Share

Dec 29, 2019

திருப்பதி திருச்சானூர் உரையாடல்



வெங்கடேஷ் : நம்ம அருள் கிடைச்சவங்களை பூலோகத்தில வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ, போலீஸ் படுத்துற பாட்டை நினைச்சா ரொம்ப சங்கடமா இருக்கு.
என் வேலய கொறை சொல்ற மாதிரியில்ல இருக்கு. என்ன நான் சொல்றது?

பத்மா : நீங்க ’காக்கும் தொழில்’ செய்ய வேண்டியிருக்கிறதால நல்ல வேளை மல்லயாவ லண்டனுக்கும் நீரவ் மோடிய நியூயார்க்குக்கும் அனுப்பிட்டீங்க.
அங்கயும் நிம்மதியா இருக்க முடியுதா, பாவம்.

வெங்கடேஷ் : ’சிஸ்டம் சரியில்ல.
நானும் பேங்க்கு மூலமா தான
அருள் பாலிக்க வேண்டியிருக்கு.
அத இப்படி கரிச்சி கொட்டுறாங்கே..

ஜெயில்ல போட்டப்புறம் கூட  என்ன பாடு படுத்தறானுங்க.
பர்ச்சேஸ் பண்ண வெளிய போயிட்டு வந்தா கூட பிரச்ன.’

பத்மாவதி : 'லட்சுமி கடாட்சம்' என்பத கிரிமினல் வேலங்கறானுங்க.

கிலோ கணக்குல தங்கம், வைரம்,
லட்சக்கணக்கில பணம்னு
உண்டியல்ல போடறவங்க
நம்ப அருள் கிடைச்சவங்க தான..
பதிலுக்கு அவங்களுக்கு
நாமளும் நாலு செய்யணும்னு நெனக்கிறதே
தப்பா அர்த்தமாயிடுச்சே...’

...............



பெற்றோர் திருப்பதிக்கு குழந்தையை அழைத்துக் கொண்டு போய் மொட்டை போட்டு
சாமி வெங்கடேசப்பெருமாள் தரிசனத்திற்காக கூண்டில் அடைபட்டு,
அடைபட்டு சாமி கும்பிட்டு விட்டு
உண்டியலில் ஒரு முழு ஐம்பது ரூபாய் போட்டார்கள்.

 முன்னதாக அந்த ரூபாய் நோட்டில்
 “அனுஸ்ரீக்கு சளி, மூக்கடைப்பு நல்லா போகனும். வெங்கடேசாய நம”
என்று சீனிவாசப்பெருமாளுக்கு விவரம் எழுதி போடுகிறார்கள்.

வெங்கடேசப்பெருமாள் அனுஸ்ரீயின் ஏட்டை எடுக்கிறார்.
சளி, மூக்கடைப்பு நிவர்த்தி விஷயமாக மஹாலட்சுமியிடம் என்ன செய்யலாம் என கேட்கிறார்.

பத்மாவதி தாயாரின் reply: 'ஐம்பது ரூபாய் தானே.. இப்போதைக்கு சளியை மட்டும் நிவர்த்தி செய்வோம். ஒரு நூறு ரூபாயில்
அல்லது இருநூறு ரூபாய் நோட்டில் விபரம் எழுதியிருந்தாலாவது மூக்கடைப்பையும் சரி செய்திருக்கலாம்.
தமிழ் நாட்டில் இருந்து திருப்பதி வருகிறார்கள்.
ஆகிற செலவோடு உண்டியலிலும் நல்ல தொகை போடுவதற்கென்ன?
இதில எதுக்கு கஞ்சத்தனம்.'

The temple bell stops?

திருப்பதி உண்டியலில் போட்ட ஐம்பது ரூபாய் எங்கெங்கோ சுற்றி,
ஆந்திராவை விட்டு கிளம்பி,
தமிழ் நாட்டின் தலை நகரத்திற்கு வந்திருக்கிறது.

உலகம் ரொம்ப சின்னது தானே?

ஆற்காட் ரோட்டில் நான் நூற்றைம்பது ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு விட்டு இருநூறு ரூபாய் நோட்டை நீட்டிய போது
எனக்கு மீதியாக வந்த நோட்டு அதே ஐம்பது ரூபாய்.

 மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்குவதற்கு
அந்த நோட்டைத் தான் கொடுத்தேன்.

......

மீள் பதிவு

Carnal Thoughts - 49



Incest - Rape by extortion
Like a beast, beasts don't have any principle in sexual activity.


மனிதம் காணும் கொடூர ரத்த உறவு.

A news in Times of India 15-05-2014

The troubled relationship Gandhi had with his eldest son Harilal.

காந்தியார் 1935ம் ஆண்டில் தன் மூத்த மகன் ஹரிலாலுக்கு சில கடிதங்கள் குஜராத்தி மொழியில் எழுதியிருந்திருக்கிறார்.

“ நம் தேச விடுதலையை விடவும் உன்னுடைய பிரச்னை எனக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி விட்டது.”

இந்த வார்த்தைகள். ’தேசவிடுதலையை விடவும்’
என்ற அளவுக்கு பாடாய் படுத்தும் இழிந்த மகன்.


காந்தி ஹரிலால் உறவு பற்றி திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
சுந்தர் சருக்கை எழுதியுள்ள நாடகம் கூட இருக்கிறது.
complication between father and son.
Harilal lived like a beggar.
காந்தி சரியான தகப்பனல்ல என்று அலசி ஆராய்வது.
ஆனால் அவையெல்லாம்
காந்தியின் கடிதத்திற்கு முன்
படு அபத்தமாகி விடுகிறது.

ஹரிலாலின் மகள் மனு அப்போது சபர்மதி ஆசிரமத்தில் தன் தாத்தா காந்தியாருடன் வசிக்க வந்திருந்தாள்.

மகனுக்கு காந்தி  ஒரு கடிதத்தில் உடைந்து நொறுங்கிப்போய் எழுதியிருப்பது
“ மனு உன்னைப் பற்றி
பயங்கரமான விஷயங்களைச் சொல்கிறாள்.
நீ எட்டு வருடங்களுக்கு முன்
அவளைக் கற்பழித்திருக்கிறாய்.
இதனால் அவள் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து, சிகிச்சை தேட வேண்டியிருந்திருக்கிறது.”

Dec 27, 2019

M.D.ராமநாதன் பாடும்போது...



ஓவியத்தில் ஒரு கோபுரத்தின் உயரத்தைக்
காட்ட வேண்டுமானால் அந்த கோபுரத்தின் பக்கத்தில் ஒரு தென்னை மரத்தை வரைந்து விட்டால் போதும்.

எம்.டி.ராமநாதன் பாவத்தோடு பாடும்போது இப்படி இசை சித்திரமாக விரியும்.
டைகர் வரதாச்சாரியின் சீடன் M.D.ராமநாதன்.
டைகர் மாறுகண் கொண்டவர்.

ராமநாதன் எந்த அளவுக்கு குருவை உள்வாங்கி செரித்துக்கொண்டார் என்றால்,அவருடைய மாறுகண் கூட இவருக்கும் வந்து விட்டது.
The best example of a true devotee to Guru! The relationship was so noble that the student inherited even the squint in the eyes.
தேவச பாகவதரின் மகனாக பாலக்காடு மஞ்சப்பராவில் பிறந்து
பிசிக்ஸில் பி.எஸ்.சி பட்டம் பாலக்காடு விக்டோரியா கல்லூரியில்.
கலாசேத்ராவில் இசையில் பட்டம்.
முதல் பேட்சில் இவர் ஒரே மாணவர் தான்.
டைகர் வரதாச்சாரியின் இசை ஞானத்தை முழுவதுமாக உறிஞ்சிக்குடிப்பதைக் கண்டு (கிட்டத்தட்ட கொள்ளை)செல்லமாக ராமநாதனை “திருடன்!” என்றே சொல்வார்.
A Fitting recognition of merit!
இவருடைய வாய்ப்பாட்டு ஸ்லோ டெம்போ.
Speed is a hindrance and never a help.
Be very relaxed, and much will happen.
- Osho
ராமநாதனின் இசையை அனுபவிப்பது தேர்ந்த இசை ரசிகர்களுக்கும் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக தெரியும். என்ன இது இப்படி சவுக்கத்திலும் சவுக்கம் என்று தோன்றும்.
MD ராமனாதனின் கச்சேரியைக் கேட்கும் போது மேடைக் க்சசேரி பந்ததி என்பது உருவானதற்கு முன்பு கர்னாடக சங்கீதத்தை எல்லோரும் இப்படித்தான் பாடியிருப்பார்களோ என்று தோன்றும்.
அவரது சாரீரம் அற்புதமான ஒன்று.
மைக்கே தேவையில்லை என்ற அளவுக்கு கணீரென்ற குரல்.
ராகத்தை அனுபவித்துப் பாடுவார். அதன் ஒவ்வொரு அம்சத்தையும் கொஞ்சங் கொஞ்சமாக நமக்கு அளிப்பார்.
ராமனாதனின் இசையில் மனதைப் பறி கொடுத்தவர்கள் அவரை விட்டு என்றுமே விலகியது கிடையாது.
சஹானா, யதுகுல காம்போதி, ஸ்ரீ, கேதாரம் இதெல்லாம் இவர் பாடக்கேட்க பிரபல வாய்ப்பாட்டுக்காரர்கள் தவம் இருப்பார்கள்.
இவர் ஒரு ம்யூசிக் தெரபிஸ்ட் என்று சொல்லப்படுவதுண்டு.
ரத்தக்கொதிப்பு குணமாகி விட்டதாக இவர் பாடல்களைக் கேட்ட ஒரு ரசிகர் சொன்னதுண்டு.
மயிலை கபாலீசுவரர் மீது ‘பரமகிருபாநிதே’ என்றும் ‘சம்போ மஹாதேவா’ என்றும் கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார்.
பாகேஸ்வரி ராக ’சாகர சயனா’ இவர் இயற்றியது.
இந்திய அரசாங்கம் எம்.டி.ராமநாதனுக்கு பத்மஸ்ரீ பட்டம்1974ல் வழங்கி கௌரவித்தது.
சங்கீத நாடக அகாடமி விருது,
இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின்
சங்கீத கலாசிகாமணி விருது வாங்கியவர்.
முத்துசாமி தீட்சிதரின் நாட்டை ராக ’மஹா கணபதிம்’
ஸ்ரீ வரத தாசாவின் அடானா ராக ’ஹரியும் ஹரனும்’
இவர் பாடியதை கேட்பது ரசானுபவம்.
இவர் இயற்றிய எல்லா கிருதிகளும் வரத தாச என்ற முத்திரையைப்பெற்றிருக்கும்.
வரதாச்சாரியின் தாசன் என்பதையே அது குறிக்கும்.
தியாகய்யரின் ஹிந்தோளம் ‘சாமஜ வரகமனா’ ஓராயிரம் தடவை ஒரு நூறு பேர் பாடக்கேட்டிருக்கிறேன்.ஆனால் எம்.டி ராமநாதன் பாடுவது மட்டும் ஒரு புது அனுபவம் தான்.
தியாகய்யரின் சஹானா ’கிரிபை நெல’ இவர் பாடி மட்டுமே கேட்கவேண்டும். ஆத்மீக அனுபவம்.
காபி தில்லானா தரும் ஆசுவாசம்.
1984ல் இவர் மறைந்த போது வயது 61.
எம்.டி.ராமநாதன் மாதிரி இன்னொரு வித்வான் தோன்ற எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ?
...........
M.D.ராமநாதன் பற்றிய கவிதை
ராமநாதன் பாடும்போது
(இசை மேதை M.D.ராமநாதனுக்குச்
சமர்ப்பணம்)
ராமநாதன் பாடும்போது
ஏதோ பனிமூடிய பூமியில்
புதைந்து போன
புராதன நகரத்தெருக்களில் திரியும் ரசிகன்
இப்போதும் வற்றாது தவழ்ந்தோடும் மனித
சப்தத்தின்
தெளிந்த நீர்ச்சுனையைக் கண்டடைகிறான்.
ராமநாதன் பாடும்போது
இறந்து கொண்டிருக்கும் பூமியிலிருந்து
பறந்துயரும்
கடைசி விண்வெளிவீரன்
வேறொரு நட்சத்திரத்தில் இலை விரித்து
முளைக்கும்
உயிரின் தளிரைக் கண்டடைகிறான்
- சச்சிதானந்தன் எழுதிய கவிதை
மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு 1991ல் மீட்சி 35வது இதழில் வெளியானது
.......

Dec 24, 2019

Tiger Fight

ப்ரகதீஷ் ரவிச்சந்திரன் இந்த குறும்படத்தை கவனப்படுத்தினார்.
இந்த படத்தின் உதவி இயக்குநர்.
வசனமும் அவர் கை வண்ணம்.
ஆயூஷ்மான் பவ.

மார்ட்டின் ரெப்கா என்ற ஜெர்மானிய இயக்குநர்.
Superb presentation.
நாசர் இந்த குறும்படத்தில் பிரதான பாத்திரத்தில் பிரமாதமாக நடித்திருக்கிறார்.
கூத்துப்பட்டறை புரிசை பழனி,
அருண்மொழி துணை கதாபாத்திரங்கள்.
அசிஸ்டெண்ட் டைரக்டர் கதா பாத்திரத்தின் வசனங்கள் கூட ரசிக்கும்படியாக
ப்ரகதீஷ் எழுதியிருக்கிறார்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட குறும்படம்.
அசோகமித்திரனின் பிரபலமான 'புலிக்கலைஞன்' சிறுகதை தான் படமாக்கப்பட்டிருக்கிறது.
அப்படியே கதையை ஈயடிச்சான் காப்பியாக வடிக்கவில்லை.
குறும்படத்தில் நிறைய மாற்றம்.
இப்படி செய்திருப்பது எந்த வருத்தத்தையும் தரவில்லை.
நிறைவாய் தெரிகிறது.
அசோகமித்திரனுக்கு கூட இந்த குறும்படம் சந்தோஷம் அளித்திருக்கும்.
.........

ரவிசங்கர் 92 - வசந்த கோகிலம் 32


’ட்விங்க்ள் ட்விங்க்ள் லிட்டில் ஸ்டார்
ஹவ் ஐ வொண்டர் வாட் யு ஆர்’
பாடலுக்கு மெட்டு போட்டபோது
மொஸார்ட்
ஐந்து வயது சிறுவன்.
’சாரே ஜஹான் சே அச்சா’ பாட்டுக்கு மெட்டு போட்ட சிதார் மேதை ரவிசங்கர்
92 வயதில் இறந்தார்.

ஏழு வருடங்களுக்கு முன்.
அன்று கூட இங்கே ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம்.
இருபது வருடங்களுக்கு மேலாக அல்லா ராக்கா தபலாவுடன் அந்த சிதார் என் காதுகளுக்கு புகட்டிய தேசி,சுத்த சரங்,யேமன் சரங்…’
அவருடைய மாமனாரும் குருவுமான அலாவுதீன் கான்,
அண்ணா நடன மேதை உதய் சங்கர்,
மைத்துனர் சரோட் அலி அக்பர் கான்,
மகள்கள் நோரா ஜோன்ஸ், அனுஷ்கா..
Illustrious relatives.
ரவிசங்கர் காதல் மன்னன்.
92 வயதில் நிறைந்த வாழ்வு என்று தான் சொல்லவேண்டும்.
32 வயதில் மறைவது? என்.ஸி.வசந்த கோகிலம் குறைவாழ்வில் இறந்து போனவர். அறுபத்து எட்டு வருடங்களுக்கு முன்.
’நேத்திரங்கெட்டவன் காலன் - தன் முன்
நேர்ந்ததனைத்தும் துடைத்து முடிப்பான்’
- பாரதி
வசந்த கோகிலம் கேரளாவில் பிறந்து நாகப்பட்டினத்தில் தான் வளர்ந்திருக்கிறார்.
Ifs and buts போட்டு வாழ்க்கையை விசாரிப்பது உலக இயல்பு எனில்
வசந்த கோகிலம் நிறை வாழ்வு வாழ்ந்திருந்தால் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை அந்தஸ்து
ஒப்பீடு செய்யும்படி ஆகியிருக்குமோ.
எப்போது கேட்டாலும் ஏதோ நேற்று ரிக்கார்டிங் செய்த பாடல்களோ என்ற பிரமை வசந்த கோகிலம் பாடல்களில் ஏற்படுகிறது.

‘ ஏன் பள்ளி கொண்டீரய்யா’ என்று அந்த குரல் கேட்கும்போது இன்று இங்கு ஒரு இருபது வயது பெண் பாடுவது போல’ இருக்கிறது.
சங்கராபரண ராக ‘மஹாலக்‌ஷ்மி ஜெகன் மாதா’
சண்முகப்ரியா ‘தந்தை தாய் இருந்தால் உலகத்தில்’
காம்போதி ‘ஆனந்த நடனம்’
வசந்த பைரவி ராக ‘நீ தயராதா’
முகாரியில் அழும் ‘ஏலாவதாரமு’
’ஜீவன் உள்ள குரல்’ என்று ஒரு cliché உண்டு தான்.
திருமண வாழ்வு என்பது தேவதைகளுக்கு எப்போதும் பெருந்தோல்வி தானே.
வசந்தகோகிலத்தின் முன்னாள் கணவனின் ஊருக்கு பின்னர் போக நேர்ந்த போது
அன்று அந்த இரவு
தோற்றுப்போன தாம்பத்தியத்தை நினைத்து மிகவும் சஞ்சலப்பட்டு தேம்பினாராம்.
எம்.எஸ்.க்கு ஒரு சதாசிவம் போல வசந்த கோகிலம் வாழ்விலும் ஒரு சதாசிவம் உண்டு.
சி.கே.சச்சி என்ற சதாசிவம்.
எம்.ஜி.ஆர் அறிமுகமான சதிலீலாவதி படத்தில் எல்லிஸ்.ஆர் டங்கனுக்கு அசோசியேட் டைரக்டர்.
இந்த சச்சியோடு தான் வசந்தகோகிலம் பின்னர் வாழ்ந்திருக்கிறார்.
1940ல் ’சந்திரகுப்த சாணக்யா’ படத்தில் வசந்த கோகிலம் நடித்த போது மேக் அப் சாமான்கள் லண்டனிலிருந்து சச்சி தருவித்தாராம்.
’வேணுகானம்’ படத்தில் வி.வி.சடகோபனுடன் வசந்தகோகிலம்.
சி.கே.சச்சி இயக்கிய’கங்காவதார்’(1942) படத்தில் கங்கையாக வசந்தகோகிலம்.
பாகவதரின் மனைவியாக ’ஹரிதாஸ்’ படத்தில்
வசந்த கோகிலம்.
’ஆஹாஹா என்ன பாட்டு அந்தம்மா வசந்தகோகிலம் சோகமா பாடுற பாட்டு’ என்று அஷ்டாவதானி பி.பானுமதி மெய்மறந்திருக்கிறார்.
அந்திம காலத்தில் நினைவுக்குழப்பம். ஹரிதாஸ் படம் என்பதற்கு சிவகவி என்றும் ஆற்றங்கரையில் என்பதற்கு குளங்கிட்ட அந்தம்மா சோகமா உக்காந்து பாடுற பாட்டு என்று 22-02-2001 குமுதத்தில் தவறுதலாக பானுமதி குறிப்பிட்டிருந்தார்.
வால்மீகியில் டி.ஆர் ராஜகுமாரி,
யு.ஆர்.ஜீவரத்தினத்துடன்
வசந்தகோகிலமும் நடித்தார்.
இந்தப்படம் ஹரிதாஸ் வெற்றிக்கு பின்
அதன் இயக்குனர் சுந்தர் ராவ் நட்கர்னியால் உற்சாகமாக தியாகராஜ பாகவதர் மீண்டும் நடிக்க ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் கைதாகியதால் ஹொன்னப்ப பாகவதர் நடித்தார்.
டி.எஸ்.பாலையா கூட வால்மீகியில் உண்டு.
எம்.எஸ்க்கு ரொம்ப களையான அழகு முகம். மீரா,சகுந்தலை படங்களில் பார்க்கலாம். ஆனால் வசந்த கோகிலம் முகம் பற்றி அப்படி சொல்லமுடியாது. பெண்மையின் நளினம் கூட நடிப்பில் குறைவு என்பது ஹரிதாஸில் தெரிகிறது.
ஆனாலுமே
வசந்தகோகிலம் ரொம்ப அழகு என்று தான் பெரியவர்கள் சொல்வார்கள்.
எலும்புறுக்கி நோய் படுத்திய பாட்டில் வசந்தகோகிலம் 1951ம் ஆண்டு நவம்பரில் 7ம் தேதி கமலஹாசன் பிறந்த தேதியில் தான் இறந்திருக்கிறார்.ஆனால் அப்போது கமலஹாசன் பிறந்திருக்கவில்லை.அதற்கு சரியாக மூன்று வருடம் கழித்து தான் பிறந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் என் பக்கத்து வீட்டில் இருந்த வசந்தா மாமி ‘வசந்தகோகிலம் ரொம்ப பிராபல்யமா இருக்கறச்ச தான் நான் பொறந்தேன்.அதான் நேக்கு வசந்தகோகிலம்னு எங்காத்தில பேர் வச்சா’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

Dec 19, 2019

"எப்படிரா இருக்கே "


நிகழ்வு -1
அறுபது வருடங்களுக்கு முன்.
குதிரை மீது அந்த வில்லன் நடிகர் உட்கார்ந்திருக்கிறார்.
கேமெரா ஒடத்துவங்கவில்லை. ஷாட் ரெடி.
இவருடைய ஊர்க்காரர்கள்,சொந்தக்காரர்கள் சிலபேர் அங்கே படப்பிடிப்பு தளத்தில் நிற்பதை பார்க்கிறார்.
கண்ணாலே வினவுகிறார்.
'இறங்கி வா. அப்புறம் சொல்கிறோம் '
சொந்தக்காரர்களில் ஒருவர் சைகையில் சொல்கிறார்.
ஸ்டார்ட் கேமரா,க்ளாப் ' பை 3 டேக் 1
ஷாட் முடிந்தவுடன் குதிரையிலிருந்து இறங்கி வருகிறார்.
" டே உங்கம்மா வேற ஜாதிக்காரனோட ஓடிபோயிட்டாடா "
ஊர்க்காரர்கள் வில்லன் நடிகரிடம் சொல்கிறார்கள்.
’கணீர்’ என்ற அவர் குரல் கம்மி விடுகிறது.
" போறா கண்டார ஒலி"
....

நிகழ்வு -2

நாற்பது வருடங்களுக்கு முன் அந்த நடிகர் மறைந்து விட்டார்.
அவர் இறந்து ஒரு இரண்டு வருடங்களுக்கு பின் அவரிடம் அம்மா ஓடிப்போன தகவலை அறுபது வருடங்களுக்கு சொன்னவர், நடிகரின் பங்காளி மதுரையில் இருந்து
சொந்த ஊர் போனவர் அந்த நடிகரின் தாயாரை பார்க்கிறார்.
கிழவி நல்ல நைலக்ஸ் சேலை கட்டி,
ஜாக்கெட் இல்லாததால் தொங்கிய இரண்டு முலையும் தெரிய " டே கருத்தக்கண்ணு, எப்படா வந்தே, எப்படிடா இருக்க." என இயல்பான அன்போடு சௌஜன்யமாக தன் சகோதரி மகனிடம் கேட்டாராம்.
........

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்..
அந்த திரை வில்லன் நடிகரின் இந்த உறவினர் தண்ணி போட்டு விட்டு
நல்ல போதையிலே இருக்கும்போதெல்லாம்,
ஒவ்வொரு தடவையும்
மதுரை அரசரடி ஆரப்பாளையம் ரோட்டில்
என்னைப் பார்க்க நேர்ந்த போதெல்லாம்
இந்த இரண்டு நிகழ்வையும் கிராமபோன் ரிக்கார்டு போல, காட்சி விரியும்படி நல்ல உரத்த குரலில் சொல்ல ஆரம்பித்து விடுவார்.
1. குதிரையில் இருந்து இறங்கி வந்த நடிகரிடம் தான் சொன்ன துயர சேதி.
2. நடிகர் மறைந்த இரண்டு வருடத்தில்
அப்போது உயிரோடிருந்த அவருடைய தாய் தன்னை குசலம் விசாரித்தது பற்றி.
இந்த இரு சம்பவங்களின் வாழ்வின் முரண், குடிபோதையில் அவரை மிகவும் பாதித்திருந்திருக்கிறது.
" ரெண்டு முலையும் காஞ்ச 'பன்'னுலே சுருங்கிப்போன கிஸ்மிஸ் பழம் மாதிரி தொங்கி சூம்பிபோய் கிடக்கு.
எங்க சின்னாத்தா கேட்கிறா.
' எப்படிரா இருக்கே'
என் பங்காளி போய் சேர்ந்துட்டான்.
நடிச்சு ,குடிச்சு ,கூத்தியா வச்சு அனுபவிச்சிட்டு அவன் போய்ட்டான்..
அவன் போயிட்டான்.
அவன் ஆத்தா கேக்கா
" ஏலேய். அப்பு டே, எப்படிரா இருக்கே "

Dec 16, 2019

ச.து.சு யோகியார்



க.நா.சு. தன் 'இலக்கியச்சாதனையாளர்கள்'  நூலை
சமர்ப்பிப்பது கொஞ்சம் வித்தியாசமாக
காணிக்கை
“நான் தமிழில் எழுத ஆரம்பித்த காலத்தில்
எனக்கு மிகவும் நெருங்கிய தோழர்களாக இருந்து,
சில சமயம் எதிர்த்துச் சொல்லியும்
சில சமயம் ஆதரித்தும் உதவிய
நண்பர்கள் நினைவுக்கு
இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்.
அவர்களில் முக்கியமானவர்கள் என்று
நான் நினைப்பவர்கள்
சொ.விருத்தாச்சலம் என்கிற புதுமைப்பித்தன்,
ஏ.கே.ராமச்சந்திரன் என்ற கி.ரா,
ச.து.சு.யோகியார்”
‘குட்டி இளவரசன்’
அந்த்வான் செந்த் சமர்ப்பணம் அழகு.
நூலிலும் ச.து.சு.யோகியார் பற்றி க. நா. சு.  மற்றவர்களை விடவும் ஓரளவு சிறப்பாகவே சொல்கிறார்.
ஒரு நாலேகால் பக்கத்தில் அவரை பற்றி எழுதியுள்ள விஷயங்கள் யோகியாரின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும்படி இருக்கிறது.
1932லிருந்து 1960 வரையிலான காலங்களில் க.நா.சு அவரோடு பழகி நட்பு கொண்டிருந்திருக்கிறார்.

ச.து.சு. யோகி கவிஞர். பால பாரதி என அழைக்கப்பட்டவர்.
துறவி என்ற பிம்பம் இவருக்கு.

போலீஸ் வேலை பார்த்தவர்.
1930களின் ஆரம்பத்தில் ஈ.வெ.ரா. பெரியாரின் பாசறையில் இருந்தவர்.
இரு சகோதரர்கள் 1936ல் கே.பி.கேசவன், பாலையா, எம்.ஜி.ஆர் நடித்து வந்த திரைப்படம். இதற்கு யோகி தான் ஸ்க்ரீன் ப்ளே.
பின்னர் 1939ம் வருடம் ’அதிர்ஷ்டம்’ ச.து.சு.யோகி இயக்கத்திலேயே வெளி வந்த வெற்றிப்படம்.
நடிகர்கள் வி.வி.சடகோபன், டி.சூரிய குமாரி,
கொத்தமங்கலம் சுப்பு, கே.ஆர்.செல்லம்.
’அய்யா என் சிறு பெண் ஏழை என் பால்’ அதிர்ஷ்ம் படப்பாடல்
டி.சூரியகுமாரி பாடியது. யோகியே எழுதியிருந்தார்.
’கவிச்சக்ரவர்த்தி கம்பன்’ நூல் எழுதியவர்.
யோகியின் ’தமிழ் குமரி’ கவிதைத் தொகுப்பு ரொம்ப முக்கியமானது.
சிறந்த கவிதைத்தொகுப்பாம்.
அற்புதமான கவிதைகள் கொண்டிருந்திருக்கிறது.
காசில்லாக் கனகரத்தினம், மேரி மக்தலேனா, தமிழ்க்குமரி, ஜோதிச் சரிகை,கண்மணி ராஜம் போன்ற உன்னத கவிதைகள்.
கம்யூனிச எதிர்ப்பு கவிதைகள் ‘கம்மூனித் தெம்மாங்கு’ என்று எழுதினாராம். தெம்மாங்காக யோகியே பாடிக் கேட்பதை பற்றி க.நா.சு சிலாகிக்கிறார்.
ஒரு தாய் தாசி தன் மகளுக்கு சொல்லும் அறிவுரை ‘நற்றாயிரங்கல்’ காவியம். அதையும் அவரே பாடிக்காட்டுவார்.

யோகியின் அப்பா துரைசாமி ஐயர் ஒரு வக்கீல். அவரிடம் நன்கு ஆங்கிலம் கற்றார்.

இவருடைய மொழிபெயர்ப்புகள் உமர் கய்யாமின் கவிதைகள், அமெரிக்க கவி வால்ட் விட்மனின் Leaves of Grass.
மனிதனைப் பாடுவேன் என்று விட்மனின் அந்த படைப்பிலிருந்து பலவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். இது இப்போது மீண்டும் பதிப்பில் வருவது அவசியம்.
ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’ நாவலை மொழிபெயர்த்திருக்கிறார்.
கவிதை, இலக்கியம், மேஜிக், யோகம், சாஸ்திரம், மரபு எல்லாவற்றிலும் தடம் பதித்தவர். மேஜிக் நிபுணர். இதையே வாழ்வோபாயமாக சில காலம் கொண்டிருந்திருக்கிறார்.
திருமூலர் மரபில் 49வது தலைமுறையினனாக வந்த சித்தராக தன்னைப் பற்றி நம்பியவர்.
திருமூலர் திருமந்திரத்தில் அணுவை பிளப்பதற்கு விஞ்ஞான வழி சொல்லியிருப்பதாக ஒரு தீஸிஸ் சப்மிட் செய்து அரசாங்கத்திடம் இருந்து அந்தக்காலத்தில் ரெண்டாயிரம் ரூபாய் பணம் வாங்கினார்.
திருமூலர் ஃபார்முலாவில் அணுவை பிளந்து காட்ட பத்து லட்சம் பட்ஜெட் போட்டு யோகி கவனப்படுத்திய போது, விஞ்ஞான நிலையத்தில் இருந்து பதில் ஏதும் இவருக்கு கிடைக்கவில்லை.
சிறுவனாக இருக்கும் போது ஊட்டியில் நடந்த பதினெண் சித்தர் கூட்டத்துக்கு யோகி கள்ளு வாங்கி வரும் பையனாக சேவை செய்தது பற்றித் தத்ரூபமாக வர்ணிப்பாராம்.
யோகியோடு பழகியதைப் பற்றி சிறந்த அதிர்ஷ்டம்  என்று க.நா.சு அபிப்ராயப்படுகிறார்.
”பலவிதங்களில் என் வாழ்க்கையும் மனமும் வளம் பெறுவதற்கு உதவியவர் ச.து.சு. யோகியார். தெரிந்து கொடுத்து உதவினார் என்று இல்லாமல் இருக்கலாம்; அவர் இருந்ததனாலே, அவரை அறிந்ததனாலேயே, தானாகவே என் வாழ்க்கை வளம் கூடியதாக நினைத்துப் பார்க்கும் போது தோன்றுகிறது.”
க.நா.சுவின் இந்த கனமான வார்த்தைகள்
பிரிட்டிஷ் இயக்குனரின் ”I Daniel Blake” படத்தின் வசனமொன்றை நினைக்கச் செய்கிறது.
“He gave us things that money cannot buy.”


Dec 13, 2019

ஏன்டா? ஏன்?

காலை உணவு தாமதமாகிறது.
முதல்வர் கோட்டைக்கு கிளம்ப தயாராகிக்கொண்டிருக்கிறார்.
அசெம்ப்ளி நடந்து கொண்டிருக்கிறதா?
அல்லது கவர்னரை சந்திக்க வேண்டியிருந்ததோ? மந்திரி சபை முக்கிய ஆலோசனை அன்று காலையில்?
ஒரு வேளை அன்று கோட்டையில் முக்கிய சந்திப்புக்காகவும் இருந்திருக்கும்?
உட்கட்சியிலேயே அவருக்கு எதிரான கலகங்கள் அவ்வப்போது இருக்கும்போது கட்சித்தலைவராகவும் அவருக்கு எவ்வளவு பதற்றம்?

முரசொலி அடியாராய் இருந்தவர்
இவரால் நீரோட்டம் அடியாராய் மாறியவர் கூட கட்சியை விட்டு வெளியேறி அப்போது குடும்பரீதியாக அந்தரங்கத்தை கிளறி கண்டபடி பேசிக்கொண்டிருந்த விஷயம்
”ஒரு முதலமைச்சராயிருக்கும் போது ஒரு கல்யாண வீட்டில்
’ நான் ஜானகியோடு பல வருடம் வாழ்ந்து விட்டு அப்புறம் தான் கல்யாணம் செய்து கொண்டேன்’ என்று பேசுறானேய்யா! உண்மையா இருந்தா கூட ஒரு முதலமைச்சர் பொண்ணு மாப்பிள்ளைய வாழ்த்திப்பேசும்போது இப்படியா பேசுவான்?”
அடியார் மதுரை மேல மாசி வீதியில் மேடையில் ஏகாரத்தில் சகட்டு மேனிக்கு பேசும்போது பழக்கடை பாண்டியின் ஆட்கள் கலவரம் செய்ய,
அடியார் மிரண்டு போய் பயத்துடன் குரல் நடுங்கி
“ டேய் பாண்டி, இது ஒன் வேல தான்டா. நான் பயப்பட மாட்டேன்டா “ என்று சொல்லி விட்டு மேடையில் இருந்து இறங்கி அம்பேல்.
அடியார் ஜூட்.

அன்று அரசியலிலும் ஆட்சியிலும் எம்.ஜி.ஆருக்கு தான் கருணாநிதியை சமாளிப்பது மட்டுமா பெரும் பிரச்னை?

மேக் அப் முடித்து, சின்ன விக் கூட பின் பக்க முடிக்காக வைத்துக் கொண்டு, கிளம்ப தயாராகி விட்ட அவசர நேரத்தில் காலை உணவு இன்னும் வரவில்லை. 
நல்ல பசியில் எம்.ஜி.ஆர்.
தோட்டத்தில் அன்று காலை கிளம்பு முன் யாரையும் சந்திக்க முடியாது என்று ஏற்கனவே தகவல் கண்டிப்பாக சொல்லி விட்டார்.
நேராய் கோட்டைக்குத் தான் போக இருக்கிறார்.
ரொம்ப முக்கிய காரியமாயிருக்கும்.
பசி. இண்டர்காமை தலைவர் அழுத்துகிறார்.
கிச்சனில் சமையல்காரரை உடனே ப்ரேக் பாஸ்ட் மாடிக்கு கொண்டு வரச்சொல்லுகிறார்.

சின்னவருக்கு உணவு கொடுப்பதை விட சமையல்காரருக்கு ராமாவரம் தோட்டத்தில் என்ன பெரிய வேலை இருக்க முடியும்.? 

மீண்டும் எம்.ஜி.ஆர் இண்டர்காமில் “ டேய், பசிக்குதுடா”
சில நிமிடங்கள் பொறுத்திருக்கிறார்.
கிளம்பி விட்டார். பசியுடன் இப்போது கோபமும்.

படியில் வேகமாக இறங்குகிறார்.
எதிரே சமையல் காரர் சுடச்சுட தோசை, கருவாட்டு குழம்புடன் மேலே படியேறி வருகிறார்.
எம்.ஜி.ஆர் கையை ஓங்கி தட்டை தட்டி விடுகிறார்.
சமையல் காரருக்கு கன்னத்தில் ஒரு ’பளார்’

” ஓத்தா, ஏன்டா ராமச்சந்திரன பட்டினி போடுற?
ஏன் ராமச்சந்திரன பட்டினி போடுற?”

மின்னல் வேகத்தில் இறங்கிப் போய்
காரில் ஏறி விட்டார்.

When Caesar says " 'Do it', it is performed."
- Shakespeare

கஜலட்சுமி   கடாட்சம்  மிகுந்த தமிழக முதல்வருக்கு அன்று
அன்னலட்சுமி அருள் இல்லை.

Dec 12, 2019

பிரஷ்டம்



பொரி பொறுக்கி , சும்பன், விசும்பன், நிசும்பன் சேர்ந்து கூட்டு விவாதம் செய்து கொண்டிருந்த  இடத்தில் சந்தர்ப்ப வசமாக
ஒரு சாமானியன்.

 'பெண்' பற்றி பொரி பொறுக்கி  சொன்ன விஷயத்திற்கு ரெலவண்ட்டாக இந்த சாமானியன்
 நீட்ஷே ஜரதுஷ்ட்ராவில் இருந்து சொன்னான் “Are you going to women? Don't forget your whip"

பொரி பொறுக்கி  திரும்பி  சாமானியனை பார்த்தான்.
(இவன் நம்மள அம்மணமாக்க பாக்கிறானே)

விசும்பன், சும்பன், நிசும்பன் மூவரிடமும் திரும்பி
 பொரி பொறுக்கி  சொன்னான்

” நமக்கு நீட்ஷே, காஃப்கான்னு பேசுற அறிவாளியெல்லாம் தேவையில்ல”

சாமானியனை பிரஷ்டம்
செய்து விட்டான் பொரி பொறுக்கி.

ராசிபலனில் சாமானியனுக்கு அன்று
 “ நெத்தியில சுன்னி மொளச்சவன் மூஞ்சியில முழிக்காமல் தவிர்க்கவும்”னு போட்டிருந்தும்
விதி வசத்தால் ஜாக்கிரதையாக இல்லாமல்
போய் விட்டானே. அந்தோ!

வீட்டிற்கு போனவுடன்,
பத்திரிக்கைக்கு கட்டுரை எழுதும் போது
பொரி பொறுக்கி
 தன் எழுத்தில் இடையிடையே
அங்கங்கே கவனமாக சேர்த்தான் -

” பிளேட்டோ சொல்கிறார்”

“ இங்க்மார் பெர்க்மன் சொல்கிறார்”


...





Dec 10, 2019

ஒவ்வொரு பார்வையில்



'உலகின் ஒரே நகரம் நியுயார்க் ' என போத்ரியார் சொன்னதாக நாகார்ஜுனன் ப்ளாகில் படித்த ஞாபகம்.
ஆழ்ந்த பிரக்ஞை பூர்வமான முடிவு. இது பிடிவாதமல்ல.

 " ஒரு பார்வையில் சென்னை நகரம்" என்ற அசோகமித்திரனின் நூலைப் படித்தபோது போத்ரியாரின் வார்த்தைகள் தான் நினைவில் வந்தது.
கவிதாப் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம்
 ரொம்ப சின்னப் புத்தகம் தான். விலை நாற்பது ரூபாய்.
மனிதனின் வேர்கள் அவன் வாழும் சூழலில் ஊன்றிவிடுகிறது.

குஷ்வந்த் சிங் அவருடைய சுயசரிதை
 Truth,Love and a Little malice ல் சொல்கிறார்

- ”Bombay is the only city India has.
Other Indian metropolises like Calcutta,
Madras and
Delhi are like over sized villages”.

அவருடைய  ’Delhi' நாவலில் டெல்லி மாநகரம் பற்றி ரொம்ப விசேசமாக சொல்வதை குறிப்பிடுவது அவசியமானது.
 உருது கவிஞர் மிர்சா அசதுல்லா கான் காலிப் சொன்னதையே வலியுறுத்தும் குஷ்வந்த்

”I asked my soul: What is Delhi?
 She replied: The world is the body and Delhi its life ”

"ஊர்களைப் பற்றிய புத்தகங்களிலேயே ஆகச் சிறந்தது இஸ்தாம்பூல்தான்.  ஆனால் ஓரான் பாமுக் ஒரு அதிர்ஷ்டசாலி.  உலகத்திலேயே சிறந்த ஊர் இஸ்தாம்பூல்.  அதனால் அப்படி ஒரு புத்தகத்தை அவர் எழுதினார்.  சிறந்த ஊர் என்பதை “வசிப்பதற்கு வசதியான” என்ற அர்த்தத்தில் வாசிக்க வேண்டாம்.  ”பாரம்பரியச் சிறப்பு மிக்க” என்று வாசியுங்கள்.

தில்லி பற்றி ஆயிரம் பக்கம் அனாயாசமாக எழுதலாம். 
12 ஆண்டுகள் அங்கே இருந்தேன்.
 ஆனால் தில்லியைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை.  வருத்தமில்லை.  நான் அங்கே இருந்த காலகட்டம் ஒரு சர்வகலாசாலையில் இருந்தது போல.  உலக சினிமா, நாடகம், நடனம், சங்கீதம் இது அனைத்தையும் அங்கேதான் தான் தான் நான் கற்றேன்.  ஊரைப் பார்த்திருந்தால் அந்தக் கல்வி எனக்குக் கிடைத்திருக்காது."
- சாரு நிவேதிதா

'இப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை ' கட்டுரையில் சாரு நிவேதிதா மேற்கண்டவாறு சொல்கிறார்.

" தெரியாத அதிசயங்களைத் தன் கர்ப்பத்தில் சுமக்கின்ற மகா சமுத்திரங்களை விட எனக்குத் தெரிந்த என் நிளா நதியைத் தான் நான் நேசிக்கிறேன்" என்பார் எம்.டி.வாசுதேவன் நாயர்.

கிரா நேர் பேச்சில் என்னிடம் சொன்னார் : "எவரெஸ்ட் பெரிய சிகரம் தான். இருந்தாலும் குருமலை தானே எனக்கு முக்கியம்."

”பல்லவர் கோன் கண்ட மல்லை போல
பாரெங்கும் தேடினும்  ஊரொன்றும் இல்லை”
மஹாபலிபுரம் பற்றி கண்ணதாசன்

ஷெல்லி சலித்துப் போய் “Hell is a city much like London” என்றான்.

ஆல்பர் காம்யு -“Paris is a dingy sort of town.” என்று ‘The Outsider’ நாவலில் முகம் சுழிப்பான்.

என்னைக் கேட்டால் நான் சொல்வேன்.

“Hell is a city much like Chennnai”.

“Chennai  is a dingy sort of town”

Dec 9, 2019

எம்.ஜி.ஆர் சங்கீத கொடை


முதல்வர் எம்.ஜி.ஆர் தன்னை வந்து சந்திக்கும்படி பாலமுரளி கிருஷ்ணாவிற்கு தகவல் சொல்கிறார்.
தமிழக முதல்வரை பாலமுரளி கிருஷ்ணா சந்திக்கிறார்.
எம்.ஜி.ஆர் அளித்த பணி ஒன்று. ’தியாகப்ரும்மத்தின் கீர்த்தனைகளை தமிழில் மொழிபெயர்த்து இசைத்து பாடவேண்டும்.’
பாலமுரளி சிரமேற்கொள்கிறார்.
தியாகராஜ கீர்த்தனைகளை தமிழில் மொழி பெயர்த்து பாடல்களை இசைப்படுத்துகிறார்.
கீர்த்தனைகளை மொழிபெயர்த்தவர் அவருடைய துணைவி அபயம் அவர்கள் தான்.
ஆறே மாதத்தில் எள் என்றால் எண்ணையாக தயாராகி விட்டார் பாலமுரளி கிருஷ்ணா.
எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு வரும் என்று நினைத்திருக்கிறார்.
”இன்னேரம் நொறுங்கியிருக்கணுமே” சபாஷ் மீனா பட சிவாஜி போல.
முதல்வரை சந்திக்க இவரே முயற்சித்தும் பார்த்திருக்கிறார்.

அவ்வளவு சுலபமா அது?

எம்ஜிஆர் மறந்து விட்டார் போலிருக்கிறது.
ராஜாங்க தலைமைக்கு எத்தனையோ சுமை.

சரிதான் என்று பாலமுரளி பிரமைகளை உதிர்த்து வேறு காரியங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். வெளி நாட்டு சங்கீத கச்சேரியே போதாதா?
இரண்டு வருடம் ஓடி விட்டது.
எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு.
”நான் உங்களிடம் சொன்ன வேலையை மறந்து விட்டீர்களா? இரண்டு வருடம் ஆகி விட்டது.”
பாலமுரளிக்கு எப்படியிருந்திருக்கும்?
When Caesar says “Do it”, it is performed.
பதற்றத்துடன் “அந்த பணியை நான் ஒன்றரை வருடம் முன்னரே முடித்து விட்டேன்.”
”அப்புறம் என்ன? என்னிடம் வந்து ஏன் சொல்லவில்லை?”
“ உங்களை சந்திக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவே இல்லை”
வழி மறித்து தடுக்கிற நந்திகளுக்கு எம்.ஜி.ஆர் என்ற மஹாபுருஷர் விலக்கல்லவே. அவரும் அறியாததல்ல.
மிக சிறப்பான விழாவிற்கு எம்.ஜி.ஆர் ஆணையிடுகிறார்.
தியாகப்ரும்ம கீர்த்தனைகளை தமிழில் பால முரளி பாடி அரங்கேற்றுகிறார்.
எம்.ஜி.ஆர் உதவியாளரை அழைத்து சொல்கிறார். “பாலமுரளியிடம் பிரசாதத்தை கொடுங்கள்”
பிரசாத பை பெரிதாய் பாலமுரளி கையில்.

பாலமுரளி வீட்டிற்கு வந்து பார்க்கிறார்.
கத்தை கத்தையாய் பணக்கட்டு.
கட்டிலில் தான் அதையெல்லாம் எடுத்து வைக்கிறார்.
பத்து லட்சம் என்பது அன்று மிக மிகப்பெரிய தொகை.
அதோடு பாலமுரளி கிருஷ்ணா அதுவரை பார்த்தேயிராத பெருந்தொகை.
பால முரளி விம்மி,விம்மி அழுகிறார்.
தேம்பி அழுகிறார்.
…......