Share

Aug 29, 2012

ந.பிச்சமூர்த்தி


Oct 9, 2009



மகமாயி - வேஷ்டி

சாதாரணமா இந்த நவீன யுகத்தில் ஏழ்மையில் உள்ள ரொம்ப சுமார் பெண்களைப் பார்த்தால் "அட்டு பிகர் " என்று விவரிக்கிற காலம் இது.

முகத்தில் அம்மைத்தழும்பு. ஒரு ஏழைப்பெண். இவள் பெயர் பார்வதி . இவளைப்பற்றி ந .சிதம்பர சுப்பிரமணியம் " என்று வருவானோ " என்ற சிறுகதையில் விவரிக்கும் அழகு : " லக்ஷ்மியின் அருள் அவளிடம் விழவில்லையானாலும் மகமாயி யின் கருணை அவள் மேல் விழுந்து முகத்தில் அநேக இடங்களில் பதிந்திருந்தது ."


வீட்டில் அறைக்குள் சூரிய வெளிச்சம் விழுவதும் பின் மறைவதும் சாதாரணம் தான். இதை ந.பிச்ச மூர்த்தி ' வலி ' சிறுகதையில் எப்படி விவரிக்கிறார் :

கண்ணுக்கு எதிரே வெள்ளைத்துணி பறந்தது .... ஒன்றுமில்லை . எதிர்ப்புரத்து சன்னல் வழியாக சூரியன் நுழைந்து சுவரில் வெள்ளைத்துணியைக் கட்டிக்கொண்டிருந்தான் ...

( கொஞ்ச நேரங்கழித்து )

சூரியன் கட்டிய வெள்ளை வேஷ்டி சுவரில் பாதியும் தரையில் பாதியுமாகக் கிடந்தது .

(இன்னும் நேரங்கழித்து )

கீழே புரண்ட துணியை சூரியன் எடுத்துக் கொண்டு போய் விட்டான் .

........

Dec 24, 2009


மாய யதார்த்தம்
A realistic setting is invaded by something too strange to believe.
"காட்டில் திரியும் வேங்கை நிலவில் மரத்தில் நகத்தை ஆழப் பதித்து விட்டுப் போய் விடுகிறது . அதைப் பின்னரோ மறுநாளோ பார்த்த பிராணி கிலி பிடித்து உயிரை விட்டு விடுகிறது!வேட்டையாட வேண்டிய கஷ்டமில்லாமல் உணவு "

-ந. பிச்சமூர்த்தி ' பஞ்சகல்யாணி ' கதையில் புலியின் புத்திசாலித்தனமான உணவுத் தேடல் பற்றி. The peculiar attitude on the part of tiger towards it's prey!
இங்கே புலி மரத்தில் வரைகிறது .


கோவையிலுள்ள தென் பாண்டியன் கவிதை ஒன்று இந்த டிசெம்பர் மாத 'உயிரெழுத்து' பத்திரிகையில். கவிஞன் வரையும் மரம். வரைந்த பின் பறந்து விட்ட பறவைகள் மீண்டு வந்து அமர்ந்த மரம். Illogical Scenerio!

COLERIDGE FORMULA வுக்கு உதாரணம்.

Willing Suspension of Disbelief in constituting the poetic faith.

Justification of the use of fantacy and non-realistic elements in creative writing.

பறவைகளை வழி நடத்து

பறவை ஒன்றை வரையத் துவங்கினேன்
வரைந்து முடிந்ததும்
அது பறந்து விட்டது
மீண்டும் ஒரு பறவையை
வரைந்தேன்
அதுவும் பறந்து விட்டது
நான் வரைந்துகொண்டே இருந்தேன்
அவைகள் பறந்து கொண்டே இருந்தன
இறுதியாக மரம் ஒன்றை
வரைந்து முடித்தேன்
பறந்து போன அத்தனை
பறவைகளும் வந்து
அமர்ந்து கொண்டன.

.........


Nov 26, 2008


பட்ட மரம்

அந்த பட்ட மரம் தனிப்பட்டு ,தலைவிரி கோலத்தில் நின்று
மௌனமாக புலம்புவது போன்று எனக்கு தோன்றியது
.....................
" ஆமாம் மரம் தான் . ஆகாயத்தில் இல்லாத பொருளை கண் மூடிக்
கை விரித்து தேடி துளாவுவதைப்பார்த்தாயா ? விரிக்கப்பட்ட சாமரம் போன்று
ஆகாய வீதியை மேகங்களினின்றும் சுத்தப்படுத்துவதா அது ?...
அல்லது துளிர்க்க அது மழைத்துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது ? எதற்காக ?

--- மௌனி
' அழியாச்சுடர் ' கதையில்
........................................




காம்பு இற்றுப்போச்சு ...
நான் பூக்க மாட்டேன் .
காய்க்க மாட்டேன்
பழம் தர மாட்டேன் .
குயிலுக்கும் கிளிக்கும் என்னிடம் வேலையில்லை .
மரம் கொத்திப்பறவை வந்து
ஏணி மீது ஏறுவது போல் படிப்படியாக ஏறி
இடுக்கிலுள்ள புழுக்களைத்தேடும்.
நான் ஓய்ந்து விட்டேன் . ஒடுங்கி விட்டேன் . காய்ந்து விட்டேன் .

--- ந . பிச்சமூர்த்தி
'அடுப்புக்கு எதிரில் ' கதையில்

.........

http://rprajanayahem.blogspot.in/2012/07/individual-choice.html


 

1 comment:

  1. இந்தப் பறவை வரைதல் கவிதை முன்பே பாராட்டப் பட்ட போது, இந்த ஆங்கில மொழிபெயர்ப்பையும் இதற்கு மூலமான் பிரெஞ்சு வடிவத்தையும் வெளியிட்டேன். இப்போது உங்களுக்காக ஆங்கில மொழிபெயர்ப்பு மட்டும்:

    "To Paint a Bird's Portrait"

    to Elsa Henriquez

    Paint first a cage
    with the door open
    next paint
    something pretty
    something simple
    something lovely
    something of use
    to the bird
    then put the canvas near a tree
    in a garden
    in the woods
    or in a forest
    hide behind the tree
    say nothing
    don’t move…
    Sometimes the bird comes quickly
    but it can just as well take many years
    before deciding
    Don’t be disheartened
    wait
    wait years if need be
    the pace of the bird’s arrival
    bearing no relation
    to the success of the painting
    When the bird comes
    if it comes
    keep very still
    wait for the bird to enter the cage
    and once it has
    gently shut the door with the brush
    then
    paint out the bars one by one
    taking care not to touch any of the bird’s feathers
    Next paint the tree’s portrait
    choosing the loveliest of its branches
    for the bird
    paint likewise the green leaves and fresh breeze
    the sun’s scintillation
    and the clamor of crickets in the heat of summer
    and then wait until the bird decides to sing
    If the bird does not sing
    that’s a bad sign
    A sign the painting is no good
    but if it sings that’s a good sign
    a sign you can sign

    • • •

    Jacques Prévert (1900-1977)

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.