Share

Feb 27, 2015

The Passage of Time



அறுபது வயதில் தான் முதுமை ஆரம்பமாகிறது.
அந்த கால குணச்சித்திர நடிகர்கள் ரெங்காராவ், பாலையா, எஸ்.வி.சுப்பையா மூவரும் முதுமையை காணாமல் மறைந்தார்கள்.
இவர்களுக்கு நல்ல சீனியர் எம்.ஆர்.ராதா மட்டும் முதுமையை பார்த்து விட்டு 72 வயதில் இறந்தார்.
மறையும்போது ரெங்காராவுக்கு 56 வயது.

 பாலையாவுக்கு 58 வயது.

 சுப்பையாவுக்கு 57 வயது.

வினோதம் என்னவென்றால் படங்களில் பெரிசுகளாக இவர்கள் நடித்த காலத்தில் இளம் வாலிபர்களாக நடித்த கதாநாயகர்கள் எல்லோரும் நல்ல முதுமையைப்பார்த்து விட்டுத்தான் இறந்தார்கள். 52 வயதில் இறந்த முத்துராமன் தவிர.
எம்ஜிஆருக்கு சாகும்போது official age 70!
சிவாஜி மரணமடைந்த போது 74 வயது.ஜெமினி கணேஷ் 85 வயதில் இறந்தார்.ஜெய் சங்கருக்கு சாகும்போது 62 வயது.ரவிச்சந்திரன் மரணம் 71 வயதில். எஸ்.எஸ்.ஆர் 85வயதில்
இன்றும் உயிரோடு இருக்கும் ஏ.வி.எம் ராஜனுக்கு இன்று 82 வயது. சிவகுமாருக்கு 73 வயது.



 http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post_19.html


http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_17.html


http://rprajanayahem.blogspot.in/2014/10/blog-post.html

 ........................................

பல படங்களில் வயதானவராக நடித்த ரங்காராவ் தனது முதுமையை அடையும் முன்பே இறந்து போய்விட்டார் என்ற தகவலை நண்பர் ராஜநாயஹம் வலைப்பக்கத்தில் ஒரு முறை வாசித்த போது அதிர்ச்சியாக இருந்தது.
திருப்பூரில் வாழும் எழுத்தாளர் ராஜநாயஹம் கறுப்பு வெள்ளைக் கால தமிழ் திரையுலகின் ஒரு நடமாடும் ஆவணக்காப்பகம். அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள சுவாரஸ்யமான திரைக்குறிப்புகள் தனித்து நூலாக வரவேண்டியவை.
- எஸ்.ராமகிருஷ்ணன்

Feb 26, 2015

Ignorance with wings






ரொம்ப வசதியான அந்தப்பெரியவர் விசிறிச்சாமியார் யோகி ராம் சூரத் குமாரின் கண்மூடித்தனமான பக்தர். 

விசிறிச்சாமியார் பிரபலமாவதற்கு முன் அவரிடம் பழகியவர்.


இவர் இளவயதில் ஏழையாய் இருந்த காலத்தில் அவரைப் பார்த்து விசிறியபடி ராம் சூரத் சொன்னாராம். “You are a rich man!”
இவர் பணக்காரராகவே ஆகிவிட்டார். 

விசிறிச்சாமியாரைப் பார்க்க அந்தக்காலத்தில் ஒரு முறை போனபோது அவருடைய வீட்டில் இருந்து கிளம்பி காலைக்கடன் முடிக்க வெட்ட வெளியில் ஒதுங்கிய போது நடந்ததை அந்தப் பணக்கார பெரியவர் சொன்னார்.
“ சாமி ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமுமாக ஒக்காந்து இருக்கோம். 
சாமி சிகரட்ட பிடிச்சிக்கிட்டே வெளிக்கி போன பின் எந்திரிச்சி நடந்தாரு. நான் என்ன செஞ்சேன் தெரியுமா?
 அவர் பேண்ட பீய போய் பாத்தேன். 
கொஞ்சமா பிள்ளையார் மாதிரி இருந்த பீய கையில எடுத்தேன்.ஈரப்பசையே இல்ல. 
மோந்து பார்த்தேன். கொஞ்சம் கூட நாத்தமே இல்ல.
பிரசாதம் தான அது. கொஞ்சம் வாயில போட்டுக்கிட்டேன்.கொஞ்சம் கூட கொமட்டவே இல்ல..”


http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_3.html





Feb 25, 2015

டாக்டர் ச.வீரப்பிள்ளை எம்.பி.பி.எஸ்









 பாண்டிச்சேரி போன புதிதில் டாக்டர் ச.வீரப்பிள்ளை எம்.பி.பி.எஸ் பெயர் இலக்கிய உலகில் அடிக்கடி கேள்விப்பட்ட போது கடாமீசையோடு ஜிப்பா, வேட்டியோடு ஒரு உருவம் தான் மனதிற்குள் தோற்றம் கொண்டது.

தி.ஜா. நினைவு கூட்டம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் பில்டிங்கில் நடந்த போது நேரில் சந்தித்தேன். ஒரு மென்மையான கெசட்டட் ஆஃபீசர் போன்ற ஒருவரை வீரப்பிள்ளை என அர்த்தம் கொள்ள சிரமமாயிருந்தது.

ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டர் எப்படி இலக்கிய உபாசகராக இருக்கமுடியும். இவர் புதுவை அரசாங்க ஆஸ்பத்திரியில் மெடிக்கல் ஆஃபீசராய் இருந்தார். மாலை நான்கு மணிக்கு ஆஸ்பத்திரி விட்டு வந்து விட்டால் மற்ற டாக்டர் போல கிளினிக் பிசினஸெல்லாம் கிடையாது. முழுக்க இலக்கிய வாசிப்பு.

அவருடைய மனைவி ஒரு டாக்டர். இரண்டு பேருக்கும் ஒரு மகன், ஒரு மகள். ஆனால் இருவரும் பிரிந்து விட்டார்கள். பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் இருவரும் அம்மாவோடு.
வீரப்பிள்ளை அவருடைய மனைவியை மெடிக்கல் காலேஜில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர். 


பொதுவாக இந்த காதல் திருமணம் செய்கிற பல பேரை  நான் பார்த்த அளவில்
‘தேடி தேடி தேரைய பிடிச்சிருக்கானே!” 
‘ இந்த டப்பா தாட்டிக்கு இவ்வளவு மெனக்கெட்டிருக்கானே!’
 ‘கொஞ்சமாவது இவனுக்கு பொருத்தமில்லையே!’
இப்படி சலித்து சொல்லும்படியாகத்தான் இருந்திருக்கிறது.

ஆனால் வீரப்பிள்ளையின் திருமண ஆல்பம் பார்த்த போது அந்த டாக்டரம்மா ரொம்ப அழகாக, மெஜஸ்டிக்காக, ‘ஆகா! டாக்டர் எப்படிப்பட்ட அதிர்ஸ்டசாலி!’ என எண்ணும்படியாக தெரிந்தார்.

வீரப்பிள்ளை சொல்வதுபடி பார்த்தால் அந்த அம்மா கிறிஸ்தவர் என்பதால் அது பிரிவுக்கு வித்திட்டு விட்டதாகத் தெரிந்தது.  
திருமணத்தின் போதே டாக்டரம்மாவின் அப்பா பிடிவாதமாக மாப்பிள்ளை வீரப்பிள்ளையை கிறிஸ்தவராக மாற வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார். இவர் மறுத்து விட்டார்.
வீரப்பிள்ளை தன் தம்பிக்கு பண உதவி செய்திருக்கிறார். பெரிய தொகை. இதை டாக்டரம்மா விரும்பவில்லை. நேரம் பார்த்து டாக்டரம்மாவின் அப்பா ‘ இதுக்கு மேல அவன் கூட இருக்காதே. வந்துடு.’ என்று தூபம் போட்டு பிரித்து விட்டார்.

இவருடைய மகனும் மகளும் இவர் தோளிலேயே தொங்கி விளையாடுபவர்கள். அவ்வளவு பிரியம். அவர்கள் கூட டாக்டரம்மாவுடன் போய் விட்டார்கள்.


டாக்டர் வீரப்பிள்ளைக்கு மற்ற டாக்டர்கள் போல பிராக்டிஸ் செய்யவோ, பணம் சம்பாதிக்கவோ பிரியமில்லை. எனக்குத்தெரிந்து  நான் பார்த்து கிளினிக் வைக்காத டாக்டர் இவர் இரண்டாமவர்.
 மதுரையில் ஒரு ‘கஞ்சா குடிக்கி’ டாக்டர் மெடிக்கல் காலேஜில் ஆசிரியர். வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்ததும் எப்போதும் சல்லிகள் புடை சூழ புகை சூழ கஞ்சா போதையில் தான் இருப்பார். இவரும் கிளினிக் வைக்க விரும்பாமல் தான் இருந்தார்.

பாண்டிச்சேரி டாக்டர் வீரப்பிள்ளைக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ‘மருத்துவர்கள் கிளினிக் சம்பாத்தியமெல்லாம் நியாயமில்லாத விஷயம்.பணம் சம்பாதிக்க  நல்ல வழி. ஆனால் பெரிய மோசடி வியாபாரம்’ – உறுதிபட சொல்வார்.

மிகப்பழைய ‘கணையாழி’ இதழ்களில் இவருடைய கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. துரையரசன் என்ற பெயரில்.
என்னைப்போல இவருக்கு குடும்பத்தில் செல்லப்பெயர் ‘துரை’.

வெளியூர்க்காரர்களான கி.ராவிற்கும் எனக்கும் அவர் ஒரு நல்ல நண்பராக அன்று இருந்தார்.

கி.ரா. புதுவை பல்கலைக் கழக ‘வருகை தரு’ பேராசிரியராக  நாடோடி கருத்தரங்கம் நடத்திய போது ‘ ராஜநாயஹம்! இந்தாங்க நம்ம டாக்டர் நண்பரிடம் இந்த அழைப்பிதழை கொடுத்துடுங்க” என்றார். நான் கருத்தரங்க அழைப்பிதழை வாங்கினேன். “ டாக்டர் வீரப் ” என்று எழுதியிருந்தார்.
கி.ரா. சொன்னார் ‘இருக்கட்டுமே. திலீப், பிரதீப் மாதிரி இவர் வீரப்!”
பிள்ளை என்ற ஜாதிப்பெயரில் டாக்டர் இருக்கிறாரே என்ற கிண்டல்!
நான் வீரப்பிள்ளையிடம் வீட்டிற்குப்போய் கொடுத்தேன். அவரும் வெட்கப்பட்டு ‘டாக்டர் வீரப்’ அழைப்பிதழைப்பார்த்து சிரித்தார். “ ஐயோ! நான் என்ன செய்ய? எனக்கு இப்படி ஜாதியை சேர்த்து பிறக்கும்போது பெயர் வைத்து விட்டார்கள்!”


செல்ஃப் குக்கிங் செய்வார். மட்டன் வாங்கி விட்டு, இஞ்சி வாங்கிக்கொண்டு இருந்த போது நான் போனேன். பேசிக்கொண்டே வீட்டுக்கு போய் சமையலை ஆரம்பித்த போது இஞ்சியை எடுத்துப்பார்க்கிறார். கெட்டுப்போன இஞ்சி. இஞ்சி இல்லாமல் தான் மட்டனை சமைத்தார்.

கி.ராவும் நானும் பேசிக்கொள்ளும்போது இவருடைய வாழ்க்கையில் இப்படி ஒரு பிரிவுத்துயரம் பற்றி வருத்தப்படுவோம். நான் கி.ராவைக்கேட்டேன். “ஐயா! நீங்க இதில் தலையிட்டு சமரசம் பேசி தம்பதியரை இணைக்க முடியாதா?” என்று கேட்டேன்.
“ இந்த மாதிரி விஷயத்தில் யாராலும் சமரசம் செய்ய முடியாது. அவர்களாக இணக்கமாகி இணைந்தால் தான் உண்டு.”
எனக்கு டாக்டரும் டாக்டரம்மாவும் இணைவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.



 “ மாலைப்பொழுதின் மயக்கத்திலே  நான் கனவு கண்டேன் தோழி” பாக்யலக்ஷ்மி படத்தில் சௌகார் ஜானகிக்காக சுசிலா பாடிய பாடல் வீரப்பிள்ளைக்கு மிகவும் பிடிக்கும்,
கணையாழியில் இவருடைய கவிதை ஒன்று “என்னுடைய வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் முழு நிலவு நீ தான்”

நான் புதுவையில் இருந்த போது அசோகமித்திரன், தேனுகா போன்றோரை அழைத்து பல இலக்கிய நிகழ்ச்சிகள் இவர் வீட்டில் தான் நடத்தப்பட்டிருக்கிறது.


பல வருடங்களுக்கு முன் கி.ரா தொலை பேசியில் பேசும்போது டாக்டர் வீரப்பிள்ளை புதுவையிலிருந்து காரைக்காலுக்கு ட்ரான்ஸ்பரில் போய் விட்டதாகச்சொன்னார். மனைவி குழந்தைகளோடு சேரவேயில்லை என்பதையும் சொன்னார்.

சில வருடங்களுக்கு முன் போனில் பேசிய போது காரைக்காலில் வீரப்பிள்ளை இறந்து விட்ட தகவலை கி.ரா வேதனையுடன் சொன்னார்.
அவர் இறந்து விட்ட விஷயம் ரொம்ப தாமதமாகத் தான் மற்றவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. கட்டிலை விட்டு கீழே விழுந்த நிலையில் அவர் பிணம்.

நொண்டியா இருக்கலாம். ஆனா  ஒண்டியா இருக்கக்கூடாது.


  ....................................................



 
இடமிருந்து வலம்
ராஜ் கௌதமன், R.P.ராஜநாயஹம்,கி.ராஜ நாராயணன், டாக்டர் ச.வீரப்பிள்ளை.





Feb 16, 2015

உன் நினைவு என் கண்ணில் கசிந்து கொண்டே...



 அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது "மரத்தடி மகாராஜாக்கள்" என்ற  நூலை நான் எடிட் செய்து வெளியிட்ட போது அதில் இடம்பெற்ற என் வசன கவிதை.


You must remember this.
A kiss is just a kiss, a sigh is just a sigh.
The fundamental things apply
As time goes by.
Moon light and love songs are never out of date.
( "As time goes by" song in Casablanca -1942 movie)


தற்காலத்தின் கொந்தளிப்பு மிக்க நிகழ்ச்சிகளோ, துரித தொழில் நுட்ப முன்னேற்றமோ,சுருங்கக்கூறினால் ,எதுவுமே “ நான் உன்னை காதலிக்கிறேன்” என்ற வார்த்தையின் இனிமையைக் குறைத்து விடமுடியாது.
......................................

என் அழகு நளினமே!
பருவ உணர்ச்சிகள் சாதாரணமானவையல்ல
இளம் உள்ளங்கள் அதற்கு ஆட்படுவது சர்வ சாதாரணம்.
ஆனால்,
அவற்றிற்கு அணை போட்டும் பெருக்கெடுக்கும்
வெள்ளமாக பாய்கின்ற நிலையை விவரிக்க
அந்தக் கம்பனால் கூட முடியாது.
( கம்பனை வம்புக்கிழுக்காத எழுத்தாளன் கிடையாது.)
உன் பார்வை
வக்கரித்துப்போன என் நினைவு மேகங்களை குளிர்விக்கின்றது.
உன் புன்னகை
குளிர்ந்த நினைவு மேகங்களை தடுத்து
தொடர்மழையாக பொழியச் செய்யும் தொடர்மலையாகின்றது..
இதை இந்த அணை உடைந்து விட்டது.
எண்ண அலைகள் மனதைப் படாத பாடு படுத்துகின்றன.
எந்நேரமும் ஒரு சலசலப்பு, அலைக்கழிப்பு
துன்பமயமான சூனிய உணர்வு
நெஞ்சின் ஆழத்தில் இன்பம் கலந்த வேதனை

துவக்க காலத்திலெல்லாம், மனதில்
உன்னைப் பற்றி ஏற்படும் இனிய நினைவுகளை,
மிகச்சாதாரணமாக, அலட்சியமாக
Infatuation என்று புறக்கணித்த உள்ளம்
Teenage love cannot be a successful one – தட்டிக்கழித்த நாட்கள்..
இருபதைத்தாண்டும் இந்தக் கணத்தில்
உன்னைப் பற்றிய  நினைவு விஸ்வரூபம் எடுக்கும்போது
என் நிலையை என்னால் விவரிக்க முடியவில்லை.
உன்னை தினம் காலையிலும் காலையிலும் மாலையிலும்
தரிசனம் செய்யும் அந்த நாட்களில்
என்னிடம் ஒருத்தி வலிய வந்தாள்
நானும் ஒதுக்கவில்லை.
விளயாட்டாகவே நினைத்தேன்
அங்கே போவோம்; இங்கே போவோம் என்றாள்.
தட்டிக்கழிக்கவில்லை.
“ உன் பேனா சோம்பேறியா?” என்றாள்.
உடனே என் பேனா பொறிந்து தள்ளியது.
If you say  good-bye, may be I would die” என்றாள்.
 நான் Good-bye சொல்லிவிட்டேன்.
அவள் இன்னொருவனுடன் சுற்ற ஆரம்பித்து விட்டாள்!

இதோ,
முதல்முறையாக வாழ்வில் ஒரு ஜீவன் காதல் வயப்படுகிறது.
பெண்ணை பூஜிக்கிறது.
சிந்தனை – அதுவும் மிகத்தூய்மை.
உண்மையை அப்பட்டமாக எழுத
எனக்கு சிறிது வெட்கமாகக் கூட இருக்கிறது.
தீய சிந்தனைகள் கூட
உன்னை நான் நினைத்த அளவில் விலகி விடுகிறது.
“என்ன இது, பட்டமரத்திலே பால் வடிகிறது!”
சொல்லப்போனால் வேறெந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப்
பார்க்க கூட மனம் கூசுகின்றது.
சீ! இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம்.
இதெற்கெல்லாம் காரணம் ?
எனக்கு உன் மேல் ஏற்பட்டிருக்கும்
இந்த சுந்தர உணர்வுகளுக்கு காரணம் ?
 நான் இளைஞன்,  நீ யுவதி
நான் இருபது – நீ பதினேழு என்பது மட்டுமல்ல
விட்டில் பூச்சிக்கு இயற்கையாக நெருப்புச்சுடரிடம் ஏற்படும்
ஈர்ப்பு இது என்று
என்னை நானே ஏமாற்றிய காலம் மலையேறி விட்டது.
பாலுணர்ச்சி மட்டுமல்ல
இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட
ஏதோ ஒரு தெய்வீக உணர்வு
(எனக்கு மத நம்பிக்கை கிடையாது. கடவுள் நம்பிக்கை உண்டா ? தெரியாது. Agnostic! )

‘காவன்னா’ ‘தானா’ ‘ல்லன்னா’ வியாக்கியானம்
நான் சந்தேகிக்கிறேன்.
எனக்கு உன்பால் ஏற்பட்டிருப்பது அது தானோ?
சினிமா பார்க்கும்போது கூட
வில்லனையே ரசித்துப் பழக்கப்பட்ட நானா இப்படி எழுதுகிறேன்.
உன்னை நெருங்கும் இந்த  நேரத்தில்
நான்  ஒரு விஷயம் கவனித்தேன்.
உன்னை
நான்கைந்து கழுகுகள் வட்டமிடுகின்றன.
இது குறித்து, உள்ளபடியே
உன் மேல் உள்ள அக்கறையால் மனம் துடிக்கிறது.
( ஐயோ, இந்த ஆறாவது கழுகுக்கு என்ன கரிசனை! )
 Call a spade a spade!

உன் மேல் எனக்கு ஒரு அபாரமான நம்பிக்கை.
நீ கெட்டுப் போக கூடியவளல்ல.
அருந்ததி நட்சத்திரத்திற்கு சமானம்.
Acumen!
  நாம் இருவரும் பிறந்த வீட்டுக்கு செய்ய வேண்டிய
நன்றிக்கடன்கள் ஏராளம்!
அப்படியல்ல, நாம் இருவரும் இணைந்து தான் ஆக வேண்டுமென்றால்
உன் பாஷையில் சொன்னால்
“கடவுள் சேர்த்து வைப்பார்”
என் பாஷையில் சொன்னால்
“ கடவுள் இருந்தால் கட்டாயம் சேர்த்து வைப்பார்”
“ Oh, my Love!
If  it is possible, pass from me;
Nevertheless, not  as my will,
But as thy god’s will”
என் எண்ணமெல்லாம்,
என் கண் உன்னை இனி
என்றும் பார்க்கவே கூடாது என்பதே.
என் காலம் உள்ளவரை
உன் நினைவு
என் கண்ணில்
கசிந்து கொண்டே இருக்கும்.





All the very best love poetry is addressed by men to women - and not the other way round
- Khushwant Singh