Share

Apr 9, 2019

Don't get their goat


பாண்டிச்சேரியில் முப்பது வருடங்களுக்கு முன் நான்கைந்து பேராக பேசிக்கொண்டிருந்த வேளையில்
ஒரு சனாதனி துவேசத்துடன் சுள்ளென்று முகம் சுண்டி கொப்பளித்தார் “ அவன் மாட்டுக்கறி சாப்பிடுறவன். மாட்டுக்கறி சாப்பிட்டா மாட்டுப்புத்தி தானே இருக்கும். மனுஷன் புத்திய மாட்டுக்கறி சாப்பிடறவன் கிட்ட எப்படி எதிர் பார்க்க முடியும்? “
நான் அவரிடம் கேட்டேன்: மாட்டு பால், மாட்டு தயிர், மாட்டு நெய், மாட்டு மோர், இதெல்லாம் சாப்பிடறவனுக்கெல்லாம் மாட்டு புத்தி வராதா?. கோமியம்னு மாட்டு மூத்திரத்த கொண்டாடி கொடமொடக்கிறவனுக்கெல்லாம் மாட்டு புத்தி வரவே வராதா?”
Why do you get their goat?



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.