Share

Mar 16, 2022

சரவணன் மாணிக்கவாசகம் இன்று ராஜநாயஹம் பற்றி பதிவு

சரவணன் மாணிக்கவாசகம் இன்று
(16.03.2022) எழுதியுள்ள பதிவு:

"R P ராஜநாயஹம் இரட்டை அறுவை சிகிச்சைகள் முடிந்து வீடு திரும்பியிருக்கிறார்.

 எதிரிருப்பவரின் தரம், ரசனைக்கேற்ப தன்னுடைய Topicஐ மாற்றிக்கொள்ளும் திறமை படைத்தவர். 
ஏராளமான தகவல்களை மூளையில் சேகரம் செய்து கொண்டு, தேவைப்படுகையில் வெளியில் எடுப்பவர். 

இலக்கியம், இசை, ஹாலிவுட் சினிமா, தமிழ் சினிமா, கர்நாடக சங்கீதம்,  அரசியல் என்று முற்றுப்புள்ளி வைக்க முடியாத பட்டியலில் உள்ள பல விசயங்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில், இணையப்பக்கத்தில் பல வருடங்களாகத் தொடர்ந்து எழுதிவருகிறார்.  தியாகராஜ பாகவதர் விரட்டிப் போகிறார் பார் அது தான் பண்டரிபாய் என்பது போல், ஒரு காட்சியில் வரும் நடிகர்களையும் அவர்கள் நடித்த படங்களையும் வரிசைப்படுத்தி, அந்தப் படங்களைப் பார்க்கும் போது காட்சியின்பத்தை அதிகப்படுத்தியவர். (அது எண்பதுகளின் ஆரம்பம், இணையம் கிடையாது அப்போது). அதனால் சினிமா எனும் பூதம் நூலின் வெற்றி எனக்கு பெரிதாக ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. 
Shakespearean quote ஆன " A Little More Than Kin, and Less Than Kind’" என்பதை இவர் உபயோகித்த இடத்தை எண்ணிஎண்ணி பலமுறை வியந்திருக்கிறேன்.

Disgrace தமிழாக்கம் குறித்துப் பேசுகையில் உடன் நினைவுக்கு வந்தது, இவரது 2012 பதிவு. எனக்கு மட்டுமல்ல, பலநூல்கள் குறித்த தகவல்களுக்கு இவரது பதிவுகள் ஒரு Gateway ஆக பலருக்கும் இருக்கக்கூடும். 
அச்சுக்கும் Digitalக்கும் தரத்தை அதன் உள்ளடக்கமே நிர்ணயிக்கின்றது. ஆனால் நம்மிடையே இணையத்தில் வருவது குறைவான Shelf life கொண்டது என்ற கற்பிதம் இருக்கின்றது. 
அது கவிதையானாலும் சரி, உரைநடையானாலும் சரி. 
அந்த வகையில் இணையத்தில் Opinion Columnistக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
 இவருக்கு வாழ்க்கையில் எல்லாமே தாமதமாகவே நடந்திருக்கின்றன. Column writingற்கான Award கூட தாமதமாகவேனும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை
 எனக்கு இருக்கிறது."

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.