இடுப்பில் கூடை, கையில் அகப்பையுடன் பன்னி விட்டை, கழுதை விட்டை பொறுக்கும் பெண்களை
நான் சிறுவனாக இருக்கும் போது அடிக்கடி பார்த்திருக்கிறேன்.
நன்றாக நினைவிருக்கிறது.
முள்ளுக்காட்டுக்குள்ளே
இப்படி விட்டை பொறுக்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம்
ஒருவன் சுற்றி முற்றி பார்த்து விட்டு ரகசியமாக கேட்டான்
'வர்றியா? ரெண்டு ரூபா தர்றேன்.'
அவள் காதில் விழாதது போல அகப்பையால் விட்டை பொறுக்கி, கூடைக்குள் போடுவதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் போது,
சற்று குரலை உயர்த்தி சொன்னான்
' ரெண்டு ரூபா, ரெண்டு ரூபா '
அவள் திரும்பி இவனைப் பார்த்து சத்தமாக கேட்டாள்.
'யாருக்கு ரெண்டு ரூபா? ஒங்கொக்காளுக்கா? ஆத்தாளுக்கா?'
Sivakumar Viswanathan Comment:
"RPR சார். அந்த காலகட்டத்தில் அவற்றையெல்லாம் இயல்பான விஷயங்களாக கடந்திருப்போம். ஆனால் கடைசியில் வழக்கம்போல் வச்சீங்களே ஒரு நச். 👌"
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.