மன நோயாளிகள் துரதிர்ஷ்டசாலிகள் என்பது மிக மலிவான, மேலோட்டமான, எந்திரத்தனமான தேய்ந்த சொல்.
வேறு எந்த நோய்க்கும் குடும்பத்தாரிடம், சமூகத்திடம் மரியாதையுண்டு. ஆனால் மனநோயாளிக்கு குடும்பத்தாரிடம் புறக்கணிப்பும், வெறுப்பும், சமூகத்திடம் ஒரு கிண்டலும், எள்ளலும் தான். கல்லெறிதல் தான்.
Oh let me not be mad, not mad,
Sweet heaven, keeep me in temper, I would not be mad!
- Shakespeare in King Lear
கிங் லியர் மட்டுமல்ல, லேடி மேக்பெத், ஹேம்லட், ஒஃபீலியா என்று ஷேக்ஸ்பியர் தான் எத்தனை மன நோயாளிகளை காவிய பாத்திரங்களாக சித்தரித்திருக்கிறார்.
டேனியல் லிம் எழுதிய ஆங்கில நாவலை பத்மஜா நாராயணன் தமிழில் ‘ஷ்’ இன் ஒலியாக மொழிபெயர்த்து காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் சமர்ப்பணம் ’தன் எழுத்தின் வழி துயரைத் தங்காது விரட்டி அடிக்கும் அருமை நண்பன் போகன் சங்கருக்கு’
மொழிபெயர்க்கும்போதே பல முறை அழுதிருக்கிறார். அவருக்கே ஆறுதல் சொல்ல வேண்டியிருக்கிறது.
நாவலில் வருகிற செங்க் பரவாயில்லை. Harmless person. ஏதோ ஒரு காதல் தோல்வி. வேலைக்கு போகிறவர். ஆரம்ப கட்டத்திலேயே முறையான மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தியிருக்க வாய்ப்பிருந்தும் தாயின் மூட நம்பிக்கை மந்திரவாதிகளை தேடுகிறது.
செங்க் மனநிலை பாதிக்கும் போதெல்லாம் அடிக்கடி காணாமல் போகிறவர். ஆனால் அடுத்தவர்களிடம் எந்த வன்முறையையும் பிரயோகித்தவரல்ல. பாவப்பட்ட ஜீவன். அப்படியிருந்தும் ஒரு முறை போலீஸ் மூலம் அவரை கை விலங்கிட்டு காப்பகத்திற்கு அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்திருக்கிறது.
Trouble maker ஆக, அருவருக்கத்தக்க மனநோயாளியாக தன் தாய் மாமா செங்க் இருந்திருந்தால் டேனியல் லிம் வெறுத்துப்போய் ஒரு வேளை இந்த நாவலையே எழுதியிருந்திருக்க மாட்டார்.
அதனாலேயே நாவலில் பெரிய அதிர்ச்சி எதுவும் இல்லை. ’ஷ்’இன் ஒலி ஒரு சாத்வீகமான நாவல்.
அவரை தங்கள் வீட்டிலும் டேனியல் லிம்மின் அம்மா வைத்துக்கொண்டிருக்கவில்லை.
முதலில் தன் தாயுடன் பின் ஒரு கறுத்த மனிதருடன் தங்கியிருக்கும் செங்க் தூக்கத்திலேயே கடைசியில் இறந்து போகிறார்.
நாவல் மனநிலை பாதிக்கப்பட்ட மனிதரை கவனித்துக்கொள்வதில் எதிர்கொள்ள நேர்கிற துயரங்களை பேசுகிறது. செங்கின் சகோதரி படுகிற பாடு. ஒற்றை தலைவலியால் மாத்திரைகள். அதோடு கணவனும் ஒரு ஊதாரி.
இன்னொரு வகையினர் ஆபாசமாக பேசுவது, நிர்வாண கோலத்தில் நடமாடுவது, அராஜக நடவடிக்கைகளில் இறங்குவது, குடும்பத்தினரிடம் மட்டுமல்லாமல் அக்கம்பக்கத்தாரிடம் கூட அருவருக்கத் தக்கவகையில் வம்பு செய்வது. இப்படி இருப்பது தான் அந்த குடும்பத்தாருக்கு மிகப்பெரிய துன்பத்தையும், துயரத்தையும் தரக்கூடியது. இப்படிப்பட்டவர்களை குடும்பமே கைவிட்டு விடும். மருத்துவ முகாம்களில் தள்ளி விட்டு விடுவார்க்ள். அல்லது ரோட்டில் பிச்சைக்காரர்களாக திரிவார்கள்.
நல்ல வேளை அந்த வகையில் Daniel Lim’s maternal uncle was an honourable man.
இதில் மற்றொரு வகையுண்டு. போதைப்பழக்கத்திற்கு அடிமையானதால் மன நோயாளிகளானவர்கள் அல்லது மனநோயாளி போதைப்பழக்கத்திற்கும் அடிமையாவது.
இவர்கள் அபாய நோயாளிகள். மிகுந்த பிரச்னைக்குரியவர்கள். அவர்கள் குடும்பத்தார்க்கு நரக வேதனையை தருபவர்கள். எப்போதும் குடும்பத்தார் மட்டுமன்றி அவரைச்சுற்றியுள்ளவர்கள் கூட கத்தி மேல் நடப்பது போல தவிக்க வேண்டியது தான்.
செங்கின் அம்மா தள்ளாத முதுமையில் தன் மகளுக்கு தான் தொந்தரவாய் இருக்க விரும்பாமல் மாடியில் இருந்து கீழே குதித்து உயிர் விடுகிறார்.
மருத்துவ செலவு குறித்த பயத்தில் இன்று முதியவர்கள் பலரும் தற்கொலை தான் தன் சாவு என்று இங்கே முடிவு செய்திருக்கிறார்கள்.
வீட்டு வேலைக்கு போகும் ஒரு முதிய பெண்மணி வேதனையுடன் என்னிடம் சொல்லியிருக்கிறார் “ அரளி விதைய ரெடியா வச்சிருக்கேன். ஏதாவது பெரிசா உடம்புக்கு வந்து படுக்கும்படியாச்சின்னா அரைச்சி தின்னுட்டு போயிடுவேன். பிள்ளைகளுக்கும் தொந்தரவு வேண்டாம். ஆஸ்பத்திரிக்கும் அநியாயச் செலவு வேண்டாம்.”
மனநிலை பாதிக்கப்பட்ட தன் மூத்த சகோதரி ஒருவர் பற்றி அசோகமித்திரன் கதையிலேயே குறிப்பிட்டிருக்கிறார். ’மணவாழ்க்கை’ கதையில் வருகிற அக்கா. அந்த சகோதரி கடைசி வரை மனநிலை பாதிக்கப்பட்டவராகவே இருந்திருக்கிறார்.
Sometimes the worst place you can be at is in your own head.
பல மன நலக்காப்பகத்தில் உள்ள நோயாளிகள் பரிதாபத்திற்குரியவர்கள். அவர்களுக்கு எப்போதும் பிரம்புத் தாக்குதல் தான்.
ஒரு மருத்துவமனையிலிருந்து (அந்த காலங்களில் பைத்தியக்கார ஆஸ்பத்திரி என்பார்கள்) இருந்து தப்பித்து யூனிஃபார்முடன் வெளியே வந்து பஸ் ஸ்டாப்பில் பரக்க பரக்க விழித்துக்கொண்டு நின்று கொண்டிருந்த ஒரு மனநோயாளியை அந்த காப்பக காவலர்கள் ஒரு மிருகத்தை கொண்டு செல்வது போல அடித்து இழுத்துச்சென்றதை பார்த்ததுண்டு.
சித்தப்ரமைக்கு ஆளானவர்கள் பாலியல் வன்முறைக்கும் உள்ளாவதுண்டு.
மனநோயாளியான ஒரு பிச்சைக்காரரை தொடர்ந்து வாய்ப்புணர்ச்சிக்கு passive sex worker ஆக பயன்படுத்தி குறியை சாந்தப்படுத்திக்கொண்ட குழுவான அயோக்கியர்கள் உண்டு. புத்தி சுவாதினமிழந்த பாவப்பட்ட ஜீவனின் போஜன வாயில் சாமானை திணித்த ஈன ஜென்மங்கள்.
பைத்தியம் பிடித்த முகலட்சணம் இல்லாத பெண் ஒருத்தி. “Cover the face and fire the base” என்று அவள் முகத்தில் துண்டை போட்டு மூடி விட்டு போகம் செய்த படித்த மனிதர்கள் கூட பூலோகத்தில் உண்டு.