Share

Aug 10, 2012

ஜேப்பியார்


1982ம் ஆண்டு. மதுரை  A.A.ரோட்டில் தேம்பாவணி இல்லம் முன் நடந்த அ.தி.மு.க பொதுக்கூட்டம்.  எம்.ஜி.ஆர் அப்போது இரண்டாம் முறையாக முதல்வர். சிறப்பு பேச்சாளர் ‘மாவீரன் ஜேப்பியார்.’

முன்னதாக லோக்கல் பேச்சாளர் லோகநாதன்:” கருணாநிதி அன்னைக்கி நீ என்ன செஞ்சே? எமர்ஜென்சியில காமராஜரைத்தூக்கி உள்ள வைக்கச் சொன்னதுக்கு, நீ எங்க மாவீரன் ஜேப்பியார் சாராயம் காச்சுறார்னு சொல்லி தூக்கி உள்ள போட்ட.ஜேப்பியார்க்கு ’இன்னா’செஞ்ச..உனக்கு ’இன்னா’ உடனே வந்துச்சு. திமுக ஆட்சி டிஸ்மிஸ் ஆச்சு.உன் மகன் ஸ்டாலினைஅதே எம்ர்ஜென்சியில தூக்கி உள்ள வச்சு நொங்கெடுத்தாய்ங்க.
 இன்னைக்கு உன்னால புடுங்கக்கூட முடியாது.
 டே தீப்பொறி ஆறுமுகம்! பாவம்டா நீ! ஐயோ பாவம்! நீ பாட்டுக்கு திமுக மீட்டிங்,மீட்டிங்னு ஊரு ஊரா போயிடுற. பக்கத்து வீட்டுக் கோனான் ஒன் பொண்டாட்டிய டொல்த்திக்கிட்டு இருக்கான்டா!”

அடுத்ததாக ஜேப்பியார் பேச எழுகிறார்.
கம்மாக்கரை அ.தி.மு.க செயலாளர் சின்னச்சாமி அவர்கள் மாவீரன் ஜேப்பியாருக்கு மாலை அணிவிக்கிறார்.ஆரப்பாளையம் ஆலமரத்தான் பொன்னாடை அணிவிக்கிறார்.மேலப்பொன்னகரம் வேல்சாமி நாயக்கர் மாலை அணிவிக்கிறார்.


ஜேப்பியார் சிறப்புரையின் முதல் பகுதி:
” டேய்! எனக்கு பெரிய கொள்கை,லட்சியம் என்றெல்லாம்  எதுவும் கிடையாது. நான் எம்.ஜி.ஆர் ரசிகன். எம்.ஜி.ஆர் என் தலைவன். என் தலைவன் மேல் விசுவாசம். இது தான். என் தலைவனுக்காக உயிரையே கொடுப்பேன். இன்னைக்கு நான் இந்த வசதி,அந்தஸ்தோட இருக்கேன்னா என் தலைவன் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தான் காரணம்.சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் ஜேப்பியார இப்படி உயர்த்தியது பொன்மனச்செம்மல் தான்."

- Gratitude is a sickness suffered by dogs. Gratitude is merely a secret hope for greater favours!

ஜேப்பியார் பேச்சின் தொடர்ச்சி:

”டே! உனக்குத்தெரியுமா.தமிழ் தமிழ்னு உன் தானைத்தலைவன் சேனக்கிழங்கு வீரன் ஊரை ஏமாத்துறான்.
சர்ச் பார்க் கான்வெண்ட்னு மெட்ராஸ்ல ஒரு ஸ்கூல். அதில நீங்கள்ளாம் உங்கப் பிள்ளைகளைச் சேர்க்கவே முடியாது. மாசம் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா? சொன்னா மிரண்டுடுவ. ரொம்பப் பெரிய பணக்காரங்க வீட்டுப் பிள்ளங்க மட்டும் தான் அங்க படிக்க முடியும். என் மகள் அங்க தான் படிக்கிறா.அந்த ஸ்கூல்ல தமிழ் பாடமே கிடையாது. லாங்க்வேஜ் சப்ஜெக்ட் கூட இந்தி,பிரஞ்சு இப்படித்தான். ஆமடா! தமிழ்னு பாடமே கிடையாது. என் மக அங்கத்தான் படிக்கிறா. எனக்கு தமிழ்ப் பற்று,பெரியகொள்கை எதுவும் கிடையாதுப்பா.எம்.ஜி.ஆர் ரசிகன் தான் நான். எம்.ஜி.ஆர் தான் என் தெய்வம். அதுக்கு மேல எனக்கு பெரிய கொள்கைன்னு எதுவுமே கிடையாது. என் பொண்ணு கூட சர்ச் பார்க் கான்வெண்ட்ல இன்னொரு பொண்ணு படிக்குது. அது யார் தெரியுமா? என் பொண்ணோட க்ளாஸ்மேட் யாரு தெரியுமா? உன் தானைத்தலைவன், சேனைக்கிழங்கு வீரன் கருணாநிதியோட மகள் கனிமொழி!”

......................

எம்.ஜி.ஆர் மறைந்த போது ஜானகி அணியில் இருந்தார் ஜேப்பியார்.”கவலையே படாதீங்க. அவளை வெரட்டிடலாம்” என்று ஆக்ரோஷமாக,உற்சாகமாக ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தார்!

- Every politician is having problems.But the people are traumatized.

http://rprajanayahem.blogspot.in/2009/03/blog-post_31.html

http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post_08.html

5 comments:

 1. நாஸ்தி பேச்சு...அவருதான் இன்னிக்கு பெரீய்ய சாம்ராஜ்யத்தின் அதிபதி ஜே.பி.ஆர்.

  ஒருத்தன் நல்லாப் படிக்கலேன்னா ஸ்கூல் ஆரம்பிச்சு பெரியாளாகிடலாம்.மாணவன் நல்லாப்படிச்சா அதே ஸ்கூல்ல வாத்தியாராப் போயி அந்த படிக்காத கல்வித்தந்தைக்கு சல்யூட் அடிக்கலாம்...

  ReplyDelete
 2. இப்படி தைரியமாக, வெளிப்படையாக பேசுவதற்கு யார் இருக்கிறார்கள் இப்போது ...?

  பகிர்வுக்கு நன்றி ஐயா...

  ReplyDelete
 3. வாயாலே உண்மையை சொன்னாலும் இந்த ஆட்டுமந்தைகள் காதுகளில் விழுகாது... என்னமோ போங்க!

  உங்களின் பதிவுகளை வாசிக்கையில் அதில் உள்ள நேர்த்தியான நடை, மறைவில்லாத வார்த்தை அருமை!

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. பதிவு அறுமை,. அறியப்படாத முக்கிய நிகழ்வுகள். தமிழக அரசியல் யாரும் அறியப்படாத நிகழ்வுகள் மற்றும் வரலாறுகளை தெளிவாக பகிர்துள்ளீர். நன்றி.

  ReplyDelete