Share

Dec 10, 2019

ஒவ்வொரு பார்வையில்



'உலகின் ஒரே நகரம் நியுயார்க் ' என போத்ரியார் சொன்னதாக நாகார்ஜுனன் ப்ளாகில் படித்த ஞாபகம்.
ஆழ்ந்த பிரக்ஞை பூர்வமான முடிவு. இது பிடிவாதமல்ல.

 " ஒரு பார்வையில் சென்னை நகரம்" என்ற அசோகமித்திரனின் நூலைப் படித்தபோது போத்ரியாரின் வார்த்தைகள் தான் நினைவில் வந்தது.
கவிதாப் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம்
 ரொம்ப சின்னப் புத்தகம் தான். விலை நாற்பது ரூபாய்.
மனிதனின் வேர்கள் அவன் வாழும் சூழலில் ஊன்றிவிடுகிறது.

குஷ்வந்த் சிங் அவருடைய சுயசரிதை
 Truth,Love and a Little malice ல் சொல்கிறார்

- ”Bombay is the only city India has.
Other Indian metropolises like Calcutta,
Madras and
Delhi are like over sized villages”.

அவருடைய  ’Delhi' நாவலில் டெல்லி மாநகரம் பற்றி ரொம்ப விசேசமாக சொல்வதை குறிப்பிடுவது அவசியமானது.
 உருது கவிஞர் மிர்சா அசதுல்லா கான் காலிப் சொன்னதையே வலியுறுத்தும் குஷ்வந்த்

”I asked my soul: What is Delhi?
 She replied: The world is the body and Delhi its life ”

"ஊர்களைப் பற்றிய புத்தகங்களிலேயே ஆகச் சிறந்தது இஸ்தாம்பூல்தான்.  ஆனால் ஓரான் பாமுக் ஒரு அதிர்ஷ்டசாலி.  உலகத்திலேயே சிறந்த ஊர் இஸ்தாம்பூல்.  அதனால் அப்படி ஒரு புத்தகத்தை அவர் எழுதினார்.  சிறந்த ஊர் என்பதை “வசிப்பதற்கு வசதியான” என்ற அர்த்தத்தில் வாசிக்க வேண்டாம்.  ”பாரம்பரியச் சிறப்பு மிக்க” என்று வாசியுங்கள்.

தில்லி பற்றி ஆயிரம் பக்கம் அனாயாசமாக எழுதலாம். 
12 ஆண்டுகள் அங்கே இருந்தேன்.
 ஆனால் தில்லியைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை.  வருத்தமில்லை.  நான் அங்கே இருந்த காலகட்டம் ஒரு சர்வகலாசாலையில் இருந்தது போல.  உலக சினிமா, நாடகம், நடனம், சங்கீதம் இது அனைத்தையும் அங்கேதான் தான் தான் நான் கற்றேன்.  ஊரைப் பார்த்திருந்தால் அந்தக் கல்வி எனக்குக் கிடைத்திருக்காது."
- சாரு நிவேதிதா

'இப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை ' கட்டுரையில் சாரு நிவேதிதா மேற்கண்டவாறு சொல்கிறார்.

" தெரியாத அதிசயங்களைத் தன் கர்ப்பத்தில் சுமக்கின்ற மகா சமுத்திரங்களை விட எனக்குத் தெரிந்த என் நிளா நதியைத் தான் நான் நேசிக்கிறேன்" என்பார் எம்.டி.வாசுதேவன் நாயர்.

கிரா நேர் பேச்சில் என்னிடம் சொன்னார் : "எவரெஸ்ட் பெரிய சிகரம் தான். இருந்தாலும் குருமலை தானே எனக்கு முக்கியம்."

”பல்லவர் கோன் கண்ட மல்லை போல
பாரெங்கும் தேடினும்  ஊரொன்றும் இல்லை”
மஹாபலிபுரம் பற்றி கண்ணதாசன்

ஷெல்லி சலித்துப் போய் “Hell is a city much like London” என்றான்.

ஆல்பர் காம்யு -“Paris is a dingy sort of town.” என்று ‘The Outsider’ நாவலில் முகம் சுழிப்பான்.

என்னைக் கேட்டால் நான் சொல்வேன்.

“Hell is a city much like Chennnai”.

“Chennai  is a dingy sort of town”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.