Share

Jun 1, 2012

டணால் K.A.தங்கவேலுடணால் K.A.தங்கவேலு தமிழ் திரையுலகம் கண்ட விசேஷமான காமெடியன்.
1950களில் சரியான மார்க்கெட்டில் சந்திரபாபுவுடன்இருந்த காலம் துவங்கி,பின்னால் நாகேஷ் காலம்,சோ,பின் தேங்காய் சீனிவாசன்,சுருளி ராஜன் காலஙகளையும் தாண்டி கொஞ்சமும் சலிப்பு ஏற்படுத்தாத, பொறி சற்றும் குறையாத நடிப்பு.

கல்யாண பரிசு பைரவன் மட்டுமல்ல.அறிவாளி முத்துலட்சுட்மியுடன் பூரி சுடற காமெடி,தெய்வபிறவி “ அடியெ, நீ என்ன் சோப்பு போட்டாலும் வெள்ளையாக மாட்ட”
 “பார்த்தியா, இதெல்லாம் எடுத்தா அதெல்லாம் வரும்னு சொன்னனேக்
கேட்டியா”

வீரக்கனல் படத்தில் “ தப்பித்தவறி அடி ஒங்க மேல பட்டுறுச்சின்னு வச்சிக்க்க்கிங்ங்ங்ங்...க..” என்று கேட்கும்  தங்கவேலு

“தங்கவேலு சுவாமியாக வந்ததும் நாங்களே! வேலுத்தங்கமாக வந்ததும் நாங்களே! காதலர்ர்ர்ரா...க வந்த்தும் நாங்களே!” அடுத்தவீட்டுப்பெண்!

மிஸ்ஸியம்மா வில் பாட்டு கற்றுக் கொள்ளும் தங்கவேலு.அப்போது ஜெமினி அந்த அறைக்குள் வந்தவுடன் வெட்கப்பட்டு தவிக்கிற காட்சி!

’திருடாதே’ படத்தில் “ பிசாசு ஏன் புரோட்டா கடைக்கு வருது? ஒரு வேளை குஞ்சு பொரிச்சிரிக்குமோ?’’

’நம் நாடு’ படத்தில் “ ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்” “கொல பண்ணது கூட லேட்டுங்க. நான் அமுக்குனதுல தான் செத்தான்!’’

சந்தானம் தனக்கு பிடித்த காமெடியன்களாக தங்கவேலு வையும் கவுண்டமணியையும் அடிக்கடி குறிப்பிடுவது சந்தோசம். இந்த இருவரும் நகைச்சுவையில் மிகவும் மாறுபட்ட சிகர சாதனையாளர்கள்.
கவுண்டமணி ”மேட்டுக்குடி” படத்தில் ஜெமினி கணேசனை “டேய்” என்பதற்கும் கல்யாண பரிசில் தங்கவேலு ஜெமினியை “டேய்” என்றதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
சந்தானம் தன் நடிப்புக்கு கவுண்டமணியை பின்பற்றுவது தெரிகிறது.
தங்கவேலு எந்த படத்திலும் கல்யாண பொண்ணு மாப்பிள்ளையைப் பார்த்து “இவ என்ன யாரோடயாவது ஓடிப் போயிட்டாளா? இல்ல இவன் தான் செத்துப் போயிட்டானா?” என்று கேட்கவே மாட்டார். தொந்தரவான வில்லனைக் கூட “அட நீ நல்லாருக்க” என்பார்.

“பணம்”(1952) படத்தில் வயதானவராக நடித்த பின் தான் தங்கவேலு பிசியான நடிகரானார். அதே வருடம் தான் சிவாஜிக்கு  ’பராசக்தி’. சிவாஜி ‘பணம்’ படத்திலும் நடித்திருந்தார்.இரண்டாவது படம்!

‘பணம்’ படத்தில் நடித்ததற்காக தயாரிப்பாளர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அந்தகாலத்தில்தங்கவேலுவுக்கு ஒரு 5000 ரூபாய் கொடுத்தாராம். இவரும் அந்த பணத்தை வீட்டுக்கு கொண்டு போய் காட்ட, இவருடைய பெரியப்பா “ அடப் பாவி . அன்னமிட்ட வீட்டுல கன்னமிடலாமாடா? கலைவாணர் கிட்ட திருடுனா நீ விளங்கவே மாட்ட”ன்னு அடிச்சி இழுத்துக்கொண்டு என்.எஸ்.கே விடம் அழைத்துக்கொண்டு போனார். என்.எஸ்.கே “ அந்த பணம் தங்கவேலுவுக்கு நான் கொடுத்த சம்பளம்” என்று சொன்ன போது தான் சமாதானம் ஆனாராம்.

எம்.ஜி.ஆர் அறிமுகமான சதி லீலாவதி(1936)யில் தங்கவேலுவுக்கு ஒரு சின்ன ரோல். அதே படத்தில் என்.எஸ்.கே, டி.எஸ் பாலய்யா முதலியோரும் நடித்தார்கள். ”இன்னைக்கு ஒன்னை shoot பண்ணப் போறோம்”னு இயக்குனர் தங்கவேலுவிடம் சொன்னதும் இவர் பதறிப் பயந்து என்.எஸ்.கே விடம் போய் “அண்ணே, என்னை சுடப் போறாங்களா?” என்று அழுதாராம்.
 என்.எஸ்.கே விளக்கம் சொன்னாராம்.
 “ பைத்தியக்காரா! ஒன்னை படம் பிடிக்கப் போறாங்கடா!”


தங்கவேலுவுக்கு பின்னனி பாடல்கள் பலவற்றை பாடியவர் எஸ்.சி.கிருஷ்ணன்.
“கண்ணே நல் வாக்கு நீ கூறடி, நான் நாலு நாளில் திரும்பிடுவேன்.
என் செல்வக்களஞ்சியமே! என் சின்னக்கண்ணு மோகனமே!”சீர்காழி சில பாடல்கள்

பிரபலமான ரம்பையின் காதல்(1956) பாடல்!
“சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே” சுடுகாட்டில்... 

பி.பிஸ்ரீனிவாஸ் பாடிய  அடுத்த வீட்டுப்பெண் பாடல்கள்.

”கண்ணாலே பேசி பேசி கொல்லாதே!”

“ மாலையில் மலர்ச்சோலையில்”

4 comments:

 1. nallathoru thagaval. mikka nandri.

  ReplyDelete
 2. சக்ரவர்த்தி திருமகள் படத்தில் "அத்தானும் நான் தானே..." எனக்கு மிகவும் பாடல். ரம்பையின் காதல் படத்தில் வரும் இரு நல்ல பாடல்களை தரவேற்றியுள்ளேன். அவற்றிக்கான லிங்க்.
  …http://kuttipisasu.blogspot.de/2010/02/blog-post_28.html

  ReplyDelete
 3. ஆஹா!குட்டிப்பிசாசு!
  ”அத்தானும் நான் தானே” பாடல்,ரம்பையின் காதல் பாடல்கள்!
  இங்கே மற்ற பதிவுகளில்
  உங்கள் கமெண்ட்களும் சூப்பர்!

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.