Share

Feb 9, 2018

ஊசிக்கு ஊசி


கண்ணுச்சாமி சண்டியர் மற்றும் அரசியல்வாதி.
தங்காத்து கூத்துல வேஷம் போடுறவர்.
‘கண்ணால் கண்டதை சொல்லாவிட்டால் கத்தியால் வெட்டுவான் பாதர்வெள்ள.’
தங்கப்பல் முன் வரிசையில் ஒரு நாலு. அதனால் தங்கப்பல்லு தங்காத்து. சண்டியர் தான். மட்டன் கடை வச்சிருக்கார்.
சொலவடை ஒன்று சல்லிகள் தங்களுக்குள் யாரையாவது பாராட்ட வேண்டுமென்றால் “ மாப்ள…உனக்கென்னடா… தங்கப்பல்லு தங்காத்து..”
கண்ணுச்சாமி சைக்கிளில் வரும்போது தங்கப்பல் தங்காத்து கறிக்கடையை பார்க்கிறார். கறிக்கடையில் தங்காத்து இல்லை.
சைக்கிள விட்டு எறங்கி “ டேய் தங்காத்து.. நீயெல்லாம் எனக்கு ஆளாடா? நானெல்லாம் ஆளையும் ஓத்து நிழலையும் ஓத்துட்டுப்போறவன்டா டேய்..” இப்படி சவுண்டு விடும்போதே கறிக்கடையின் முன் அரிவாளால் ஒரு வட்டம் போடுகிறார்.
“ எங்கடா அவன்” கறிக்கடையில் உள்ள சுள்ளானை மிரட்டுகிறார்.
சைக்கிளில் ஏறி சவுண்டு விட்டு கொண்டே போகிறார்.
தங்காத்து சைக்கிளில் சாவகாசமாக வருகிறார். கடையின் முன்னால் ஒரு வட்டம் வரையப்பட்டிருப்பதை பார்க்கிறார். பையன் வட்டம் போட்டது கண்ணுச்சாமி என்பதை வெளிப்படுத்துகிறான். ”டேய், போய் அவன் வீட்டில இருக்கானான்னு பாத்துட்டு வாடா”
சுள்ளான் நடந்து போய் பார்த்துவிட்டு வந்து கண்ணுச்சாமி வீட்டில் இல்லையென்பதை சொல்கிறான்.
தங்காத்து “ எடுறா அந்த அரிவாள,” என்று வாங்கிக்கொண்டு கண்ணுச்சாமி வீட்டுக்கு கிளம்பி விடுகிறார்.
”டே கண்ணுச்சாமி, ஒனக்கு அழிவு காலம்டா… எங்கிட்ட மோதுறவன் காணாம போயிடுவான்டா..ங்கொம்மாலோக்க..” இப்படி சொல்லும்போதே கறிக்கடையில் கண்ணுச்சாமி போட்ட வட்டத்தை விட பெரிய வட்டமாக கவனமாக அரிவாளால் போடுகிறார்.
சவுண்டு விட்டுக்கொண்டே போய் விடுகிறார்.

இந்த மாதிரி ’தீட்னி’யில் முக்கிய நோக்கம்  ஏரியா மக்களை மிரட்டுவது.

கண்ணுசாமி வீட்டுக்கு வருகிறார். வீட்டின் முன் இருக்கிற வட்டத்தை பார்க்கிறார். அவர் பெஞ்சாதி விவரம் சொல்கிறார். பக்கத்தில் உள்ள சுள்ளான் ஒருவனை கறிக்கடையில் தங்காத்து இருக்காப்பிலியான்னு பார்த்து வர ஏவுகிறார்.
அங்கே கறிக்கடையில் தங்காத்து இல்லைன்னு தெரிந்தவுடன் அரிவாளோடு கிளம்பி விடுகிறார். கறிக்கடையின் முன் வீட்டின் முன் இருந்த வட்டத்தை விட பெரிய வட்டம் வரைகிறார். வரையும் போதே “ டே தங்காத்து….ங்கோத்தாட்ட குடிச்ச செனப்பால நான் கக்க வச்சுறவன்டா.. எனக்கெல்லாம் எந்திரிச்சிச்சின்னு வச்சுக்க.. அப்பறம் மடக்க ஆளே இல்லடா…நீயெல்லாம் என் சுன்னி மசுருடா டேய்” என்ற வீரவசனம் உச்சரிக்கும் போதே வேட்டிக்குள் கைவிட்டு நான்கைந்து மயிரை பிய்த்து எடுத்து நீட்டுகிறார்.

கடையில் உள்ள சுள்ளானப்பார்த்து கர்ஜனை- “டேய் இப்ப உன்ன வகுந்து ஆட்டோட கறிக்கடையில தொங்க விட்டுட்டு போறேன்டா…”
சுள்ளான் மிரண்டு “அண்ணே..வேண்டாண்ணே..” என்று சொல்லிக்கொண்டே கடையை விட்டு தாற்காலிக எஸ்கேப்.
தங்காத்து கடைக்கு வந்து கடையின் முன் இருந்த பெரிய வட்டத்தை பார்க்கிறார்.
சுள்ளான் “பயமாருக்குண்ணே..”
’அவன் வீட்டில இருக்கானா பாத்துட்டு வாடா’
இல்லையென்பது தெரிந்ததும் தங்காத்து அரிவாளுடன் போய் கண்ணுச்சாமி தெருவை அடைத்து ஒரு மிகப்பெரிய வட்டம்…..
எவ்வளவு நாள் இப்படி கண்ணாமூச்சி ஆடமுடியும்?
ஜெயில் ரோட்டில் எதிரும்புதிருமாக நேருக்கு நேர் சைக்கிள்ள மோதி கீழே விழுந்து..
வேறு வழியே இல்லாம கைகலக்க வேண்டிய நிர்ப்பந்தம்..
கண்ணுச்சாமி….’லொள்’
தங்கப்பல்லு தங்காத்து ’லொள் லொள்..’
கண்ணுச்சாமி ’வள்’
தங்காத்து  ‘வள் வள்’
வாய்த்தீட்னி நீண்டும்படி இருவரும் பார்த்துக்கொண்டார்கள். அதற்குள் யாராவது விலக்கி விட வர வேண்டும்.
சொரிக்காம்பட்டி பால்ராசு கஞ்சா சரக்கு ரொம்ப நல்லாயிருக்கும். போலீஸ் அடித்த அடியில் வாயில் முன் வரிசைப்பற்கள் மேலும் கீழும் ஐந்து இருக்காது.
அந்த சொரிக்கான் பட்டியான் ஓடி வந்து “ டே ஏண்டா எனத்தானுங்களுக்குள்ள மோதிக்கிறீங்க.. ஆங்.. டே நம்ம நாலு பேருக்கு பஞ்சாயத்து வக்கணுன்டா.. நம்ம நாலு பயல அப்பணும்டா ஏலேய்… அம்ம பயலுகளுக்குள்ள மோதுனா நல்லாவாடா இருக்கு… ம்.. மாமு.. கண்ணுசாமி போய்யா.. டே பங்காளி.. தங்காத்து நீ சைக்கிள எடுத்துக்கிட்டு கெளம்புடா.. எனத்துக்குள்ள எதுக்குடா சலம்பல்..”
ரெண்டு பேரையும் ஜெயமணியும் கூட பிரிச்சி விட்டு அனுப்புகிறான்.
இதில் உள்ள நுண்ணரசியல்.
மதுரையில இவங்க ஒரே எனத்துக்குள்ள பெரிசா அடிதடி, அரிவா வெட்டுல்லாம் அபூர்வம். மத்த ஜாதிக்காரனா இருந்தா சவுண்டு விடும்போதே அவனுக்கு அடி விழுந்துடும். அரிவா வெட்டு விழும். அதுவும் கூட்டமா வந்து தான் இந்த செய்கையெல்லாம்.
ஊசிக்கு ஊசி பாயுமா?
அதனால கண்ணாமூச்சி.No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.