Share

Jul 19, 2017

சில


ஒரு பெரியவர். பார்ப்பதற்கே பச்சாத்தாபம் தோன்றும்படி இருப்பார். கவனிக்கப்படாத குழந்தையின் கலவரத்தையும், திகிலையும் அவருடைய முகத்தில் காணமுடியும். ஏழையல்ல. ஆனால் பிள்ளைகள் அன்பு பூரணமாய் கிடைக்கப்பெற்றவர் அல்ல. மனைவியுடன் இணக்கம் சிலாக்கியமாய் இல்லை. முதுமையில் பலருக்கும் ஏற்படும் நிலை தான்.
எப்போதும் ந.முத்துசாமி சாரை பார்த்து கோவில் கோபுரத்திற்கு கும்பிடு போடுவது போல கையுயர்த்தி வணங்குவார்.

அவரை நான் எதிர்கொள்ள நேரும்போது வணக்கம் சொல்வதுண்டு.
இன்று நின்று பேசினேன்.
அவர் ஏனோ  ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தார்.
”சாகக்கிடக்கிறவனுக்கு கூட பச்சத்தண்ணி கொடுக்காதீங்க. தண்ணி கொடுத்தீங்கன்னா ’ஓத்தா! ஏண்டா ஒரு குவார்ட்டர வாயில ஊத்தாம வெறும் தண்ணிய ஊத்துற’ன்னு கேப்பான்.”

இந்த ’ஓத்தா’ என்ற வார்த்தை சென்னையில் நிமிஷத்துக்கு நிமிஷம் காதில் விழுகிற வார்த்தை.

இது பற்றி ஓவியர் மு. நடேஷ் சொன்னார் “ இங்க ‘ஓத்தா’ என்பது Fuck off. ஓத்தா என்பதன் அர்த்தம் Fuck off தான்.”

நான் இவ்வளவு நாளும் mummy, mother ன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன்!
…………………………………….

எவ்வளவு பெரிய பதவி டி.ஜி.பி. கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயணா சிறை சீர்கேட்டில் டி.ஐ.ஜி ரூபா கிளப்பிய புயலுக்கு எதிர் வினையாற்றும் போது அவருடைய கண்கள் பாவம் கிடந்து அல்லாடியது. பொய் பேசுவது சிரமமானது.

மன்னார்குடியார்கள் பணத்தை வைத்து என்னவெல்லாம் சர்க்கஸ் நடத்துகிறார்கள். பரப்பண அக்ரஹார சிறையை உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள். புனிதமான பொது வாழ்வு!
…………………………

கமல் ஹாசன் மிக திட்டமிட்டு எதையும் செய்பவர். அரசியலில் இறங்கும் பட்சத்தில் அவரை எதிர்கொள்வது மிக கடினம். பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வியாதிகள் நிலை பாவம் தான். தாங்க முடியாது சிரமப்படுவார்கள்.

................

பிக் பாஸ் ஆண்களுக்கு Home sick ! கணேஷ் வெங்கட்ராமன், ஆரவ் இருவரும் தான் (இது வரை) அழவில்லை என நினைக்கிறேன். பிக் பாஸ் பெண்களுக்கு ஏன் இந்த sickness இல்லை?
…………………………………………….

1 comment:

  1. //திகிழையும் // Is it a typo or a word unknown to me in Tamil ?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.