Share

Mar 17, 2013

இத்தாலி



இத்தாலியை நினைக்கும்போது முஸோலினியைத்தான் யாருக்கும் 
பிடிக்காது.
இத்தாலியை நினைக்கும்போது ஓவியன் மைக்கல் ஆஞ்சலோ
திரை இயக்குனர்கள் ரோஸ்ஸலினி, ஃபெல்லினி, பஸோலினி என்று சுவாரசியங்கள், 


ஹாலிவுட் நடிகர்கள் ராபர்ட் டி நீரோ, லியோனார்டோ டி காப்ரியோ.

அந்தக்காலத்தில் மதுரை ரீகல் தியேட்டரில், பரமேஸ்வரி தியேட்டரில்  படம் பார்க்கும் தரை டிக்கட் ரசிகர்களுக்கு சோபியா லாரனைப் பிடிக்கும். ஆனால் சுத்தமாக ஜீனா லோலா பிரிகிடாவைப் பிடிக்காது. 
ரொம்ப பந்தா,ஸ்டைல்,மேக் அப் பண்ணுகிற,பார்க்க அசிங்கமான, அவலட்சண முகம் கொண்ட  below average பெண்களைக் குறிக்க ‘ ஜீனா லோலா பிரிகிடா’ என்று விவரிப்பார்கள்.டப்பா தாட்டி டா! ஜீனா லோலா பிரிகிடா!

 
  The Name of the Rose  நாவல் எழுதிய உம்பர்ட்டோ ஈக்கோ,  


   
Italian food! – The food stinks, Except in Italy!
பீட்ஸா, ஐஸ்கிரீம்
Italy – Musical country!  

தென்றல், முதல் காதல், இத்தாலி இந்த மூன்றும் ஒன்றாக சேர்ந்தால் விரக்தியான மனிதன் கூட குதூகலமாகிவிடுவான் என்று பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் தத்துவம் பேசினார்.

ஆனால் இந்தியர்களுக்கு போஃபர்ஸ் துவங்கி ஆடம்பர ஹெலிகாப்டர் பிரச்னை போன்றவைகளால் இத்தாலி என்பது குறித்து ஒரு ஒவ்வாமையுணர்வு.

இந்திய அரசியல் அரங்கில் சில கட்சிகளுக்கு இத்தாலி மீதுள்ள வெறுப்புக்கு சோனியா காந்தி ஒரு காரணம்.

ராஜீவ் காந்தி பிரதமராயிருக்கும்போது கம்யூனிஸ்ட் எம்.பி. சதுரனன் மிஸ்ரா சொன்னது :  It is so hard to approach the Prime Minister, in the front there are battalions, at the rear there are Italians.

இத்தாலிய கப்பல் கேரளக்கடற்கரை மீனவர்களை சுட்டுக்கொன்றது. அந்த இத்தாலிய கைதிகள் இருவருக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட பரோலில் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் திரும்பி மீண்டும் சிறை புகுந்தார்கள். நேர்மை, கண்ணியம் என்று நினைக்கவேண்டியிருந்தது.
மீண்டும் இத்தாலி பொதுத்தேர்தலில் வாக்களிக்க வேண்டி இத்தாலிய கைதிகள் இன்னொரு முறை தாய் நாடு சென்றார்கள். இந்திய சிறை திரும்பவில்லை. இத்தாலிய அரசே உடந்தை. இந்தியாவில் இத்தாலியத் தூதர் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என்று நியாயஸ்தலம் தடை விதித்து விட்டது.

கேஸ் வாபஸ் வாங்குவதற்கு பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு கோடி ரூபாய் வரை தருவதாக இத்தாலி சொன்னதை ஏற்றிருக்கவேண்டும் என்று தினமணி தலையங்கம்.


ஃபாரின் டிப்ளமஸி பற்றி நன்கறிந்த நட்வர்சிங் ( முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ) சொல்வது : Italian Ambassador can’t be prevented from leaving.

 There’s sanctity about the rules of old diplomacy. Infact modern diplomacy started in Italy.
’இத்தாலி செய்திருப்பது நம்பிக்கைத் துரோகம் தான். இது இரண்டாம் உலகப்போரின்போது  பேர்ல் ஹார்பரில் குண்டு போடப்பட்ட சம்பவத்திற்கு சமம் என்கிறார் நட்வர்சிங். அந்த சமயத்தில் கூட ரஷ்யா மீது ஜெர்மனி தாக்குதல் நடத்தியபோது ரஷ்யாவிலிருந்த ஜெர்மனி தூதர் கைது செய்யப்படவில்லை. அடாவடியான ஜெர்மனியிலும் கூட அப்போது எதிரி நாட்டுத்தூதர்கள்  வெளியேறக்கூடாது என்று தடை விதிக்கப்படவில்லை. எனவே இத்தாலிய தூதர் மன்ஸினி இந்தியாவை விட்டு வெளியேறத் தடை செய்வதெல்லாம் சாத்தியமானதில்லை என்றும் சொல்கிறார். 


ஹெலி காப்டர் ஊழல் பிரச்னை, கேரள மீனவர் பிரச்னை, இத்தாலிய கைதிகள் போன்ற இடியாப்பச்சிக்கல்கள் இருக்கும் நேரத்தில் சென்ற டிசம்பரிலிருந்து இத்தாலியில் இந்தியத்தூதருக்கான இடம் காலியாக இருப்பது Irony! இத்தாலியின் இந்தியத்தூதராக செல்ல வேண்டிய B.K.குப்தா ‘ நான் மார்ச் ரெண்டாவது வாரம் போகிறேனே..’என்று சொல்லிக்கொண்டிருந்தார் என்று ஒரு தகவல். அதே நேரம் நட்வர் சிங் சொல்வது வேறு மாதிரியிருக்கிறது. “ Right now, we don’t have an ambassador in Italy. We told him not to go.”
நட்வர்சிங் இந்த இடியாப்பசிக்கல்களை எதிர்கொள்ளத் தேவையானதாக சொல்வது – The temperature needs to cool first, especially in Parliament and in the MEDIA.


இத்தாலியின் நெஞ்சில் சொருகப்பட்டுள்ள வாளாகிய வாட்டிகனில் புதிய போப்.
Every country gets the circus it deserves. Spain gets the bull fights. Italy the church. America Hollywood. – Erica Jong


 ஆனால் கடந்த சில காலமாக போப்கள் இத்தாலிக்கு வெளியில் இருந்து போலந்து, ஜெர்மனியிலிருந்தும், இன்று அர்ஜெண்டைனாவிலிருந்து வருகிறார்கள்.

.......................................................

http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post_16.html



5 comments:

  1. I love Italy a lot , good writing

    ReplyDelete
  2. சுவாரசியமான பதிவு!

    ReplyDelete
  3. ஹெலி காப்டர் ஊழல் பிரச்னையை மறைக்கத்தான் இந்த நாடகம் என பேச்சு அடிபடுகிறதே அதைபற்றி ஏதாவது சொல்லக்கூடாதா.

    ReplyDelete
  4. Robert De Niro was born in NY, USA. Yes, he is of Italian descent. However, there are about 17 million Americans who claim to be of Italian origin. (Italy~60 million population)

    http://en.wikipedia.org/wiki/Robert_De_Niro

    ReplyDelete
  5. இத்தாலியின் நெஞ்சில் சொருகப்பட்டுள்ள வாளாகிய வாட்டிகனில்... நல்ல விளக்கம் :D

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.