Share

Jun 10, 2012

பட்டப் பெயர்



தமிழ் பட கதாநாயகர்கள் பலருக்கும் பல பட்டப்பெயர்கள். அதை அந்த ஹீரோக்கள் நிச்சயமாய் ரசித்திருக்கவே மாட்டார்கள். சாதாரணமாய் பாமர ஜனங்கள்,சினிமா ரசிகர்கள் அந்த நடிகர்கள் பற்றி அந்த பட்டப்பெயரால் தான் குறிப்பிடுவார்கள்.
ராசுக்குட்டி பட ஷுட்டிங் கவுண்டன் புதூர் என்ற ஊரில் நடந்த போது காலை ஏழு மணி போல ஒரு கிழவிகுடத்தில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வந்தவள் என்னிடம் சுவரில் ஒட்டியிருந்த  ஒரு சினிமா போஸ்டரைக் காட்டி “இது யாரு படம். ’பேக்கு’ படமா? டவுசர் படமா?” நான் கேள்வி புரியாமல் குழம்பிய போது என் கூட இருந்த இன்னொரு சினிமாக்காரர் சட்டென்று “டவுசர் படம்மா” என்று அந்த கிழவிக்கு பதில் சொன்னார்.

 பேக்கு = கேனம்=பாக்யராஜ்.     டவுசர் = ராமராஜன்.

’மைக்’ மோகன் பேரு சொள்ளையன். ( முகத்தில் இருக்கும் சொள்ளைகள்! )

அந்த காலத்தில் எம்ஜியாரை ‘கிழவன்’ என்றும் ’பெரிசு’ என்றும் சாதாரணமாக குறிப்பிடுவது சகஜமாயிருந்தது.(திரையுலகில் எல்லோருக்கும் எம்ஜி.ஆர் ”சின்னவர்”)

சிவாஜி பட்டப்பெயர். - தொப்பையன்!

ஜெமினியை திரையில் பார்த்த்வுடன் “ டே சாம்பாரு!” என்று தரை டிக்கெட் ரசிகர்கள் கூப்பாடு போடுவார்கள்.

 ஜெய் சங்கருக்கு ரெண்டு பட்டப்பேர்!
1.“ பொந்து கண்ணன்” 2. கரடி (உடம்பு பூரா மயிர்)

கமல் ஹாசன் - ஒம்போது.

 குமுதத்தில் பிரபலங்களின் புகைப்படங்கள் போட்டு ஒரு வரி கமெண்ட் எழுதிய போது கமல் படத்தின் கீழ் “பெயரிலுமா பெண்மை?” எழுதிய காலம் உண்டு. இப்ப்டி இழிவு படுத்திய பின்’ மன்மத லீலை’ பட விமர்சனத்தில் ரொம்ப அரை மனதுடன் “ கமல ஹாசனை ஒரு லட்சிய ஹீரோ என்று சொல்ல முடியாவிட்டாலும் சுவாரசியமான ஹீரோ என்று சொல்லத்தான் வேண்டும்” என்று குமுதம் எழுதியது.
அரசு கேள்வி பதிலில்
“ ஒரு பிரதாப் போத்தன் பத்து கமல் ஹாசனுக்கு சமம் “


 எவ்வளவோ கடுமையான ஏளனங்களை, அவமானங்களை கமல் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
 பெண்மை கலந்த நடிகர் கமல் மட்டுமா? எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன்,ஜெமினி கணேசன் கூட பெண் தன்மை கலந்தவர்கள். அழகான ஆண்களிடம எப்போதும் கொஞ்சம் பெண்மை இருக்கும்.


ரஜினி - மெண்டல்.

மதுரை ஏர்போர்ட்டில் ஒரு சோடாகடைக்காரனை பெல்டை கழட்டி அடித்தது,
சென்னையில்“மூக்குத்தி” என்ற பத்திரிக்கை நிருபர் ஜெயமணி மேல் காரை ஏற்ற முயற்சித்தது, “புவனா ஒரு கேள்விக்குறி” படத்தில் அசிஸ்டண்ட் டைரக்டர் வெள்ளை முடி லோக நாதனுடன் கைகலப்பு ,’’ நினைத்தாலே இனிக்கும்’’ பட டப்பிங்குக்கு அந்த பட அசிஸ்டண்ட்டைரக்டர் கண்மணி சுப்பு( கண்ண தாசன் மகன்)போய்  கூப்பிட்டும் வராமல்கே. பாலச்சந்தர் போட்டோவை உடைத்தது, பாலச்சந்தர் நொந்து போய் அப்போது சொன்னது- ‘ரஜினிகாந்தை அறிமுகம் செய்தது நான் செய்த மிகப் பெரிய தவறு”
ஜர்தா பீடா, குடி,கூத்து - பெரிய trouble maker ரஜினி” - அவ்வளவு தான்! ரஜினி பீல்ட் அவுட்!  ரஜினி சேப்டர் க்ளோஸ்!
ஊர் வாயில் விழுந்த பின் ரஜினி சினிமாவில் உச்சத்தை அடைந்தது உலக அதிசயம்!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,




5 comments:

  1. Rajinikanth usually says that KB is his Guru and like a Father. But the truth says different stories.

    ReplyDelete
  2. கமலிடத்தில் பெண்மை ஒளிந்திருப்பதாகவே எனக்கு படுகிறது. அதை மறைக்கவே வலுக்கட்டாயமாக காதல் மன்னன், முத்த சீன்கள், எல்லா படத்திலும் தொடை,ஜட்டி தெரியும்படி செய்யும் பழக்கம், நடிகைகளுடன் வதந்தி எல்லாமே..

    Raj

    ReplyDelete
  3. சூப்பர் தகவல் சார், இதை படித்த பின் ரஜினியா இப்படி செய்தது என்று ஆச்சர்ய பட வைக்கிறது. இது ரஜினியின் இன்னொரு முகம் , யாரும் அறியாத முகம்.

    ReplyDelete
  4. //இது ரஜினியின் இன்னொரு முகம் , யாரும் அறியாத முகம்.//

    உங்களுக்குத் தெரியாத முகம்?

    ReplyDelete
  5. சிவாஜிக்கு “பஜார் மாடு” -ன்னு பட்டபெயர் உண்டு என்று என் தந்தை சொல்ல கேள்வி.


    அந்தக் காலத்தில் ”குடி”கையர் திலகம் பற்றி ஒரு பதிவும் இல்லையா ???

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.