Share

Aug 16, 2014

Hollow eye and Wrinkled brow

"To view with hollow eye and wrinkled brow
An age of poverty."
- Shakespeare in "The Merchant of Venice"


கி.ராஜ நாராயணன்,அசோகமித்திரன்,  இருவருடனும் அவ்வப்போது  போன் பேசியதுண்டு.பேசுவதுண்டு.

இருவருமே ஞான பீடப்பரிசு பெற முழுமையான தகுதி படைத்தவர்கள்.
இருவருமே செப்டம்பர் மாதம் பிறந்தவர்கள். 

கி.ராவுக்கு இப்போது  செப்டம்பர் 16ம் தேதி 92 வயது நிறைவடைகிறது.




அசோகமித்திரனுக்கு செப்டம்பர் 22ம் தேதி 83 வயது முடிகிறது.

ஒரு விஷயம் பற்றி குறிப்பிடவேண்டும். கி.ரா எப்போதும் குரல் மிக ஆரோக்கியமாக, உற்சாகமாக மணிக்கணக்கில் என்றாலும் பல விஷயங்கள் பேசுவார். முதியவரின் குரல் போலவே இருக்காது! முதுமையின் சிரமங்கள் பற்றி, உடல் உபாதைகள் பற்றி எதுவுமே சொல்லவே மாட்டார்.

அசோகமித்திரன் பற்றி நான் குறை சொல்வதாக யாரும்  நினைத்து விடக்கூடாது. அவர் குரல் சற்றே நடுக்கமாகத்தெரியும். கிணற்றில் இருந்து ஒலிப்பது போலக்கூடத்தோன்றும். அதோடு தன் உடல் அவஸ்தைகள் பற்றி உடனே வெளிப்படையாகச் சொல்வார். 'உடம்பு ரெண்டு நாளா படுத்தறது..சரியில்லை' என்று ஆரம்பித்து Cramp தொந்தரவு பற்றியெல்லாம் துயரம் தோய்ந்த குரலில் சொல்லுவார்.
...............................................................................



I'm getting so old that all my friends in heaven will think that I didn't make it.

................................................................






Death chooses to be a friend of an old man facing death.

...................................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.