Share

Feb 6, 2018

சுபகுண ராஜன்


பெயரே மங்களகரமாக சுபகுண ராஜன்.
விகடன் விருது விழாவிற்கு போயிருந்த போது சுபகுணாவை பதின்மூன்று வருடங்களுக்குப் பின் சந்தித்தேன்.
நான் சென்னை வந்து ரெண்டரை வருடம் ஆகிவிட்டது. இப்போது தான் சந்திக்க வாய்த்தது.
’காட்சிப்பிழை’யில் என்னுடைய கட்டுரை முதன் முதலாக பிரசுரமான போது ராஜன்குறை கேட்டாராம் “ ராஜநாயஹத்தை எப்பிடி புடிச்சீங்க?”
சுபகுணராஜன் பதில்: ”உங்களுக்கெல்லாம் ராஜநாயஹத்தை தெரியும். எனக்கு கேபின்னு ஒரு முரடனத்தான் தெரியும்.”
என்னிடமே கேட்டிருக்கிறார் : ”உண்மைய சொல்லுங்க. கேபிய என்ன பண்ணீங்க.. கொலை பண்ணிட்டீங்களா..”


அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றவர்கள் சுபகுண ராஜனும் நானும். இன்று இலக்கிய உலகில் உள்ளவர்கள் அறியுமுன்னரே என்னை அறிந்தவர் சுபகுண ராஜன்.
அமெரிக்கன் கல்லூரியின் வாஸ்பர்ன் ஹாஸ்டலில் தங்கியிருந்தார்.
நான் டே ஸ்காலர்.

சினிமாவில் சுபகுணராஜன் அஸிஸ்டண்ட் டைரக்டராக ஜெகனாதனிடமும், நான் அஸிஸ்டண்ட் டைரக்டராக பி.ஆர் சோமுவிடமும் பணி புரிந்திருக்கிறோம். அப்போது கதீட்ரல் ரோட்டில் American college Alumni functionல்
நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டதுண்டு.

கம்ஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸ் டிபார்ட்மெண்டில் இருந்து அவருக்கு இண்டர்வியூ வந்திருந்த போது என் அப்பாவிடம் கைடன்ஸ் கேட்டு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.

கம்ஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸ் டிபார்ட்மெண்டில் இருந்து அவருக்கு இண்டர்வியூ வந்திருந்த போது என் அப்பாவிடம் கைடன்ஸ் கேட்டு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.
கஸ்டம்ஸில் என் அப்பா, என் சகோதரன் இருவருடனும் சுபகுணா பணியாற்றியிருக்கிறார்.

பாண்டிச்சேரியில் ஒரு நாடகக் கருத்தரங்கில் 1990ல் மீண்டும் சந்தித்தோம்.
முன்னாள் கல்வி அமைச்சர் பொன்முடியின் சம்பந்தி. இவருடைய மகளை அவருடைய மூத்தமகன் திருமணம் செய்திருக்கிறார்.
சுபகுணாவின் திருமதி மதுரையில் பிரபலமான டாக்டர்.
தூத்துக்குடிக்கு நான் என் ஆஃபிஸ் வேலையாக போய் இருந்த போது அங்கே கஸ்டம்ஸ் சூப்ரிண்ட் ஆக இருந்த சுபகுணா என்னை சந்திக்க ஆசைப்பட்டு தகவல் சொன்ன போது அவரை போய் பார்த்தேன். அப்போது அளவலாவிக்கொண்டிருந்த போது ஒரு ஃபோன் கால். ‘கஸ்தூரி மான்’ படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு. ஜெயமோகன் லைனில்.
என்னிடம் பேசுவது யார் என்பதை சொன்ன சுபகுணா “ ஓ.. உங்களுக்கும் ஜெயமோகனுக்கும் ஆகாதுல்ல…”
கஸ்தூரி மானில் மாட்டுக்கன்னையனாக நடித்தார்.
இலக்கிய உலகில் ‘காட்சிப்பிழை’ பத்திரிக்கையாசிரியராக, பதிப்பாளராக, எழுத்தாளராக.
 டிவி கலந்துரையாடல் நிகழ்வுகளில் கூட தென்படுகிறார்.

சில வருடங்களுக்கு முன்  ’ஆசை முகங்கள்’ என்ற தலைப்பில் அவருடைய கயல் கவின் புக்ஸ் பதிப்பாக பழைய திரை நடிகைகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். அதில் நான் எழுதிய ’விஜயகுமாரி’ பதிவை சேர்த்தார். அப்போது அவர் என்னிடம் மொபைலில் பேசிய போது சொன்னார்
 “ உங்கள கேக்காம நான் ஒரு வேலை செஞ்சிருக்கேன்..சுய நலம் தான்.என்னன்னா, உங்க விஜயகுமாரி பதிவை ஆசைமுகங்கள் நூலில் சேத்திருக்கேன்.”

மதுரையில் சுபகுண ராஜனுக்கு சாரு நிவேதிதாவுடன் ஏற்பட்ட மோதல்.
‘என்னடா Anti-culture?’
ஊட்டியில் தளையசிங்கம் கருத்தரங்கில் எனக்கு ஜெயமோகனோடு நிகழ்ந்த மோதல்.

தமிழ் இலக்கிய உலகம் என்றும் மறக்க முடியாத சர்ச்சை நிகழ்வுகள்.

ஜெயமோகனுக்கு சுபகுண ராஜன் நண்பர்.
சாரு நிவேதிதாவுக்கு ராஜநாயஹம் நண்பர்.

We are in a world made by rules created by an ‘Intelligence’ and not by ‘Chance’!

…………………………….

https://rprajanayahem.blogspot.in/2016/04/blog-post_19.html


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.