மின்மினி
கே.எஸ்.ஜி இயக்கிய 'கண் கண்ட தெய்வம்'.
ரெங்காராவ், எஸ்.வி. சுப்பையா, பத்மினி, சிவகுமார் நடித்த இந்தப்படம் பின்னால் 'படிக்காத பண்ணையார்' என்ற பெயரில் மீண்டும் கே.எஸ்.ஜி இயக்கத்திலேயே பல வருடங்களுக்குப் பின்னால் கே.ஆர். விஜயாவுக்கு 200வது படமாக வெளி வந்தது. கே. ஆர். விஜயாவின் முதல் படத்தை இயக்கிய கே. எஸ்.கோபால கிருஷ்ணன் தான் முன்னதாக அதே புன்னகையரசியின் நூறாவது படம் 'நத்தையில் முத்து' கூட இயக்கியவர்.
'கண் கண்ட தெய்வம்' படத்தில் சிவகுமாருக்கு ஜோடி விஜயராணி.
இனி காட்சிக்கு எப்போதும் அரிதாகிப் போய் விட்ட 'பாவாடை தாவணி'யில் விஜயராணி.
களையான முகம் தான். பாவாடை தாவணிக்கான கன்னிப்பெண் துறு துறுப்புக்கும் குறைவில்லை.
சிவகுமார் தென்னை மர உச்சியில் உட்கார்ந்து, கீழே ஏரியில் குளிக்கும் அந்த விஜயராணியைப் பார்த்து பாடுவதாக காட்சி
' நான் தென்ன மரத்தில குடியிருப்பது சின்னப்பாப்பா'.
பிரபலமான டி.எம்.எஸ் பாட்டு.
தென்னை மரத்தில் ஷுட்டிங் போது நாள் முழுக்க வெய்யிலில்.
எவ்வளவு சிரமம்.
இந்த பாடல் ஷூட்டிங் அவஸ்தை பற்றி தன் 'இது ராஜபாட்டை அல்ல' நூலில் கூட குறிப்பிட்டிருக்கிறார்.
இன்னொரு சுசிலா - டி.எம்.எஸ் பாடல்
சிவகுமார் - விஜயராணி ஜோடிக்கு.
'கன்னுக்குட்டி, கன்னுக்குட்டி
காள கன்னுக்குட்டி
கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி '
விஜயராணி ஏற்கனவே படம் நடித்திருப்பாரோ, என்னவோ?
டைட்டிலில் 'புதுமுகம்' 'அறிமுகம்' குறிப்பொன்றும் இல்லை.
இந்த படத்திற்கு பிறகு படம் ஏதாவது இவருக்கு உண்டா? தெரியவில்லை.
https://youtu.be/9gsE0TijH00
https://youtu.be/nhBANUAaX8A
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.