சரி என்றோ தவறு என்றோ இரண்டு விஷயம்.
Akrasia என்று
ஒரு கிரீக் கான்செப்ட். எது சரியோ அதைச்செய்யாமல் இருப்பது. தவறானது எதுவோ அதைச் செய்வது.
Akrasiaவால்
பாதிக்கப்பட்டவர்களை தூக்கத்தில் இருப்பவனோடு,குடிபோதையில் இருப்பவனோடு அரிஸ்டாட்டில் உதாரணப்படுத்துவாராம்.
கிரேக்க துன்பவியல் நாடகங்களில் கதாநாயகனுக்கு நன்மையோ,தீமையோ
தேர்ந்தெடுக்கும் உரிமையை தெய்வங்கள் கொடுத்திருக்கும்.அவன் எப்போதுமே தீமையைத்தான்
தேர்ந்தெடுப்பான்.The worse I do, the more popular I get என்று குதூகலமா?
நன்மை,தீமையென்று இல்லாமல் உணர்வுகளை அடையாளம் காண்பதில்
கூட சிக்கல். தி.ஜானகிராமன் :”நாம அனேகமா வருத்தத்தைச் சந்தோஷம்னு நெனச்சுக்கிறோம்.சந்தோஷத்தை
வருத்தம்னு நெனச்சுக்கிறோம்.”
அந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள்.சுதாகர் கதாநாயகன். தயாரிப்பாளர் ’கௌரவம்’ படத்தை எடுத்த ஹிண்டு ரங்கராஜன்.இயக்குனர் பி.ஆர்.சோமு.
ஹிண்டு ரங்கராஜன் வீட்டிலேயே முன்னறையில் ஆஃபிஸ்.
ஒரு நடிகையின் அப்பா வருகிறார். ஒரு ஃபோன் பேசவேண்டும் என்று டைரக்டரிடம் சொல்லி விட்டு டயல் செய்கிறார். “நான் ...நடிகயோட அப்பா.. என்னங்க இப்படி செய்றீங்க…போன மாதமே சம்பளம் செட்டில் பண்றேன்னு சொன்னீங்க….இப்படி இதோட நாலு தடவை சொல்லிட்டீங்க. என்னது..அடுத்த மாசமா?..No..No..No..No..I’m very badly in need of money now..This is the limit.. I’m very badly in need of money.. No..No excuses..I’m very badly in need of money…No..No.. I’m very badly in need of money…” கோபத்தோடு ஃபோனை டக்கென்று வைக்கிறார்.

டைரக்டர் “யார் கிட்ட பேசினீங்க.?”
”சலீம் கிட்ட தான்.பைலட் பிரேம்நாத் புரொட்யூசர் சலீம். ”அவர் எடுத்த இன்னொரு படம் என் மகளுக்கு payment இன்னும் கடைசி செட்யூலுக்கு செட்டில் பண்ண மாட்டேங்கிறாரு..”
டைரக்டர் பதறி ”என்னங்க அவர் கிட்டப்போய் இவ்வளவு வெரப்பா
பேசறீங்க..இது நியாயமே கிடையாது.”
“யாரா இருந்தா என்னங்க…I’m very badly in need of money.”
“சலீம் சார் கிட்டப்போய் இப்படி பேசறீங்க.” டைரக்டர் புலம்புகிறார்.
பைலட் பிரேம்நாத் புரொட்யூசர் தயாரித்து
அரைகுறையாய் நின்று போனது ஒரு படம். இப்படி அறைகுறையாய் படம் நின்று போய்விட்டால் தயாரிப்பாளரை
தரித்திரம் பீடித்து விட்டது என்று அர்த்தம்.மோகன் பாபு நடித்த படம். மோகன்பாபுவுக்கு
பிராமணர் வேடம். ஷாட்டின் போது பூணூல் மாட்டவேண்டும். கொல்ட்டி மோகன் பாபு பூணூல் வேண்டி
அசிஸ்டண்ட் டைரக்டரிடம் ”ப்பூல்..?ப்பூல்..?”என்று கூப்பாடாம்! ’ணூ’ dropped. ”தூக்கிக்காட்டனுமா?”என்று
ஒரு புரடக்ஷன் அஸிஸ்டண்ட் சொன்னானாம்.
ஆஃபிஸில் போன் பேசி விட்டு நடிகையின்
தந்தை மேலும் பல கதை பேசிவிட்டுப் போனவுடம் “பைலட் ப்ரேம்நாத்” சலீம் கிட்டப்போய் இப்படி
இந்தாளு ரஃப்பா பேசுறாரே..”ன்னு மீண்டும் டைரக்டர் புலம்ப ஆரம்பிக்கிறார்.
மறு நாள் ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் இரண்டாவது ஃப்ளோரில் ஷூட்டிங்.சுதாகருடன் நடிகை நடிக்கிற காட்சிகள்.
ஷூட்டிங் ஒரு வழியாக முடிந்து இரவு கம்பெனி கார் நடிகையை
வீட்டிற்கு அழைத்துப்போன சிறிது நேரத்தில் ஸ்டுடியோவுக்கு ஒரு போன்.
” நடிகையோட அப்பா இறந்து விட்டார்.உடனே அவர வீட்டுக்கு அனுப்புங்க.”
மறு நாள் பிணத்தை அந்த டவர் ப்ளாக்கிலிருந்து படி வழியாக
இறக்கும்போது அந்த நடிகை தன்னை தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கிற பெண்கள் சூழ அழுதவாறு
“இருங்க.. ஒரு நிமிஷம்.. என்னை விடுங்க…”
” என்னம்மா..”
” என்னை விடுங்க.. ஒரு நிமிஷம்..”
பிணத்தை இறக்கிக்கொண்டு இருப்பவர்கள் சற்றே நிற்கிறார்கள்....சூழ நிற்பவர்கள் கவனம் முழுவதும் இப்போது நடிகை மீது தான்..
“ அப்ப்பா.. போயிட்டு வர்றேன்னு ஒரு வார்த்த சொல்லிட்டுப் போங்கப்பா”
“ அப்ப்பா.. போயிட்டு வர்றேன்னு ஒரு வார்த்த சொல்லிட்டுப் போங்கப்பா”
An actress has an enormous opinion of herself !