Share

Dec 31, 2022

தாத்தாவ சின்ன பாப்பாவா வரஞ்ச பேத்தி


பூக்குட்டி:
"தாத்தா, இங்க பாரு.. 
ஒன்ன சின்னப்பாப்பாவா
 நான் வரஞ்சிருக்கேன் பாரு"



Dec 25, 2022

Ignored by some design

"You are playing in a league that does not recognise you Mr.R.P.R.

Your writings are really on  top league. Somehow you are ignored by some design.

(I wonder how someone like you would have been in desolation if not for the new age tech driven social media)"

 - Sivakumar Viswanathan

https://m.facebook.com/story.php?story_fbid=3495043614042413&id=100006104256328&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3502122950001146&id=100006104256328&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3496069363939838&id=100006104256328&mibextid=Nif5oz

https://www.facebook.com/100006104256328/posts/3489356294611145/?mibextid=Nif5oz

Dec 21, 2022

கானல் 'பொய்'கை



1986ம் வருடம். என் அப்பா அழைப்பதாக அவருடைய ஆபிஸில் இருந்து போன் வந்தது.
 திருச்சி பாலாஜி தியேட்டரை ஒட்டிய ராஜா காலனி வீட்டில் இருந்து கிளம்பி போனேன்.

 அப்போது சைல்ட் ஜீசஸ் ஆஸ்பிட்டலுக்கு எதிரே இருந்த கஸ்டம்ஸ் ஆபிஸ். 
அப்பா சூப்ரிண்ட் ஆஃப் கஸ்டம்ஸ்.

அப்பாவின் கேபினில் நுழைந்தேன்.
அப்பா முன் ஒருவர் அமர்ந்திருந்தார். 
அப்பா “ இவர் யார் தெரியுமா? 
பாக்யராஜின் அண்ணன் தன்ராஜ்.”

அப்பா காரணத்தோடு தான் என்னை அழைத்திருக்கிறார்.

நான் ஹிண்டு ரங்கராஜன் தயாரித்த ‘அழைத்தால் வருவேன்’ படத்தில் உதவி இயக்குனராய் வேலை பார்த்ததை பாக்யராஜின் அண்ணனிடம் சொல்லியிருக்கிறார்.
 ‘என் பையனை உங்க தம்பியிடம் சேர்த்து விடுங்கள்’ என்று சொன்ன பின்பு தான் என்னை ஆஃபிஸிற்கு வரச்சொல்லியிருக்கிறார்.

தன்ராஜ் உடனே “ இவர் தானா உங்கள் மகன் ராஜநாயஹம். கவலைப்படாதீர்கள். நான் என் தம்பி கிட்ட சொல்லி இவரை அஸிஸ்டண்ட் டைரக்டரா சேத்து விட்டுடுறேன்.”

உடனே தன் தம்பிக்கு என்னை அவருடைய அஸிஸ்டண்டாக சேர்த்துக்கொள்ளச்சொல்லி பிரமாதமான கடிதம் அங்கேயே ஆங்கிலத்தில் எழுதி என்னிடம் கொடுத்தார். 

Rajanayahem’s father is wellknown to me. He is very helpful to me…….. இப்படி..இப்படி.

”நீங்கள் இந்த கடிதத்தை கொடுங்கள். நான் பத்து நாளில் சென்னை வருவேன். அப்போது நேரடியாகவே நானும் தம்பியிடம் சொல்வேன். இனி உங்களுக்கு நல்ல எதிர்காலம்.”

தன்ராஜ் கோவையில் நடத்தி வந்த வீடியோ கேஸட் கடை மீது அப்போது ஒரு கஸ்டம்ஸ் கேஸ்.

தன்ராஜ் ரொம்ப உற்சாகமாக என்னிடம் பேசினார்.
நான் சென்னை போகவில்லை. 
பாக்யராஜிடம் சேரவுமில்லை.

அன்றைய மன நிலை. மீண்டும் சினிமாவுக்கு போக வேண்டுமா? Once bitten twice shy. வேண்டாம்.

....................

1992ம் வருடம் மார்ச் மாதம் பள்ளபட்டி பெரிய சேட்டு என்னை ஃபெமினா ஹோட்டலில் ரிஸப்சனிஸ்டாக பார்க்கிறார்.
“ Gabie! It’s a pleasant surprise.”
சென்னை போனவுடன் பெரிய சேட்டு போன் “ எனக்கு உன்னை ரிஸப்சனிஸ்டாக பார்த்தது பிடிக்கவில்லை.”
நான் வேலைக்கு சேர்ந்து அந்த ஐந்தாவது மாதம் ரிஸைன் செய்து விட்டேன்.
அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘ There is always trial and error.’

அந்த கடிதத்தை அவருடைய நண்பர் போலீஸ் டெபுடி கமிஷனர் பாஸ்கர் படித்திருக்கிறார். திரும்ப திரும்ப அந்த கடிதத்தை ரசித்து படித்திருக்கிறார்.

மே மாதம் முதல் வாரம் மீண்டும் பெரிய சேட்டு போன்.

“ நீ உடனே கிளம்பி சென்னை வா. பாக்யராஜ் உன்னை சந்திக்க விரும்புகிறார்.”

டெபுடி கமிஷனருக்கும், பெரிய சேட்டு ஃப்ரூக் இருவருக்குமே பாக்யராஜ் நண்பர். 

மூன்று பேரும் பேசிக்கொண்டிருக்கும் போது பாக்யராஜ் “ பாக்யா பத்திரிக்கையிலிருந்து சஞ்சீவி விலகி விட்டார். எம்.ஜி.வல்லபனை எடிட்டோரியலில் போட்டிருக்கிறேன். ஒரு நல்ல ஆள் பத்திரிக்கைக்கு தேவை.”

உடனே ஃபரூக் ” என் தம்பியுடைய க்ளாஸ்மேட் ஒருவன் இருக்கிறான். ராஜநாயஹம். இலக்கியமெல்லாம் கரைத்து குடித்தவன்.”

உடனே பாஸ்கர் “யாரை சொல்றீங்க?”
ஃபரூக் “ அந்த ட்ரையல் அண்ட் எர்ரர் கடிதம் எழுதியிருந்தானே”

“ ஓ அந்த பையனா? 
பாக்யராஜ், நானே ரெகமண்ட் செய்கிறேன்.
 அவன் எழுதிய கடிதம் நான் படித்து அசந்து போனேன். அப்படி ஆள் தான் பாக்யாவுக்கு தேவை.”. 

பாக்யராஜ் “ உடனே ராஜநாயஹத்தை அழைத்து வாருங்கள். பத்திரிக்கை எடிட்டிங் லைனில் சேர்த்துக்கொள்கிறேன்.”

பாக்யா பத்திரிக்கை பார்த்திருக்கிறேன். கணையாழி, நடை, கசடதபற, பிரக்ஞை, ஞானரதம் போன்ற பத்திரிக்கைகளின் வாசகன் நான். பாக்யா பத்திரிக்கையில் சேர்வதா?

முடியாது. மறுத்து விட்டேன். 

அவரிடம் அசிஸ்டண்ட் டைரக்டராக வேண்டுமானால் சேர்கிறேன்.

 பெரிய சேட்டு விடவில்லை. “ வாப்பா நீ மொதல்ல.”

மே 19ம் தேதி சென்னை போய் விட்டேன். 

பெரிய சேட்டு என்னிடம் சொன்னார் “ பாக்யராஜ் ‘அம்மா வந்தாச்சு’ ஷூட்டிங்குக்காக பாம்பே போயிருக்கிறார். எப்ப வருவாரோ? பொறுமையா இரு. ஒரு வேளை அவரை நீ சந்திக்க ஒரு மாசம் கூட ஆகலாம்.”

மறு நாள் பரபரப்பான திருப்பம். பாக்யராஜ் சென்னை வந்து விட்டார். 
அது கூட திருப்பம் என்று சொல்ல முடியாது. 

அன்று மாலை அவர் அண்ணன் தன்ராஜை கோவையில் வீடியோ கேஸில் அரஸ்ட் செய்து விட்ட செய்தி பாக்யராஜுக்கு வந்தது. 

உடனே சென்னையில் தன் நண்பர் 
டெபுடி கமிஷனருக்கு போன் போட்டு சொல்கிறார்.
 பாக்யராஜ் ரொம்ப மன உளைச்சலில். 

காரணம் அரெஸ்ட் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தான் பாக்யராஜின் அண்ணன் என்பதை தனராஜ் வெளிப்படுத்தியிருக்கிறார்.

 ஆனால் அந்த இன்ஸ்பெக்டர்
 “ நீ எவனா இருந்தா எனக்கென்ன?” என்று சொல்லி விட்டார்.

பாக்யராஜ் புலம்பல் – “ இந்த வீடியோ கடை பிஸினஸ் வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னேன். என் அண்ணன் கேட்கவில்லை. இப்போது இப்படியாகி விட்டதே.”

இங்கிருந்து பாஸ்கர் கோவைக்கு போன் செய்து ஒரு வழியாக தன்ராஜ் லாக் அப்பில் இருந்து வெளிவர நள்ளிரவு தாண்டி விட்டது.

பாஸ்கரும் ஃபரூக்கும் பாக்யராஜை தேற்ற விரும்பியிருக்கிறார்கள். 
பாஸ்கர் தன் ஆஃபிஸிற்கே வரச்சொல்லியிருக்கிறார்.

நள்ளிரவில் பாக்யராஜ் பாஸ்கரையும் ஃபரூக்கையும் சந்தித்தவுடன் கொஞ்ச நேரத்தில் பாஸ்கரே சொல்லியிருக்கிறார்.“ ராஜநாயஹம் வந்தாச்சு. “

பாக்யராஜ் என்ன சொல்ல முடியும்! ”நாளை காலை பத்து மணிக்கு பாக்யா ஆஃபிஸ்க்கு அழைத்து வாருங்கள்.”

21ம் தேதி காலை ஃபரூக் பைக்கில் 
தி. நகர் கிளம்பிப் போனோம். 

அங்கே உடனே வள்ளுவர் கோட்டத்தையொட்டியிருக்கும் லேக் ஏரியா வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.

“ உங்களை பாக்யா பத்திரிக்கைக்காகத்தான் அழைத்தேன்.”

நான் “ இல்ல சார். நான் மூவி மீடியாவிற்குத் தான் வர விரும்புகிறேன்.”

”நிறைய அஸிஸ்டண்ட்ஸ் இருக்காங்க.”

”பால்ல சக்கரை மாதிரி கரைஞ்சிடுறேன்.”

இரண்டு மணி நேரத்திற்கு மேல் என்னை பரிசோதித்தார்.
பின் அவருடைய பிரபல டயலாக்கில் சொன்னார் – “ சரி. ஜோதியில ஐக்கியமாகிடுங்க”

மீண்டும் 23ம் தேதி மாலை ஐந்து மணி முதல் பதினொரு மணி வரை என்னை பேச விட்டு கேட்டுக்கொண்டிருந்தார்.

வேறு யாரையும் அப்போது சந்திக்க மறுத்தார். கவிஞர் வாலி வந்திருப்பதாக தகவல் சொல்லப்பட்ட போது அவரை மறு நாள் சந்திப்பதாக சொல்ல சொன்னார்.

 அப்போது ஆஃபிஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ( பழைய ’முந்தானை முடிச்சு’ அசோசியேட் டைரக்டர்)  இளமுருகு, தன் மனைவி, மாமனாருடன் சந்திக்க முயன்றார். “ம்ஹூம்.” மறுத்து விட்டார்.

பாக்யா ஆஃபிஸில் எல்லோரும் இதை ஆச்சரியத்துடன் கவனித்துக்கொண்டிருந்தார்கள். 

இளமுருகு கமெண்ட்
“ராஜநாயஹத்தை நம்ம டைரக்டர் பம்ப் செட் போட்டு உறிஞ்சிக்கொண்டிருக்கிறார்!”

பிறகு பாக்யா ஆஃபிஸில் ஒரு நாள் 
தன்ராஜை சந்தித்தேன். 

அவர் கொடுத்த கடிதம் பற்றி ஞாபகப்படுத்தினேன். ஆர்வமாக கேட்டார். ”அப்பா எப்படியிருக்காங்க!”

இப்போது டெபுடி கமிஷனர் பாஸ்கர் மூலமாக பாக்யராஜிடம் சேர்ந்திருக்கிற விஷயத்தை சொன்னேன்.

தன்ராஜ் “ எல்லாத்துக்குமே ஒரு நேரம் வர வேண்டியிருக்குதுல்லங்க”

அப்போது பாக்யராஜின் கார் ஆஃபீஸில் நுழைந்தது.
பாக்யராஜ் காரில் இருந்து மனைவி பூர்ணிமாவுடன் இறங்கியதும் என்னுடன் நின்ற தன் அண்ணனைப் பார்த்து விட்டு கேட்ட கேள்வி
“ தனம், நீ எப்ப வந்த?”

ஓ, தன்ராஜ் சென்னை வந்தால் பாக்யராஜ் பங்களாவிற்கு வருவதில்லை போலிருக்கிறது. ஹோட்டலில் தான் தங்குகிறாரா?

ஐந்து மாதம் ’ராசுக்குட்டி’யில் குப்பை கொட்டி விட்டு நான் கிளம்பும்படியானது. சினிமாவில் என்னுடைய இரண்டாவது எண்ட்ரி பிரமாதமான தோல்வி. 
A successful failure!

ஆறு வருடங்களுக்கு முன் தன்ராஜ் கொடுத்த கடிதத்தை ராசுக்குட்டி தீபாவளி ரிலீஸுக்குப் பின் டிசம்பர் மாதம் ’கடைசியாக’ பாக்யராஜை அவர் வீட்டில் சந்தித்த போது தான் கொடுத்தேன். 
படித்துப் பார்த்து விட்டு சிந்தனையில் சில நிமிடம் கழித்த பின் திருவாய் மலர்ந்தார் “ அது தான் வந்துட்டிங்களே”
திரும்ப பாக்யராஜை சந்தித்ததேயில்லை.

...........

2006ல் திருப்பூரில் கார்மெண்ட்ஸில் வேலை செய்து கொண்டிருந்த போது 
மதியம் சாப்பிட்டு விட்டு ஆஃபிஸ் திரும்பும்போது ராக்கியாபாளையம் பிரிவில் 
பாக்யராஜ் வேனில் நின்றவாறு மைக் பிடித்து பேசிக்கொண்டிருந்தார். தி.மு.க தேர்தல் பிரச்சாரம். திருப்பூர் மாநகராட்சி தேர்தல்.
 பிரச்சார வேனை சுற்றி சின்ன கும்பல்.

நான் ஸ்கூட்டரில் சென்றவாறே 
மிக அருகில் பாக்யராஜை பார்த்துக்கொண்டே 
சினி பார்க் ரோட்டில் திரும்பினேன். 
அந்த ரோட்டில் ஸ்கூட்டர் திரும்புவதற்கு 
பாக்யராஜ் நின்று பேசிக்கொண்டிருந்த வேனையொட்டித்தான் செல்ல வேண்டியிருந்தது.

..... 

http://rprajanayahem.blogspot.com/2012/07/blog-post_29.html?m=1

https://m.facebook.com/story.php?story_fbid=2545541742325943&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=2600457206834396&id=100006104256328

https://www.facebook.com/100006104256328/posts/2602308816649235/?mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=2602432963303487&id=100006104256328&mibextid=Nif5oz

...............

Dec 18, 2022

ஊத்துக்காடு சைவ கீர்த்தனை

ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் கிருஷ்ண பக்தி ஜெகப்பிரசித்தம்.


வெங்கட சுப்பையரின் 
சுத்த சைவ கீர்த்தனை -
அறுபத்து மூன்று நாயன்மார்களின் பெயர்களும் வரும்.

பரஸ் ராகம்

" ஆளாவதென்னாளோ? 
சிவமே, 
உன் அடியார்க்கு அடியார்க்கு அடியனாய் ஆளாவதென்னாளோ?"

அருணா சாய்ராம் பாடி பிரபலப்படுத்திய பாடலை 
வழக்கறிஞர் சுமதி கவனப்படுத்தியதற்கு மகிழ்ச்சி.
முதல் முறையாக
இப்போது கேட்டுத் திளைத்தேன்.


'GABIE' alias R.P.Rajanayahem - Prof Late. Fazlullah Khan

'GABIE' alias R.P. Rajanayahem
Linguistic Scholar
 Professor Late. Fazlullah Khan :

"He was fondly known as Gabie among us friends. He would make us all laugh, and everyone used to enjoy his company. He was a treasure trove of information. 
 He knew to sing and dance and speak long dialogues of famous actors. 
He was cut out for the field of entertainment. 

Now I see him active on FB, a very resourceful and entertaining writer, with a unique style. Bravo Gabie."

- Fazlullah Khan

https://rprajanayahem.blogspot.com/2020/03/mohamed-fazlulla-khan-on-rprajanayahem.html?m=1

Dec 16, 2022

R.P.ராஜநாயஹம் 'காரணச்செறிவு' நூல் முன்னுரை - சரவணன் மாணிக்கவாசகம்


சரவணன் மாணிக்கவாசகம்:

'காரணச்செறிவு' என்ற தலைப்பில் தோழர் R.P. ராஜநாயஹத்தின் அடுத்த நூல் விரைவில் வர இருக்கிறது. மேலதிகத் தகவல்கள் விரைவில் பகிரப்படும்  அந்த நூலுக்கான எனது முன்னுரை உங்கள் பார்வைக்கு:



அசைவறு மதிகேட்டேன்.

நல்ல கவிதைகள் அடையாளம் கண்டுபிடிக்கப்படாமல் போவதன் காரணம், கும்பலில் தொலைந்து போவது.  சமீபகாலத்தில் சிறுகதைகளும், நாவல்களும் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் சராசரிக்கு மேலிருப்பதைக் கண்டுபிடித்தல் எளிது. எது எப்படியாயினும் இந்த மூன்றையும் எழுதுபவர்கள், எழுத்தின் தரம் பார்க்கப்படாமலேயே கவிஞர், எழுத்தாளர் என்று பெயரிடப்படுகிறார்கள். 
 

R.P. ராஜநாயஹம்  முப்பது வருடங்களுக்கு மேலாக  எழுதிக் கொண்டிருக்கிறார். 

 இலக்கியம், தத்துவம், அரசியல், கலை, சினிமா போன்று, இவர் எழுதாத விஷயங்களே இல்லை என்று சொல்லலாம்.  எழுத்திலும் தனக்கென தனித்துவ மொழியில்,  நினைவுகளின் அழகியலைக் கொண்டு வருபவர். முக்கிய எழுத்தாளர்கள் என்று யார் பட்டியல் கொண்டு வந்தாலும் அதில் ராஜநாயஹத்தின் பெயர் இல்லாதிருப்பது ஒரு முரண். இவ்வளவிற்கும் பல எழுத்தாளர்கள், ராஜநாயஹத்தின் எழுத்தைப் பலமுறை பாராட்டியிருக்கிறார்கள். உள்ளடக்கத்தை மட்டும் வைத்து, தரம் நிர்ணயிக்கும் வாசகர்கள் கணிசமான அளவு சேரும்பொழுது, ராஜநாயஹத்தின் இலக்கியஇடம் வேறாக இருக்கும்.

Jump-cut method இவர் எழுத்துகளில் அதிகம் காணப்படுவது. உதாரணத்திற்கு எழுத்து-புரிதல் என்ற கட்டுரையை எடுத்துக் கொண்டால், ஹெகல்-கான்ட்- கான்ராட்- Mann- பார்த்- பூக்கோ- தெரிதா என்று கடந்து ழாக் லக்கானில் நிறைவுறுகிறது.  இவ்வளவிற்கும் இது பத்து வரிகளில் அடங்கும் கட்டுரை.  அநேகமாக இவரது எல்லாக் கட்டுரைகளிலுமே நினைவுகளின் தாவல் இயல்பாக நடந்து கொண்டே இருக்கிறது.

நகைச்சுவை இவரது எழுத்துகளில் எப்போதும் விரவிக் கிடப்பது.  'கெட்ட வார்த்த ஏசு சாமி' போல வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை, எவனோ சிரிச்சுக்கிட்டே செத்திருக்கிறான் என்ற நாகேஷின் புன்னகைக்க வைக்கும் நகைச்சுவை,  அசோகமித்ரனின் 'என்ன ஒரு உழைப்பு' என்ற நுட்பமான நகைச்சுவை  என்று எல்லாவிதமானவையும் இவரது எழுத்துகளில் தோரணமாகி இருக்கும்.

Quotes இவரது எழுத்துகளை அலங்கரிக்க அங்கங்கே கலந்து இருக்கும். எமிலியின்
'Proud people breed sad sorrows' ஆக இருக்கட்டும், பூமித்தோலில் அழகுத்தேமல் என்ற பிரமிளின் கவிதை வரிகளாகட்டும், 
Life is a walking shadow என்ற ஷேக்ஸ்பியரின்
மேற்கோள்கள், 'வானவில் கனவுகள் நிறமிழந்து விட்டது தெரிகிறது' என்ற சுஜாதாவின் வரிகள் என்று ஏராளமான Quotes இவர் எழுத்தினிடையே வந்து கொண்டே இருக்கும்.

தத்துவார்த்தத்தையும், இலக்கியத்தையும் இவரிடமிருந்து பிரிக்கவே இயலாது.  Profanityஐ நகைச்சுவையின் அழுத்தத்தைக்கூட்ட உபயோகிப்பது இவரது வழக்கம்.  காரணச்செறிவு என்ற இந்த நூல் இவரது கலவையான எழுத்துகளின் சோற்றின் பதமாக எடுத்துக் கொள்ளலாம். எல்லாமும் இருக்கின்றன இந்த நூலில். எல்லாவற்றிற்கும் மேல் ராஜநாயஹம் தெளிவாகத் தெரிகிறார்.


http://saravananmanickavasagam.in/2022/12/16/%e0%ae%85%e0%ae%9a%e0%af%88%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/

Australian cousins visited us

Cousins in our home.

My Australian cousins visited us.

 A pleasant, joyful meeting
 after so many years.

Dec 14, 2022

Hail Chinnavar!

Hail Chinnavar!

Success is a journey and not a destination.
Beautiful things are in store for you, Udhayanithi Stalin Sir.
Go ahead and make your Day.

Dec 11, 2022

அத்த மக்க மாமன் மக்க

C.V.ஸ்ரீதர் - 
C.V. ராஜேந்திரன்

ராஜேந்திரனின் சொந்த அத்தை மகன் ஸ்ரீதர். எனவே இயக்குநர் ஸ்ரீதருக்கு அவர் சொந்த மாமா மகன்.

இனிஷியல் 'C.V.' என்பதால் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் என பரவலாக அந்த காலத்தில் இருந்தே திரை ரசிகர்கள் தவறாக நம்புகிறார்கள்.

ஸ்ரீதரிடம் அஸிஸ்டென்ட் ஆக சேர்த்து விடும்படி அவருடைய நண்பர் கோபுவிடம் ராஜேந்திரன் கேட்டிருக்கிறார். 

கோபு பதில் "ஸ்ரீதர் உனக்கு சொந்த அத்தை மகன் தானே , நீயே அவரிடம் கேட்கலாமே?"

சித்ராலயா கோபு மகன் நரசிம்மன் இதையெல்லாம் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

 நரசிம்மனே இது பற்றி எழுதியிருப்பதாக சொன்னார்.

ஸ்ரீதரும் ராஜேந்திரனும் உடன் பிறந்த சகோதரர்கள் அல்ல அல்ல என்று நானும் எழுதியிருக்கிறேன்.

சில நாட்களுக்கு முன்
 நரசிம்மனுடன் பேசினேன். 

சில வருடங்களுக்கு முன்பு நரசிம்மனுடன் மொபைலில் பேசிய போது 'உங்களுக்கு ஒரு pleasant surprise' என்றார். என்னவென்று பார்த்தால் அவருடைய தந்தை சித்ராலயா கோபு பேசினார். 
உற்சாகமாக பேசியவர் என்னை சந்திக்க விரும்பினார். வீட்டிற்கு உடனே வரச்சொன்னார். 

 சந்திப்பு வாய்க்கவில்லை.

..

Dec 10, 2022

ராஜநாயஹம் எழுத்து

R.P. ராஜநாயஹம் எழுத்து

சித்ரா சம்பத்:

"உங்கள் ரசனைக்கும், நுட்பத்திற்கும், ஆழ்ந்த நினைவாற்றலுக்கும், மிகச் சிறந்த அறிவாற்றலுக்கும், விஷயங்களை மிகப் பொருத்தமாக பொருத்தமான இடத்தில், நேரத்தில் விளக்குவதற்கும், பரந்து பட்ட உங்கள் இலக்கிய, ஆங்கில, சினிமா புலமைக்கும் யாரையும் உதாரணம் கூற முடியாது. நான் கவிஞனோ, எழுத்தாளனோ இல்லை. எனக்கு இதற்கு மேல் சொல்ல தெரியவில்லை 🙏"

https://m.facebook.com/story.php?story_fbid=3409253185954790&id=100006104256328&mibextid=Nif5oz

Dec 9, 2022

பிராபல்யம்..வித்வத்..

30.11.2022

சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்ல Pearl City Express ல் இரவு பயணம்.

அறுபத்தொரு வயது தங்கம் என்ற அம்மாள். பாமரத் தோற்றம்.
 முரசு டிவியில் சினிமா எனும் பூதம் நிகழ்ச்சி பற்றி, இடம் பெற்ற நடிகர் நடிகைகள் பற்றி தெளிவாக வரிசையாக நினைவில் வைத்திருக்கிறார்.
அவருடைய தங்கை தான் சினிமா எனும் பூதம் நிகழ்ச்சி பற்றி இவருக்கு சொல்லியிருக்கிறார்.
அந்த தங்கைக்கு உடனே, உடனே மொபைலில் கூப்பிட்டு
 முரசு டிவியில் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டரை மணிக்கு 'சினிமா எனும் பூதம்' நிகழ்ச்சி நடத்தும் ராஜநாயஹம் ரயிலில் வருவது பற்றி உற்சாகமாக சொல்ல ஆரம்பித்து விட்டார்.

ஞாயிறு காலையில் சில சமயம் பைப்பில் தண்ணீர் பிடிக்கும் போது சினிமா எனும் பூதம் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போயிருக்கிறது என்று வருத்தப்பட்டார்.


திருமுல்லைவாயிலில் இருக்கிற மகள் வீட்டில் இருந்து தூத்துக்குடி புதிய முத்தூருக்கு மகன் வீட்டிற்கு பயணப்பட்ட  அம்மையார் தங்கம்.

தங்கம் பெர்த்துக்கு மேலே அப்பர் பெர்த்தில் படுத்துக்கொண்டு இருந்த முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன்
திருவண்ணாமலை குமரேசன். ஆந்திராவில் வேலை.
திருச்செந்தூர் கோவிலுக்கு போவதற்காக ரயில் பயணம்.
காதில் headphone.

குமரேசன் " சார், நான் உங்க 'அரசியல் பிழைத்தோர்'  'மணல் கோடுகளாய்'
ரெண்டு புத்தகமும்
 படித்திருக்கிறேன் '


...

https://www.facebook.com/100006104256328/posts/3486535571559884/?mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3484088925137882&id=100006104256328&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3484925341720907&id=100006104256328&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3485135498366558&id=100006104256328&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3483496918530416&id=100006104256328&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3481537428726365&id=100006104256328&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3483352031878238&id=100006104256328&mibextid=Nif5oz

Dec 8, 2022

சங்கரன் கோவில் அத்தை

சங்கரன் கோவில் அத்தை.
அப்பாவின் மூத்த சகோதரி.

95 வயது.
செஞ்சுரியடிக்க இன்னும் ஐந்தே வருடம்.

தாத்தா செய்துங்கநல்லூர் சாராயக் கடை ராஜநாயஹம் பிள்ளை
 நூறு வயதைத் தாண்டி வாழ்ந்தவர்.

அத்தையின் தகப்பனார் போலவே இவரும் கூட
நூறு வயதைத்தாண்டுவார். ததாஸ்து!

அபாரமான ஞாபகசக்தி.
செய்துங்கநல்லூர் தாத்தா, ஆச்சி, பெரியப்பா, அப்பா பற்றி இயல்பாக நினைவுகளை 
அத்தை
அசை போட்டார்.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன் குலதெய்வம் குறித்து நான் கேட்ட கேள்வியை இப்போது நினைவில் வைத்து  அதற்கு ஆலோசனையும் கூட சொன்னார்.

அத்தை கணவர் 
ரத்தினம் பிள்ளை மாமா செக்கச்செவேல்னு ஹாலிவுட் ஆக்டர் போல இருப்பார்.
அந்த கால சங்கரன்கோவில்
S.R.S. transport பங்கு தாரர்.
சங்கரன் கோவில் நடராஜ பிள்ளையின் இளைய சகோதரர்.

46 வருடங்களுக்கு முன் ரத்தினம் பிள்ளை மாமா 1976ல் மறைந்து விட்டார்.

டிசம்பர் நான்காம் தேதி  
 பல வருடங்களுக்குப் பின் அத்தையை சந்தித்திருக்கிறேன்.

https://www.facebook.com/100006104256328/posts/3213525762194201/?mibextid=Nif5oz

https://www.facebook.com/100006104256328/posts/3088026201410825/?mibextid=Nif5oz

Dec 1, 2022

ஆட்டோட காது

தூத்துக்குடி அண்ணா நகர் ஏழாவது தெருவில் காணக்கிடைத்த
காது நீளமான ஆடு.
பாகிஸ்தான் ஜமுனாபாரி ஆடு.


நின்னு போஸ் கொடுத்துட்டு 'வரட்டுமா'ன்னு மேல நடந்துச்சு.

அம்மா சொன்ன சொலவடைகள்ள ஒன்னு..

"ஆட்ட அறுக்கறதுக்கு முன்ன காத எனக்கு சுட்டுக்குடுன்னானாம்"

..

அதி மதுர 'மதுர'

சட்டி மண்டயன் உதாரு :
"டேய் ஆட்டு மூக்கா, 
'தோராஹா' அணில் தாவனும்
'குஸ்தேன் கே பியார் கே' படத்தில நடிச்ச ஆடு தாவனும் சொந்த அண்ணந்தம்பிங்க, ஒனக்கு தெரியுமாடா?"

தெரியாதுன்னு சொன்னா 'தாப்பு'ல எவனும் மதிக்க மாட்டானே.

ஆட்டு மூக்கன் : "நல்லா தெரியும்டா. 'குஸ்தேன் கே பியாருக்கே' பரமேஸ்வரி தேட்டர்ல பாத்திருக்கேன். 
ஆடு தாவன் அவன் அண்ணன் அணில் தாவனெ விட நல்லா நடிப்பான்டா."

https://www.facebook.com/100006104256328/posts/1567343190145808/?mibextid=Nif5oz

Nov 28, 2022

R.P. ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்' - ஆத்மார்த்தி

நதியும் நிழலும் - ஆத்மார்த்தி 

 R.P.ராஜநாயஹத்தின் 
'சினிமா எனும் பூதம்' நூலை முன்வைத்து

{சினிமா எனும் பூதம் 
“ஸீரோ டிகிரி எழுத்து பிரசுரம்” சனவரி 2020 விலை ரூ 375/-}

கதவை யாரோ தட்டுகிறார்கள் திறந்தால் எதிரே நிற்பது புரூஸ்லி. ஓங்கி நம் முகத்தில் ஒரு குத்து விட்டு விட்டுப் போய் விடுகிறார். இது கனவோ நிஜமோ “ஏன் ப்ரூஸ்லீ என்னை அடிச்சீங்க?” என்று கேட்பது தானே சரி. ப்ரூஸ்லீ குத்து விட்டாற் போல் தான் R.P.ராஜநாயஹம் த்தின் சினிமா என்னும் பூதம் நூலைப் படிக்கத் தொடங்கியபோது எனக்குத் தோன்றியது. சினிமாவைப் பற்றி இப்படி ஒரு நூல் சாத்தியமா என்று கேட்டிருந்தால் இதை வாசிப்பதற்கு முன் இல்லவே இல்லை என்று தான் பதில் சொல்லியிருப்பேன்.

இந்த உலகத்தில் ஜீவித்திருக்கக் கூடிய யாவற்றின் பொதுத் தன்மையே நதியும் நிழலுமாய்ப் பெருகிக் கொண்டே இருப்பது தானே?  என் சினிமாவும் சினிமாவின் நானும் என்று ஒரு நூலை 
எழுதிப் பார்த்திருக்கிறார் 
R.P. ராஜநாயஹம்.

ராஜநாயஹம்  தன் கண்களைக் கொண்டு பார்த்ததை எடுத்து மனத்திலிட்டுக் கழுவிச் சுத்திகரித்து ஏட்டிலிட்டுக் காட்டத் தொடங்கியதைத் தொகுத்துப் பார்க்கையில் அது மாய விளக்கைத் தேய்த்து விட்டது. சினிமா என்னும் பூதம் கிளம்பி வந்திருக்கிறது. இந்தப் பூதத்துக்குப் பொய் பேசத் தெரியாது என்றே தோன்றுகிறது.

எம்ஜி.ஆர் சிவாஜி ஜெய்சங்கர் ஜெமினிகணேசன் போன்ற வெற்றிமனிதர்களின் கதைகளின் பின் திரைக்கப்பால் பேசுவதாகட்டும் சாவித்ரி சந்திரபாபு போன்ற தோல்விமுகங்களின் கதையாழத்தை அலசுவதாகட்டும் தருணங்களை அடுக்கிச் செல்வதன் மூலமாகவே மெல்லியதோர் அதிர்வைத் தொடர்ந்து பராமரித்துச் செல்கிற R.P.ராஜநாயஹம் த்தின் எழுத்துநடை முக்கியமானதாகிறது. ஒரு ரசிகராக அவர் சினிமா மீதும் அதன் உப-நுட்பங்கள் மீதும் கொண்டிருக்கிற புரிதலும் ஞானமும் அபாரமானது. ஆங்காங்கே அவை எந்தவிதமான அலட்டலுமின்றி வெளிப்படுவது அழகு. நேர் சம்பவங்களாய்த் தனக்கு நிகழ்ந்தவற்றைப் பேசுவதும் பிறர் மூலமாய்த் தனக்கு அறியக் கிடைத்தவற்றைச் சொல்வதும் ஒரே டோனில் ஒரே தொனியில் பேசமுடிவது நூல் மீதான நம்பகத்தைப் பெரிதும் ஏற்படுத்திவிடுகிறது.

இலக்கியம் கலை சினிமா அரசியல் என்று எந்தத் துறையாக இருந்தாலும் சரி, கிட்டச் சென்று உற்றுக் கேட்கும் போது பேசுகிறவர்கள் “ஆஃப் த ரெக்கார்டு” என்று ஒரு வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவது சகஜம். R.P.ராஜநாயஹத்தைப் பொருத்தவரை “ஆஃப் த ரெக்கார்டு” என்று ஒன்று கிடையாது. எல்லாக் கால நேர தருணங்களிலும் ஆன் தி ரெக்கார்ட் மட்டுமே சாத்தியமாகும் நீதிமானின் சீசீடீவீ கண்களை இமைக்காமல் பார்த்தும் பதிந்தும் கொண்டிருக்கவல்ல நிஜங்களின் கூட்டுக்குரலாகத் தன் நூலை ஆக்கியிருக்கிறார். இவை எல்லோருக்கும் ஒப்புமை உள்ளவையா எல்லாரும் இதனை ஏற்பார்களா இதை மறுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறதில்லையா இவருக்கு எப்படித் தெரியும் என்பன போன்ற கேள்விகளை மறுப்பதற்கில்லை. அந்தக் கேள்விகளுக்கும் இடமுண்டு என்பது தான் உண்மையே தவிர அதற்கு மாற்றாய் இந்த நூலை ஒட்டுமொத்தமாய் நிராகரிப்பதற்கு இடமில்லை.

நாம் சந்திக்க முடியாத முந்தைய காலத்தின் நட்சத்திர வானைத் திறக்கிறார் R.P.ராஜநாயஹம். 
மகா மனிதர்களை, தகுதி வாய்ந்த கலைஞர்களை தன் எழுத்தின் வாயிலாக தரிசிக்க முடியும் என்று நிரூபிக்கிறார் தமிழ் சினிமாவை நேசிக்கிற யாருக்கும் இந்த புத்தகத்தின் ஆய பயன் என்ன என்று கேட்டால் இந்தத் தரிசனம் தான் என்று சொல்வேன். ஒரு வகையில் பார்த்தால் இந்த எழுத்து கேரளத் தன்மையோடு இருப்பதாகப் படுகிறது. மலையாள மனோபாவம் விமர்சனங்களை அதனதன் கடுமையோடு ஏற்க முனைவது மற்ற நிலங்களைக் காட்டிலும் கூடுதலாய் நிகழ்வது. இந்தப் பூதம் கேரளத்தில் பிறந்திருந்தால் இன்னும் கொழுத்துப் பருத்திருக்கும் என்பது என் அபிப்ராயம்.
மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் போனவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் ஒரே ஒரு வெற்றியோடு அல்லாடி அவர்கள் ஒரு வெற்றி கூட கிடைக்காதவர்கள் என்று சினிமா துறையின் பல மனிதர்களை அவர்களது வாழ்க்கையின் உள்ளும் புறமுமாக நிகழ்ந்த நிகழ்த்தப்பட்ட நிகழாமல் போன சம்பவ நிரல்களைத் தொகுத்த வகையில் இந்த புத்தகம் ஒரு புனைவுக்கு சற்றும் குறைவில்லாத சுவாரசியத்தை படிப்பவர்களுக்கு நல்குகிறது ராஜநாயஹத்தின் எழுத்து நடை அபாரமான ஒன்று. ஒரு நிகழ்வை குறிப்பிட்ட பத்திரிகையாளர் எந்தவகையில் அறியத் தருகிறார் என்று பார்ப்பதற்காகவே அந்த பத்திரிக்கையை நாடிச் செல்வோர் பலர் உண்டு தானே இந்த இடம்தான் புனைவும் நிஜமும் கைகுலுக்குகிற இடம். இந்த இடத்தில் இருந்து ஒரு  ஞாபக-ஆவணத் தொகுப்பைத் தந்திருக்கிறார் ராஜநாயஹம்

சினிமா எப்போதும் செல்வாக்கு மிகுந்த ஊடகமாகவே தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது சாதாரண மனிதர்கள் சினிமாவுக்குள் வந்து பெயர் வாங்கி பிறகு  நட்சத்திரமாக வாழ்ந்து தன் பிம்பத்தை சுமக்க மாட்டாமல் சுமந்து நிஜமும் புனைவும் கலந்த ஒரு வாழ்வாகவே வாழ்வது சினிமாவின் டிசைன்.ஒரு கறாரான மனிதராக R.P.ராஜநாயஹம் தான் அறியக் கிடைத்த அத்தனை தகவல்களையும் கோர்த்து இந்த நூலில் வாசகர்களுக்கு தருகிறார்.

 எதிர்பாராத இடங்களில் தென்படுகிற நகைச்சுவை இந்த நூலின் அடுத்த பலம். 

பெரிதாக வாழ்ந்தவர்களின் மேல் மலர் தூவுவதைக் காட்டிலும் தடுமாறி வீழ்ந்தவர்கள் மீது மருந்து கலந்த காற்றாக வருடிச் செல்வது தான் R.P.ராஜநாயஹத்தின் மனவிருப்பமாகத் தோன்றுகிறது. அதனை மெய்ப்பிக்கிற பல இடங்கள் இந்த நூலில் இருக்கின்றன. 

பரிவு என்பதும் கடுமை என்பதும் கலந்தே தாங்க வேண்டிய பொறுப்புடன் எழுத முனைந்து அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார் R.P.ராஜநாயஹம் . நல்ல வெர்ஸஸ் கெட்ட வேண்டிய வெர்ஸஸ் வேண்டாத என்கிற பொதுநோக்குமுறையோடு இந்த நூலை அணுகத் தலைப்படுவோர்க்கு ஏமாற்றமே மிஞ்சும். சினிமா என்னும் மகாநிலத்தின் சம்பவங்களை மொத்தமாக்கிச் சாட்சியப்படுத்தியிருக்கிறார்.

இப்படியெல்லாம் நடந்திருக்குமா இதுதான் நடந்ததா என்பதை தாண்டிக் கசப்பும் இனிப்பும் அற்ற துவர்ப்புச் சாக்லேட்டுகளை ருசிக்க தந்துவிட்டு மாயாவி போல் மறைந்து விடுகிறார் ராஜநாயஹம்.

 நூலெங்கும் தன் மன விரிதலாகவே பேசிச்செல்கிற ஆசிரியர் முடிந்து நிறைகிற புள்ளியில் வாசக ரசிகனின் மனச்சமன்  இருளில் கரைவது நூலின் ஆகச்சிறப்பு.

 வாசித்து முடிக்கிற யாருக்கும் அதற்கு முன்பிருந்த சினிமா மீதான ப்ரேமையும் பந்தமும் அப்படியே தொடருமா என்பது கேள்விக்குறியே. அனுபவம் எதுவாகினும் நம்மைக் கலைக்கவும் சிதைக்கவும் மாற்றியமைக்கவும் பூரண உரிமை கொண்டது தானே, அந்த வகையில் ‘சினிமா என்னும் பூதம்’ எனும் நூல் நமக்குள் நிகழ்த்துகிற அனுபவம் அச்சு அசலானது. நெடுங்கால மாற்றங்களை உண்டு பண்ணக் கூடியது. 
சினிமா விரும்பிகளுக்கு இந்த நூல்               ஒரு பெட்டகம்.

 “ரைட்டர்ஸ் ரைட்டர்” என்ற வகைமையில் 
எழுத்தாளர்களின் எழுத்தாளராகவும் R.P.ராஜநாயஹத்தைச் சொல்வதற்கான சாத்தியங்களை இந்த நூல் திறந்து தருகின்றது.

 எனக்குப் பிடித்த நூல்களின் வரிசையில் சினிமா என்னும் பூதத்தை வைப்பேன். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் வரிசையில் R.P.ராஜநாயஹத்தின் பெயர் நிச்சயம் உண்டு.

இன்னும் அடுத்த காலங்களின் நிலங்களின் சினிமா பூதங்களைக் கட்டியும் அவிழ்த்தும் சாட்சிப் படுத்தக் கூடிய நூல்கள் பெருக வேண்டும். R.P.ராஜநாயஹங்கள் எல்லா மொழிகளிலும் நிலங்களிலும் தோன்றவேண்டும். தோன்றுவார்கள்.

காணத் தானே சினிமா?
நதியும் நிழலும் ; 
R.P.ராஜநாயஹம்  'சினிமா என்னும் பூதம்' நூலை முன்வைத்து

"சினிமா என்னும் பூதம் “ஸீரோ டிகிரி எழுத்து பிரசுரம்” சனவரி 2020 
விலை ரூ 375

Nov 22, 2022

தந்தை ஆதித்தனும் மகன் நிவாஸ் ஆதித்தனும்


'விளக்கேற்றியவள்' ஆதித்தன் தான் "கத்தியைத்தீட்டாதே, உந்தன் புத்தியைத்தீட்டு" டி.எம்.சௌந்தர்ராஜன் பாடலுக்கு படத்தில் நடித்தவர்.
அசோகனுக்கு இந்தப்பாடல் என்று தவறாக நினைத்து விடக்கூடாது.

பாடல் காட்சி வீடியோ இல்லை.
விளக்கேற்றியவள் பட பாடல்கள் மட்டுமல்ல. ஆதித்தன் கதாநாயகனாக நடித்த மற்றொரு படம் 'தாயும் மகளும்' பாடல்கள் வீடியோவும் கிடையாது. பாடல்களுக்கு ஆடியோ தான் இருக்கிறது. இவர் நடிகர்களில் பாவப்பட்ட ஜீவன் தான்.

'விளக்கேற்றியவள்' மற்ற பாடல்கள்
டி.ஆர்.பாப்பா இசை.
1. முத்தமா, ஆசை முத்தமா
முத்தம்மா, வேணும் மொத்தமா

2. வரிசையா மாப்பிள்ளை வருவாரா
சீர் வரிசைய பார்த்தா சிரிப்பாரு,
சீர்வரிசைய பார்த்தா தான் சிரிப்பாரு

3. தொட்டில் கட்டி ஆடுது குருவி

'தாயும் மகளும்' பாடல்கள்

1. சித்திரையில் நிலவெடுத்து தேனாற்றில் ஊற வைத்து

2. கட்டட்டா, கட்டட்டா 
வெட்டி வெட்டி கட்டட்டா
மெல்ல மெல்ல பார்வையாலே உன்னை கட்டட்டா

3. காற்றுள்ள போதே தூற்றிக்க வேணும், கவனத்தில் வையடியோ

இசை பி.எஸ். திவாகர். இவர் இளையராஜாவின் குருநாதர்களில் ஒருவர்.


'காதல் படுத்தும் பாடு' வில்லன்களில்
ஒருவராக ஆதித்தன்.

எம்.ஜி. ஆரின் தனிப்பிறவியில் ஆதித்தன் கொள்ளைக்கூட்ட தலைவனாக ஒரு சிலைக்கடியில் எப்போதும் உட்கார்ந்திருப்பார். சஸ்பென்ஸ்..
மாஸ்க்கை கழற்றி விட்டால்
 சாண்டோ சின்னப்பா தேவர்!

தனிப்பிறவியில் ஆதித்தன் நடித்த காட்சிகள் காணக்கிடைக்கின்றன.

தேவரின் மற்றொரு படம் தெய்வச் செயலில் மேஜர் சுந்தர்ராஜனை betray செய்கிற குரங்காட்டி ஆதித்தன் தான்.
மாடர்ன் தியேட்டர்ஸ் சி.ஐ.டி சங்கர் படத்தில் ஆரம்பத்தில் 'பாம்' வைத்து கொல்லப்படுகிற போலீஸ் அதிகாரி ஆதித்தன்.

ஆதித்தன் திருமலை ராயன் பட்டினத்தில் மிராசு மகன்.

மிலிட்டரியில் படாத இடத்தில் குண்டடி பட்டு சொல்லாமல்
 ஓடி வந்திருக்கிறார்.

'கார்கோடகன்' நாடகம் காரைக்கால், திருமலைராயன் பட்டிணம் பகுதிகளில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

சினிமா கைவிட்ட பின்னும்
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் எப்போதும் காரைக்கால் அம்மையார் கணவர் செட்டியாராக நாடகங்களில்.

கோட்டுச்சேரியில் 'திருமுருகன் திரையரங்கம்' - டூரிங் தியேட்டர் சொந்த இடத்தில் 1970ல் நடத்தியிருக்கிறார். மாட்டுப்பண்ணை வைத்திருந்தார்.

கடும் போராட்டமான வாழ்க்கை.

1980ல் ஆதித்தன் கதாநாயகனாக 'சூரிய நமஸ்காரம்' படம் சொந்த தயாரிப்பு. கதாநாயகி கே.ஆர். விஜயா இவருக்காக குறைந்த சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டும் ஃபைனான்ஸியர் கைவிட்டதால் பெரும் பொருளதார சரிவு.

1986ல் கைதியின் தீர்ப்பு படத்தில் வில்லன் ஆதித்தன்.

காரைக்காலில் டெய்லர் வேலை.
பி.எஸ்.ஆர் தியேட்டரில் வேலை பார்த்திருக்கிறார்.




ஆதித்தனுக்கு இரண்டு மனைவிகள். சந்திரா, பத்மா.
சந்திராவுக்கு ஐந்து பிள்ளைகள்.
பத்மாவுக்கு நான்கு புத்திரங்கள்.

ஒன்பது பிள்ளைகளில் கடைசி நிவாஸ் ஆதித்தன்.

மணிகண்டன் 'காக்காமுட்டை'யில் ஐஸ்வர்யா ராஜேஷ் கணவராக, அந்த இரண்டு சிறுவர்களின் அப்பாவாக நடித்தவர் நிவாஸ் ஆதித்தன்.

முன்னதாக "நாங்கள்" படத்தில் ஐந்து கதாநாயகர்களில் ஒருவர் இந்த நிவாஸ்.

கலைஞர் டிவி 'மானாட மயிலாட' சீசன் 3ல் ஆடி போராடி சீசன் 4ல் செகன்ட் ப்ரைஸ் வாங்கிய நிவாஸ் நல்ல நடனக்கலைஞர்.

இந்த மாதம் வெளிவந்துள்ள  திலீப்பின் 'தட்டச்சேரி கூட்டம்' மலையாளப் படத்தில் வில்லன் நிவாஸ் ஆதித்தன்.

விஷால் 'லத்தி' ஹீரோயின் சுனைனா நடிக்கும் 'ரெஜீனா'வில் நடிக்கிறார்.

ஷார்ட் ஃப்ல்ம் ஒன்று
'குமரேசன் கலெக்டர்'  
நிவாஸ் இயக்கியிருக்கிறார்.

சென்னைக்கு சினிமாவுக்காக வந்து இருபத்தி இரண்டு வருடங்களாக சளைக்காமல் நீண்ட போராட்டத்தில் நிவாஸ்.

2000 ஆண்டில் தந்தை ஆதித்தன் சினிமாவில் மறுபடியும் நுழைய வேண்டும் என பெரு முயற்சி செய்து பார்த்தவர் மகன் நிவாஸ்.
Child is the father of the Man.

காமராஜர் திரைப்படத்தில் நண்பர்களில் ஒருவராக ஆதித்தன் தலை காட்டியிருக்கிறார்.

மனோபாலா பட ஆடிசனுக்கு தகப்பனாரை அழைத்துப் போயிருக்கிறார். ஈடேறவில்லை.

இப்போது தன் திரையுலக எதிர் காலம் குறித்த பெரு முயற்சிகளில்
நிவாஸ் ஆதித்தன்.
விரக்தி அண்ட முடியாத மகிழ்ச்சியான கலைஞன்.

Nov 18, 2022

காதல் நிலவே கண்மணி ராதா



Rev.Jeevakani Aruldoss:

'காதல் நிலவே கண்மணி ராதா,
நிம்மதியாக தூங்கு'

"இந்த பாடலை நமது 'கேபி'
( R.P. ராஜநாயஹம்) பாடி அதை அனைவரும் மெய் மறந்து கேட்ட நமது அமெரிக்கன் கல்லூரியில் படித்த இனிமையான நாட்களை பொழுதுகளை மறக்க முடியாது.
P.B.ஸ்ரீனிவாஸும் ஜெமினி கணேசனும் நினைவில் வருவதற்கு முன் 
கேபி ( Rajanayahem R.p. ) தான் 
நமக்கு நினைவுக்கு வருகிறார்.

 அவனது இனிமையான குரலும் இந்த பாடலை பாடும் நளினமும் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. மறக்க முடியாத சுவையான அனுபவங்கள் அவை."

https://m.facebook.com/story.php?story_fbid=655582319265862&id=100044422989688&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3409253185954790&id=100006104256328&mibextid=Nif5oz

Nov 17, 2022

மலையாள நடிகை கே.வி சாந்தியுடன் க்ரூப் டான்சர் ஆனந்தன் இந்தி பாடல் காட்சியில்

ராஜ் கபூர், நர்கீஸ் நடித்த படம் Chori Chori.
1953ல் இந்த இந்திப் படத்தில் சி.எல்.ஆனந்தன் ஒரு பாடலில் க்ரூப் டான்சர்.  மீனவர்களில் ஒருவராக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்.

இந்த பாடல் 'உஸ்ஸுபாரு சாஜன், இஸ்ஸு பாரு தாரே' . மலையாள நடிகை கே.வி. சாந்தி ஆடிபபாடும் காட்சி. 


ஆனந்தன் துடுப்பு போட்டுக்கொண்டு எழுந்து நின்று கை நீட்டும் செம்படவர்.
அடுத்த வருடம் தங்கமலை ரகசியத்தில் ஆனந்தன் 'வீராதி வீரன், சூராதி சூரன்' பாடல் காட்சியில் ஆடிப்பாடி நடித்தார்.

கே.வி. சாந்தி தமிழ் படங்களிலும் நடித்தவர்.
ஜெமினி கணேசன் நடித்த 'பெண் குலத்தின் பொன் விளக்கு' 'ஆடிப்பெருக்கு' 
சிவாஜியின் 'மருத நாட்டு வீரன்' போன்ற படங்களில் இந்த சாந்தி உண்டு.

கே.வி.சாந்தி திருவனந்தபுரத்தில் மெர்ரிலேண்ட் ஸ்டுடியோவில் நடிகை.
மெர்ரிலேண்ட் ஸ்டுடியோ அதிபர் சுப்பிரமணியம் அறுபதுக்கும் மேற்பட்ட மலையாளப் படங்கள் தயாரித்தவர். அவற்றில் ஐம்பதுக்கும் அதிகமான படங்களின் இயக்குநர்.

ஜெமினி கணேசன், பத்மினி நடித்த 'குமார சம்பவம்' முக்கியமான மலையாளப் படங்களில் ஒன்று.

எனக்கு இந்த மெர்ரிலேண்ட், அந்த சுப்ரமண்யம், மலையாள நடிகை கே.வி. சாந்தி பற்றி Associate memory.

மதுரையில் எங்கள் மொசைக் கம்பெனி. இதில் அப்பா, பெரியப்பா, அத்தை பங்கு தாரர்கள்.

என்னுடைய பெரியப்பா மகன் பால்ராஜ் (திருச்சி கிரிமினல் லாயர்),
 அத்தை மகன்கள் சீனிக்குமார் ( ஹைவேஸ் அடிசனல் டிவிசனல் இஜ்சினியர்) செல்லத்துரை ( வி.ஏ.ஓ)

இவர்கள் வேலைக்கு போகும் முன் எங்கள் ஸ்டாண்டர்ட் மொசைக் கம்பெனியை கவனித்து கொண்டார்கள்.
பின்னாளில் ஸ்ரீ கோமதி அம்பிகை ட்ரான்ஸ்போர்ட் அதிபராக சென்னை, தூத்துக்குடி, சங்கரன் கோவிலில் கொடி கட்டிய எங்கள் நெருங்கிய உறவினர் சங்கரன் கோவில்
 மணி கூட இந்த மொசைக் கம்பெனியில் நிர்வாகியாக வேலை பார்த்திருக்கிறார்.

பழனி தேவஸ்தானம், பண்ணைக்காடு அரசு மருத்துவமனை, திருவனந்தபுரம் மெர்ரிலேண்ட் ஸ்டுடியோவில் மொசைக் டைல்ஸ் நாங்கள் போட்டதுண்டு.

மெர்ரிலேண்ட் ஸ்டுடியோ எக்ஸ்டென்ஸன் பில்டிங்கில் மொசைக் வேலையை கவனித்துக் கொண்டிருந்த செல்லத்துரை அத்தான் மெர்ரிலேண்ட் சுப்பிரமணியம், இந்த நடிகை கே.வி. சாந்தியையெல்லாம் அப்போது சந்தித்ததைப் பற்றி அப்போது அடிக்கடி சொல்வார்.

இப்போது 2020ல் தான் கே.வி. சாந்தி இறந்தார்.

Nov 16, 2022

கிருஷ்ணா - விஜய நிர்மலா


அலேக் நிர்மலாவின் கணவர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா.
இவர் நடித்த 'மோசக்காரனுக்கு மோசக்காரன்', 'ஜாக்பாட் ஜாங்கோ' டப்பிங் படம் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் முன் போல 1970களில் தமிழ்நாட்டில் பிரபலம். 


விஜய நிர்மலா ' இலந்தப் பயம் ' பாட்டு 'பணமா பாசமா ' 
(1968 )படத்தில் இடம் பெற்று இவரை அலேக் நிர்மலாவாக பிரபலமாக்கியது.

 அலேக் நிர்மலாவுக்கு அப்போதே கல்யாணமாகி பத்து வயதில் 
பெண் குழந்தை இருந்தது.
 ஒரு மகனும் கூட. 

 தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவும்
 ( அவருக்கும் கூட திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையில் )விஜய நிர்மலாவும் திருமணம் செய்து கொண்டார்கள்.
முதல் கணவர் பெயர் ராமகிருஷ்ணா.

முதல் கணவருக்கு பிறந்த அந்த மகன் நரேஷ். 
இன்றைய பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் step brother.

நரேஷை தெலுங்கு கதாநாயகனாக அலேக் விஜய நிர்மலா 1981லேயே தான் இயக்கிய படத்தில் அறிமுகப்படுத்தினார்.

தமிழில் 1985ல் ஹிண்டு ரங்கராஜன் தயாரித்து மௌலி இயக்கிய 'பொருத்தம்' படத்தில் கூட நரேஷ் தான் கதாநாயகனாக நடித்ததுண்டு.

2006ல் இவர்  தாயார் பெயரை 
தன் பெயரோடு இணைத்து
 விஜய நரேஷ் என்று மாற்றிக் கொண்டார்.

தினமலர் வாரமலர் இதழ் ஒன்றில் ' கந்தசாமி ' விக்ரம் படம் பற்றி கலைப்புலி தாணு பேட்டி கொடுத்திருக்கிறார். 
அதில் கந்தசாமி படம் பற்றிய பெட்டி செய்தி குறிப்புகளில் ஒன்று. கந்தசாமி படத்தில் விக்ரம் உடன் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா சி .பி . ஐ . ஆபீசராக நடித்திருக்கிறார் என்பது. இது சரிதான்.
 தமிழ் படத்தில் கிருஷ்ணா நடிப்பது இதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
இது பிழையான தகவல். 
 நாற்பது வருடங்களுக்கு முன் பணமா பாசமா வெளி வந்த அதே 1968வருடத்தில் வந்த 'குழந்தைக்காக ' என்ற தமிழ்ப் படத்தில் பேபி ராணிக்கு அப்பாவாக கிருஷ்ணா ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

அந்த படம் பார்த்த தமிழ் ரசிகர்கள் இவரை அப்போது"ரவிச்சந்திரன் மாதிரி இருக்கான்" என்றார்கள்.

இப்போது கிருஷ்ணா மறைவுக்கு நடிகை வாணிஸ்ரீ இரங்கல் தெரிவித்திருக்கிறதை தினத்தந்தியில் பார்க்க முடிந்தது.
"அவருடன் நடிக்கும் நடிகைகளை 
ஒரு சகோதரி போல நடத்துவார்."

அலேக் நிர்மலா இவருடனான இரண்டாவது திருமணத்தின் போது பேட்டியொன்றில்  'ஒரு தெலுங்கு படத்தில் கடலில் குளிக்கிற காட்சி படப்பிடிப்பில் கடல்நீரில் கட்டிப்பிடித்து அலைகளில்  உருளும் போது இருவருமே தங்கள் காதலை உணர்ந்ததாக' குறிப்பிட்டிருந்தார்.

ஏ.வி. எம். ஸ்டுடியோவில்
ஒரு தெலுங்கு பட ஷூட்டிங் பார்த்த ஞாபகம் இப்போது வருகிறது.
அலேக் நிர்மலா தன் கணவரை இயக்கிக்கொண்டிருந்தார்.
சுபாஷிணியுடன்
 டூயட் பாடல் காட்சி அது.
சுபாஷிணியை விட இயக்குநர் அலேக் நிர்மலா அழகாக தெரிந்தார்.

அலேக் நிர்மலாவின் நெருங்கிய உறவுப்பெண்கள் ஜெயசுதாவும் சுபாஷினியும்.

நடிகை சுபாஷிணிக்கு தலையில் நிறைய பொடுகு இருப்பதாக 
 ஹேர் ட்ரஸ்ஸர் சுசிலா சொன்னதும் நினைவுக்கு வருகிறது.



விஜய நிர்மலா தமிழ் படங்களில்
 சில பாடல்களால் இன்றும் நினைவு கூரப்படுகிறார்.

"சந்திப்போமா, சந்திப்போமா
தனிமையில் நம்மைப்பற்றி சிந்திப்போமா?"

"தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மணம் திருமணம் "

" வாழைத்தண்டு போல ஒடம்புல அலேக்
நீ வாரியணச்சா வழுக்கிறியே நீ
 அலேக் "

"சவாலே சமாளி, தனிச்சி நின்று துணிச்சலோடு சமாளி"

" கண்ணுக்கு தெரியாத அந்த சுகம்,
நெஞ்சுக்கு தெரிகின்ற இந்த சுகம்"
....

Photos

1. அலேக் நிர்மலா

2. கிருஷ்ணா

3, 4. அலேக் நிர்மலா மகன் நரேஷ்

Nov 11, 2022

முரசு டிவியில் சினிமா எனும் பூதம் - 50th Episode



Credit goes to 
சின்னவர் உதயநிதி ஸ்டாலின் 


50th episode

R.P. ராஜநாயஹம் 
"சினிமா எனும் பூதம்"
தொடர்

முரசு டிவியில் 

13.11.2022
ஞாயிற்றுக்கிழமை 
காலை எட்டரை மணிக்கு 

50 வது நிகழ்ச்சி
ஒளிபரப்பப்பட இருக்கிறது

.....

2021 டிசம்பர் 5ம் தேதி முதல்
முரசு டிவியில் 
 ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
காலை எட்டரை மணிக்கு 
 'சினிமா எனும் பூதம் '
தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.

R.P.Rajanayahem cubic portrait

R.P.Rajanayahem cubic portrait 
by Viswa

Video link below

https://youtube.com/shorts/GRyvFr1rHoY?feature=share

....

https://www.facebook.com/100006104256328/posts/2914985668714880/

Nov 3, 2022

எட்டயபுரம் தலப்பா கட்டி -திண்டுக்கல் தலப்பா கட்டி

எட்டயபுரம் தலப்பா கட்டி 
கவிதை.
திண்டுக்கல் தலப்பா கட்டி
பிரியாணி 

“பாரதியார் எங்க அண்ணா தான். அம்பாள் எங்க அண்ணா கையில கவிதைய கொடுத்தா. என் கையில கரண்டிய கொடுத்தா..” 

- சமையல் கலைஞன் காமேஸ்வரன். தி.ஜாவின் கடைசி நாவல் ’நளபாகம்’ 

சி.மணி கவிதை இது போல ஒன்று தான்.

”நீ கவிதை எழுதுவதும்
அவன் மலம் எடுப்பதும்
மதிப்பீட்டில் வேறானாலும்
வகையில் ஒன்று தான்.”

மனுஷ்ய புத்திரன் நேற்று இரவு எழுதியிருப்பது:

"இந்தக் குளிரில்
தெருவில் தனித்தலையும்
பூனைகளுக்கும் எனக்கும்
ஒரு வித்தியாசம்தான் இருக்கிறது

நான் கவிதைகள் எழுதுகிறேன்
அவை எழுதுவதில்லை
அவ்வளவுதான்"

...

Oct 30, 2022

சொல் ஏர் உழவர் பகை


எழுத்தாளரோட மகன் ஒர்த்தன் 
"எங்கப்பாவ படிக்கிற. 
அவரப்பத்தி எவ்வளவோ எழுதுற. 
நான் எழுதுனத ஏன்டா படிச்சு என்னய பத்தி எழுத மாட்டேன்ற? "ன்னு
 என் கிட்ட கடும் பகையாயிட்டான்.

நடிகையர் திலகம் சாவித்திரி பற்றி
 நான் குமுதத்தில் எழுதியதை படித்து விட்டு, 
"என்னய பத்தி எழுதுங்க "ன்னு அனத்துன 
ஒரு ரொம்ப வயசான 
பிரபல 'எழுத்து பிராணி' கூட உண்டு.

புலி வால்

ஃபேஸ்புக் ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட் ஐயாயிரம் தாண்டி இன்று இரண்டு வருடமாகிறது. (ஜூன் 2019). 

யோசிக்காம  கையில் அகப்பட்டவர்களை அன்ஃப்ரண்ட் செய்து கொண்டு இருக்கும் போதே தினமும் புது ஃப்ரண்ட் ரிக்வஸட் வந்து கொண்டே தான் இருக்கிறது. 
களையெடுக்கும் போது பயிரும் அடி வாங்குவது நடக்காமலிருக்குமா? 

ஐயாயிரம் மீ்ண்டும் மீண்டும் நிரம்பி வழிகிறது. 

போன வாரம் அன்ஃப்ரண்ட் செய்யும் போது  Stress. 

ஐயாயிரம் ஃப்ரண்ட்ஸ் ல நாலாயிரத்து தொள்ளாயிரம் பேர் யாரென்றே தெரியாது. இவர்களில் பெரும் பகுதி dead account என்பதும் தெரிந்தது தானே. 

கணக்கிலடங்காத முகவர்களை block செய்தாகி விட்டது. 

மீண்டும் மீண்டும் ஐயாயிரம் லிஸ்டில் வந்து விடுகிறது.

 ஃப்ரண்ட் லிஸ்ட்டில் இல்லாதவர்கள் பலர் 
என்னை வாசிக்கிறார்கள். சிலர் கமெண்ட் போடவும் செய்கிறார்கள். 

ஃப்ரண்ட் லிஸ்டில் இருப்பவர்களிலும்
 லைக் கொடுக்காமல்,
 கமெண்ட் போடாமல் 
வாசிக்கிறவர்கள் இருக்கிறார்கள். 
படிக்காமலே லைக் கொடுக்கிறவர்கள் கூட. 

 ஃபேஸ்புக்கில் என்னை மட்டுமே படிக்கும்
 சிலர் உண்டு.  ஒவ்வொரு பதிவு பற்றியும் சொல்வார்கள். லைக் கொடுப்பதில்லை. 
ஏன் லைக் கொடுக்கவில்லை, கமெண்ட் போடுவதில்லை என்று நான் கேட்டதேயில்லை.
என்னுடைய மிகச்சிறந்த வாசகர்கள் சிலர் கமெண்ட், லைக் ஒரு தடவை கூட போட்டதேயில்லை தெரியுமா? 
என் ஃப்ரண்ட் லிஸ்டிலும் அவர்கள் கிடையாது. 
 சிலர் இங்கே படித்து விட்டு வாட்ஸ் அப்பில் கமெண்ட் போடுவார்கள். 
பதிவு போட்ட அந்த சில நிமிடங்களில் படிப்பவர்களை அறிவேன்.

பதிவுகளுக்கு லைக் கொடுக்காமல்
 ஃபேஸ்புக் ஸ்டோரியில் புகைப்படங்களுக்கு லைக் கொடுப்பார்கள். ஸ்டோரியில் லைக் கொடுத்தால் மற்றவர்களுக்கு தெரியாது என்பதால். 

எனக்கு லைக், கமெண்ட் தேவையில்லை என்று   இரண்டு ஸ்டேட்டஸாக 
கடந்த ஐந்து வருடங்களில் போட்டிருக்கிறேன். 

 Blog 24 மணி நேரம் வாசிக்கப்படுகிறது.
 ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில். 

ஃபேஸ்புக்கில் இல்லாதவர்கள் ப்ளாக்கில் தான் படிக்கிறார்கள். யாரும் அதுல பின்னூட்டம் செய்ய முடியாது. 

ட்விட்டரில் படிக்கிறார்கள்.

Copy Cats தொந்தரவு. 
எவ்வளவு பதிவுகள் திருடப்பட்டது?
யூட்யுப் உள்பட தொடரும் களவுகள்.
ராஜநாயஹத்திற்கு தான் இப்படி  நடக்கிறது என்கிறார்கள்.

ஃபேஸ்புக் என்பதே 

புலி வால புடிச்ச கத.

தினமும் என் மொபைல் நம்பர் ஃபேஸ்புக் மெஸஞ்சர் பாக்ஸில் கேட்கிறார்கள். 
ஃபேஸ்புக் மெஸஞ்சர் மூலமாக கால் போட முயற்சிக்கிறார்கள். 

"ஒங்கள நேர்ல சந்திக்கனும் ராஜநாயஹம் சார்"

போன் போட்டவர்கள் ரெண்டு மணி நேரம் 
பேசி விட்டு 'சாரி சார், போன்ல சார்ஜ் போயிடுச்சி' 

தன் வலைத்தளத்தை படிக்க வேண்டும் என்று நூற்றுக்கணக்கில் கேட்கிறார்கள். 

எழுதிய பதிவு, கதை லிங்க் அனுப்பி
'படிங்க..அதோட கட்டாயம் உங்க அபிப்பிராயம் உடனே, உடனே சொல்லனுங்க'ன்னு எனக்கு மிரட்டல்.

வீடீயோ அனுப்பி, அதை பார்க்கச் சொல்கிறார்கள். அபிப்ராயம் சொல்லவில்லை என்று சடைக்கிறார்கள். 

எழுத்தாளர்கள், கவிஞர்கள் தங்கள் புத்தகங்கள் 
அனுப்ப வேண்டி, விலாசம் கேட்கிறார்கள். 

'ராஜநாயஹம் நீங்க நல்லா எழுதுறீங்க. 
உங்க விலாசம் கொடுங்க. என்னோட அஞ்சு புத்தகங்கள அனுப்புறேன்.. '

புத்தகங்கள் அனுப்பியவர்கள் 'இன்னேரம் நொறுங்கியிருக்கணுமே' என்று 'ஏன் இன்னும் விமர்சனம் செய்யவில்லை' என்ற எரிச்சலில். 

ஏதோ, நான் கடன் வாங்கி விட்டாற் போல. 

புத்தகம் எதுவும் அனுப்பாட்டியும் ,  
இவனா தானாவே நம்மள படிச்சி எழுத மாட்டேன்றானேன்னு எரிச்சல்ல இருக்கிறவர்களும்  உண்டு.

ரொம்ப பெரிய எழுத்தாளர் மகன் ஒர்த்தன் 
 தான் எழுதியுள்ள  புத்தகங்கள
 ராஜநாயஹம் படிக்கலன்னு 
கடும் பகையாயிட்டான். 
ரொம்ப பெரிய எழுத்தாளர படிச்சதுக்கு இப்படியெல்லாம் தண்டனை. 
"எங்கப்பாவ படிச்ச. ஏன்டா நான் எழுதுனத படிக்க மாட்டேன்ற. என்னய பத்தி எழுத மாட்டேன்ற.. அயோக்யா. ஒன் கூட 'டூ'. போடா"ன்னுட்டான். 

அன்னாடம் புளுபுளுன்னு எழுத்தப்புழுத்தி, கவிதய புழுத்தி
அனுப்பி, அனுப்பி.. 
"படிங்க, படிச்சிட்டு இதைப்பத்தி எழுதுங்க"ன்னு
தொடர் தொந்தரவுகள்.

ஆடு புழுக்க போடுறது போல மொத்த மொத்தமா போடுறீங்க, போட்டுக்கங்க.. 
என்ன ஏன் அத மோந்து பாக்க சொல்றீங்க.

Internet magazines : 'எங்களுக்கு ஒரு ஆர்ட்டிக்கிள் எழுதியனுப்பவும். நீங்கள் புதிதாக எழுதியதாக இருக்க வேண்டும்.' 

"எங்க நாடகத்த பார்க்க வாங்களேன். ரொம்ப வித்தியாசமான நாடகமாக்கும்.. பாத்துட்டு அதப்பத்தி நல்லா எழுதுங்களேன்"

தங்களின் எதிர்பார்ப்பை நான் ஈடேற்றாததால் 
வருத்தத்திலும் கோபத்திலும் வேறுவிதமாக வினையாற்றுகிறார்கள். 
எதிரிகளாகிறார்கள். 

'ராஜநாயஹம் தலக்கனம் பிடிச்ச ஆளு.' 

என் போராட்டமான வாழ்க்கை முறை, 
மற்றவர்கள் எதிர் பார்ப்புக்கு 
ஈடு கொடுக்கும் 
நிலையிலெல்லாம் இல்லை. 

யதார்த்தவாதி வெகுஜன விரோதி.

(சென்னை வந்து ஆறு வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஆகிறது.  ஆறாவது வீடு 
மாறி விட்டேன்.
(13.09.2015  - 03.06.2022)

இப்போது 
அப்பார்ட்மெண்ட்
 பதினான்காவது மாடியில் ஃப்ளாட். எப்போதும் போல வாடகை வீடு தான்.
இல்லாதவனுக்கு பல வீடு..

2020ல் கண்ணில் லேசர் ட்ரீட்மெண்ட்.
இந்த வருடம் 2022 ஜனவரி மாதம் கொரானா.
மார்ச் மாதம் உடலில் இரண்டு சர்ஜரி.  சொல்லொண்ணா துயர அனுபவம்.

சர்ஜரி முடிந்த பிறகும் தொடர்ந்து அவஸ்தை - வயிற்றுக்குள்ளிருந்து ஒரு ட்யூப் இடுப்பு வழியே உடலுக்கு வெளி வந்து ஒரு கலெக்ஷன் பேக். நான்கு வாரம் தொங்கிய கலெக்சன் பேக் - பித்தநீர்த்துளிகள், ரத்தத்துளிகள் வெளியேற்றத்திற்காக)

இவர்கள் யாரையுமே' என்னை படியுங்கள் ' என்று நான் கேட்டதேயில்லை. 

எல்லோருமே என்னை படித்தவர்கள். 
பரஸ்பரம் வேண்டுகிறார்கள்.

ம்ஹூம். மாட்டேன், போ. 

..

https://m.facebook.com/story.php?story_fbid=3127787564101355&id=100006104256328

https://www.facebook.com/100006104256328/posts/2238469029699884/

https://m.facebook.com/story.php?story_fbid=3085598808320231&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=3337229939823782&id=100006104256328

Oct 28, 2022

Acid Wit


Acid Wit

மணி ஜி: 

"ஒரு பத்திரிக்கையாளர் சொன்னது .. பிரசாத் லேபில் பிரஸ் ஷோவில் உணவும் வழங்குவார்கள். 
ஒருத்தர் எல்லா நிகழ்வுகளுக்கும் வந்து சாப்பிடுவாராம். 
ஒரு நாள் அவர் பிரஸ் இல்லை என்று கண்டிபிடித்து விட்டார்கள். 
எப்படி என்றால் 
'ஏன் சாம்பார்ல உப்பு கம்மியா இருக்கு'ன்னு கேட்டிருக்கார் ;-)"

https://m.facebook.com/story.php?story_fbid=797868314840860&id=100038530955909

Irony

Irony

பலி கொடுக்க கொண்டு வந்த கோழி உயிருடன்

Oct 23, 2022

பா.செயப்பிரகாசம்

1990. புதுவை.
கி.ரா லாஸ்பேட்டை வாடகை வீடு. 

கி.ரா சில விநாடிகள் உற்றுப் பார்த்து விட்டு 
"ஓ, ராஜநாயஹம்'

"சில நேரங்கள்ல இப்படி ஆகிடுது. இடைச்செவல்ல மதிய வெய்யில் நல்லா கொளுத்துது.சரியான புழுக்கம். எழுதிக்கிட்டு இருக்கேன். 
குள்ளமா வேர்த்து விறுவிறுத்து வந்து முன்னால நின்னு சிரிக்கார்.
யாருன்னு கேக்கேன். தெரியலியான்னு சிரிக்காரு.

சட்டுன்னு ஞாபகம் வர்து.
ஓ! செயப்பிரகாசம்.
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். நல்லா பழகுனவரவே யாருன்னு கேட்டுட்டேன் பாத்துக்கிடுங்க.."


1981ல 
மதுரை 

மீனாட்சி புத்தக நிலையத்தில்                 பா.செயப்பிரகாசத்தின்
 "காடு" வாங்கி, 
சரவணன் மாணிக்கவாசகமும் நானும் படிச்சிருக்கோம்.
சூரிய தீபன் 'இரவுகள் உடையும்' படிக்க கிடைக்கவில்லை.
சூரிய தீபன் தான் பா.செயப்பிரகாசம்னு சொன்னாங்க.

2016

சென்னையில் 
கே.ஏ. குணசேகரன் இரங்கல் கூட்டத்தில் பார்த்த போது
பா.செயப்பிரகாசம்  விசிட்டிங் கார்டு கொடுத்தார்.

2020

பா. செயப்பிரகாசம் கடுமையாக ஜெயமோகன் தாக்குதலுக்கு உள்ளான போது, 
செயப்பிரகாசத்திற்கு ஆதரவாக திரண்டு கையெழுத்திட்ட எழுத்தாளர்கள்...

சினிமா எனும் பூதம் - பாகம் 2 பற்றி வீரன்மணி பாலமுருகன்



வீரன்மணி பாலமுருகன் :

"நவீன இணைய தேடுபொறிகளும் வியந்து அதிசயக்கும் தகவல்களின் வற்றா ஊற்றுதான் பன்முக கலைஞர், அபூர்வ மனிதர் R.P. ராஜநாயஹம். Rajanayahem R.p. அவரால் தான் சரித்திர நாயகனையும் சாமானிய மனிதனையும் தன் எழுதுகோலால் ஒரே நேர்கோட்டில் நிறுத்த முடியும். ஒரு இடி மழை பெய்வது போலும் ஒரு பூத் தூறல் படர்வது போலும் பல சுவாரசியங்களை கொண்டது அவரின் பொழிவு. அவரின் எழுத்தாக்கங்களின் வரிசையில் இப்போது பேசப்பட்டு கொண்டாப்படும் "சினிமா எனும் பூதம்" முதலிரண்டு பாக நூல்கள் என்பது அரிய திராட்சை கொத்துக்களைக் கொண்டு வடித்து பனிப்பாறைக்குள் பன்னெடுங்காலம் பாதுகாக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட ஒயின் போன்ற தகவல்களின் மது ரசம் என்பேன்."

சினிமா எனும் பூதம் - பாகம்- 2-
 R.P. ராஜநாயஹம்:

பிரதிக்கு:
தோட்டா கம்பெனி 
விற்பனை உடுமலை.Com 73 73 73 77 42
முதல்பதிப்பு செப்டம்பர் 2022
விலை ரூ.240.

Oct 20, 2022

நடிகர் பூவலிங்கம்

மதுரை அரசரடி ஆரப்பாளையம் ரோட்டில் இவரை அறிந்தவர்கள் இருந்தார்கள். 
இவருடைய தாயார் அங்கே மெய்யப்பன் இரண்டாவது தெருவில்.

இந்த நடிகர் பெயர் பூவலிங்கம்.
இரவில் ஆரம்பித்து விடிய விடிய நடக்கும் ஸ்பெஷல் நாடகங்களில் நடிப்பவர்.

பாஸிங் ஷோ சிகரட்ட வாயில இருந்து எடுத்து புகைய ஊதிக்கொண்டே சப்ப காலன் "பூவலிங்கம் ஆள் பாக்க நடிகர் சிவகுமார் மாதிரி இருப்பான்யா."

குழந்தை நட்சத்திரம் பேபி ராணி முக்கிய பாத்திரத்தில் நடித்த படம் 'ராணி யார் குழந்தை'.

முன்னதாக பத்மினி நடித்த 'குழந்தைக்காக'விலும் பேபி ராணிக்கு டைட்டில் ரோல் தான்.

கே.எஸ்.ஜி "சித்தி" படத்தில் குழந்தைகளாக அறிமுகம் ஆனவர்கள் மாஸ்டர் பிரபாகரும்,
பேபி ராணியும்.

பேபி ராணி இப்போது ஹைதராபாத்தில் இருக்கிறார்.

இந்த "ராணி யார் குழந்தை"யில் 
'யார் குழந்தை நீ?, நீ யார் குழந்தை?'
என்று ஒரு பாடல். 
T. M.செளந்தர்ராஜன் பாடியிருந்தார்.
 பாடிக்கொண்டே நடந்து வருகிற நடிகர் பூவலிங்கம் 'யார் குழந்தை நீ? நீ யார் குழந்தை?' 

குருவி மண்டையன் மூக்கு மேல் விரல் 'யோவ் பூவலிங்கத்துக்கு இந்த படத்தில T.M.S. பாட்டுய்யா!'

லட்சுமி, ஜெய்சங்கர், முத்துராமனெல்லாம் நடித்த ' ராணி யார் குழந்தை' மதுரை தேவி டாக்கீஸில ஊத்திக்கிச்சு.

பூவலிங்கத்தின் அம்மா இந்த படத்த மகனோட பாட்டு சீனுக்காகவே பாத்து 'இந்தப்பாவி பெத்த புள்ள தான்டா நீ'ன்னு வாய் விட்டு புலம்பி கண்ணீர் விட்டு புலம்பினார்.

சினிமாவுல வர்ற அம்மாக்கள் போல தோற்றம்.

வறுமையில் இருக்கிற ஏழை கைம்பெண் பார்க்க வேண்டிய எல்லாத்துயரங்களையும், சீரழிவுகளையும்  எதிர் கொண்டவர். வீடுகளில் வேலை செய்து வயிறு கழுவுகிற துர்பாக்கிய அபலை.

பூவலிங்கம் ஒரு காட்சியில் தலை காட்டிய இன்னொரு படம்
 'குறத்தி மகன்'.
ஐஸ்கிரீம் வண்டிக்காரராக.

பழைய படமாக டூரிங் தியேட்டர்ல பல வருஷங்கழிச்சி எப்ப குறத்தி மகன பாக்கும் போதெல்லாம் ஆட்டு மூக்கன் கூப்பாடு " இந்தா பூவலிங்கம். ஐஸ் விக்கிறவன் நம்ம பூவலிங்கம்யா".

'ராணி யார் குழந்தை'யில் கூட டைட்டிலில் பூவலிங்கத்தின் பெயரை போடவில்லை.


பூவலிங்கத்திற்கு தம்பி சோமு. மாவாட்டுவது போல  வீட்டு வேலைகள்  தான் வீடுகளில் செய்துகொண்டிருந்தார்.
பார்த்திருக்கிறேன்.
அம்மா படம் பார்த்து அழுததையெல்லாம் சொன்னது சோமு தான்.


https://youtu.be/vx_FoW2_iwM

Oct 19, 2022

பார்த்த 'சாரதிகள்'

ஒவ்வொரு முறை கலைஞர் டிவிக்கு 'சினிமா எனும் பூதம்' தொடர் ஷூட்டிங் செல்லும் போதும், வரும் போதும் கேப் டிரைவர்கள் பலவிதமானவர்கள்.

நேற்று மாஸ்டர் பிரபாகர், மாஸ்டர் ராஜ்குமார் பற்றிய இரண்டு 'சினிமா எனும் பூதம்' ஷூட்.

கேப் டிரைவர் அஜித் ஒரு மலையாளி இளைஞர்.
கேப்பிடல் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். மோகன்லால் வீட்டுப் பக்கம் தான் டிரைவர் அஜித் வீடு.

சென்னை வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது.
அவருடைய தாய் மொழியில் தான் இயல்பாக பதில் பேசுகிறார்.

சமூக சூழலால், ஊடகங்களால் கொஞ்சம் கூட பாதிக்கப்படாத வாலிபன்.

கமல் தெரியவில்லை. 
"எனீக்கி அறியில்ல" என்பதாக பதில்.
'கமல்' என்ற வார்த்தை பாரதீய ஜனதா சிம்பலா? கை விரல்களை பூ போல் விரிக்கிறார். லேடிஸ் ஜுவல் 'கம்மல்' ? காதைத் தொட்டு கேட்கிறார்.

சக்கை போடு போட்ட கமலின்"விக்ரம்" சினிமா, டி.வி. பரபரப்பு கமலின் "பிக் பாஸ்" எதுவும் நிஜமாகவே தெரியவில்லை. போட்டோ பார்த்தால் கமல் தெரிந்த முகமா? பார்த்த முகமா? என்று கண்டு பிடிக்க முடியும். 
இதை மலையாளத்தில் அவர் சொல்லும் போது புரிந்து கொள்ள முடிகிறது.
அவருடைய ஜெனரல் நாலட்ஜில் ரஜினி, அஜித் இருக்கிறார்கள்.
விஜய் தெரியாது. கமல் தெரியாது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் என்பதை நன்கு அறிந்த டிரைவர் இந்த அஜித்.
உதயநிதி ஸ்டாலின் முதல்வரின் மகன் என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்.

இது வரை தியேட்டருக்குப் போய் இரண்டே இரண்டு திரைப்படம்  பார்த்திருக்கிறார். ஒரு இந்திப் படம்.
'ஜெய்ஹோ' அந்த நடிகர் சல்மான் கானா என்று சந்தேகமாக குழம்புகிறார்.  இன்னொரு படம் மோகன்லால். படம் பெயர் ஞாபகம் இல்லை.

இன்னொரு டிரைவர். 
சினிமா எனும் பூதம் ஷூட் முடிந்து தேனாம்பேட்டையில் இருந்து மாம்பாக்கத்திற்கு கிளம்பும் போது வழியிலெல்லாம் 'மாம்பாக்கத்தில் உள்ள முருகேஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட வேண்டும். ஐநூறு வருட பாரம்பரியமான கோவில். கைங்கரியம் செய்யும் சிவனடியார்களை இந்த டிரைவர் நன்கு அறிந்தவர். மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் பேராசிரியராக இருந்த பெரியநாயகம் என்ற சிவபக்தரிடம் இந்த மாம்பாக்கம் சிவன் கோவில் கைங்கரியம் பற்றி பேசினால் ஏதேனும் வழி பிறக்கலாம்.' என்று மிகுந்த அக்கறையுடன் பேசிக்கொண்டே வந்தார்.
அவருடைய பெயர் கேட்டேன். 
அந்த டிரைவர் பதில் "சார், என் பேரு கேப்ரியல்.நான் பெந்தகோஸ்து கிறிஸ்டியன்"