Share

May 29, 2018

போர்ஹே சிறுகதை ‘கடவுள் எழுதியது’


The writing of the God என்று ஒரு சிறுகதை. போர்ஹே எழுதியது. ‘கடவுள் எழுதியது.’
ஷினாக்கான் என்பவன் ஒரு பிரமிடின் பூசாரி. அந்த பிரமிடு கொளுத்தி எரிக்கப்படுகிறது. தீக்கிரையாக்கிய பெட்ரோ டி அல்வரடோ இந்த ஷினாக்கானை சித்திரவதைக்குள்ளாக்குகிறான். சிறையில் இவனை அடைத்து பக்கத்து செல்லில் ஒரு சிறுத்தையை அடைக்கிறான்.
ஷினாக்கான் மந்திரவாதியாக இருந்த கியாஹோலம் பிரமிடில் கல்வெட்டு எழுத்துக்களை எவ்வளவு முறை பார்த்திருக்கிறான்.
எழுதப்படுவது எல்லாம் புரியவா செய்கிறது? வாசிப்பின் தேடல்.

Paradise will be a kind of library என்று போர்ஹே சொல்வார்.

அபூர்வமான தரிசன வரி – ’காலத்தின் முதல் விடியற்காலை’யை எண்ணிப்பார்ப்பது.

கனவில் தோன்றும் ஒரு மணல் துகள் இரண்டு துகளாகி பெருகி பெருகி சிறையறை முழுவதும் நிரம்பி ஷினாக்கானை மூழ்கடித்து இவன் இறந்து விட்டதாக நினைக்கும்படியாவது, ’தண்ணீராலும் நெருப்பாலும் ஆன சக்கரம்’.
சிறை அறை – இறைச்சியும் தண்ணீர்க் குவளைகளும் கீழிறக்கப்படும் போது கொஞ்சம் வெளிச்சம் தெரிகிற அந்த சில துளி நேரத்தில் சிறுத்தைப்புலியின் மஞ்சள் தோலின் மீதுள்ள கருநிற பட்டை வரிகளில் கடவுளின் வாக்கியத்தை தேடும் ஷீனாக்கான்.
The God's Script! முழுமையான வளம் கொண்ட மந்திரம் கடவுளால் எழுதப்பட்டதை புரிந்து கொள்ள தவிக்கும் ஷீனாக்கான்.
அச்சொற்களை அறிந்து கொண்டதாகவே முடிவில் நினைக்கும் ஷீனாக்கான் ஒருபோதும் அதை உச்சரிக்கக்கூடாதென்றே முடிவெடுக்கிறான். சிறுத்தைப்புலி மீது எழுதப்பட்டுள்ள கடவுளின் வாக்கியத்தின் அர்த்தம் தன்னுடனேயே செத்துப்போகட்டும் என்று தீர்மானிக்கிறான்.
மாயர்களின் புராணீகத்தை பேசும் மயன் புனித நூல் Mayan book of the Dawn of life பற்றி இக்கதையில் 'மக்கள் புத்தகம்' என போர்ஹே குறிப்பிடுகிறார்.
....................................................................







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.