இந்தியாவின் ஜனாதிபதியாகியிருக்கும்
திரௌபதி முர்மு அவர்கள் தான் இதுவரை வந்துள்ள ஜனாதிபதிகளில் வயதில் இளையவர் என்று சொல்லப்படுகிறது. 64 வயது.
1969ல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளர் 56 வயது சஞ்சீவரெட்டி அப்போது ஜெயித்திருந்தால் அவரே இப்போதும் இளைய வயதில் ஜனாதிபதியானவர் என்ற பெருமையை தக்க வைத்திருப்பார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முந்தைய நாள் இரவில் பிரதமர் இந்திரா காந்தி 'Vote according to conscience' என்று சொல்லியதால் அப்போது குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ரெட்டி தோற்க நேரிட்டது.
ரொம்ப வித்தியாசமான விசித்திரமான ஜனாதிபதி தேர்தலாக இந்திய சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது.
எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் தேஷ்முக்.
சுயேட்சை வேட்பாளர் வெங்கட்ட வராக கிரி வெற்றி பெற்று ஜனாதிபதியானார். V.V. Giri
1969 ஜனாதிபதி தேர்தலில் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.
அப்போது நடந்த அரசியல் சுவாரசியங்களை வைத்து இந்திராகாந்தியை கதாநாயகியாக வோ அல்லது வில்லியாகவோ விவரித்து பிரமாதமாக நாவலே எழுதிப்பார்க்கலாம்
அப்புறம் சஞ்சீவரெட்டி 1977ல் ஜனாதிபதியான போது அவருக்கு இன்றைய ஜனாதிபதி போல 64 வயது தான்.
நீலம் சஞ்சீவ ரெட்டியும் 64 வயதில் ஜனாதிபதி ஆனவர் தான்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.