Singapore Elangovan ‘Godse’
சிங்கப்பூர் இளங்கோவன்.
நாடக இயக்கத்தில் முதுகலை பட்டம் இங்கிலாந்தில் பெற்றவர். கவிஞரும் கூட. ’விழிச்சன்னல்களின் பின்னால் இருந்து’, ’மௌன வதம்’ கவிதைத்தொகுப்புகள்.
இவருடைய நாடகங்கள் சர்ச்சைக்குரியவை. பல நாடகங்கள் சிங்கப்பூர் அரசால் தடை செய்யப்பட்டவை. அவருக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வந்திருக்கிறது.
இவருடைய ”GODSE” ஆங்கில நாடகம் 2015ம் ஆண்டு படிக்க ந.முத்துசாமி கொடுத்தார். டவுன் லோட் செய்யப்பட்டு ஸ்பைரல் பைண்டிங் செய்யப்பட்ட பிரதி.
படித்து விட்டு அதை கூத்துப்பட்டறை முழுநேர நடிகர்களுக்கு வாசித்துச்சொல்லி விளக்கும்படி என்னை பணித்தார்.அந்த கடமையை நவம்பர் 23,24,25 தேதிகளில் அப்போது நிறைவேற்றினேன். முத்துசாமியும் முழு நிகழ்விலும் கலந்து கொண்டு உடனிருந்தார்.
சிங்கப்பூர் இளங்கோவனின் கோட்சே நாடகம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு கூத்துப்பட்டறையால் மேடையேற்றப்பட வேண்டும் என்று முத்துசாமி சார் விரும்பினார். நடக்கவில்லை.
நாடகம் மிகவும் வீரியம் வாய்ந்ததாய் இருந்தது.
இரண்டே கதாபாத்திரங்கள். கோட்சே, காந்தியார். இருவருமே உண்மையையே தேடியவர்கள்.
மரணத்திற்கு பின் இருவரும் திரிசங்கு சொர்க்கத்தில் சந்திக்கிறார்கள்.
காந்தியை சுட்ட துப்பாக்கி ஒரு குண்டு மீதமான நிலையில் அவர்கள் முன்.
திரிசங்கு சொர்க்கத்தில் இருந்து விடுபட அவர்கள் இருவருமே ரஷ்யன் ரௌலட் கேம் விளையாடும்படியான நிர்ப்பந்தம்.
நாடகத்தில் கோட்சே தான் பெரும்பாலும் protagonist. காந்தியாருடன் தர்க்கம் செய்யும் கோட்சே.
Godse’s Memoryscape. சரித்திர தகவல்களை புரட்டிப்போடும் வசனங்கள்.
எம்.ஓ.மத்தாய், குஷ்வந்த் சிங் போன்றோர் மவுண்ட்பேட்டன் மனைவிக்கும், நேருவுக்கும் இருந்த Extra- marital relationship பற்றி எழுதியிருக்கிறார்கள்.
இன்று இந்த விஷயம் எல்லோரும் கண் விரிய பேசுகிற cliché.
இளங்கோவன் இந்த கோட்சே நாடகத்தில் நேருவுக்கும் மவுண்ட் பேட்டன் பிரபுவுக்குமிடையிலேயே கூட ஹோமோசெக்சுவல் உறவு இருந்ததாக எழுதியிருக்கிறார்.
காந்தி முதிய வயதில் ஆத்ம சோதனையாக இளம்பெண்களுடன் படுத்துறங்கின விஷயம் மிகவும் விவாதிக்கப்பட்ட விஷயம்.
காந்தி கேட்கிறார். ’நான் இளம்பெண்களோடு படுத்தேன். இப்படி ஆம்பளையோடு படுத்திருக்கிறார்களே.’
According to Justice Gopal Das Khosla, one of Godse’s judges, who did play a role in convicting him:
“… the audience was visibly and audibly moved. There was a deep silence when he ceased speaking. Many women were in tears and men were coughing and searching for their handkerchiefs. I have, however, no doubt that had the audience on that day been constituted into a jury and entrusted with the task of deciding Godse’s appeal, they would have brought in a verdict of ‘not guilty’ by an overwhelming majority.”
ஒரு விஷயம் கவனிக்கலாம்.
Godse என்ற அவருடைய பெயரின் துவக்கத்திலேயே கடவுள் துருத்திக்கொண்டிருக்கிறார். அவரை Godsend என நம்புகிற காவி அரசியலும் இன்று எட்டுக்கண்ணும் விட்டெரிகிறது.
.....
மீள்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.