Share

May 31, 2018

கும்பல்ல கோவிந்தா


அரசியல் நடப்புகள் பற்றி முடிந்தவரை பல்லை கடித்துக்கொண்டு இது பற்றி விரிவாக எழுதக்கூடாது என்று தவிர்ப்பவன் நான். கோரஸ் பாடக்கூடாது என்கிற உறுதி.
ரஜினி தூத்துக்குடி விவகாரம் ’தூத்தூ’ என்கிற அளவில் இறங்கியதைப்பார்த்த போது எழுதத் தான் வேண்டியிருக்கிறது. இந்த இணைய கோரஸில் நானும் இணையத்தான் வேண்டியிருக்கிறது. கும்பல்ல கோவிந்தா? என் சத்தம் யாருக்கு கேட்கப்போகிறது?
ரஜினிக்கு தர்ம அடி நானும் தான் கொடுக்க வேண்டியிருக்கோ?
துப்பாக்கி சூடு போது ரஜினி எல்லோரும் போலத் தான் கோரஸ் பாடினார்.
தூத்துக்குடி போய் அங்கே 13 குடும்பங்களுக்கு தலா 2 லட்சம், காயம்பட்டவர்களுக்கு பத்தாயிரம் கொடுத்து விட்டு அவர் பின்னர் பேசியிருப்பது பற்றி ஒரே வார்த்தை. நாராசம்.
கிட்டத்தட்ட முதல்வர் ஆகி விட்ட பிரமையில் தான் ரஜினியின் விமான நிலைய பேட்டி. தன்னை இப்போதே முதல் அமைச்சராக பாவித்துக்கொண்டு தான் இப்படி பேசியிருக்கிறார்.
அவருக்கு போலீஸை அடிப்பது பற்றி ஒரு கடுங்கோபம் இருக்கிறது. அதை முன்னர் போலவே இப்போதும் வெளிப்படுத்தியுள்ளார்.

Every hero becomes a bore atlast.
அதனால தான் ஒர்த்தன் “ நீங்க யாரு”ன்னு தூத்துக்குடியில கேட்டிருக்கான்.
சினிமாவில என்னமா வீர வசனம். கோடிக்கணக்கில சம்பளம் வாங்கிக்கிட்டு
“ நாங்க ஏழைங்க நினைச்சா…”ன்னு விரல உயர்த்துவாரு.
சினிமாவில இன்னைக்கி “காலா” வரை போராட்ட வசனம் பேசுறாரு.. நிஜமான தார்மீக கோப போராட்டங்கள் தமிழகத்தை சுடுகாடாக்கி விடுமாம். Double standard. Split personalitiy.
ஊடுறுவிய சமூக விரோதிகள் யாரென்று தெரியுமாம்.
சமூக போராளிகளை சமூக விரோதிகள் என்று சொல்வது அதிகார வர்க்கத்தின் cliché.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒரு சமூக விரோதியையாவது காட்ட முடியுமா?
’வன்முறை’க்கு எதிராக பேசுவது எவ்வளவு சுலபமான விஷயமாகி விட்டது. Rajini’s so called Non-violence itself is a cruel violence.
கொக்குக்கு ஒரு புத்தி. ஒற்றை பரிமாண வியாக்யானம்.
அதிகார வர்க்கத்திற்கு டப்பிங் பேசியிருக்கிறார். தன்னை அதிகார வர்க்க ’சக்தி’யாகவே கூட பாவிக்கிறார்.
பத்திரிக்கையாளர்களை விஜயகாந்த் ’த்தூ’ என்று காறித்துப்பியதற்கும், எஸ்.வி.சேகர் களங்கப்படுத்தியதற்கும், இப்போது ரஜினி பத்திரிக்கையாளர்கள் மீது காட்டியிருக்கிற துவேசம், அலட்சிய பார்வை, திமிரான கடுங்கோப உடல் மொழிக்கும் வித்தியாசமே கிடையாது.
பத்திரிக்கையாளர்கள் முதுகில் அவர் பிரம்பாலடித்தது, தூத்துக்குடியில் நூறு நாட்கள் போராடிய குடும்பங்கள் மீதும் விழுந்த அடி. ஒட்டு மொத்த தமிழ் மக்கள் முதுகிலும் விழுந்துள்ள அடி.
அவர் ரொம்ப தீர்மானமாக தெரிவித்துள்ள கருத்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஆதரவான கார்ப்பரேட் காவியம்.
’பாரதிய ஜனதாவின் ஊது குழலாக இயங்கப்போகிறேன் நான்’ என்ற திட்டவட்டம்.
உறுதியாக பாரதிய ஜனதாவின் தயவில் நான் முதல்வராகப்போகிறேன் என்ற ஆணித்தரம்.
No doubt, Rajini is ’The Apple’ of Bharathiya Janatha’s ’Eye’!

.............

தீமை செய்திடாமே சோரம் செய்திடாமே ஊரை ஆளவே முடியாதா?
செம்மைதீர் அரசியல் அநீதி!
Power mongers campaign in Fair Poetry and govern in Foul Language.
பதின்மூன்று மனித உயிர்களை காக்காய் சுடுவது போல சுட்டுக்கொன்ற அநியாயம். பாவிகளா.
இப்படி காக்காயை துச்சமாக எழுதக்கூட குற்ற உணர்வாய் இருக்கிறது.
”மனிதாபிமானத்தை விட ’சர்வ ஜீவ தயை’ மேலானது” என்பாரே தி.ஜானகிராமன்.
..........................

May 29, 2018

போர்ஹே சிறுகதை ‘கடவுள் எழுதியது’


The writing of the God என்று ஒரு சிறுகதை. போர்ஹே எழுதியது. ‘கடவுள் எழுதியது.’
ஷினாக்கான் என்பவன் ஒரு பிரமிடின் பூசாரி. அந்த பிரமிடு கொளுத்தி எரிக்கப்படுகிறது. தீக்கிரையாக்கிய பெட்ரோ டி அல்வரடோ இந்த ஷினாக்கானை சித்திரவதைக்குள்ளாக்குகிறான். சிறையில் இவனை அடைத்து பக்கத்து செல்லில் ஒரு சிறுத்தையை அடைக்கிறான்.
ஷினாக்கான் மந்திரவாதியாக இருந்த கியாஹோலம் பிரமிடில் கல்வெட்டு எழுத்துக்களை எவ்வளவு முறை பார்த்திருக்கிறான்.
எழுதப்படுவது எல்லாம் புரியவா செய்கிறது? வாசிப்பின் தேடல்.

Paradise will be a kind of library என்று போர்ஹே சொல்வார்.

அபூர்வமான தரிசன வரி – ’காலத்தின் முதல் விடியற்காலை’யை எண்ணிப்பார்ப்பது.

கனவில் தோன்றும் ஒரு மணல் துகள் இரண்டு துகளாகி பெருகி பெருகி சிறையறை முழுவதும் நிரம்பி ஷினாக்கானை மூழ்கடித்து இவன் இறந்து விட்டதாக நினைக்கும்படியாவது, ’தண்ணீராலும் நெருப்பாலும் ஆன சக்கரம்’.
சிறை அறை – இறைச்சியும் தண்ணீர்க் குவளைகளும் கீழிறக்கப்படும் போது கொஞ்சம் வெளிச்சம் தெரிகிற அந்த சில துளி நேரத்தில் சிறுத்தைப்புலியின் மஞ்சள் தோலின் மீதுள்ள கருநிற பட்டை வரிகளில் கடவுளின் வாக்கியத்தை தேடும் ஷீனாக்கான்.
The God's Script! முழுமையான வளம் கொண்ட மந்திரம் கடவுளால் எழுதப்பட்டதை புரிந்து கொள்ள தவிக்கும் ஷீனாக்கான்.
அச்சொற்களை அறிந்து கொண்டதாகவே முடிவில் நினைக்கும் ஷீனாக்கான் ஒருபோதும் அதை உச்சரிக்கக்கூடாதென்றே முடிவெடுக்கிறான். சிறுத்தைப்புலி மீது எழுதப்பட்டுள்ள கடவுளின் வாக்கியத்தின் அர்த்தம் தன்னுடனேயே செத்துப்போகட்டும் என்று தீர்மானிக்கிறான்.
மாயர்களின் புராணீகத்தை பேசும் மயன் புனித நூல் Mayan book of the Dawn of life பற்றி இக்கதையில் 'மக்கள் புத்தகம்' என போர்ஹே குறிப்பிடுகிறார்.
....................................................................







May 28, 2018

Dirty little secrets


ஒரு நாள்
ஆலப்பாக்கத்தில் இருந்து மினி பஸ். வளசரவாக்கத்தில் இறங்கியவுடன் விருகம்பாக்கத்திற்கு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன். சில சமயங்களில் ஷேர் ஆட்டோவிலும் போவதுண்டு.
விருகம்பாக்கம் போகும்போது பின்னாலிருந்து மொபைல் பேச்சு சற்று சத்தமாக வந்தது.
“இங்கே பார், நான் கேட்டது என்ன? நீ ஏன் என்னன்னமோ பேசுற.”
“ சரி… நீ சொல்ல வேண்டியத சொல்லு. எவ்வளவு நேரமோ நீ பேசி முடி.”
சில நிமிடங்கள் கழித்து “ முடிச்சிட்டியா.. இப்ப ஏன் ஒன் புருஷன பத்தி எங்கிட்ட பேசற… நான் கேட்டது என்ன… என் குழந்தைக்கு பிறந்த நாள். என் பொண்டாட்டி கொண்டாடனும்னு உயிர எடுக்குறா…ஒரு ஐயாயிரம் ரூபா ஒங்கிட்ட கேக்கறேன்… அதுக்கு ஏன் என்னன்னமோ சொல்ற..”
Extraordinary love. A fiery affair. Pure selfishness.
“ நான் என் பொண்டாட்டி பத்தி பேசுறனா.. குத்தி காமிக்கிற.. நீ ஒன் புருஷன பத்தி தேவையில்லாம என்கிட்ட பேசுற.. அத கேட்டது தப்பா? இந்தா பார் என் கொழந்த பொறந்த நாள கொண்டாட ஐயாயிரம் ரூபா கேட்டேன். அதுக்கு பதில் சொல்லு..”
Dirty little secrets always comes out.
“ என் கொழந்த பொறந்த நாள் கொண்டாட ஐயாயிரம் கேட்டேன். அதுக்கு பதில சொல்லு நீ..” பின்னால் உள்ள முப்பத்தைந்து வயது மதிக்க நபரின் குரல் மிகவும் உயர்கிறது.
அந்தப்பக்கம் பெண் கட் செய்து விட்டாள் போல தெரிந்தது. Not responding itself is a response. Silence is just another word for pain.
They both will always be unfinished business.

……….



இன்னொரு நாள்
வீட்டில் இருந்து கிளம்பி வெளியே வந்து பஸ் ஸ்டாப்பில் நிற்கிறேன்.
நொங்கு வெட்டிக்கொண்டிருப்பதை பார்த்து மூன்று நொங்கு இருபது ரூபாய்க்கு வாங்கி சாப்பிடுகிறேன். வெய்யில் உக்கிரம் தாள முடியவில்லை.
வளசரவாக்கத்தில் இறங்கியவுடன் ஷேர் ஆட்டோவில் ஏறுகிறேன். விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் மார்க்கெட் முனையில் இறங்க வேண்டும்.
நீல்கிரிஸ் அருகில் ஒருவர் ஏறுகிறார்.
பொதுவாக எனக்கும் ஆட்டோக்காரருக்கும் கேட்கிறார் போல் “வளசரவாக்கம் தாஸ்மாக் மூடிட்டாங்க.. சாலி கிராமம் போக வேண்டியிருக்கு….என்ன செய்ய..”
இந்த பிரயாணமே அவருக்கு தேவையில்லை. நிர்ப்பந்தம்.
நான் அவரிடம் “நான் இப்ப மூனு நொங்கு சாப்பிட்டிருக்கேன். எனக்கே வெய்யில் தாங்க முடியாம  சிரமமா இருக்கு. இந்த வெய்யில்ல சரக்கு நீங்க சாப்பிடனுமா?”
குடிமகன் பதில் : சார்.. நான் எப்பவாவது மாசத்திற்கு ஒரு தடவ தான் குடிப்பேன்.
“ நான் இப்படி வெய்யில்ல நீங்க தாஸ்மாக் போறீங்கன்னவுடனே Day Drunkardனு நெனச்சேன். எப்பவாவது குடிக்கிறதுன்னா நீங்க வெய்யில் எறங்குன பிறகு சாயந்திரம் ஆறு மணிக்கு சாவகாசமா போய் சௌகரியமா சந்தோஷமா குடிக்க வேண்டியது தான? ஏன் இப்படி இந்த வெய்யில்ல குடிச்சி சிரமப்படனும். குடிக்கிறத கொண்டாட்டமா சுகமா சாயந்திரமே செய்யலாமே.”
அவர் பதில் சொல்லாமல் என்னைப் பார்த்து சினேகமாக சிரித்தார்.
“குடிக்கனும்னு நெனப்பு வந்துட்டா தள்ளிப்போட முடியாது?”ன்னு கேட்டதற்கும் அப்பாவிச் சிரிப்பு. Silence is just another word for pain. Not responding is a response.
காளியம்மன் கோவில் மார்க்கெட் முனையில் நான் இறங்கும்போது அவர் “ போய்ட்டு வாங்க சார்” என்றார். கொஞ்சம் அர்த்த சாரமாக, இணக்கமாக நான் பேசியதற்கு அவருடைய நல்லெண்ண சமிக்ஞை.
An aged drunkard becomes a second time a child.
அவர் Day Drunkard தான். என்ன செய்ய? A dirty little secret.
…………………………………

May 26, 2018

சால்சா மணி - அனு கல்பனா- ஜானி


டான்ஸர் சால்சா மணி 2009ல் விஜய் டிவி பிரபலம். இவர் மனைவி ஷீலாவுடன் இணைந்த ஜீதமிழ் சானலில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடி சாகச நிகழ்ச்சி ஞாபகமிருக்கலாம்.

ஷீலா சில நாட்கள் கூத்துப்பட்டறையில் பயிற்சிகளில் கலந்து கொண்டதுண்டு.

இந்த தம்பதி செல்லமாய் வளர்க்கும் நாய் பற்றி - ரோட்டில் கண்டெடுத்த ஒரு சாதாரண அனாதை குட்டி நாய். வெளி நாட்டு ஜாதி நாய் அன்று.

இப்போது சால்சா மணி என்ற மணிகண்டன் சசிதரன் கூத்துப்பட்டறையில் முழுநேர நடிகர்களுக்கு டான்ஸ் க்ளாஸ் எடுக்கிறார்.
சினிமாவில் மாஸ்டர். அவர் choreography செய்திருக்கிற பாடல்களை பார்த்தேன்.
உங்களுக்கு பிடித்த ஆதர்ஸமான டான்ஸர்ஸ் ஆண் பெண் இருவரிலும் யார் யார்? என்று கேட்டேன்.

ஆச்சரியமான பதில் சொன்னார். ஏனென்றால் இப்படி கேட்டால் கமல்ஹாசன், பிரபுதேவா என்பதாக அல்லது மைக்கல் ஜாக்ஸன் தான் என பதில் சொல்லும் டான்ஸர்கள் தான் உண்டு.
சால்சா மணி அபூர்வமான பதில் சொன்னார். A magnanimous person!
”ஆண்களில் ஜானி மாஸ்டர். Johnny became a Choreographer in the cinefield. பெண்களில் அனு கல்பனா. சினிமாவில் க்ரூப் டான்ஸர். இவர் டான்ஸ் மாஸ்டர் ஆகவேயில்லை.”
ஜானி, அனு கல்பனா இருவருமே unsung and unhonoured.
வித்வத் வேறு, ப்ராபல்யம் வேறு.
ஜானி ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’ பாடலில் அஜீத்துடன் க்ரூப் டான்ஸர் ஆக ஆடுவதை யூட்யுப்பில் சுட்டிக்காட்டினார். உண்மை. பிரமாதமான மூவ்மெண்ட்ஸ்.
பிரபுதேவாவுடன் ஆடும் க்ரூப்டான்ஸராக அனு கல்பனாவை அடையாளம் காட்டினார். என்ன ஒரு க்ரேஸ். என்ன ஒரு துடிப்பு. என்ன ஒரு வேகம்.

நடனத்தில் அபூர்வ திறமையுள்ள இவர்கள் இருவரும் டான்ஸ் மாஸ்டர்களாக பேரும் புகழும் பெற வேண்டும்.

சால்சா மணியும்  தனக்கான இடத்தை அடைவார். His whole future is before him. He will see greater things in life.
………………………………….
புகைப்படங்களில் சால்சா மணியுடன் ராஜநாயஹம்


https://rprajanayahem.blogspot.in/2018/02/blog-post_27.html

May 23, 2018

Conscious Police firing and Deliberate Brutal Killing

Anti - Sterlite Protest
 Conscious Police firing and Deliberate Brutal Killing

We have an awful time to be alive.
Proud people breed sad sorrows.

சோரம் செய்திடாமே, தீமை செய்திடாமே ஊரையாளும் முறைமை ஓர் புரத்தும் இல்லை என்ற எட்டயபுரத்தானின் கொந்தளிப்பின் சாசுவதம்.

R.P.Rajanayahem's performance in Koothuppattarai 05.05.2018

Anger and Displeasure - Bawdy incidents

May 22, 2018

Na.Muthuswamy’s Play “Appaavum Pillaiyum”


Na. Muthuswamy’s play “Appaavum Pillaiyum” won't make you snore. I promise. Though it’s an absurd play , it has the pleasure of text. A very interesting play to be staged.
“ Theatre of absurd has a sense of metaphysical anguish towards the absurdity of the human condition.People should learn to appreciate such productions.”
- Martin Esslin
Martin Esslin coined the term “Theatre of Absurd” in the year 1962 and Na.Muthuswamy has written his first absurd play (kaalam kaalamaaga) in the year 1968.
Muthuswamy is an avant – garde playwright in Tamil.
“Appavum Pillaiyum” means Father and Son. This play offers a tragicomic outlook on human existence. Muthuswamy has achieved a theoretical impossibility in this play in which three Ramaswamys are conversing among themselves.

Author Muthuswamy has lost his father at the age of seven. He frets a lot about his father’s death. If his father had lived for some more years, his childhood and youth life would have been brightened. This is the basic sorrow of the protagonist in Appavum pillaiyum.
It’s a struggling life. Ramaswamy has to achieve and win in his challenging life.
The story travels in this chennai and Punjai village. There is a quantum jump and sudden significant change.
Ramaswamy explains happenings in the road when he goes to meet his friend.
His detailed reminiscence of childhood and father is beautifully described by Author.
There are other dreamy characters like Amma, Periyappa, Rasavayyar, Pavadai, Ponnuswamy, Vairakkannu, journalist and an unseen friend.
Author of this play is a renowned , significant short story writer also. His revelation has promted him to change direction to work as a playwright. We can witness the elements of a classic short story also in Appavum Pillaiyum.
Author has successfully utilised the stream of consciousness throughout the play.
Every theatre person and book reader in Tamil world has a great admiration for Muthuswamy’s work. That is what it is. It has epic, heroic.. What he has achieved.
This play is a nightmare from which Author Muthuswamy is trying to awake.
……………………………………………………

May 20, 2018

மூனு எளனி


இவ்வளவு காலம் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் போய்க்கொண்டிருந்தேன். 2005 மாடல். 2010ல் திருப்பூரில் ஹோண்டா ஆக்டிவா ஷோரூமிலேயே எஞ்சினை மாற்ற வேண்டும் என்று மிரட்டினான். நான் ஸ்கூட்டரை அங்கிருந்து எடுத்து வந்து விட்டேன்.
மெக்கானிக் யாராவது எஞ்சின் என்று ஆரம்பித்தாலே மெக்கானிக்கை மாற்றி விடுவேன். சென்னை வந்து 32 மாதங்களிலும் இப்படித் தான்.
இப்போது 2005 மாடல் என்றாலே மெக்கானிக் எவ்வளவு அடிக்க முடியும் என்று தான் பார்க்கிறான்கள்.
சமீபத்தில் ஒரு ஐயாயிரம் வரை செலவழித்தும் ஸ்கூட்டர் ஆஃபிஸ் போகும் போதும் சரி வரும்போதும் ஐந்து முறை நின்று விடும்.
ஹோண்டா ஆக்டிவா மக்கர் செய்தால் எருமை மாடே தான். தள்ளி முடியாதே.
மெக்கானிக் ஒவ்வொருத்தனும் எஞ்சின் வேலைக்கு வாய்க்கு வந்த பெருந்தொகையை சொல்ல ஆரம்பிக்கவே என் வாழ்வு முறையை மாற்றிக்கொண்டேன்.
ஸ்கூட்டரை வீட்டில் நிறுத்தி விட்டேன். 13 வருட ஸ்கூட்டர் வாழ்க்கைக்கு இப்போதைக்கு முற்றுப் புள்ளி.
ஆலப்பாக்கத்திலிருந்து வளசரவாக்கத்திற்கு மினி பஸ். வளசரவாக்கத்திலிருந்து விருகம்பாக்கத்திற்கு ஷேர் ஆட்டோ. அப்புறம் காளியம்மன் கோவில் மார்க்கெட் வரை நடந்து அங்கிருந்து ஒரு ஷேர் ஆட்டோ. ஸ்ரீ ஐயப்ப நகரில் இறங்கி ஒரு நடை நடந்து ஆஃபிஸ்.
இதே மாதிரியான சுழற்சி தான் வீட்டுக்கு போகும்போதும். சமயங்களில் ஆற்காடு ரோட்டில் இறங்கி ஆலப்பாக்கத்திற்கு முக்கால் கிலோ மீட்டர் நடக்க வேண்டியிருக்கும்.

கடந்த ஐம்பது நாட்களாக இப்படித்தான்.
பொதுவாக டூவீலர் பயன்படுத்தியவர்கள் இப்படி பஸ்சிலும் ஷேர் ஆட்டோவிலும் போக நேர்ந்தால் மிகவும் கஷ்டமாகத் தான் நினைப்பார்கள். மிகப்பெரிய அசௌகரியம் என்று உணர்வார்கள்.
எனக்கு இந்த மாற்றம் மிகுந்த பரவசத்தைத் தான் தருகிறது. கௌரவ பங்கம் ஏதுமில்லை. எந்த ஸ்தான சலனமும் என்னை ஒரு புதிய உலகத்தைக் காட்டி பிரமிக்கச் செய்கிறது. ரொம்ப உற்சாகமாக இந்த மாற்றத்தை ரசிக்கிறேன். I always accept my life unconditionally.
இழப்புகள், சரிவுகள், தாளமுடியாத துயரங்கள், புறக்கணிப்புகள், அவமானங்கள், ஏமாற்றங்கள் எல்லாமே மிகப்பெரிய வெற்றியாகவே எனக்கு தெரிய வந்திருக்கிறது.
மினி பஸ், சிட்டி பஸ், ஷேர் ஆட்டோ என்று ஸ்ரீ ஐயப்ப நகர் ஸ்டாப்பில் இறங்கியவுடன் இளநீர் ஒரு வண்டியில். இளனிக்கார ஆளை காணவில்லை. பார்வையை ஓட்டுகிறேன். பக்கத்தில் ஆட்டோக்காரர் சவாரி ஏதாவது கிடைக்காதா என்று காத்திருப்பவர் எழுந்து வந்தார்.
“சார்,அவன் டீ சாப்பிட போயிருக்கிறான்.”
சரி, வெய்ட் பண்றேன்.
ம்ஹும். ஆளக்காணோம்.
என்னை விட அந்த ஆட்டோக்காரர் ரெஸ்ட்லெஸ் ஆகி விட்டார்.
“இருங்க சார், நான் போய் கூட்டி வர்றேன்.”
இருபது கடை தாண்டி இருக்கும் ஐயப்பநகர் மெயின்ரோட்டு முனையில் இருக்கும் டீக்கடைக்கு ஓடுகிறார்.
அவரையும் கொஞ்ச நேரம் காணோம். சரி வேண்டாம்னு எனக்கு கிளம்ப மனசில்லை. எனக்காகவும் இளனிக்காரருக்காகவும் இப்படி சம்பந்தமேயில்லாத ஆட்டோக்காரர் மெனக்கெடும்போது நான் பொறுமை காப்பது தான் நியாயம்.
ஷேர் ஆட்டோக்களும், மினி பஸ்ஸும், சிட்டி பஸ்களும், ஃபாஸ்ட்ராக், ஓலா, உபர் கால்டாக்ஸிகளும் இருக்கும் ஊரில் ஒரு ஆட்டோக்காரரின் தொழில் தான் எத்தனை போராட்டமானது?
கொஞ்ச நேரத்தில் ஆட்டோக்காரர் ஓடி வருவது தெரிந்தது. வரும்போதே என்னைப் பார்த்து கை காட்டிக்கொண்டே தான் வந்தார்.
“சார், டீ குடிச்சிட்டு இருக்கான். நான் சொல்லிட்டேன். இப்ப வந்துடுவான். போயிடாதீங்க”
“ அதெப்படிங்க நான் போக முடியும். நீங்க இப்படி எனக்கு ஒரு எளனி குடிக்க, அந்தாளுக்கு ஒரு எளனி விக்க வேண்டி சிரமப்படுகிற போது எனக்கு உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதுன்னே தெரியலே.”
கொஞ்ச நேரம் கழித்து எளனி வண்டிக்காரர் ஓடி வந்தார். வரும்போதே இங்கே ஆட்டோக்காரர் ‘எளனி குடிக்க ஆள் இன்னமும் நிக்கிறார்’ என்று கையால் சிக்னல் செய்தார்.
நான் சொன்னேன் “ ஆட்டோக்காரர் பாரு, எவ்வளவு நல்ல மனசு. ஒன் வியாபாரத்துக்கு எவ்வளவு மெனக்கிடுறார்.”
பரிதாபமான பஞ்ச தோற்றத்தில் எளனிக்காரர். காலை சாப்பாடே அந்த டீயாகத்தான் இருக்கும் என்பது நிச்சயம்.
”ஆட்டோக்காரருக்கும் ஒரு எளனி கொடு. நான் காசு கொடுத்திடுறேன்.”
ஆட்டோக்காரர் வேண்டவே வேண்டாம் என்று மறுத்தார். நான் ஆட்டோக்காரரும் குடிக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்து எளனி வாங்கிக்கொடுத்தேன்.
“ ஒரு எளனிக்கு ஒனக்கு என்ன கிடைக்கும்?”
“ நாலு ரூபா சார். ஓனருக்கு ஒரு எளனிக்கு ஐந்து ரூபா”
நான் ரெண்டு எளனி காசை கொடுத்து விட்டு இன்னொரு நாலு ரூபா சேர்த்துக்கொடுத்தேன்.
’எதுக்கு சார்?’
”ஒனக்கு மூனு எளனி வித்த லாபம் கிடைச்சதா இருக்கட்டும்.”

……………………………………….

May 18, 2018

Filial Obligation


சி.ஆர். ராஜம்மா தமிழ் பெண் எழுத்தாளர். சொல்லொனாத் துயரம் அனுபவித்தவர்.
ரொம்ப காலம் முன்னாலேயே மறைந்து விட்டார்.
ஒரு கண் பார்வை இல்லாமல் இருந்தவர். பூ விழுந்த கண். அந்த கண் கொஞ்சம் வெளியே துருத்திக்கொண்டிருந்திருக்கிறது.

அவர் அனுபவித்த பெருந்துயரங்களில் ஒரு சிறு துளி இங்கே:
சி.ஆர்.ராஜம்மா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது பக்கத்தில் படுத்து இருந்த அவருடைய கைக்குழந்தை உறக்கம் தொலைத்து விளையாண்டு கொண்டிருந்திருக்கிறது. அம்மாவின் கண் அந்த தூக்கத்திலும் வெளியே துருத்திக்கொண்டு தெரிவதை உற்று கவனித்த குழந்தை அந்த கண்ணை பிடித்து இழுத்து விட்டது.. பூ விழுந்த கண் வெளியே வந்து விட்டது.

அதிர்ந்து விழித்த சி.ஆர்.ராஜம்மா எப்படி துடித்து தவித்திருப்பார்.

’எனக்கொரு குழந்தை’ என்று இவர் நூலொன்றின் தலைப்பு.


May 16, 2018

பாலகுமார நினைவுகள்


பாலகுமாரனின் மெர்க்குரி பூக்கள், இரும்புக்குதிரைகள், என்றும் அன்புடன், கரையோர முதலைகள் நாவல்கள் படித்தேன். 
கல்யாண முருங்கை குறு நாவல் ஒன்று ’மணியன்’ மாத நாவலாக வந்ததை வாசித்திருக்கிறேன். 
அந்த பிரபலமான ’சின்ன சின்ன வட்டங்கள்’ சிறு கதை தொகுப்பு கூட.
அப்புறம் பாலகுமாரனை திரும்பிக்கூட பார்த்ததில்லை.
ஒரு கவிதை இரும்புக்குதிரைகள் நாவலில் படித்தது இன்னும் மறக்கவில்லை.
”சவுக்கடி பட்ட இடத்தை நீவிடத் தெரியா குதிரை
கண் மூடி வலியை வாங்கும் இதுவுமோர் சுகமென்று
கதறிட மறுக்கும் குதிரையை
கல்லென்று நினைக்க வேண்டாம்.”
இன்னும் கூட ஒன்றிரண்டு பாலகுமாரனின் நாவல்களில் படித்தது.
”இந்த உலகத்தில் எதுவுமே சரியில்லை என்று நினைப்பவர்கள் எல்லாம் பாரதியை நினைத்தால் அழத்தான் முடியும்.”
“ நெஞ்சோடு ஒட்டி தேறுதல் சொல்லும் சினேகம் எவருக்குமே வாய்ப்பதில்லை.”
அசல் அதே வார்த்தைகள் அல்ல. என் நினைவில் நிற்பதில் இருந்து உருவி எழுதுகிறேன்.

எழுத்துலக கமலஹாசனாக கொண்டாடப்பட்டவர்.
தி.ஜா இவருக்கு எழுதிய கடிதம் ஒன்று. மறக்க முடியாத கடிதம்.
பாலகுமாரன் சில பரிசு பொருள்கள் தி.ஜாவுக்கு கொடுத்த போது எப்படி இதற்கு react செய்வது என்று தெரியாமல் placid ஆக தான் இருந்தது பற்றி, இதுவே பி.எஸ்.ராமையா என்றால் எவ்வளவு உற்சாகமாய் எதிர்வினையாற்றியிருப்பார் என்றெல்லாம் அந்த கடிதத்தில் ஜானகிராமன் எழுதியிருந்தார். 
ஏதோ ஒரு பத்திரிக்கையில் பாலகுமாரன் அந்த கடிதத்தை பிரசுரம் செய்திட வைத்திருந்தார்.
தி.ஜா இறந்த அன்று ஸ்கூட்டரில் உடனே திருவான்மியூர் வீட்டுக்கு சென்று தேம்பி அழுத பாலகுமாரன்,
ஒரு நாவலை ஜானகிராமனுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார் - “ எழுத்துலக பிதாமகன், என்னைப் போன்ற எத்தனையோ ஏகலைவர்களுக்கு மௌன உபாத்யாயர் தி.ஜானகிராமன்.”
இதனை நான் தி.ஜானகிராமனுக்கு நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்ட போது சேர்த்திருந்தேன்.
திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தன் அஞ்சலி கூட்டத்தில் என் பெயரை ஒருவரிடம் நான் சொல்ல வேண்டியிருந்த போது உடனே பாலகுமாரன் என்னை கூர்ந்து பார்த்தார். 

 மிகவும் தளர்ந்து போய் இருந்த பாலகுமாரன் பேசுவதற்காக மேடை ஏற வேண்டி இருந்த வேளை, தள்ளாடிய அவரை நான் கை பிடித்து நடத்தி மேடையில் ஏற்றி அமர வைத்தேன்.

...............................................................

May 13, 2018

Convictions are more dangerous foes of truth than lies - Nietzsche

Rajanayahem is a Transformative Actor




வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்
மூன்று வார சனிக்கிழமைகளில்
( ஏப்ரல் 28, மே 5, மே 12)
என் நடிப்பை பார்த்த

 கூத்துப்பட்டறை ’அரசன்’

மு. நடேஷ் 

என்னை பற்றி நேற்று சொன்னார்.
“ Rajanayahem is a Transformative Actor!"
A declaration, indeed.
அவருடைய பரவசத்தை முத்துசாமி சாரிடமும் மாமியிடமும் கூட உற்சாகமாக பகிர்ந்து கொண்டார்.

சிங்கப்பூரில் இருந்து ’இளவரசர்’ ரவி சாரின் வாழ்த்துக்களை இன்று பெற்றேன்
நன்றி நடேஷ் சார்! Thank you for your kindness.
I can hold the audience spellbound. I have the guts.

https://www.youtube.com/watch?v=dYiA2ND7vVs&t=48s






............................................................

http://rprajanayahem.blogspot.in/2016/08/blog-post_5.html


May 11, 2018

Helium balloon


சென்ற ஏப்ரல் மாதம் 6, 7 தேதிகளில் திருச்சியில் இருந்தேன். திருச்சி NIT எஞ்ஜினியரிங் காலேஜில் நடந்த ஒரு கூத்து போட்டி நிகழ்ச்சியில் நடுவராக நான் அழைக்கப்பட்டிருந்தேன். 2017ம் ஆண்டு போல இந்த வருடமும் என்னை மாணவர்கள் அழைத்து இந்த கௌரவத்தை தந்திருந்தார்கள்.
இரண்டு நாட்கள் இருந்த போதும் நான் திருச்சியில் வேறு யாரையும் போய் சந்திக்கவில்லை.
ஆச்சரியம். ஒரு விசித்திரமான விஷயம். யாராயிருந்தாலும் சில இடங்களுக்கு போய் ஒரு சிலரை சந்திக்காமல் இருக்கவே மாட்டார்கள்.
திருச்சியில் நான் சந்திக்க பலரும் உண்டு. நேரமும் இருந்தது தான்.
ஆனால் நான் ஜங்ஷனில் இருந்து National Institute of Technology போனேன். அங்கிருந்து பின் 7ம் தேதி இரவு ஜங்ஷன் வந்து ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் ஏறி சென்னை வந்து சேர்ந்தேன்.
திடீரென்று இன்று தான் இன்னொரு விஷயம் ஞாபகம் வந்தது.
சென்ற நவம்பர் மாதம் என்னை இளமைக்கால சிநேகிதி ஒருவர் தேடி கண்டு பிடித்திருந்தார். இவரை 2009ல் தேட நான் ஒரு முயற்சி செய்த போது ஈடேறவில்லை.
மொபைலில் இருவரும் பேசிக்கொண்டோம்.
இரண்டு விஷயம் தெரிந்து கொண்டார்.
1.நான் வசதியாக இப்போது இல்லை
2.அவருடைய இஷ்ட தெய்வத்தை நான் வணங்குவதில்லை.

இப்போது திருச்சியில் தான் இருக்கிறார். வினோதம் என்னவென்றால் அவர் அங்கிருக்கிறார் என்கிற விஷயமே திருச்சியில் இரண்டு நாட்கள் நான் இருந்த போது என் பிரக்ஞையில் இல்லை.
People do look different when you fall out of love with them.
If you don't hold the helium balloon, it flies away into the sky.
photos

Rajanayahem's performance in Koothuppattarai on 5th May, 2018
...........................................................








May 8, 2018

'That Fellow' - Paternal and Filial affections


படித்துக்கொண்டிருந்த காலத்தில் அமெரிக்கன் கல்லூரியில் ”That felllow" என்ற வார்த்தை மரத்தடியில் ரொம்ப பிரபலம். ’அப்பா’ வை குறிப்பிட இப்படித்தான் எல்லோராலுமே சொல்லப்படும்.
Maternity is comfirmed and paternity is the probability.Paternity is a legal fiction.
" டேய், வீட்டுல that fellow என்ன ரொம்ப insult பண்ணுறான்.தாழன் சைஸ் சரியில்ல. வீட்டை விட்டு வெளியேறிடுவேன். ’கிளிக்கு ரெக்க மொளைச்சிடுச்சி’ன்னு அதயும் கிண்டல் பண்ணுவானேன்னு தான் பொறுமையா இருக்கேன்.”
”That Fellow ரொம்ப என் விஷயத்தில தலயிடுறான். Unnecessarily poking his nose into my affairs. ’அம்மாவோட தாழன்’றதுக்காக எவ்வளவு தான் பொறுமையா இருக்கிறது?”
“அம்மா கிட்ட சொல்லிட்டேன். That fellowவ சொல்லி வை. மரியாத கெட்டுடும்.”
“இன்னக்கி எங்க அம்மா கிட்ட “Who is that fellow? அவனுக்கும் ஒனக்கும் என்ன தொடர்பு? ஏன் எப்பவும் என்ன மொறச்சிக்கிட்டெ இருக்கான்?”ன்னு கேட்டுட்டேன்.”
“ஏம்மா ஒன் மாப்பிள்ள இப்படி என்ன சித்ரவத செய்றான்? இதெல்லாம் நல்லாயில்ல..”
" That fellowவுக்கு இன்னக்கி சரியான nose cut. ”’ஒன் வயசில ஆப்ரஹாம் லிங்கன் வேல பாத்துக்கிட்டே படிச்சான்’ன்னு சொன்னான். நான் முகத்தில அடிச்ச மாதிரி திருப்பி சொல்லிட்டேன்.’ ஓன் வயசில ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்காவுக்கே ஜனாதிபதியாயிட்டான் தெரியும்ல’ன்னு.”
‘ மாப்பிள்ள! எப்பவுமே என் test paper பாத்தா ஏன் தான் That fellow ரொம்ப டென்ஷன் ஆகுறான்னு தெரியலடா. “ Don't call me Daddy hereafter"னான். “ யோவ், இது Monthly test தான்.. DNA test இல்ல”ன்னு மனசுக்குள்ளயே சொல்லிக்கிட்டேன். வாய தெறந்து சொன்னா ’வீட்ட விட்டு வெளிய போடா’ன்னு சொல்லிட்டா நான் எங்க போவேன். நேக்கு யாரத்தெரியும். பசி பொறுக்க மாட்டேன்.”
Classic problem - too much mother, too little father.

எப்பவும் ’காண்டு’லயே இருக்கும் கவுண்டமணி
“ அடேய் தகப்பா..”

என்னோட ரெண்டு மகன்களும் வேலைக்கு போற பசங்க. அம்மா அவனுங்கள நல்லா திட்டுவா.. அவ அடிச்சா கூட சுரணையே இல்லாம பொறுத்துக்கிறானுங்க..நான் லேசா மொறச்சு பாத்தா போதும், ’உவ்வா’.... ரோஷம் பொத்துக்கும், ரொம்பத் தான் ‘மூட் அவுட்’ ஆகிடுறானுங்க. 
..........................................



May 3, 2018

சைகல் பாடிய ’பாபுலு மோரா’


நவாப் வாஜித் அலி ஷா எழுதிய உருது பாட்டு ’பாபுலு மோரா’.
Baabul mora
Naihar chhuto hi jaae
Baabul mora
Naihar chhuto hi jaae
O My father! I'm leaving home.
O My father! I'm leaving home.
’அப்பா… நான் நம் வீட்டை விட்டு போகிறேன்.’ ஒரு மணப்பெண் திருமணமாகி தன் பிறந்த வீட்டை விட்டுப் பிரிந்து போகும் நிலையில் பாடுவதாக இந்த பைரவி ராக தும்ரி.

விதி செய்யும் விளைவு. வாஜித் அலி ஷா பிரிட்டிஷாரால் நாடு கடத்தப்பட்டார். வெள்ளையர்கள் அவரை இருட்டு பிரியும் முன் லக்னோவை விட்டு வெளியேறி விட வேண்டும் வற்புறுத்தியுள்ள நிலையில் அப்படியே நவாப் கிளம்பிப்போகிறார். விஷயம் ஊருக்கு அதற்குள் தெரிந்து விட்டது. நல்ல இருட்டில் மக்கள் சாலையின் இரு பக்கமும் கூடி விடுகின்றனர். வாஜித் அலியின் அரண்மணை பாடகன் அவர் இயற்றிய பாடலை உரக்கப் பாடுகிறான். மக்கள் தேம்பித் தேம்பி அழுகின்றார்கள். விம்மலுடன் பாடிய பாடகனுக்கு, அந்த நிலையிலும் நவாப் ஒரு பரிசு தருகிறார். அதை ஏற்க அவன் மறுத்து விடுகிறான்.
இந்த தும்ரி பாடல் அதன் பின் எவ்வளவோ பேர் காலம் காலமாக பாடினார்கள்.
ஜம்முவில் பிறந்தவன் கே.எல்.சைகல். ரயில்வே டைம் கீப்பர், ரெமிங்க்டன் டைப்ரைட்டர் சேல்ஸ்மன், ஓட்டல் மானேஜர் என்று எவ்வளவோ வேலை பார்த்தவன்.

ஹிந்தி திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டார் சைகல். அப்போதெல்லாம் கல்கத்தாவில் தான் ஹிந்தி திரையுலகம் இயக்கம் கொண்டிருந்தது.
சைகல் தான் என் குரு என்று லதா மங்கேஷ்கர், கிஷோர் குமார் என்று பலரும் பேட்டியில் எப்போதும் குறிப்பிட்டிருக்கிறார்கள். முகேஷ் அப்படியே ஒரு copycat ஆக சைகலை பின்பற்றி பாடியவர்.
சைகல் பாடல்கள் அகில இந்தியாவையும் பைத்தியமாக்கியது. பாபுலு மோரா, சோ ஜா ராஜ்குமாரி, மேரே சப்னோ கி ராணி, ஏக் பங்களா பனே நியாரா, கம்தியே முஸ்த்து கில்லு கித்துனா பாடல்களை முணு முணுக்காதவர்கள் யாரும் இல்லை.
’நெஞ்சில் ஓர் ஆலயம்’ கல்யாண் குமார் கூட என்னிடம் சொன்னார். சைகல் பாடல்கள் தான் அவருக்கு பிடிக்கும். சைகல் பாடல்களை மனப்பாடமாக பாடுவார்.
பாபுலு மோரா பாடல் 1938ல் ’ஸ்ட்ரீட் சிங்கர்’ என்ற படத்தில் சைகல் பாடி மிகவும் பிரபலம்.

இந்தப் பாடல் பாடுகிற காட்சியை தத்ரூபமாக படமாக்க வேண்டும் என சைகல் ஆசைப்பட்டார். தனியாக ரிக்கார்டிங் செய்ய அவர் மனம் ஒப்பவில்லை. இயக்குனரையும் இதற்கு சம்மதிக்க வைத்தார். படப்பிடிப்பின் போது சைகல் இதை பாடிக்கொண்டே நடக்கும் போது கேமராவிற்குள் வராமல் இசைக்குழுவினர் பின்பற்றி நடந்து கொண்டே வாசித்திருக்கிறார்கள்.
நாற்பத்திரெண்டு வயதில் சைகல் அற்பாயுசில் இறந்து போனார்.
அதன் பின் இந்த பைரவி ராக பாடலை பண்டிட் பீம்ஷன் ஜோஷி, கிஷோரி அமோங்கர், ஜக்ஜித் சிங் என்று எத்தனையோ பேர் கச்சேரிகளில் பாடியிருக்கிறார்கள்.
ராஜேஷ் கன்னா, ஷர்மீளா டாகூர் நடித்த அவிஷ்கார் படத்தில் கூட இந்தப்பாடல் இடம்பெற்றிருந்தது.
ஐந்து வருடங்களுக்கு முன் தினமணி தீபாவளி மலரில் அசோகமித்திரன் ‘அகோர தபசி’ சிறுகதை எழுதியிருந்தார். காலச்சுவடு வெளியிட்டுள்ள ‘இரண்டு விரல் தட்டச்சு’ சிறுகதைத் தொகுப்பில் பிரசுரமாகியுள்ளது.

’ நான் அந்த மனிதனை ஒரு பஜனை மடத்தில் தான் பார்த்தேன்.
எல்லோரும் கிருஷ்ணா ராமா என்று பாடினால் இவன் சைகல் பாடல்களைப் பாடினான். சைகல் பாட்டு இந்தி அல்லது உருதுவில்.
எதைப்பற்றி கூறுவதாக இருந்தாலும் அந்த மனிதன் அப்பாட்டுக்களைப் பாடும்போது கேட்போர் மனதை அவை எங்கெங்கோ அழைத்துச் சென்றன.

அதிலும் அவன் ’பாபுலு மோரா’ என்ற பாட்டைப் பாடும்போது மனம் அன்று வரை அறியாத எல்லைகளுக்கு இழுத்துச் செல்லப்படும்.
என் மூடிய கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகிக்கொண்டிருந்தது. எனக்கு மட்டும் என்றில்லை. வேறு பலரும் அவன் பாட்டைக் கேட்டு அவர்களையறியாது கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தார்கள்.’
இந்தப் பாத்திரத்தை ’சைகல் மனிதன்’ என்றே அசோகமித்திரன் தன் சிறுகதையில் அடையாளமிடுகிறார்.
அவன் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடுகிறது.
சைகல் மனிதன் பசுபதியின் மனைவி சொல்கிறாள் ‘அவரோட கூடப்பொறந்தவா ஆறு பேர். நிறைய பணம் காசோட சௌக்கியமா வேறே வேறே இடங்கள்ளே இருக்கா. இப்போ வீட்டை வித்துப் பாகம் பிரிக்கணும்கறா. இவருக்கு இந்த வீட்டை விட்டா எங்கே போறதுன்னு கவலை.’
’அகோரத் தபசி’ கதையின் கடைசி வரிகள் இப்படி முடிகிறது. ‘ ஒரு வாரத்திற்குப் பிறகு கோட்ஸ் ரோடு சென்றேன். அந்த வீடு பூட்டுப் போட்டிருந்தது. ஒரு மாதத்திற்குப்பிறகு காலி வீட்டை யாரோ வெள்ளை அடித்துக்கொண்டிருந்தார்கள். ஏழு பேரும் சேர்ந்து கையெழுத்துப் போட்டு விட்டார்கள் என்று ஊகித்துக்கொண்டேன்’
பசுபதியின் நிர்க்கதியான சோகம், உணர்விறுக்கம், பிரிவாற்றாமை பற்றி புரிய பாபுலு மோரா பாடல் பற்றி, பாடல் எழுதிய நவாப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். சைகல் பாடலையும் கேட்டு ரசித்திருக்க வேண்டும்.

“I am never merry when I hear sweet music”
-Shakespeare in ‘The Merchant of Venice’