Share

Jan 24, 2013

கலை ஞானி உன்றன் அருமை அறிகிலார்கமல் ஹாசன் என்ற கலைஞானியை, பேரறிவாளனை முறித்துப்போட்டுவிடும் முயற்சி தீவிரமடைந்து விட்டது. 

நினைவு தெரிந்த நாள் முதல் கமல் படங்களைப் பார்க்கும்போது கிடைக்கும் திருப்தி வேறு படங்களில் கிடைத்ததேயில்லை.
ரஜினியின் படங்கள் விரும்பிப்பார்த்ததேயில்லை. என் மகன்கள் சிறுவர்களாயிருக்கும்போது ரஜினி படத்திற்கு அழைத்துப் போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போதெல்லாம் தியேட்டரில் அவர்களை உட்கார வைத்து விட்டு இருப்பு கொள்ளாமல் நடமாடிக்கொண்டு இருப்பேன். அப்படி நான் கடமையே என்று என் மகன்களுக்காக தியேட்டருக்குப் போயிருந்த போது ஒரு படம் பார்க்கும்போது அசந்து போய் ஒன்றிப் போய் விட்டேன். அந்தப் படம் ’பாட்ஷா’!

மோகன் லாலின் மணிச்சித்திர தாழ் பார்த்து விட்டதால் சந்திரமுகி பார்க்கவில்லை.
சந்திரமுகி துவங்கி எந்திரன் வரை ஒரு ரஜினி படமும் நான் பார்த்ததேயில்லை.
விஜய்காந்த் படங்கள் பார்த்ததேயில்லை. கேப்டன் பிரபாகரன், ரமணா கூட பார்த்ததில்லை.
ரஜினியை பிடிக்காது என்றில்லை. ரஜினி படங்கள் முழுமையாக பார்க்க எனக்கு பொறுமையில்லை. டி.வியில் தான் ஏதேனும் சேனலில் ரஜினி படக்காட்சிகள் பார்க்கக்கிடைக்கின்றதே.
ஆனால் கமல் படங்கள் கடந்த 30 வருடங்களில் பெரும்பாலும் எந்தப்படத்தையும் இரண்டாவது முறையாக பார்க்காமல் விட்டதேயில்லை!
சாமானியர்களுக்கு இருக்கிற சில சந்தோஷங்களுக்கும் இப்போது ஆப்பு விழுகிறது.
ஒரு movie connoisseur  ஆகிய எனக்கே மனம் நொறுங்கிப்போய் விட்டதென்றால் கமல் ஹாசன் என்ற அந்த மகத்தான, சீரிய கலைஞன் மனம் என்ன பாடு படும்.

கமல் எந்தப் படம் எடுத்தாலும் ஏதேனும் ஒரு பிரிவினர் கோபப் படுவது தொடர்கதையாகி இப்போது கமல் என்ற ஆலமரத்தை வேரோடு பிடுங்கிப் போட்டு விடும் வக்கிரம் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

திரையுலக வாழ்க்கையில் ஏதோ ஆரம்ப காலத்தில் தான் ஒரு நடிகனுக்கு சினிமா சான்ஸ் சரியாக வாய்க்காத நேரங்களில் அவமானங்களை, தடைகளை சந்திக்க நேர்ந்திருக்கும். ஆனால் இப்படி ஒரு கலைஞன் விசுவரூபம் எடுத்த பின்னும் கமலுக்கு நேரும் அச்சுறுத்தல் மிகவும் அபத்தமானது. 
ஔரங்கசீப்களால் ஒரு பெருங்கலைஞனின் திரைக்காவிய முயற்சி தீர்ப்பிடப்படும் சீரழிவு.
கார்ட்டூன் துவங்கி சினிமா வரை கலாச்சாரக்காவலர்களின் வன்முறை தலை விரித்தாடுகிறதே !
இது பொதுப்பிரச்சினை கிடையாது என்று சொன்னால், கமல் என்ற கலைஞனுக்கும் ராஜநாயஹம் என்ற movie connoisseur க்குமான  தனிப்பட்ட சிக்கல் என்று கலாச்சாரத்தீவிரவாதிகள் மதிப்பிடுவார்களேயானால் நான் எப்போதும் சொல்வதைத் தான் இப்போதும் சொல்ல வேண்டியிருக்கிறது- We both have an aweful time to be alive!

ஜாதி, மதம், அரசியல் கொள்கைகள், குழுக்கள் இன்று கலையின் விரிந்த சுதந்திர சாதனைகளை கொலை வெறியுடன் அணுகும் துர்ப்பாக்கியம்.
எந்த யோக்யதையும் இல்லாத கலாச்சார தீவிரவாத அமைப்புகள் இன்று சினிமா டிஸ்கசனில் துவங்கி வசனம், காட்சியமைப்பு என்று ஒரு முழுப்படத்திலும் மூக்கை நுழைக்க உரிமை கோரும் அருவருப்பான நிலைக்கு உண்மைக்கலைஞர்களின் நிலை பரிதாபம்.

’கமல் ஹாசன்  கடவுள் நம்பிக்கையில்லாதவர்’ என்பது ஒன்று போதுமே இவர்கள் ஹராம் என்று முகத்தை சுளிப்பதற்கு. எனில் இந்த மனச்சாய்வுக்கு ‘அவர் சைத்தானின் ஆள்’ எனும் பிம்பம் ஒன்று போதுமே ’கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்’ என்று வெறுத்து புறக்கணிப்பதற்கு. பெண்கள் சினிமா பார்ப்பதே ஹராம் என்று ஊர்க்கட்டுப்பாடு விதிக்கிறவர்கள் தானே!


கமல் ஹாசன் என்ற கலைஞானிக்கு எதிரான ’தியேட்டர் உரிமையாளர், வினியோகஸ்தர், தயாரிப்பாளர் கூட்டமைப்பு’ அபத்தத்தையே சகிக்க முடியவில்லை எனும்போது கலாச்சாரக் காவல் தீவிரவாதத்தை எங்கனம் தாங்கிக்கொள்ள முடியும். 
’என் கலையுலக அண்ணா’ என்று கௌரவப்படுத்திய ரஜினி இந்த இக்கட்டான நேரத்தில் கமலுக்கு தன் தார்மீக ஆதரவை காட்ட உரத்து குரலெழுப்பியிருக்க வேண்டும்.

யாரை இவர்கள் வெறுக்கிறார்கள்? இவர்களின் மதிப்பீடுகளைத் தகர்ப்பவனை.ஆனால் அவனே படைப்பவன். மகா கலைஞன்!

.... 


http://rprajanayahem.blogspot.in/2012/05/we-have-aweful-time-to-be-alive.html 

http://rprajanayahem.blogspot.in/2009/01/blog-post_28.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_26.html


http://rprajanayahem.blogspot.in/2009/02/my-concern-is-always-with-not-so.html


http://rprajanayahem.blogspot.in/2008/07/blog-post_29.html


http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_5.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_8178.html

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_2678.html7 comments:

 1. இதைவிட அருமையான கட்டுரையை விஸ்வருப விஷத்தில் படிக்கவில்லை. நன்றி. I support Kamal.

  ReplyDelete
 2. குசேலன், பாபா பிரச்சனையின்போது கலையுலக அண்ணனை ஆதரித்து இந்த கலையுலக தம்பி உரக்க எழுப்பிய குரல் இன்னமும் காதில் கேட்டுக்கொண்டே இருக்கு.

  உண்ணாவிரதத்தின் போது இடையழகியின் இடையை பிடித்தபடி இந்த கலையுலக தம்பி பேசிய பேச்செல்லாம் இன்னமும் காதில் கேட்டுக்கொண்டே இருக்கு.

  இதுவரை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியவர் இன்று மாட்டிக்கொண்டார்.

  தேவர்களை வைத்தே அவர்களை மட்டம் தட்டினார்.

  மன்மதஅம்பில் ஈழதமிழர்களை இழிவுபடுத்தினார்.

  நாஞ்சில் தமிழ் பேசும் ஒருவர் மூலம், தசாவதாரத்தில் நாடார்களை இழிவு படுத்தினார். கடலூரில் சிதம்பரம் ஏரியாவில் ஏன் நாஞ்சில் தமிழ், நாடார்கள்?

  அதே தசாவதாரத்தில் ஒரு காட்சி எங்களை காப்பாற்றியது அல்லா என்று நாகேஷ் வானத்தை பார்ப்பார் [மேலே ஹெலிகாப்டரில் உலகநாயகன் "பலராம்" நாயுடு]. இது போல பல வைணவ குறியீடுகள்...............

  பலநாளாக தப்பித்தவர் இன்று மாட்டிக் கொண்டார்.

  ReplyDelete
 3. Hi Rajanayahem,

  I'm a big fan of your blog and have not missed even one of them until now. It's very sad that being a person of such vast knowledge that you are unable to look at the Visvaroobam issue from the Muslims' point of view.
  While an artist has the full freedom to express his feelings, he as a representative of the people also should shoulder the responsibiltiy not to hurt or put forth misconceptons about a particular community.
  Your idea that Muslims are against Kamal because he is an athiest is laughable. If that's the case why didn't the Muslims rise against Kamal before now?
  Our objections are based solely on the fact that by portraying the Muslim community as terrorists or supporters of terrorism he is spreading a poisonous seed among the peace loving people of Tamil Nadu. Hence, this unified voice against his fake campaign to tar the image of Muslims under the mask of art.
  Muslims may say it's haram to watch movies. It's their right. By the way when they say haram it also applies to men as well as women.
  I sincerely hope that without looking at this view as a fan of Kamal, as usual you should look at it without any pre misconceptions. It's a very humble request from your fan.

  Fareez Farook
  Toronto, Canada.

  ReplyDelete
 4. Muslims may say it's haram to watch movies. It's their right. By the way when they say haram it also applies to men as well as women

  Mr. Fareez- what is the meaning of these senetcnes

  ReplyDelete
 5. சார்,
  ஏற்கனவே படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் , இல்லையென்றால் உங்கள் பார்வைக்கு ,[If link is not working, visit, www.savukku.net and then see for viswaroopam]


  http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=1743:2013-01-25-19-18-57&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19

  ReplyDelete
 6. Hi Mr. Raamji,

  Mr. Rajanayahem in his blog mentioned that muslims do not allow women to watch movies and call it's haram. I clarified that muslims do not say it's haram to watch movies only for women but it applies to men too. I'm a muslim and I watch movies and from my point of view the verdict of haram should be tagged to only the movies where lust & sex is portrayed with the view of spoiling young minds. However, muslims or no one else has the right to stop anyone from watching a movie. The muslims who adhere to the verdict of their community elders won't watch the movies while the rest will follow their own judgement and watch the movies anyway.
  As far as Visvaroobam is concerned the protest is not against Kamal or his freedom of expression. As they say in the west as long as your finger do not touch my nose you have the freedom to voice your opinion. I'm not from Tamilnadu and not an Indian. But as a peace loving person I strongly believe that no one should attack another community solely based on their religious beliefs. I love Tamil and the Tamil people due to their unity even while rest of the India was/is burning with the communal hatred. A drop of poison is enough to turn a bucketful of milk into a killing instrument. Visvaroobam might be full of technical brilliance and dynamic acting but why sow the seeds of hatred among brothers? If Kamal wants to show that there are terrorists, why doesn't he show them without any religious symbols? As an artist shouldn't he have some responsibility? While married to Vaani he was having an affair with Sarika and that was his right. Sarika gave birth to Sruthi out of wedlock and that was his right. Even now he's living together with Gowthami and that is his right. But what right does he have to disrupt the communal harmony and bring forth a tragic situation where each member of the community will look at each with suspicious eyes?

  ReplyDelete
 7. Hi Rajanayahem,

  First of all I would like to thank you for posting my comments even though it was contradictory to your views.
  I would like to share the following link with you which gives me the hope that Tamilnadu will always be an abode of peace as long as such people are there who think beyond the communal lines.

  "http://thekkikattan.blogspot.ca/2013/01/blog-post_29.html"

  Keep up your good work and your style of writing is really mesmerising.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.