Share

Feb 26, 2013

விந்தைக்கலைஞன் சந்திரபாபு


 









”ஹிண்டு” ரங்கராஜன் ஒரு நாள் இதைச் சொன்னார்.

1960களில் சந்திரபாபு இவரைத் தேடி வந்திருக்கிறார். இருவரும் ‘வாடா போடா ‘ என்கிற அளவுக்கு நெருக்கம். 

“ ஒரு நூறு ரூபாய் கொடு” என்று ரங்கராஜனிடம் கேட்டிருக்கிறார். அந்த காலத்தில் நூறு ரூபாய் மதிப்பு மிகவும் அதிகம். ஹிண்டு ரங்கராஜன் “ போடா! தரமாட்டேன் “ என்றாராம். 

அதே சமயத்தில் அங்கே சந்திர பாபுவின் பின்னால் ஒருவர் கையில் சின்ன சூட்கேஸ் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்திருக்கிறார். சந்திரபாபு மீண்டும் “ டேய் ஒரு நூறு ரூபாய் குடுடா” என்று வற்புறுத்தியிருக்கிறார்.

 ஹிண்டு ரங்கராஜனுக்கு பணம் தர விருப்பமில்லை.” போடா. “ என்றவர் சந்திரபாபுவின் பின்னால் நின்று கொண்டிருந்த நபரைப் பார்த்து யாரென்று விசாரித்திருக்கிறார். 

விஜயா வாஹினி ஸ்டுடியோ அதிபர் நாகிரெட்டியின் புரொடக்சன் மானேஜர் அவர். நாகிரெட்டி அப்போது எடுக்கவிருந்த ஒரு பிரமாண்ட தயாரிப்பு ஒன்றில் சந்திரபாபுவை ’புக்’ செய்ய வந்திருக்கிறார். அட்வான்ஸ் தொகை பத்தாயிரம். படத்திற்கான ’முழு சம்பளத்தொகை’ சந்திரபாபுவுக்குத் திருப்தியில்லை. அதை விட பெரிய தொகை சம்பளமாகத் தந்தால் நடிக்கத் தயார். புரொடக்சன் மேனேஜர் சம்பளம் இவ்வளவு தான் என ரெட்டியார் சொன்ன விஷயத்தை சொல்லி அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்திப் பார்த்தும் பாபு மசியவில்லை. ஹிண்டு ரங்கராஜனைத் தேடி பார்த்தசாரதி கார்டனுக்கு பாபு வந்து விட்டார்.

 நாகிரெட்டியின் புரடக்சன் மேனேஜர் “ நீங்க சொல்லுங்க சார். பாருங்க இவர் பிடிவாதத்தை!“ என்று ஹிண்டு ரங்கராஜனிடம் சொல்கிறார். ரங்கராஜனுக்கு கோபம் வந்து விட்டது. சந்திரபாபுவிடம் “ இடியட்! மரியாதையா அந்த பணத்தை வாங்கிக்கடா. பைத்தியக்காரா. எங்கிட்ட வந்து நூறு ரூபாய் கேட்கிறியடா. பத்தாயிரத்தை வாங்கச் சொல்லி அந்த ஆள் கெஞ்சுறான்!” என்று அதட்டியிருக்கிறார். பாபுவின் அமைதியான பதில்: “That is none of your business. நான் கேட்ட நூறு ரூபாயை கொடு.”  
ரங்கராஜனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சரி. நாம் நூறு ரூபாயைத் தர உறுதியாக மறுத்துவிட்டால் சந்திரபாபு எப்படியும் நாகிரெட்டி தரும் பத்தாயிரத்தை வாங்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்று முடிவு செய்து “ தர மாட்டன்டா. போடா.” என்று எரிச்சலோடு சொல்லியிருக்கிறார்.
சந்திரபாபு திரும்பி விறு விறு என்று நடந்து வெளியேறிப் போய் விட்டார்.
ஹிண்டு ரங்கராஜனும் நாகிரெட்டியின் மேனேஜரும் ஸ்தம்பித்துப் போய் விட்டார்கள்.


இந்த நிகழ்வைச் சொல்லி விட்டு ஹிண்டு ரங்கராஜன் உடைந்த குரலில் சொன்னார். “ அவன்….. பாபு.. He is a man of principles! ” சந்திரபாபு இறந்து போய் அப்போது ஏழு வருடங்கள் ஆகியிருந்தது. அந்த வார்த்தையை ரங்கராஜன் சொன்னபோது அது வீரியமிக்கதாய் இருந்தது.
இந்த man of principles என்கிற வார்த்தை இப்போது தேய்ந்து போன cliché. பாபு அன்றைக்கு  ரங்கராஜனிடம் கேட்ட நூறு ரூபாய்க்கு கூட இன்று என்ன மதிப்பு?   

.... 

ஏற்கனவே திருமணமாகியிருந்த ‘ஹிண்டு’ ரங்கராஜனின் வாழ்க்கையில் ’செம்மீன்’ ஷீலா. நடிகை ஷீலாவுக்கும் ரங்கராஜனுக்கும் affair ஏற்பட்டு திருமணம் நடந்தது. அந்த திருமணம் தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு தான் நடிகர் ரவிச்சந்திரனின் இரண்டாவது மனைவியாக ஷீலா ஆனார். அவரிடமிருந்தும் பிரிந்தார்.
சந்திரபாபுவின் திருமணமும் தோல்வி தான் என்பது தெரிந்தது தான். பாபுவின் அந்த ஒரே மனைவி பெயர் கூட ஷீலா தான்.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhs8eiw5r67Un5djg8UXRDqamCH1Ntok1ByPq-jv_LdA1KC22_zGBjZ6LZhA3beg8TQ9_PVzAmCy0Qpc6Ig23hdjo2xNs6sAc1MhqM0deXFij1oA6J7BaVp1DH0lYuttjJITYmcImOUCDCB/s1600/13.jpg


…………………………………………………………………..


சந்திர பாபு

பெங்களுர் ராஜா  பாலஸில் ஒரு பாடல் சூட்டிங் .
 சொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும். அது எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்.”
இந்த ரெண்டு நாள் ஷூட்டிங் வீண் தான் . இதெல்லாம் Development Hell. இப்படி பல மாற்றங்கள் நடக்கும் . ஏனென்றால் அந்த பாடல் பின்னர் வீ ஜி பி கோல்டன் பீச்சில் வேறு நடிகர்  நடிகை நடிக்க படமாக்கப்பட்டு திரையில் வந்தது.  நான் உதவி இயக்குனர் .
இந்த பாட்டு ரெகார்டிங் ஆன போது நடந்த விஷயம்  இன்னும் சுவாரசியம் .

பாட்டு ஷூட்டிங் போது டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் சொன்ன விஷயம் எல்லோரையும் ஆச்சரிய பட வைத்தது . சுந்தரம் மாஸ்டர் தான் பின்னால் பிரபலமாக போகும் பிரபு தேவாவின் அப்பா .
"சந்திர பாபு வுக்கு நடனம் ஆட தெரியாது . நடனம் பற்றி எந்த அடிப்படை அறிவும் கிடையாது ." --
"சும்மா எல்லாம் பாவ்லா தான் செஞ்சான் . ஆனா ஜனங்க அதை அந்த காலத்தில் டான்ஸ் னு  நம்பினாங்க .  பெரிய டான்சர் சந்திர பாபு ன்னு இன்னைக்கும் எல்லாரும் நினைக்கிறாங்க .  அவன் சும்மா டான்ஸ் ஆடுற மாதிரி பாவ்லா தான் பண்ணான் ".
இதில் அபத்தம் என்ன வென்றால் சுந்தரம் மாஸ்டர் நடிகர் நடிகைகளுக்கு டான்ஸ் ஆட பயிற்சி  தரும்போது அவர்  ஆடுவதை காண சகிக்காது . ஒவ்வொரு வரிக்கும் அவர் முதலில் ஆடிக்காட்டுவார் . கொஞ்சம் கூட டான்சில் GRACE இருக்காது . மூவ்மென்ட் ஆரம்பிக்கும் போது  செயற்கையாக வினோதமாக இருக்கும் .
'இவன் ஆடி பார்க்கவா' . டைரக்டர் அவர்  காதில் விழாதவாறு கமெண்ட் அடிப்பார் . எல்லோரும்  கண்ணை  மூடிகொள்வார்கள்.

சந்திர பாபுக்கு என்ன தான் தெரியும் . தமிழே எழுத படிக்க தெரியாதவர் . ஆனால் AMERICAN ACCENT ல் இங்கிலீஷ் பேசுவார். நடிப்பு பாட்டு டான்ஸ் இசை,இயக்கம் .. ஆல் ரௌண்டர் ..

கேலி கூத்து இப்பவும் ஒரு ஆல் ரௌண்டர் ..டண்டனக்கா ... டண்டனக்கா குரங்கு பயல் எல்லாம் க்கொடி கட்டி 'தட்டிப்பாத்தேன் கொட்டாங்குச்சி' - அபத்தம் . வீராச்சாமி !

சந்திர பாபு ஜெயிக்க முடியவில்லை .

சந்திர பாபு ஆடியது டான்ஸ் இல்லைஎன்றால் அது போல ஆடாமல் சுந்தரம் மாஸ்டர்  ஆடுவதா டான்ஸ் ? பிரபு தேவா கூட சந்திர பாபுவை காப்பியடிக்கவில்லையா ? பாபுவை இமிட்டேட் செய்து தானே ஆடினார் .

ஒரு நாள் வீட்டில் டிவி யில் ஒரு சேனல் லில் 'கண்ணே பாப்பா ' ஓடி கொண்டிருந்தது . ஒரு நிமிஷம் பார்த்தேன் .சந்திர பாபு நடிக்கும் போது கேசுவலா ஒரு சின்ன ஹம்மிங் செய்கிறார் .
ஹிந்துஸ்தானி ! ஹிந்துஸ்தானி க்ளாசிகல் !
பண்டிட் ஜஸ்ராஜ் ஜோக் ராக ஆலாபனை ஆரம்பிப்பது போலிருந்தது .

மெஹ்தி ஹசன்  கஜல் பாடல்  “ZINDAGI MERE SAFI PYAARU KIYAA KARUTHEGU..”என்ன ஒரு சௌஜென்யம் . என்ன ஒரு அற்புத குரல் .
மெஹ்தி ஹசனின் இந்த பாடலை கேட்கும்போது  ஏனோ எப்போதும் சந்திரபாபு ஞாபகம் வரும் .
சரியான சூழல் மட்டும் இருந்திருந்தால் பாபு பெரிய கஜல் பாடகர் ஆகி இருப்பார் .

அசோகமித்திரன் என்னிடம் ஒரு முறை சொன்னார் . "சந்திர பாபுவுக்கு ஆன்மீக தேடல் இருந்தது . அதற்கான வழி காட்ட, அவரை நெறிப்படுத்த சரியான குருநாதர் கிடைக்கவில்லை "


...................................................................

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_291.html

Feb 18, 2013

Carnal Thoughts - 38



Bosom – The dual wonders with nipples! Inviting Cleavage!


 'The interesting thing about breasts is that they change all the time' wrote Alan Brien. When a woman is running, or angry, or wearing a sweater, a breast is the most restless thing in the world. - Khushwant Singh

‘மேலுடைக்குள்ளும்
உள்ளாடைக்குள்ளும் அடங்காமல்
அலை போல எழுந்து பெருகும்
யுவதியின்
தடந்தோள்
முலைகள்…..’      - ஷங்கர்ராமசுப்ரமணியன்.




 (Amrita Sher-Gil's self portrait)

“உன்னை அழகுபடுத்திக் கொள்வதற்காக உன் மார்பகங்களை திறந்து காட்டுகிறாய்.” - நாவலில் ராபர்ட்டோ கலாஸ்ஸோ


’என் தடமுலைகள் மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழவே மாட்டேன்’ என்றாள் ஆண்டாள்.
பெண் போகத்தில் ஆணின் கவனம் குவிவது முலைகள் மீது. காமத்தை அதிகரிக்கச்செய்யும் கொங்கைகள். Erotic bosom. 

       
பிளவுடன் கூடிய இந்த இரட்டை அதிசயம்! 
 "A woman's breast is the organ with which she is able to express herself most intelligently. It is her language and poetry,her history and music, her purity and her desire...The bosom is the central organ of all female ideas, wishes and moods."
- Leo Berg
Heaven on earth is to be found on a woman’s breasts.
-    Pasolini’s movie ‘Arabian nights’

”நான் பேசும்போதே அவள் முகத்திலிருந்து அவள் மார்பிற்கு ’மினி டைவ்’ அடிக்கும் என் கண்கள்” என்று ஆதவன் சொல்வார். 

I was getting orgasms over my junior’s wife’s bosom. I forced my head back towards my junior, though my eyes continued to wander in the direction of the dual wonders. – in Upendra Namburi’s thriller ‘31’


வெறுத்துப்போய் பட்டினத்தார் கேட்டார் “ எத்தனை பேர் தொட்ட முலை?”
”Breasts and bottoms look boringly alike.”- Lee Remick. இந்த லீ ரெமிக் ஒரு அமெரிக்க நடிகை. ஜேம்ஸ் ஸ்டீவர்ட், ஜாக் லெமன் ஆகியோருடன் நடித்தவர்.

ப்ரா போடாமல் இப்போது பெண்கள் ஜாக்கெட், டீ சர்ட் போடுவது Free boobing style! 

“Cover that bosom. I must not see it. Souls are wounded by such things, and they arouse wicked thoughts” – Moliere  ’உள்ளதை சொல்றேங்க  பாணி’!  

 

இன்றைக்கு சரியாக நாற்பது வருடங்களுக்கு முன் வந்தவை தமிழ் நாடனின் ’காமரூபம்’ கவிதைகள்.

”கும்பகோணமாய் இருக்கும் கொங்கை என்றேங்கி

கும்பகோணத்தாளைக் கொண்ட சங்கரன் அம்பிக்கு

முதல் நாளில் முதல் நிர்வாணத்தில்

மங்கை கொங்கை தொங்கு சலாம் போட்டது.”

 

“கைப்பந்து போட்டியில் மகளிர் அணிகள் ஆடின.

பந்தாட்டத்தை ப் பார்ப்பது மறந்து பந்துகள் ஆட்டத்தை ரசித்தனர் பழங்கிழடுகள் முன்வரிசையில் அமர்ந்து”

 


  .............................

 

Women's breasts age faster than the rest of their body..

 கிழவியான பின் ”காஞ்சி போன 'BUN'னுல  சுருங்கின கிஸ்மிஸ் பழம்போல” தொங்கிப்போகும் கொங்கைகள்!

 

 .................................