சமஸ் :
வெற்றிகொண்டான் பேச்சைப் பற்றிய சின்ன, சிறந்த சித்திரங்களில் ஒன்று
R.P. ராஜநாயஹம் எழுதிய இந்தக் கட்டுரை. விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன்.
அப்படியே தொனியைக் கொண்டுவரும் எழுத்து.
திறன்மிக்க பேச்சாளர்கள் தங்கள் உரையை ஒரு சினிமா போன்றே திட்டமிடுகிறார்கள்! 👇
https://www.arunchol.com/r-p-rajanayahem-on-vetrikondan
திருஞானம் திரு :
"R.P. ராஜநாயஹம் எழுத்து, நாம் வழக்கமாக வகைப்படுத்தும் கட்டுரை,சிறுகதை, நிகழ்வு குறிப்புகள்,குறுங்கதை என்ற எந்த விதமான கட்டமைக்கப்பட்ட வகைகளுக்கும் அடங்காத ஒன்று.
அவர் தொடும் எழுத்தும்,
அதன் எல்லைகளும்,
அவரின் எழுத்தை தொடர்ந்து வசிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
சமஸ் தெளிவான அறிமுக குறிப்புடன் தான், சமீபத்தில் வந்த புத்தகத்தின் சிறு பகுதியை இங்கு பதிந்திருக்கிறார்.
இங்கு அதை பதிவதால் சமஸின் பத்திரிக்கை தர்மமே கேள்விக்குள்ளானதைப் போல பதறும் தூய்மை தோழர்கள் அந்த புத்தகத்தைக் கூட வேண்டாம், இணைப்பில் உள்ள கட்டுரைத் துளிகளையாவது
வாசிக்க வேண்டும்.
அது ஒரு காலத்தின் வரலாற்றை பகடி நிறைந்த மொழியில் பதிவு செய்கிறது. வெ.கொ பேசியது தவறா?, சரியா? என்று எங்குமே சார்பெடுக்கவில்லை.
அந்த பேச்சின் பின்புலத்தில் தொக்கி நிற்கும் உண்மையைப் பேசுகிறது.
உண்மையை அதன் ஆடையற்ற/ அலங்காரமற்ற நிலையில் அறிமுகப்படுத்துவதாலேயே
R.P. ராஜநாயஹம் எழுத்து தனித்துவமான எழுத்தாக நிற்கின்றது. தோழர்கள் பயப்படும்படியாக ஒன்றும் நடந்துவிடாது."
ஹஸன் அலி:
"வெற்றி கொண்டான் பேச்சு குறித்த பதிவு மிகவும் அருமையான சிறப்பான ஒன்று ❤️. ராஜநாயஹம் அவர்களின் எழுத்தில் கூட்டல் குறைத்தல் என்பது கிடையாது. நிகழ்வின் தருணங்களை அப்படியே எழுத்தாகத் தருவதில் அவர் தேர்ந்தவர்❤️"
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.