a piece of work is a Man!
R. P. ராஜநாயஹம் யார்?
மணிக்கொடி சிட்டி : நேர்மையே வாழ்க்கையாகவும் வஞ்சனை கண்டால் வெகுண்டு எழும் தன்மையும் கொண்ட அருமை நண்பர் அன்பே உருவானவர் R.P.ராஜநாயஹம்
கி. ராஜநாராயணன் : நீங்கள் புதுவையை விட்டுப் போனது எனக்கு ஒரு இழப்பு. நல்ல ஒரு சினேகம் விட்டுப் போச்சி. இப்போதெல்லாம் நல்ல மனுசர்களைப் பார்ப்பது அருகிக்கொண்டே வருகிறது. கொஞ்ச நாள் பழகினாலும் மனசை பிய்த்துக் கொண்டு போய்விட்டீர்கள். என்னோடு வந்து பழகியவர்களில் நீங்கள் ஒரு வித்தியாசமானவர் தான். நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அனுபவங்கள் புதைந்து கிடக்கிறது உங்களிடம். அதே பேச்சை நீங்கள் எழுத்தில் கொண்டுவர ஆரம்பித்து விட்டால் நாங்களெல்லாம் நடையைக் கட்ட வேண்டியது தான்.
டாக்டர். கி. வேங்கடசுப்ரமணியம்: அன்புமிக்க அறிஞர் ராஜநாயஹத்திற்கு! அறிந்தவர் அறிஞர்.
நீங்கள் நன்கு அறிந்தவர்.
எனவே இப்பட்டத்தைப் பெற தகுதியானவர். சரி துணைவேந்தரைத் தவிர வேறு யார் பட்டம் கொடுக்க முடியும் ?
சாரு நிவேதிதா : ராஜநாயஹம்
உலக இலக்கியத்தின் வாசகர்.
எனக்கு ஷேக்ஸ்பியரில் சந்தேகம் ஏதும் இருந்தால் அவரிடம் தான் கேட்பது வழக்கம்.
ஹாலிவுட் சினிமா பற்றி அதிகம் அறிந்தவர்.
அறிவினால் வியக்க வைத்தவர்.
எப்படி ஒரு ராஜா மாதிரி வாழ்ந்தவர் , இந்த ராஜநாயஹத்தைப் பற்றித்தான் வீழ்ந்தாலும் லியர்மன்னன் மன்னன் தானே என்று எழுதினேன். சங்கீதத்திலும் கரை கடந்தவர் ராஜநாயஹம்.
யமுனா ராஜேந்திரன் : நண்பர்களை முத்தமிட்டு இறுக அணைத்துக் கொள்ளும்போது
நம் உடலில் தொற்றும் ஆனந்தமும்
ஈரமும் பரவசமும் போன்றது
R. P. ராஜநாயஹம் எழுத்துக்கள்.
கொஞ்சமாய் வார்த்தைகள்.
நூறு சொற்களுக்குள் நான்கைந்து அனுபவங்கள். அவரது பதிவுகளின் கடைசி வாக்கியங்களில்
அழகையும் ஆச்சர்யத்தையும்
அதீதமான அடக்கத்தையும்
விலக்கத்தையும் அவர் ஒளித்து வைத்திருப்பார்.
ராஜநாயஹம் எழுத்தாளர்களின் எழுத்தாளர்.
....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.