Share

Mar 31, 2022

Writer's Block



’நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்’ என்றான்                    எட்டயபுரம் தலப்பா கட்டி. 

ஆனால் கவிஞர் சமயவேல் சொல்வது போல
“ஏதேனும் ஒரு காரணத்தின் நிமித்தம் திடுமென மனது உறையத்தொடங்குகிறது.”

அந்தக் கவிதை முடிவது இப்படி-”எதிரெதிர் வண்ணங்களின் இழுப்பில் என் தூரிகை நகர்கிறது.”

Writer 's block. 

எழுத்தாளனுக்கு எப்படியும் தொற்றும் வியாதி. 

ஹெமிங்வே எழுத்து தடைப்படுவதை சகிக்க முடியாமல், எழுத எதுவும் இல்லையோ, ஊற்று வற்றி விட்டதோ என்ற தவிப்பில் தான் துப்பாக்கியால் தன்னை சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருப்பான். 

எலக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மெண்ட்டெல்லாம் ஏர்னெஸ்ட் ஹெமிங்வேக்கு கொடுக்கப்பட்டது. அப்புறமும் அவனுடைய தேர்வு, தீர்வு தற்கொலை தானே. 

கி. ரா 'இந்த இவள்' நாவலில் 
எழுதியுள்ள விஷயம் கீழே :

"மழையைப் போலத் தான் எழுத்தும். 
மழைப்பேறும் பிள்ளைப் பேறும் எப்போ என்று மகா தேவனுக்கே தெரியாதாம்.

வில்லைக் கையில் எடுத்தாச்சி, அம்பையும் வைத்துக் குறியைப் பார்த்து இழுத்தாச்சி. 
இடையில் எந்த ஒலிக் குறிக்கீடும் இருக்கக்கூடாது. 

தாளின் மேல்  பேனா ஊன்றி நாட்டியம் தொடங்கி விட்டால், அல்லது யோசித்து நின்று கொண்டிருக்கும் போது, மேலேயிருந்து ஒரு பல்லி விழுந்தால் கூட அனைத்தும் 
அணைந்து போய் விடும். 

இவை எல்லோருக்கும் அல்ல.'

" வாகையடி முக்கில் வந்து தேர் விழுந்து விட்டது " என்பாராம் புதுமைப்பித்தன். 

நடு வழியில் வந்து படுத்துக் கொள்ளும் 
நாவல் - மாடு - ரொம்பவே உண்டு என்று
 சுந்தர ராமசாமியும் சொல்லியிருக்கிறார்."

I'm not running out of Writer's Ink.



Mar 30, 2022

முகாரி ராகம்


"வேட்டையாடி பிழைப்பு நடத்திய
சபரி எப்பேர்ப்பட்ட பாக்யசாலி என்பதை நான் எங்கணம் விவரித்து சொல்ல முடியும்?"

தியாக ப்ரும்மத்தின் முகாரி கீர்த்தனை.

Sorrowful, colourful, emotive, Shantha rasa  Ragam Mukhari

முசிறி சுப்பிரமணிய ஐயர் தான் முகாரி ஸ்பெஷலிஸ்ட் என்று பழைய பெரியவர்கள் சங்கீத உலகில் புருவம் உயர்த்தி, கண் விரித்து அழுத்தமாக 
சொல்வார்கள்.
https://m.youtube.com/watch?v=4JDsz8opL_E&feature=youtu.be

சஞ்சய் சுப்பிரமணியமும் பிரமாதமாக பாடியிருக்கிறார்.

Mar 26, 2022

முத்துக்குமார் சங்கரன் கவிதை

"தீப்பெட்டியை திறந்து பார்த்தேன்.
அத்தனையும் பிஞ்சு விரல்கள் "
என்பது
குழந்தை தொழிலாளர்கள்
பற்றிய
மிக பிரபலமான கவிதை.
கந்தர்வன் கவிதை தானா??
என்ற கேள்வியுடன்
2009ம் ஆண்டு
என் பதிவொன்றில் 'நினைவில் நின்ற' இதை நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.
என் 'இலக்கியம், இசை, ஹாலிவுட் பதிவுகள்' நூலில் இந்த பதிவு இடம்பெற்றதுண்டு.

'குழந்தையும் காலமும்'
என்ற தலைப்பில் நான் எழுதிய
அந்த பதிவு கீழே:

குழந்தையும் காலமும்
- R.P. ராஜநாயஹம்

புதுமைப் பித்தன் கதையொன்றில் ஆற்று நீரில் தன் கால்களை விட்டு விளையாடும் குழந்தை ஒன்று .

 வானில் சூரியன் தவிப்பான் . குழந்தையின் பாததரிசனம் வேண்டி. 
குழந்தையின் பாதங்கள் எப்போது நீரில் இருந்து வெளிவரும் என ஏங்கும் சூரியன். 
அவ்வளவு சுலபமாய் கிடைத்து விடுமா குழந்தையின் பாத தரிசனம் என புதுமைப்பித்தன் கேட்பார்.
வெங்கட் சுவாமிநாதன் துவங்கி பலரும் இந்த 'புதுமைப் பித்தன் பன்ச் ' பற்றி மிகவும் சிலாகித்து எழுதியிருக்கிறார்கள்.

காலச்சக்கரம் சுற்றியது.
காலம் நகர்கிறது , 
காலம் போய்க்கொண்டிருக்கிறது. காலம் ஓடியது.
காலம் ஓடிவிட்டது.
 காலம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற காலம் Cliché கள் நாம் வாசித்து ,கேட்டு சலித்தவை தான்.

சமீபத்தில் முகுந்த் நாகராஜனின் கவிதை பரவசம் தந்தது

"தயங்கித் தயங்கி
அம்மாவின் கைப்பிடித்து
மெதுவாகப் படி இறங்குகிறது
குழந்தை

சீராகப் போய் கொண்டிருந்த
காலம்
சற்று தயங்கித் தயங்கி
முன்னகர்கிறது "

.....................

பெரியவர்கள் உலகில் உழைக்க உகுக்கப்படும் சிறுவர் சிறுமிகளின் labour பற்றி பிரச்சார சத்தமில்லாத கவிதை ஒன்று -
"தீப்பெட்டியைத் திறந்து
பார்த்தேன்
அத்தனையும் பிஞ்சுக்கரங்கள் "
மறைந்த கந்தர்வன் கவிதை ????

சுஜாதா கூட குழந்தைத்தொழிலாளி பற்றி ஒரு கவிதை முன்னர் எழுதியிருக்கிறார் .
அதில் ஒரு வரி இன்னும் மறக்க முடியவில்லை . 
ஏனென்றால் வெளியூர் போக நேரும்போது அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிட வேண்டியிருப்பதால் .

" ஹோட்டலில் சாப்டவுடன் இலை எடுப்பாய்"

...

முத்துக்குமார் சங்கரன் எழுதிய கவிதை என்பது இன்று தெரிய வந்தது.

அவர் பின்னூட்டம் கீழே:

 "கணையாழி ஹைக்கூ சிறப்பிதழில் பிரசுரமான என் கவிதை இது
பல்வேறு தளங்களில் என் பெயர் குறிப்பிடாமல் எடுத்தாளப்பட்டது.
தமுஎச கலை இரவு பேனர்களில் தவறாமல் இடம் பெறும். அது என்னை வார்த்தெடுத்த இயக்கம்.
1983இலேயே கவியரங்கங்களில் நான் பாடிய வரிகளே இவை"

ராஜநாயஹம்: 

ஓ, அப்படியா முத்துக்குமார் சங்கரன்.

இது உங்கள் கவிதை தானா?
மிகவும் மகிழ்ச்சி சார்.
இவ்வளவு காலமாக நான் குழம்பிக் கொண்டு இருந்திருக்கிறேன். எவ்வளவோ பேரை கேட்டு பார்த்தும் பதில் கிடைக்கவில்லை.
A serendipitous discovery!

"தீப்பெட்டி திறந்தால் பிஞ்சு விரல்கள்"

உங்கள் மீது நான் கொண்டிருக்கும் மதிப்பு இப்போது அதிகரிக்கிறது.

உங்களுக்கு நன்றியும் பாராட்டும்.

வாழ்த்துகள்.

மதுரை சோமுவின் தோடி

தோடி ராகம். தோடி கோடி பெறும்.

காதால் மட்டுமே கேட்பது ராகம் என்பதையே உடைத்து தோடியை ரூபமாக காட்டிய அசகாய சூரர் மதுரை சோமு எனும் இசை சாகரம்.

தோடியில் முக்குளித்து எழுவதற்கு
மதுரை சோமுவின் இந்த சந்திரசேகரா.
பாபநாசம் சிவன் இயற்றிய பாடல்.

சோமு பாடவா செய்கிறார்?

As usual  Madurai Somu bleeds when he sings..

Mar 18, 2022

King-size life


 

Krishnakumar Gurumurthy :

"Is there a subject in world which you are not a master in?

Ah...I realized now, You never bothered to learn how to make money in tons....

RPR turns around and says "Krishna, I am living my life to fullest...Leaving a great message for people to learn and ponder"...

Guess it's a conscious decision by the Maker...He should have said to RPR "Durai...You are one of the kind that I created...I don't intend to make more of people like you...Show people how to live life King size for " King size has multiple definitions which does not include money every time"

https://www.facebook.com/100006104256328/posts/2957758357770944/

Mar 16, 2022

சரவணன் மாணிக்கவாசகம் இன்று ராஜநாயஹம் பற்றி பதிவு

சரவணன் மாணிக்கவாசகம் இன்று
(16.03.2022) எழுதியுள்ள பதிவு:

"R P ராஜநாயஹம் இரட்டை அறுவை சிகிச்சைகள் முடிந்து வீடு திரும்பியிருக்கிறார்.

 எதிரிருப்பவரின் தரம், ரசனைக்கேற்ப தன்னுடைய Topicஐ மாற்றிக்கொள்ளும் திறமை படைத்தவர். 
ஏராளமான தகவல்களை மூளையில் சேகரம் செய்து கொண்டு, தேவைப்படுகையில் வெளியில் எடுப்பவர். 

இலக்கியம், இசை, ஹாலிவுட் சினிமா, தமிழ் சினிமா, கர்நாடக சங்கீதம்,  அரசியல் என்று முற்றுப்புள்ளி வைக்க முடியாத பட்டியலில் உள்ள பல விசயங்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில், இணையப்பக்கத்தில் பல வருடங்களாகத் தொடர்ந்து எழுதிவருகிறார்.  தியாகராஜ பாகவதர் விரட்டிப் போகிறார் பார் அது தான் பண்டரிபாய் என்பது போல், ஒரு காட்சியில் வரும் நடிகர்களையும் அவர்கள் நடித்த படங்களையும் வரிசைப்படுத்தி, அந்தப் படங்களைப் பார்க்கும் போது காட்சியின்பத்தை அதிகப்படுத்தியவர். (அது எண்பதுகளின் ஆரம்பம், இணையம் கிடையாது அப்போது). அதனால் சினிமா எனும் பூதம் நூலின் வெற்றி எனக்கு பெரிதாக ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. 
Shakespearean quote ஆன " A Little More Than Kin, and Less Than Kind’" என்பதை இவர் உபயோகித்த இடத்தை எண்ணிஎண்ணி பலமுறை வியந்திருக்கிறேன்.

Disgrace தமிழாக்கம் குறித்துப் பேசுகையில் உடன் நினைவுக்கு வந்தது, இவரது 2012 பதிவு. எனக்கு மட்டுமல்ல, பலநூல்கள் குறித்த தகவல்களுக்கு இவரது பதிவுகள் ஒரு Gateway ஆக பலருக்கும் இருக்கக்கூடும். 
அச்சுக்கும் Digitalக்கும் தரத்தை அதன் உள்ளடக்கமே நிர்ணயிக்கின்றது. ஆனால் நம்மிடையே இணையத்தில் வருவது குறைவான Shelf life கொண்டது என்ற கற்பிதம் இருக்கின்றது. 
அது கவிதையானாலும் சரி, உரைநடையானாலும் சரி. 
அந்த வகையில் இணையத்தில் Opinion Columnistக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
 இவருக்கு வாழ்க்கையில் எல்லாமே தாமதமாகவே நடந்திருக்கின்றன. Column writingற்கான Award கூட தாமதமாகவேனும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை
 எனக்கு இருக்கிறது."

ராஜநாயஹம் எழுத்து நடை


"காட்சிகளாக விரியும் வரிகளை லாவகமாக நீளம் தாண்டும் ஓட்டக்காரனைப்போல் எழுதி விடுகிறீர்கள் R.P. R. 
சிலருக்குப் பக்கங்கள் தேவைப்படும் விஷயங்கள் உங்களளவில் பத்திகளில் முடிந்து விடுகின்றன."

பாலு மணிமாறன்

Balu Manimaran

https://m.facebook.com/story.php?story_fbid=2678931682320281&id=100006104256328

You are just incredible R.P.R



Sivakumar Viswanathan 

சிவகுமார் விஸ்வநாதன்:

" ஒரே வாழ்க்கைக்குள் எத்தனை எத்தனை அனுபவ அடுக்குகள்.

 காஃப்கா, செகாவ், மார்க் ட்வைன் போன்றவர்களை,  ஏன் கஸான்ட்ஸாகிஸை கூட சேர்த்துக்கொள்ளலாம்.
 அவர்கள் எல்லோருடைய  கதைமாந்தர்களும் 
யார் யாரோவாக வெவ்வேறு பாத்திரங்களாக 
உங்கள் வாழ்க்கையில் வந்து போயிருக்கிறார்கள். 

They have played out their roles on your life's screen, while you were a spectator and a venerable actor too. You are just incredible Mr.RPR "

https://m.facebook.com/story.php?story_fbid=2986275401585906&id=100006104256328

Mar 15, 2022

R.P. ராஜநாயஹம் ஓவியமாக

R.P. ராஜநாயஹம் ஓவியமாக

ஓவியர் முரளிதரன் கிருஷ்ணமூர்த்தி

Mar 13, 2022

Age cannot wither me?


Ramalingam Muthukumarasamy 

ராமலிங்கம் முத்துக்குமாரசாமி:

ராஜநாயஹத்துக்கும் வயதாகும் போலிருக்கிறது.நான் அவரை மார்கண்டேயனாகவே நினைத்திருந்தேன்.

Mar 11, 2022

செல்லும்போதும் வரும்போதும்



கிளம்பிச் செல்லும் போதும்
திரும்பி வரும் போதும்

Mar 9, 2022

What a piece of work is a MAN

 a piece of work is a Man!

R. P. ராஜநாயஹம் யார்? 

மணிக்கொடி சிட்டி : நேர்மையே வாழ்க்கையாகவும் வஞ்சனை கண்டால் வெகுண்டு எழும் தன்மையும் கொண்ட அருமை நண்பர் அன்பே உருவானவர் R.P.ராஜநாயஹம்

கி. ராஜநாராயணன் : நீங்கள் புதுவையை விட்டுப் போனது எனக்கு ஒரு இழப்பு. நல்ல ஒரு சினேகம் விட்டுப் போச்சி. இப்போதெல்லாம் நல்ல மனுசர்களைப் பார்ப்பது அருகிக்கொண்டே வருகிறது. கொஞ்ச நாள் பழகினாலும் மனசை பிய்த்துக் கொண்டு போய்விட்டீர்கள். என்னோடு வந்து பழகியவர்களில் நீங்கள் ஒரு வித்தியாசமானவர் தான். நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அனுபவங்கள் புதைந்து கிடக்கிறது உங்களிடம். அதே பேச்சை நீங்கள் எழுத்தில் கொண்டுவர ஆரம்பித்து விட்டால் நாங்களெல்லாம் நடையைக் கட்ட வேண்டியது தான்.

டாக்டர். கி. வேங்கடசுப்ரமணியம்: அன்புமிக்க அறிஞர் ராஜநாயஹத்திற்கு! அறிந்தவர் அறிஞர்.
 நீங்கள் நன்கு அறிந்தவர்.
 எனவே இப்பட்டத்தைப் பெற தகுதியானவர். சரி துணைவேந்தரைத் தவிர வேறு யார் பட்டம் கொடுக்க முடியும் ?

சாரு நிவேதிதா : ராஜநாயஹம்
 உலக இலக்கியத்தின் வாசகர். 
எனக்கு ஷேக்ஸ்பியரில் சந்தேகம் ஏதும் இருந்தால் அவரிடம் தான் கேட்பது வழக்கம். 
ஹாலிவுட் சினிமா பற்றி அதிகம் அறிந்தவர். 
அறிவினால் வியக்க வைத்தவர். 
எப்படி ஒரு ராஜா மாதிரி வாழ்ந்தவர் , இந்த ராஜநாயஹத்தைப் பற்றித்தான் வீழ்ந்தாலும் லியர்மன்னன் மன்னன் தானே என்று எழுதினேன். சங்கீதத்திலும் கரை கடந்தவர் ராஜநாயஹம்.

யமுனா ராஜேந்திரன் : நண்பர்களை முத்தமிட்டு இறுக அணைத்துக் கொள்ளும்போது
 நம் உடலில் தொற்றும் ஆனந்தமும் 
ஈரமும் பரவசமும் போன்றது 
R. P. ராஜநாயஹம்  எழுத்துக்கள். 
கொஞ்சமாய் வார்த்தைகள். 
நூறு சொற்களுக்குள் நான்கைந்து அனுபவங்கள். அவரது பதிவுகளின் கடைசி வாக்கியங்களில் 
அழகையும் ஆச்சர்யத்தையும் 
அதீதமான அடக்கத்தையும் 
விலக்கத்தையும் அவர் ஒளித்து வைத்திருப்பார். 
ராஜநாயஹம்  எழுத்தாளர்களின் எழுத்தாளர்.

....