Share

Nov 20, 2012

Never Explain!


’வில் வித்தையின் உச்சகட்டம் அம்பை எய்யாமல் இருப்பதே’ என்ற இந்த ஜென் தத்துவம் என்னால் இன்று  பிரபலமாகியிருக்கிறது.
கே.பாக்யராஜ் என்னிடம் ’ஒரு கதை சொல்லுங்கள்’ என்று கேட்டபோது
நான் மறுத்து விட்டு சொன்ன பதில் : வில் வித்தையின் உச்சகட்டம் அம்பை எய்யாமல் இருப்பதே!

இந்த ஒற்றை வரி தத்துவம் Capacity,Ultimate Power,Real test,Endurance,Reticence,Humbleness,Maturity,Perfection போன்ற இன்னும் பல பரிமாணங்களை உள்ளடக்கிய விஷயம்.  அதனால் இதை மொழிபெயர்ப்பது - 'literal' translation அபத்தம் என்றால் English equivalent ஆக ஒரே ஒரு quotation அல்லது proverb தருவதும் அபத்தம்தான் அல்லவா?
Never Explain! Never miss a good chance to keep silence!  

சுந்தர ராமசாமி எழுதும்போது கவனமாக மேற்கோள்களை தவிர்த்து விலக்குபவர்.இங்கே அவருடைய ஜே.ஜே நாவலிலிருந்து மேற்கோள் காட்டலாம்.
” மௌனம் கேள்வியை உயிரோடு வைத்திருக்கிறது.பதில் உளறல்கள் கேள்வியை துவம்சம் செய்து விடுகிறது.”
 ஆனால் INFORMATION-INTELLECT அமுதசுரபி ஆகிய நான் இதோடு நிறுத்த முடியுமா? கூலரிட்ஜ் சொன்னதையும் பதிய வேண்டித்தான் இருக்கிறது.
”Silence does not always mark wisdom.”

......

“ It is the possibility of having a dream come true that makes life interesting.Never stop dreaming.”

Alchemist நாவலை 1988ல் பவுலோ கொயலோ எழுதியிருக்கிறார்.



“ஏதேனும் ஒரு அழகிய கனவு
என்றும் என்னுடன் இருந்து வருகிறது.........
கனவுகள் உடைந்து தகர்வதைப் பற்றி
கவலைப்படக் கூட முடியாமல்
மீண்டும் மீண்டும்
புதிது புதிதாய் முளைக்கும் கனவுகள்

கனவாற்றின் கரைகளில் தானே
வாழ்க்கை கொஞ்சம் தலைசீவி அழகு கொள்கிறது

கனவுகளற்ற பாலை நாட்கள்
வரவே வேண்டாம்
ஏதேனும் ஒரு அழகிய கனவு
என்றும் என்னுடன் இருக்கட்டும்.”

சமயவேலின் மேற்கண்ட கவிதை இடம்பெற்றுள்ள
’காற்றின் பாடல்’ கவிதைத் தொகுப்பு 1987ம் ஆண்டு வெளி வந்திருக்கிறது.

,,,,,,,,,,,,,,,

விகடன் மேடை ஆனந்த விகடன் வாசகர்கள் கேள்விகள் கமல் பதில்கள்.
கமல் ஹாசன் சொல்லியிருந்தார். “சந்திக்காத நபர்களில் காந்தி,பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் திரு எஸ்.வி.ரங்காராவும் அடக்கம்.”

ரங்காராவுக்கு எப்பேர்ப்பட்ட மகுடம்!


மூன்று மாதம் முன் ஒரு விகடனில் அசோகமித்திரன் பேட்டி.

அசோகமித்திரன் : ”நாம் ஒன்றுமே இல்லை என்பது தான் பெரிய உண்மை.என்னுடைய சாம்பலைக்கூடத் திரும்பிப் பார்க்காதீர்கள் என்று தான் என் குடும்பத்தாருக்கே சொல்லி இருக்கிறேன்.”

எமர்சன் சொன்னான் -“A great man is always willing to be little.” 

'Use a humble pen'  என்று சொல்லப்படுவதுண்டு. அசோகமித்திரன் வகை எழுத்து அத்தகையது.

.......................................


ஓவியம் : மு. நடேஷ்




4 comments:

  1. //
    வில் வித்தையின் உச்சகட்டம் அம்பை எய்யாமல் இருப்பதே’
    //

    ஸ்கைஃபால் ப‌ட‌த்தில் ஜேம்ஸ் பாண்ட்டுட‌ன் க்யூ பேசும் காட்சியில் இத‌ற்கிணையான‌ ஒரு வ‌ச‌ன‌ம் வ‌ரும்..

    "நீ ஒரு வ‌ருச‌ம் ஃபீல்ட்ல‌ ப‌ண்ணுற‌ வேலைய‌ நான் என்னோட‌ பைஜ‌மால‌ உக்காந்துட்டு காலையில‌ ரெண்டாவ‌து க‌ப் டீ குடிக்குற‌துக்கு முன்னால‌யே என் க‌ம்ப்யூட்ட‌ர்ல‌ செஞ்சிட‌ முடியும்"என்று க்யூ சொல்ல‌, அத‌ற்கு பாண்ட்

    James Bond: Oh, so why do you need me?

    Q: Every now and then a trigger has to be pulled.

    James Bond: Or not pulled. It's hard to know which in your pajamas.

    ReplyDelete
  2. Happy to see your face in cp's blog. Atleast now onwards I can put a face to your writings. But dont leave a big gap like before.
    have a great day.
    -surya

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.