறாவது படம் 'நத்தையில் முத்து' கூட இயக்கியவர்.

'கண் கண்ட தெய்வம்' படத்தில் சிவகுமாருக்கு ஜோடி விஜயராணி.
இனி காட்சிக்கு எப்போதும் அரிதாகிப் போய் விட்ட 'பாவாடை தாவணி'யில் விஜயராணி.


களையான முகம் தான். பாவாடை தாவணிக்கான கன்னிப்பெண் துறு துறுப்புக்கும் குறைவில்லை.

சிவகுமார் தென்னை மர உச்சியில் உட்கார்ந்து, கீழே ஏரியில் குளிக்கும் அந்த விஜயராணியைப் பார்த்து பாடுவதாக காட்சி
' நான் தென்ன மரத்தில குடியிருப்பது சின்னப்பாப்பா'.
 பிரபலமான டி.எம்.எஸ் பாட்டு.

தென்னை மரத்தில் ஷுட்டிங் போது நாள் முழுக்க வெய்யிலில். 

எவ்வளவு சிரமம்.
இந்த பாடல் ஷூட்டிங் அவஸ்தை பற்றி தன் 'இது ராஜபாட்டை அல்ல' நூலில் கூட குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னொரு சுசிலா - டி.எம்.எஸ் பாடல்
சிவகுமார் - விஜயராணி ஜோடிக்கு.
'கன்னுக்குட்டி, கன்னுக்குட்டி
காள கன்னுக்குட்டி
கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி '

விஜயராணி ஏற்கனவே படம் நடித்திருப்பாரோ, என்னவோ? 
டைட்டிலில் 'புதுமுகம்' 'அறிமுகம்'  குறிப்பொன்றும் இல்லை.
இந்த படத்திற்கு பிறகு படம் ஏதாவது இவருக்கு உண்டா? தெரியவில்லை.

https://youtu.be/9gsE0TijH00

https://youtu.be/nhBANUAaX8A

Aug 4, 2022

தல வெட்டி முனியப்பனாக புத்தன்


Transformation

புத்தன் தலயில வச்சி செஞ்ச விதி 


தல வெட்டி முனியப்பனாக ஆகியிருந்திருக்கான்


ஜேலம் சில்லாவுல ரஜம் ஜோறு நன்னாருக்கே