Share

Feb 26, 2022

Homely Meals


"உணவகங்களில்
காசு வாங்கியே சோறு போட்டாலும், 
ஒருசில சப்ளையர்களுக்கு தாயின் சாயல்."
மேற்கண்ட M.Baskar கவிதைக்கு 
R.P. ராஜநாயஹம் பின்னூட்டம் கீழே:

ராஜநாயஹம் ஜோக்

கஸ்டமர் சாப்பிட்டு கைகழுவி விட்டு கல்லாவில் உட்கார்ந்திருக்கும் முதலாளியிடம் 
சொல்கிறார்:
"ஹோம்லி மீல்ஸ்னு போர்ட் வச்சிருக்கறது எல்லாம் சரிங்க. அதுக்காக ஆர்டர் எடுக்ற சர்வர் வந்து வெக்கப்பட்டுக்கிட்டே
' என்ன அத்தான் சாப்பிடுறீங்க'ன்னு  கேக்கறதெல்லாம்
ரொம்ப ஓவர்ங்க"

Feb 22, 2022

அட ராமச்சந்திரா

எம்ஜியாரா கொக்கா 
ஓஹோன்னானாம்.

உலக நாட்டிய பேரொளி பத்மினியவே பரதநாட்டியத்தில ஜெயிச்சிட்டாரே.

அட, ராமச்சந்திரா

வஞ்சிக்கோட்ட வாலிபன்ல வந்த மாதிரி
இங்க மன்னாதி மன்னன்லயும் ஆடியன்ஸ்ல
வில்லன் வீரப்பா தான். 

சப்பாசு.
அப்டி போடு சப்பாசு

https://youtube.com/shorts/UNcv7MrFCco?feature=share

Feb 18, 2022

பறவைகள் காட்சி இன்பம்




இன்னக்கி
இங்கே 
பால்கனி வழி காட்சி இன்பம்





 நாட்டுக்கொக்குகளோட 
ஒரு பத்து வெளிநாட்டு கொக்குகள்.
அவற்றின் உடல் மொழி 
கொஞ்சம் வான்கோழி இறகு விரிப்பு போல.

இதனை கண்டு ரசிக்க எதிர் புரத்தில் ஒரு அபார்ட்மெண்ட்டில் இருந்து இரண்டு அம்மாக்களுடன் ஆர்வமுடன் மூன்று குழந்தைகளும் நடந்தே வந்தார்கள்.
அவர்கள் பக்கத்தில் வரும் முன்னரே, இரண்டு, மூன்று விநாடிகளில் அத்தனை பறவைகளும் பதறி வானேறி பறந்து பார்வையில் இருந்தே மறைந்து விட்டன.




https://m.facebook.com/story.php?story_fbid=3259086190971491&id=100006104256328

Feb 17, 2022

ArunKumar Kumaravelu's translation

நான் 2008ம் ஆண்டு 'சகஸ்ர ராம ஹிருதய ஏக பரத ஹிருதய நாஸ்தி' என்ற தலைப்பில் எழுதிய பதிவு.
நாற்பது ஆண்டுகளுக்கு முன் படித்த லா.ச.ரா சிறுகதையை பற்றி ஞாபகத்தில் தொட்டு எழுதிய பதிவு.
அந்த பதிவை என் வாசகரும் அருமை நண்பருமான அருண்குமார் குமாரவேலு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
அவருடைய அன்புக்கு நன்றி.

அருண்குமாருடைய நண்பர் ஒருவர் தமிழர் தான். டெல்லியில் இருப்பவர். அவருக்கு தமிழ் வாசிக்க தெரியாது. அந்த நண்பருக்காக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.

Arunkumar Kumaravelu'sTranslation of 
R.P. Rajanayahem's write up on La.Sa.Ra's short story below:

Shri Ram and Hanuman were having a leisurely chat in their retired life. 

Nostalgia. 

“It’s very funny you and me ending up here.” That was how Shri Ram would have started the conversation. 

Classical super heroes, reminiscing about their past.

Shri Ram coming out of several minutes of silence says in an exasperated tone, “The Ram Avtar was not a big deal!”

Hanuman was obviously very surprised but kept quiet and looked up to Shri Ram to explain.

Shri Ram resumed, “How elegantly Guhan  had declared! When I relinquished the throne and was banished to the forest it was Guhan who welcomed me, Sita and Lakshman and sheltered us.

At about the same time Bharat was heading towards the forest with his army. Guhan thought Bharat did not want to spare me even in exile and was going to harm me. He was furious and getting ready to repel Bharat’s army. 

But Bharat prostrated before me, asked for forgiveness for his mother’s wrong doings and said “You are the King, please take over the throne!”

Guhan stood there, perplexed.

I did not go back on my promise to my father and refused to go to Ayodhya as the King. Then Bharat asked for my footwear for keeping them on the throne.

That’s exactly when Bharat, through his vastly superior virtue, simply extinguished the sheen off Shri Ram Avtar.

Guhan, overwhelmed by the events unfolding in front of him, declared
“Would a thousand Rams be equal to you, Bharat?”

Hanuman, my friend, now tell me “What’s the big deal about Shri Rama Avatar? Didn’t Bharat obliterate that?”

...

R.P. ராஜநாயஹம் பதிவு லிங்க் கீழே

http://rprajanayahem.blogspot.com/2008/11/blog-post_1627.html?m=0


Feb 16, 2022

Herons stand like white flowers



Herons stand like white flowers 
in the puddle of rain water.

கொக்கு குஞ்ச கண்டாருமில்ல..

இங்கே பெரும்பாக்கம் Colour Homes வீட்டு பால்கனி வழியாக பார்க்க கிடைக்கும் கொக்குகள்.

பால்ய காலத்தில் வானில் பறக்கும் கொக்குகளை பார்த்து இரு கைகளையும் உதறி, உதறி கூப்பாடு:
"கொக்கு பற,பற! பூ போடு.. பூ போடு"

சிறுவர் சிறுமியர்களில் விரல் நகத்தில் வெள்ளை புள்ளி உள்ள யாராவது
 "ஐயா..ஆஹா..  கொக்கு எனக்கு 
பூ போட்டுடுச்சி " என்று குதூகலித்ததுண்டு. 
'எனக்கு ஒரு கொக்கு கூட பூ போடலியே'ன்னு
 நான் தவித்ததுண்டு.

Feb 11, 2022

வற்றா ஊற்றெடுக்கும் அறிவுக்கேணி


"R.P. ராஜநாயஹதத்தை விடவா இவர்களுக்கு தங்கச்சுரங்கம் வேண்டும்..?

 "சினிமா எனும் பூதம் " தந்த வித்தியாசமான அனுபவத்தை யார் தரமுடியும்.. ?

இசையா,  சினிமாவா, இலக்கியமா,  ஓவியமா,  இந்த பிடி என வற்றா ஊற்றெடுக்கும்  அறிவுக்கேணி இருக்கையில்,  அடுத்தவர் கோப்பையிலிருந்து எடுத்து தரும் டீஸ்பூன்கள் எதற்கு.."

- வழக்கறிஞர் பா.அசோக்

Feb 10, 2022

வற்றாத ஜீவ நதியின் நீர் முடிச்சுகள்

"அபூர்வமான மனிதர்
 R.P ராஜநாயஹம்.  கலை,இலக்கியம்,இசை,நாடகம்,திரை என அவர் தொட்டு செல்லும் பரப்புகள் ஆகாய விரிவு கொண்டவை.அதிசயக்கத் தக்கவை. இணைய தேடு பொறிகளும் தோற்றுப் போகும் சங்கதிகளின் சரித்திர  சாம்ராஜ்யம் அவருடையது.நகையும்,பகடியும்,துயரும்கூத்தும்,தத்துவமும்,தன்னம்பிக்கையும்அவலமும் என தீராத அலைகளை உமிழும் சாகர இதழ்களின் இயக்கம். நான் வியக்காத நாளேயில்லை இந்த ஜீவ நதியின் நீர் முடிச்சுகள் எங்கு தோன்றி எப்படி வற்றாது வழிகிறதென.எழுதியெழுதி மேற் செல்லும் அவரின் நவரசம் சொட்டும் வார்த்தைகளின் ஊர்வலத்தின் பெருங்கூட்டதில் சிறு புள்ளியாய் நானும் நகர்கிறேன் என்பது மனதிற்கு போதுமானதாய் இருக்கிறது. அந்த ஆசுவாசம் தரும் நிழலடியில் இளைப்பாறுதலின் வழி இந்த இடர்மிகு வாழ்வை கடந்து விடலாம் எனும் நம்பிக்கையை இதயத்தில் துளிர்க்க வைக்கிறது. வாழ்வின் இலக்கற்ற ஓடத்தின் துடுப்புகளை அவர் ஒரு போதும் தளர விடுவதேயில்லை. Rajanayahem R.p. ஒரு பெயரல்ல எவராலும்,எப்போதும் துடைத்தெறியவே முடியாது உறைந்து விட்ட அனுபவங்களின் வரலாறு.

- வீரன் மணி பாலமுருகன் 

Feb 4, 2022

கோதை பிறந்த ஊரை பார்த்தேயிராத மஹாலிங்கம்


என் மாமனாரின் அண்ணா
 S.M.T. அங்கு ராஜ் என்னிடம் பேசும் போது எப்போதும் சுவையான பல விஷயங்கள் தெரிவிப்பார். அவையெல்லாம் வரிசை கட்டி
 என் மன ஊஞ்சலில் ஆடுவதுண்டு.

1977ம் ஆண்டு மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலில் போகும் போது பழம்பெரும் நடிகர் டி.ஆர். மஹாலிங்கம் அவர்களை சந்தித்திருக்கிறார். ரயில் சிநேகத்தில் ஒரு Celebrity.

அங்கு ராஜ் மாமா எப்பவும் ஜெமினி கணேசன் ரசிகர். அதை எங்க வீட்டுப் பிள்ளை ஷுட்டிங் போது மேக்கப் ரூமில் இருந்த எம். ஜி.ஆரை சந்திக்க வாய்த்த போது அவரிடமே சொன்னவர். என்னுடைய மாமா S.M.T.சந்திரன்  மிக,மிக தீவிர எம்.ஜி. ஆர் ரசிகர்.
ஆனால் எம்.ஜி.ஆர் பட வசனம், காட்சிகள் பற்றி ஒரு போதும் பரவசமாக பேசவே மாட்டார்.

அங்கு ராஜ் மாமாவோ பிரேம் பாசத்தில் ஜெமினி ஸ்டைலாக 'ஓஹோ வெண்ணிலாவே, விண்ணாளும் வெண்ணிலாவே,வீசும் தென்றலிலே, கதை பேசும் வெண்ணிலவே'
 பாடல் காட்சி BGMல படிக்கட்டில் ஏறுவதை மட்டுமல்ல, 
எம்.ஜி.ஆர் மர்ம யோகியின் 'வீராங்கா'  வசனத்தையெல்லாம் என்னிடம் பிரமாதமாக ஏற்ற இயக்கத்துடன் பேசிக்காட்டுவார்.

ரயிலில் நடிகர் மஹாலிங்கத்திடமும் தான் ஜெமினி கணேசன் ரசிகர் என்பதைத் தெரிவித்திருக்கிறார்.
இவருடன் கலகலப்பாக அவர் பேசியிருக்கிறார்.

"ஏன் நீங்க எங்க ஸ்ரீ வில்லிபுத்தூரில் உங்கள் ஸ்பெஷல் நாடகம் போடவேயில்லை?" என்ற கேள்விக்கு
மஹாலிங்கம் பதில் " உங்கள் 
ஸ்ரீவில்லிபுத்தூரை நான் இன்று வரை  பார்த்ததேயில்லை! உங்கள் ஊர் வழியாக பலமுறை பிரயாணம் செய்திருக்கிறேன். ரயிலிலும், காரிலும் போனதுண்டு.
ஆனால் எப்போதும் இரவில் தான். 
ஸ்ரீ வில்லிபுத்தூர் வரும் போதெல்லாம் நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் தான் இருந்திருக்கிறேன்!"

மஹாலிங்க பாகவதர் அப்புறம் கோதை பிறந்த ஊரை பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை.
மறு வருடம் இறந்திருக்கிறார்.

https://www.facebook.com/100006104256328/posts/3173833856163392/

Feb 3, 2022

பூக்குட்டி கவனிக்காத போது



She said "NO"
தாத்தாவுடன் படம் எடுக்க மறுத்த பூக்குட்டிக்கு தெரியாமல் அவள் கவனிக்காத போது ரகசியமாக செல்ஃபி