என் மாமனாரின் அண்ணா
S.M.T. அங்கு ராஜ் என்னிடம் பேசும் போது எப்போதும் சுவையான பல விஷயங்கள் தெரிவிப்பார். அவையெல்லாம் வரிசை கட்டி
என் மன ஊஞ்சலில் ஆடுவதுண்டு.
1977ம் ஆண்டு மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலில் போகும் போது பழம்பெரும் நடிகர் டி.ஆர். மஹாலிங்கம் அவர்களை சந்தித்திருக்கிறார். ரயில் சிநேகத்தில் ஒரு Celebrity.
அங்கு ராஜ் மாமா எப்பவும் ஜெமினி கணேசன் ரசிகர். அதை எங்க வீட்டுப் பிள்ளை ஷுட்டிங் போது மேக்கப் ரூமில் இருந்த எம். ஜி.ஆரை சந்திக்க வாய்த்த போது அவரிடமே சொன்னவர். என்னுடைய மாமா S.M.T.சந்திரன் மிக,மிக தீவிர எம்.ஜி. ஆர் ரசிகர்.
ஆனால் எம்.ஜி.ஆர் பட வசனம், காட்சிகள் பற்றி ஒரு போதும் பரவசமாக பேசவே மாட்டார்.
அங்கு ராஜ் மாமாவோ பிரேம் பாசத்தில் ஜெமினி ஸ்டைலாக 'ஓஹோ வெண்ணிலாவே, விண்ணாளும் வெண்ணிலாவே,வீசும் தென்றலிலே, கதை பேசும் வெண்ணிலவே'
பாடல் காட்சி BGMல படிக்கட்டில் ஏறுவதை மட்டுமல்ல,
எம்.ஜி.ஆர் மர்ம யோகியின் 'வீராங்கா' வசனத்தையெல்லாம் என்னிடம் பிரமாதமாக ஏற்ற இயக்கத்துடன் பேசிக்காட்டுவார்.
ரயிலில் நடிகர் மஹாலிங்கத்திடமும் தான் ஜெமினி கணேசன் ரசிகர் என்பதைத் தெரிவித்திருக்கிறார்.
இவருடன் கலகலப்பாக அவர் பேசியிருக்கிறார்.
"ஏன் நீங்க எங்க ஸ்ரீ வில்லிபுத்தூரில் உங்கள் ஸ்பெஷல் நாடகம் போடவேயில்லை?" என்ற கேள்விக்கு
மஹாலிங்கம் பதில் " உங்கள்
ஸ்ரீவில்லிபுத்தூரை நான் இன்று வரை பார்த்ததேயில்லை! உங்கள் ஊர் வழியாக பலமுறை பிரயாணம் செய்திருக்கிறேன். ரயிலிலும், காரிலும் போனதுண்டு.
ஆனால் எப்போதும் இரவில் தான்.
ஸ்ரீ வில்லிபுத்தூர் வரும் போதெல்லாம் நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் தான் இருந்திருக்கிறேன்!"
மஹாலிங்க பாகவதர் அப்புறம் கோதை பிறந்த ஊரை பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை.
மறு வருடம் இறந்திருக்கிறார்.
https://www.facebook.com/100006104256328/posts/3173833856163392/
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.