Kaveri Ganesh, SensheSenshe இருவருக்கும் என் அன்பும்,நன்றியும்.
Dyno Buoy குறிப்பிடும் Christmas eve eve விஷயத்தில் அவருடைய அனலைஸை Christ never Laughed பதிவிலேயே சேர்த்து விட்டேன். என்றாலும் அவருடைய அனலைஸ் ந்யூ ஜெர்சிக்கு மட்டுமானதா,ஒட்டு மொத்த U.S. மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குமானதா?
Factual Integrity என்னிடம் உறுதியாக இருக்கிறது.உண்மைகளை சத்தியமாக நான் மிகைப் படுத்துவது இல்லை. Factual Error ஏதேனும் சுட்டிக் காட்டப்பட்டால் உடன் திருத்திக்கொள்ளவே செய்கிறேன்.
Dyno Buoy Sir!, Kabheesh S Sir,நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். என் வணக்கம்.
...
Kabeesh நீங்கள் டைனோ என்ன சொல்ல வரார்னு தான் எழுதியிருந்தீங்க.
I apologize. சென்ற வரியில் உங்களைச் சேர்த்தது என் தவறு தான்.
இன்று கிருஷ்ணமூர்த்தி சார் ப்ளாகில் என்னைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதை இந்தப் பதிவில் கடைசியில் சேர்த்திருக்கிறேன்.நன்றி.
............
Krishna Moorthy S
ஏதோ மலையை தூக்கி சுமப்பது போல, இந்த ரோலை நான் ரொம்ப பிரயாசையுடன் செய்கிறேனாக்கும் என்ற தோரணை. ரசிகப்பெருமக்களுக்கு ஆயாசமும் சலிப்பும் வருமா வராதா?
+Kabheesh S ஆர்பிஆர் மாதிரிப் பத்தி எழுத்து, வலைப் பதிவில் எழுதுவது எப்படி என்று புரிந்துகொண்டு எழுதுகிறவர்கள், தமிழில் அனேகமாக இல்லை!
+Dyno Buoy ஆர்பிஆர் எழுத்தையா அதீதம் என்று சொல்கிறீர்கள்? AVM ராஜனைப்பற்றிய இந்தப் பதிவை நன்றாக இன்னொருதரம் படித்துவிட்டு எது அதீதம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்! :-))
டைனோ என்ன சொல்றார்னா ஃபேக்ட்ஸ இவர் மிகைப்படுத்துவார்னு.
அப்புறம், மிகைப் படுத்துதல் என்றால் என்ன? ஒரு வகையில் எல்லாமே மிகைப்படுத்தப்படுவது தான்! மிகைப்படுத்தல் என்பது highlighting a character or an important moment. தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நாகேஷ் வைத்தி காரக்டரை, இந்த வைத்தி கண்ணசைச்சா வாகனங்கள் பறக்காதோ என்ற ஒரு வசனத்தில் உயிர்ப்பிப்பார்.
பதிபக்தி திரைப்படத்தில் சிவாஜி கொட்டுகிற மழையில் உருண்டு புரண்டு வசனம் பேசிக் கொல்கிற அந்த ஐந்து நிமிடக் கொடுமையை மிகைப்படுத்தல் என்று ரகப்படுத்தமுடியாது. ஓவர் ஆக்டிங் என்று தள்ளி விட முடியாது!பார்க்கிரவனைக் கொலை செய்கிற படுபாதகம்!சிவாஜியை மிஞ்சின கொடுமை AVM ராஜன்! அதை நாலே வரிகளில்,இந்தப் ப்ளஸ்சின் முதல் பாராவில் கொடுத்த பிறகும் கூட. டைனோ சொன்னார் என்று அடம்பிடித்தால் எப்பூடி! :-))))))
பத்தி எழுத்து, வலைப்பதிவுகளின் எல்லையை நன்குணர்ந்து எழுதத் தெரிந்தவர் என்று நான் வியந்து ரசிப்பது ஆர்பிஆர் ஒருவரைத்தான்!
ஆர்பிஆர் சிறந்த பத்தி எழுத்தாளர் என்பதை நானும் சொல்லியிருக்கிறேன். ஆனால் அதில் ஃபேக்சுவல் இன்டெக்ரிட்டி மிகவும் குறைவாகவே இருக்கும். உதாரணத்திற்கு டிசம்பர் 23 அதிக சேல்ஸ் நடக்கும் நாள் என்று எழுதி இருந்தார். அது தவறு என்று அந்த டேடாவை நான்கு வருடம் அனலைஸ் செய்தவன் என்று எனக்கு தெரியும், சுவாரஸ்யத்தை ஏற்ற அப்படி சொல்லியிருக்கிறார் என்று தாண்டி வந்துவிடுவேன்.
சுவாரஸ்யமாய் எழுதுகிறார், but not everything he writes is factual! He uses exaggeration to add the extra oomph! :)
What I am highlighting is, his choice of words, to drive home a fact! Rather scoring a point, if you care!
டைனோ! வாசிக்கிற எதையும் கேள்விக்கு உள்ளாக்காமல் ஏற்றுக் கொள்வதே இல்லை. அதனால் ஆர்பிஆர் அல்லது வேறு யாராக இருந்தாலும் சொல்கிற அத்தனையையும் மாற்ற முடியாத இறைவசனம் ரேஞ்சுக்கு வைத்துப் பார்ப்பதில்லை.சொல்வதை எப்படி நச்சென்று சொல்கிறார் என்ற பிரமிப்பு, கூடவே அவர் சொல்லாத, எனக்கு வேறு வழிகளில் தெரியக் கிடைத்த விஷயங்களையும் பொருத்திப் பார்த்து, இந்த எழுத்து இன்னமும் கூர்மையாக இருப்பதை,ரசிக்கிறேன், பகிர்கிறேன்! அவ்வளவுதான்!
படிச்சிட்டு ரொம்ப நேரம் சிரிச்சிட்டு இருந்தேன். :)))
ஆர்பிஆர் எழுத்துகளோட எளிமைக்காகவே எனக்கு ரொம்பப் பிடிக்கும் :)
ஆர்பி ஆர் எழுத்தை, மாம்ஸ் எளக்கியம் மட்டுமே பேசத் தெரிந்த கபீஷுக்கு சரியாப் புரியலையாம்! டைனோவுக்கோ, அவர் எழுதுகிற செய்திகளில் உண்மையின் கலப்பு ரொம்பக் கம்மி, நெறைய மிகைப்படுத்தறார்னு குத்தமாப் படுதாம்!
எதையுமே மிகைப்படுத்தி மிகைப்படுத்தி வெளிச்சத்தில் வாழும் மனிதர்களின் இருண்ட பக்கமும் அதே மாதிரித்தான் இருக்கும்னு கொஞ்சம் சொல்லுங்களேன்! :-)))
.....
இன்று மீண்டும் கிருஷ்ணமூர்த்தி ப்ளாகில்


ராஜநாயஹம் சார்!நான் மிகவும் நேசிக்கிற எழுத்து உங்களுடையது! நாலைந்து வரிகளில், ஒரு குணச்சித்திரத்தைக் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிற உங்களுடைய எழுத்துக்கு ரசிகனாக இருப்பது என்னுடைய பாக்கியம்!