Share

Sep 30, 2024

Tribute to Natesh

30.09.2024 Evening 

Remembering the Artist
Natesh Muthuswamy 

R.P. Rajanayahem tribute to Natesh 




Lalit Kala Akademi

Sep 24, 2024

Dream caused by the flight of a Bee - Salvador Dali

Salvador Dali popular painting 


Dream Caused by the Flight of a Bee. 

Dream Caused by the Flight of a Bee Around a Pomegranate a Second Before Awakening

An oil painting on wood. 
"Hand-painted dream photograph"

பாவாய்! எழுந்திராய்..
நாயகப் பெண்பிள்ளாய்!..
பிள்ளாய் எழுந்திராய்! 
அவளை எழுப்பீரோ?..

Cinema Enum Bootham 148, 149th episodes

148, 149th Episodes

R.P. ராஜநாயஹம்

சினிமா எனும் பூதம்

முரசு டிவியில் ஞாயிற்றுக்கிழமைகளில் 
காலை
எட்டரை மணிக்கு 

29.09.2024

06.10. 2024

பாண்டியராஜன்

பார்த்திபன்
......

2021 டிசம்பர் 3ம் தேதி முதல்
 ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

Sep 20, 2024

வேடிக்க - 18 "Haughtiness"



Haughtiness

2009

ராஜநாயஹம் லயன்ஸ் கிளப் மெம்பர். டாலர் சிட்டி லயன்ஸ் கிளப் 
Lion R.P. ராஜநாயஹம்.

டாலர் சிட்டி லயன்ஸ் கிளப் சார்பாக அரட்டை அரங்கம் மாதிரி நிகழ்ச்சி.
விசுவின் முன்னாள் அஸிஸ்டண்ட் இதில்.
சினிமா நடிகர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக. 

வேலாயுத சாமி கல்யாண மண்டபம்.
ஊரின் முக்கிய பிரபலங்கள்
 நிகழ்ச்சிக்கு ஆஜர். 

'சாதனை' பற்றி ஏதோ பேச்சு வந்த போது மார்க்கெட் இழந்த நடிகர் பந்தாவாக மேடையில் இருந்து
ஆடியன்ஸை  பார்த்து சொன்னார்.

" அதனால தான் நான் மேல ஒக்காந்திருக்கேன்.
நீங்க கீழ இருக்கீங்க.
நான் இந்த எடத்துல இருக்கேன்.."
Pompous and vain.
When you let proud words go,
 you cannot get them back.

 
Preach a sermon against Haughtiness

LUCIAN FREUD Naked portrait in a Red chair

LUCIAN FREUD

"Naked Portrait in a Red Chair",c.1999
Lucian Freud(UK,1922-2011)
Oil on canvas,111x89 cm
The Lucian Freud Archive

Lucian Freud,
 the Grand old man of British art.
 A relentless focus on the human form, a brutal realism a psychological depth, a glimpse into the inner worlds of his sitters.

 Lucian Freud’s dedication to capture the essence of the human form without any idealization, is deeply rooted in his philosophy - to reveal moments of vulnerability, human imperfections and flaws. 

By mastering impasto, a technique where paint is applied thickly to evoke a palpable sense of flesh, 
Freud infused his pieces with a sculptural quality, bringing the figures in his compositions vividly to life.

"The sitter - absolutely at ease"

R.P. ராஜநாயஹம் பற்றி K. பாக்யராஜ்


K. பாக்யராஜ்  : "நான் பாக்யராஜ் சார் கிட்ட அசிஸ்டெண்ட்டா இருந்தவன்னு சொல்லி பெருமைப்பட்டுக்கிறவங்க நெறய்ய பேர் இருக்கலாம். ஆனா இவரு என் கிட்ட அசிஸ்டெண்ட்டா இருந்தாருன்னு சொல்லி நான் பெருமைப்படற அளவுக்கு சில பேர் இருக்காங்க. அவங்கள்ள ஒருத்தர் தான் ராஜநாயஹம். என்னடா பாண்டியராஜன், பார்த்திபன், வி. சேகரு, ஜி.எம். குமாரு , லிவிங்ஸ்டன்னு கேள்விப்பட்டுருக்கோம். இது யாரு ராஜநாயஹம் புதுசாருக்கு அப்படின்னா,
 உண்மையில இவரு ராசுக்குட்டி படத்தில எங்கிட்ட உதவியாளரா சேந்து ஒர்க் பண்ணாரு.."


Sep 15, 2024

மனோவுக்கு நிகழும் களங்கம்

மனோ மகன்கள் பிரச்சினை

உற்சாகமான மனிதர் பாடகர் மனோ.
பிள்ளைய பெத்தா கண்ணீரு.

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு
மனோவின் மகன் Criminal Caseல் 
கைது செய்யப்பட்டதுண்டு.
மனோவிற்கு களங்கம்.
இது பற்றி ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்' தொலைக்காட்சி தொடரில் சில மாதங்களுக்கு முன் 
Mano Episodeல் பேசி ஒளிபரப்பானது. 

இப்போது அடிதடி சிக்கல் வந்து 
மகன்கள் கைது நடவடிக்கையைத் தவிர்க்க தலைமறைவு என்றெல்லாம் ஆகி..

Ophelia

Ophelia,
 daughter of Polonius, 
sister to Laertes, 
and rejected lover of Hamlet 
in William Shakespeare's tragedy Hamlet.

"Tis in my memory lock'd"

"Could beauty have better commerce than with honesty?"

"I was the more deceived"

Sep 14, 2024

DAINTY

"DAINTY"

Why, that's my dainty Ariel! I shall miss thee;
But yet thou shalt have freedom. So, so, so.
- Shakespeare 'Tempest' 

கமலா ஹாரிஸ் -
Multi cultural heritage காண்பவரை  
பலவட்டறையாக பல பந்தங்கள் கொண்டவராக விரித்து வைக்கலாம். 
Multi cultural background. Indianness.
பத்து வருஷம் முன்ன
 ஐம்பது வயசுல திருமண பந்தம்?

Brown woman in the ring.

Who is pro India? Trump or Kamala

..

எழுத்தாளர் மகனாம். Chubby.. Belly..
பீட்சாவை கடிச்சி கொதறிக்கிட்டு. 
15 வயசுல இருந்து 25 வயசு வரை மதிக்கலாம்.
மூக்குல தும்பிக்கைய ஒட்டிட்டா பிள்ளையாரே தான்.
தும்பிக்கய ஊனி நாலு காலயும் தூக்கி சங்கு சக்ரமா சுத்துனான்னா 
சூடத்த கொளுத்தி, தேங்காய ஒடச்சி துண்ட போட்டு தாண்டலாம்.

Fast food ஆகாதுன்னு யார் எழுதல.
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால்
ஆவதென்ன?
....

சிறுமை, மன நோவு, பற்றாக்குறையின் குமைச்சல்.
எல்லா விஷயமும் சுய ரூபங்கெட்டு 
சாயல் மட்டும் கெடாம.
ஏரியும் காடும் சேர்ந்த ஏற்காடு. ஏர்காடுன்னு தான இருக்கனும்.

..

அண்ணா திமுக துவங்கின காலத்தில
எம்ஜிஆர் படங்கள்ள 
அரசியல் நெடி ,
அரசியல்வாதிகள் influence 

'உழைக்கும் கரங்கள்' நாஞ்சில் மனோகரன் வசனம்.

'ஊருக்கு உழைப்பவன்' வசனம்
கா. காளிமுத்து

Sep 13, 2024

ஊரறிந்த ரகசியம்

ஊரறிந்த ரகசியம் மழை.
 மக்கு மன்னன் அபத்த தேடல் "மாதம் மும்மாரி பொழிந்ததா?"

தேர் எல்லா ஊர்களிலும் கீழரத வீதியில் தான் நிற்கும்?

கால்கை வலிப்பு = காக்கா வலிப்பு
நல்ல நாற்றம் - நன்னாறி (மருவி நன்னாரியானதா? இல்ல எழுத்துப்பிழை..?)

ஆத்மாநாம் விஷாதம் : "நாம் ஏன் ஏரிகளாய் இருக்கக்கூடாது? சலனமற்று பாறைகளுடன் பேசிக்கொண்டு"

ஃப்ரான்ஸிஸ் க்ருபா கணிப்பு : "சொற்களிலிருந்து அர்த்தங்கள் மௌனத்திற்குத் திரும்பும் வழி அது."

ந.முத்துசாமி : ஞானமற்ற அறிவில் செழிப்பில்லை. சிறுகச் சிறுக ஞானம் சேர்ந்த மரபு செழிப்போடு இருக்கிறது.

"நடந்தது என்னவோ நடந்து போச்சு"
கவுண்டமணி : "நடக்காதது ஆட்டோவில போச்சா?"

Sep 11, 2024

146th, 147th Episodes of R.P. Rajanayahem

146th,  147th Episodes of R.P. Rajanayahem


R.P. ராஜநாயஹம்

சினிமா எனும் பூதம்

முரசு டிவியில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

15.09.2024 ஞாயிறு

22.09.2024 ஞாயிறு

சுதாகர்

விஜயன்
......

R.P. ராஜநாயஹம்
'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 3ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

Sep 10, 2024

தேவி காம்ப்ளக்ஸ்

தேவி காம்ப்ளக்ஸ்
- R.P. ராஜநாயஹம் 


மோகன் ஹரிஹரன் கட்டிடக்கலை நிபுணராக பெரும் அநுபவம் கண்டவர் சினிமா தியேட்டர்கள் பற்றி சுவையான பல விஷயங்கள் பேசினார்.

'கொஞ்சும் சலங்கை' படம் வண்ணத்தில் பிரமாண்டமாக செலவு செய்து தயாரித்த  செட்டியார் சகோதரர்கள் மெளண்ட் ரோட் சாந்தி தியேட்டரில் ரிலீஸ் செய்ய விரும்பினார்கள். சிவாஜி சகோதரர்களிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை. எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் "ம்ஹும்" தான். வேறு தியேட்டர் பார்க்க சிரமப்பட்டிருக்கிறார்கள். பெரும் பாடு பட்டு ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

அதனால் செட்டியார் சகோதரர்கள் வைராக்கியம். கௌரவப் பிரச்சினை. நாமே சொந்தமாக தியேட்டர் கட்டி விட வேண்டியது தான்.

விளைவு - தேவி காம்ப்ளக்ஸ்.

இதை மோகன் ஹரிஹரன் சார் பேசிய போது கொஞ்சும் சலங்கை 
தயாரிப்பின் போது நடந்த விஷயம் பற்றி நாற்பது வருடங்களுக்கு முன் சுப்ரமணிய ஐயர் என்பவர் சொன்ன தகவல்.

கதாநாயகன் ஜெமினி கணேசன் சம்பளமாக பேசிய தொகைக்கு மேல் பெருந்தொகை வாங்கி விட்டார் என்பது தெரிய வந்திருக்கிறது.

அவ்வப்போது ஹீரோ ஜெமினி கேட்ட தொகையை கொடுத்துக்கொண்டே வந்திருக்கிறார்கள்.
 கணக்கு பார்த்தால் இப்படி அதிக பற்று.

காடைய காட்டுல விட்டா பிடிக்க முடியுமா?

Sep 9, 2024

ஆல்பர் காம்யுவின் கடைசி நாவல் "முதல் மனிதன்"

2019 post 

ஆல்பர் காம்யுவின் கடைசி நாவல் 
  “முதல் மனிதன்”
- R.P.ராஜநாயஹம்

’When you refuse to accept anything but the best, often you will get it’ ங்கறது உண்மை தான்.

"I know nothing more stupid than to die in an automobile accident." – Albert Camus.
 வாகன விபத்தில் மரணம் என்பதன் அபத்தம் பற்றி உள்ளுணர்வு தான் ஆல்பெர் காம்யுவிற்கு சொன்னதோ? வாழ்க்கையின் அர்த்தமின்மை பற்றி அதிகம் சிந்தித்த ஒரு மனதில் இப்படியும் ஒரு எண்ணம்.

அந்நியன் நாவலில் காம்யு சொல்வது போல 
‘ வாழ்க்கை வாழ்ந்து கொண்டே இருப்பதற்கு லாயக்கானதில்லை. முப்பதில் இறப்பதும் ஒன்று தான். எழுபதில் இறப்பதும் ஒன்று தான்.’

46 வயது ஆல்பர் காம்யு அந்த கார் விபத்தில் அகால மரணம் அடைந்தது தற்செயல் அல்ல. ரஷ்ய ஒற்றர்கள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியென்று சொல்லப்படுவதுண்டு. விபத்து நடந்த இடத்தில் அவருடைய முடிக்கப்படாத நாவலின் கையெழுத்துப்பிரதியும், ஒரு ட்ரெயின் டிக்கட்டும் கிடைத்தது.ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ, நீட்ஷேயின் ’ஆனந்த அறிவியல்’ புத்தகமும் கூட.

 முடிக்கப்படாத அந்த நாவல் “ முதல் மனிதன்” அவருடைய பால்ய பருவத்தைப்பற்றியும், அவருடைய தந்தையைப்பற்றிய காம்யுவின் தேடல் குறித்தும் பேசிய சுயசரிதைத்தன்மை கொண்டது. அவருடைய மற்ற படைப்புகளில் இருந்து  வித்தியாசமான தன்மை ’முதல் மனிதன்’ கொண்டிருந்தது.
ஒரு கலைஞனின் குறைப்படைப்பு தான் எத்தனை சோகமானது. கீட்ஸின் ஹைப்பீரியன், லார்ட் பைரனின் டான் ஹுவான்..
Perhaps, Life is a fear and a dream.. என்ற ஜோசப் கான்ராடின் வார்த்தைகள்.

Camus was an obsessive womanizer. 
சார்த்ர் மிகவும் உயர்வாய் சொன்ன  காம்யுவின் ”வீழ்ச்சி” நாவல்.
வீழ்ச்சி க்லாமென்ஸ் சொல்வான்: " தூள் பிகரை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் போது நான் ஐன்ஸ்டீன் உடன் பத்து சந்திப்பை நான் ஒதுக்கியிருப்பேன். அந்த பெண்ணுடன் பத்து சந்திப்பிற்கு அப்புறம் தான் ஐன்ஸ்டீன் பற்றியோ அல்லது ஒரு நல்ல முக்கியமான புத்தகத்தையோ விரும்பி எண்ணுவேன்.”

பாரிஸில் வசதியான, மெத்தப்படித்தவர்கள் குடும்பத்தில், ஏராளமான புத்தகங்களுக்கிடையில் வளர்ந்தவர் ழான் பால் சார்த்ர். ஆனால் அல்ஜீரியாவில் ஒரு மோசமான வறுமை சூழ்ந்த பகுதியில் படிப்பறிவற்றவர்கள் மத்தியில் பிறந்து வளர்ந்தவர் ஆல்பர் காம்யு. 

ஆல்பர் காம்யுவுக்கு 46 வயதில் இந்த நாவல் குறித்து பெரிய கனவும், உறுதியும் கூட இருந்திருக்கிறது. இது தான் தன்னுடைய ஆகச்சிறந்த படைப்பாக இருக்கப்போகிறது என்பதாக.

காம்யு மறைந்து 34 வருடங்களுக்குப் பின் அவர் மகள் இந்த முடிக்கப்படாத நாவலை வெளிக்கொண்டு வந்தார்.

அவர் இறந்த சமயத்தில் அவருடைய அல்ஜீரிய சிக்கல் பற்றிய அபிப்ராயங்கள் பற்றி வலது சாரி, இடதுசாரி அறிவுஜீவிகள் மிகுந்த கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்கள். ஆனால் பிற்காலம் ( 1980-1985) காம்யு சொன்ன நியாங்களை புரிந்து கொண்டதாக ஆகியிருந்தது.

Algiers Slum Kid எப்படி 43 வயதில் நோபல் பரிசு வாங்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுக்க முடிந்தது?
ஆல்பர் காம்யு தன் பால்யத்தில், பள்ளிப்பருவத்தில் எதிர்கொண்ட வறுமை அளவிட முடியவே இல்லை. 
ஒரு வயதில் தகப்பனை பறி கொடுத்த குழந்தை. அல்ஜீரியாவில் பிரஞ்சு குடியேறியான தகப்பன் பிரான்ஸைப் பார்த்ததேயில்லை. முதலாம் உலகப்போரில் சிப்பாயாக அதைப்பார்த்தார். அதைப் பார்த்ததும் கொல்லப்பட்டார். 

அப்பாவின் சமாதியில் முதல் முறையாக நாற்பது வயதில் காம்யு நிற்கும்போது அவர் இருபத்தொன்பது வயதில் இறந்திருப்பதை அறியும்போது தன்னை விட இளையவரான தந்தை முன் நிற்பதாக உணர்கிறார்.

அவருடைய அம்மா காது கேட்பதில் பிரச்னை உள்ளவர். கல்வியறிவில்லாதவர். அம்மாவும் இவரும் பாட்டியின் கட்டுப்பாட்டில். அம்மா வேலைக்காரியாக. 
இந்த புத்தகத்தை ஒரு போதும் படிக்க இயலாத தன் தாய் ‘விதவை காம்யு’வுக்கு தான் சமர்ப்பித்திருக்கிறார் மகன். 
தன்னுடைய மௌனங்களில் ஒன்றே ஒன்றின் மூலமாகக்கூட தாயால் சொல்ல முடிந்ததை ஆயிரக்கணக்கான சொற்களின் மூலமாகக் கூடத் தேடிக் கண்டு பிடிக்க முடியாத மகன் காம்யு.
 
இங்கே உழைத்தால் தான் சாப்பாடு. Poverty is a fortress without drawbridges.
 அல்ஜீரியாவில் பிரஞ்சுக்குடியேறிகளும் அராபியர்களும் இணைந்து வாழ நிர்ப்பந்த நிலை.

குடியேறிகளான முன்னோர்கள் பிரான்ஸில் இருந்து 1848ல் பயணப்பட்டு அல்ஜீரியாவின் போன் துறைமுகத்தில் இறங்கி அனுபவிக்கும் துயரங்களை காம்யுவால் சொல்லில் வடிக்க முடிந்திருக்கிறது.

அந்தப்பிரதேசத்தில் வேலை என்பது ஒரு உயர்ந்த பண்பாக இல்லாமல் சாவுக்கு இட்டுச் சென்ற அத்தியாவசியத்தேவையாகவே இருந்திருக்கிறது.
When the soul suffers too much, it develops a taste for misfortune.

சொல்லொணா துயரத்துடன் தான் காம்யுவின் தாய் தன் பிள்ளையிடம் சுட்டெரிக்கும் வெய்யிலிலும் பரிவு காட்டுகிறாள். மாமா எர்னஸ்ட் கூட வாழ்க்கையின் சுவாரசிய பக்கங்களை தன் மருகனுக்கு காட்டுகிறார்.கறாரும் கண்டிப்புமான பாட்டி, ’தெய்வத்துளி’ போன்ற  அவனுடைய அந்த அற்புதமான ஆசிரியர் பெர்னார். சிறுவன் ஆல்பர் காம்யு அவன் நண்பன் பியர், நூலகம், கால் பந்து விளையாட்டு போன்ற உன்னதங்கள். 

For all his life it could be kindness and love that made him cry, never pain or persecution.

இந்த ’முதல் மனிதன்’ கியான்னி அமெலியோ என்ற இத்தாலிய இயக்குனரின் நெறியாள்கையில் இட்டாலியன் ஃப்ரன்ச் திரைப்படமாக 2011ல் வந்திருக்கிறது.
பின் இணைப்பாக உள்ள குறிப்புகளை படிக்கும்போது சோகம் கவ்வுகிறது. ஆல்பர் காம்யுவுக்கு பெரிய திட்டம் இருந்திருக்கிறது. 

’ஒடுக்குமுறையை எதிர்த்துப்போராடுவதில் தான் எழுத்தாளனின் மேன்மை அடங்கியுள்ளது. அதாவது தனிமைப்படுத்தப்பட்ட நிலைமையை ஏற்றுக்கொள்வதில்’ என்று நாவலுக்கான குறிப்புகளில் ஒன்றில் காம்யு சொல்கிறார். 
ஏனென்றால் பாசிசவாதிகள் தங்களைப் போலவே சிந்திப்பது தான், தாங்கள் சரியென்று நினைப்பது மட்டும் தான் எல்லோருக்குமான ’சுதந்திரம்’ என்று நினைக்கிறார்கள்.

வாழ்க்கையின் மீதான நேசம் மறைந்து விடும்போது எவ்வித உள்ளர்த்தமும் ஆறுதல் அளிக்காது என்று காம்யுவின் டைரி சொல்கிறது.

தன்னுடைய வாழ்க்கைக்கான்  காரண- காரியரீதியான நியாயங்களைத் தனக்கு கொடுத்திருந்த அதே சக்தி, அதே சோர்வில்லாத தாராளத்துடன் தான் முதுமையடைவதற்கும், கிளர்ச்சி செய்யாமல் சாவதற்கான நியாயத்தையும் அளிக்கும் என்பது ஆல்பர் காம்யுவின் குருட்டு நம்பிக்கை தான்?

2013ல் காம்யு நூற்றாண்டில் பிரஞ்சு மொழியிலிருந்து நேரடியாக வெ.ஸ்ரீராம் தமிழில் மொழிபெயர்த்து க்ரியா வெளியீடாக ’முதல் மனிதன்’ பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

மீள்  பதிவு 2019

Sep 8, 2024

வேடிக்க - 16

வேடிக்க - 16

எலியட்ஸ் பீச்.
08.09.2024 மாலை

தீனதயாளன். 85 வயது
70 வயதுக்கு மேல் பல திரைப்படங்களில் படங்களில் துணை நடிகர்.

'எவனோ ஒருவன்'
மாதவன் படத்தில் தான் முதல் முதலாக தலை காட்டினார்.
திருத்தம் - ஹீரோவுக்கு அப்பா 

உதயநிதி ஸ்டாலின் 'நண்பேன்டா' 
பார்க் சீனில்.

நண்பன் - ப்ரொஃபஸர்

நிறைய படங்களில் ஜட்ஜ்.
நான் கடவுள், பெருமாள், சிவலிங்கா, 
ஒரு பக்க கதை,  தனி ஒருவன்.

வேட்டைக்காரனில் மாறுபட்ட வேடம். முதலமைச்சராக.

வர இருக்கும் 'அறம் செய்' மீண்டும் ஜட்ஜ்.

ஐம்பது திரைப்படங்களில் நடித்துள்ளதாக சொன்னார்.

இவர் மகளோடு ஷங்கர் ஐஏஎஸ் அகாடமியை கவனித்துக் கொள்கிறார்.
ஏழு கார் சொந்தமாக வசதியான வாழ்க்கை.

2018ல் தற்கொலை செய்து மறைந்த ஷங்கரின் மாமனார் தீனதயாளன்.

1500 ஐஏஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய நிறுவனமாம் ஷங்கர் ஐஏஎஸ் அகாடமி.
சொல்கிறார்.



Sep 5, 2024

வேடிக்க - 13

வேடிக்க - 13.


04. 09. 2024 புதன்கிழமை
 LB ரோட்டில் வாக்கிங் போகும் போது அடையார் PVR S2 Thiagaraja தியேட்டருக்குள் போய் வேடிக்க. 

மறு நாள் விஜய் Goat ரிலீஸ் பரபரப்பில் தியேட்டருக்கு தனி களை.
மாடியில் விஜய் ரசிகர்கள் மன்றத்துக்கு டிக்கெட் கேட்டு வாதம். 

"வெள்ளிக்கிழமைக்கு  20 டிக்கெட் தர முடியும்"

ரசிகர் மன்ற டிக்கெட் வாங்க வந்த மன்ற பொறுப்பாளர்கள் கடும் அதிர்ச்சியில் வெறுப்பாகி "வியாழக்கிழமைக்கே டிக்கெட் வேண்டும்"

"புரிஞ்சிக்கங்க. வியாழக்கிழமை எல்லா ஷோவும் ஃபுல்."

மன்றத்தில் ரசிகர்கள் ரிலீஸ் அன்னக்கே டிக்கெட் வேண்டி பிடிவாதம். 
ரெண்டாவது நாள் பார்ப்பது
கெளரவ பங்கம்.

Sep 4, 2024

சிவனணைந்த பெருமாள்

வேடிக்க - 15

1.'வாழை'யில பையன் பெயர் சிவனணைந்தான். 
இந்த பெயர் எங்கள் குடும்பத்திலேயே உண்டு.
தாய் மாமா பெயர் 'சிவனணைந்த பெருமாள்'. அம்மா வேலம்மா தம்பி.
விக்ரமசிங்க புரம் 
'பசுக்கடவெள' தளவா பிள்ள மகன் சிவனணைந்தபெருமாள் 
தவமிருந்து பெற்ற பிள்ளை என்பதால் 'பண்டாரம்' என்று pet name. 

குள்ளமான, நல்ல லட்சணமான தாய்மாமா சிவனணைந்த பெருமாள் 
எம்.ஜி.ஆர் ரசிகர். பாபநாசத்தில் நாடகத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். 
கல்யாண மேடையில் தாலி கட்டும் மாப்பிள்ளைக்கு காக்கா வலிப்பு வரும்படியான  காட்சியில் பிரமாதமாக நடித்து  கலக்கிய மாமா பற்றி பலரும் சொல்வார்கள்.  

மாமாவோட பழனி ஜெயராம் தியேட்டரில்
எம்ஜிஆர் "பணத்தோட்டம்" பார்த்தது பசுமையாக நினைவில்.

நல்ல மேடைப் பேச்சாளர். சத்யமங்கலம் பெரிய கொடிவேரி பள்ளி நிகழ்ச்சிகளில் சொற்பொழிவு சிறப்பாக செய்வதை சிறு பையனாக ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பார்த்திருக்கிறேன். நேர்த்தியாக உடை அணிவார். 
கிறித்துவ புனிதர் லாரன்ஸ் பதிதர்களால் கொல்லப்படும் காட்சியை தத்ரூபமாக விவரித்தார். நெருப்பில் வாட்டி வதைத்த போது லாரன்ஸ் மரண தண்டனையின் போது சொன்னாராம் ' இந்த பக்கம் வெந்து விட்டது. மறு பக்கம் திருப்பிப் போடப்பா '

சத்யமங்கலம் கொடிவேரியில் வாத்தியார் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். 
பட்டப் பெயர் 'குள்ள வாத்தியார்'.
 தாத்தா பாபநாசம் 'பசுக்கடவெள' தளவா பிள்ள, 
'சட' பெரியம்மா, அம்மா வேலம்மா,  குள்ளமானவர்கள் தான். 


மதுரையில் அம்மா அப்பா கல்யாண விசேஷத்துக்கு ஏதோ ஊருக்கு போயிருந்தார்கள்.
வீட்டுக்கு தந்தி வந்தது. 
வாங்கிப்பிரித்தால்
" Sivan Anaintha Perumal Expired"

2. கொட்டுக்காளி படத்தில் கதாநாயகன், கதாநாயகிக்கு பெரிய வேலை எதுவுமே இல்லை. படம் விந்தைகள் காட்டுகிறது.

Sep 3, 2024

வேடிக்க - 12

கேக்காம காதுல விழுந்திடுச்சி
If you are in a public or semi-public space where the conversation can be reasonably overheard without special effort on your part, then it would generally not be considered eavesdropping.

நடிகர் போனில் பேசினாராம். தயாரிப்பாளர் பற்றி வெறுப்பாக இருவருக்கும் தெரிந்தவரிடம்.
தயாரிப்பாளர், நடிகர் இணைந்து பல படங்கள் வந்துள்ளன.
இருவருக்குமிடையே பெருத்த நட்பு என்பதாகவே செய்தி.
உறவு, நட்பு கெட்டுப் போயிருக்கிறது.
எல்லா தொழிலிலும் இப்படி ஏற்படுவது உண்டு தானே?

"  'ஏன்'ணே? இவன் என்னப் பத்தி சவடாலா பேசிட்டு திரியிரானாம்.
' நான் தான் அவர மெட்ராஸுக்கு கூட்டிட்டு வந்தேன்' னு வார்த்தைய விடுறானாம்.
மொத தடவ இவன் கூடவா நான் மெட்ராஸ் வந்தேன்? ரெண்டாவது தடவ நான் வந்தப்ப இவனா  கூட்டிட்டு வந்தான். மூணாவது தடவ இவனோடயா நான் வந்தேன்.
சொல்லி வைங்க."

Sep 2, 2024

பெரியார் கல்லூரியில் R.P. ராஜநாயஹம் "மணல் கோடுகளாய்.."

திருச்சி பெரியார் கல்லூரியில்
R.P. ராஜநாயஹம்
"மணல் கோடுகளாய்.."
பற்றி

 இன்று 02. 09. 2024
 திங்கட்கிழமை காலை 
து. கலைச்செல்வன் விமரிசனம் 

......

புகைப்படங்கள் உதவி: பேராசிரியர் முனைவர் காசி மாரியப்பன்