Share

Jun 17, 2012

அரியது

கொக்கு குஞ்சை கண்டாருமில்ல
வாகை மரத்துப் பிஞ்சை பார்த்தாருமில்ல
குறவன் சுடுகாடு கண்டாருமில்ல


கொக்கு பார்த்திருக்கிறோம். ஆனால் யாராவது கொக்கு குஞ்சை பார்க்க முடியுமா? எப்படி எங்கே அவ்வளவு ரகசியமாக பேணி வளர்க்கிறது?

வாகை மரத்தில் காய் இருக்கும்.பிஞ்சை பார்க்கவே முடியாது.

வாகை மரம் பற்றி ஒரு நம்பிக்கை உண்டு. ’வாழுற வீட்டுக்கு வாகை மரம் சக்களத்தி’. வீட்டு காம்பவுண்ட், அல்லது வீட்டு முன் வாகை மரம் இருக்கக்கூடாது. வாகை மரத்தால் செய்யப்பட்ட கட்டில், மேஜை,நாற்காலி,ஸ்டூல்,பெஞ்ச் எதுவும் ஒரு குடும்பம் உள்ள வீட்டிற்குள் இருக்கவே கூடாதாம்.


அத்தி பூத்தாற் போல - அடிக்கடி இந்த வார்த்தை பலராலும்  சொல்லப்படும் cliche.
அத்தி பூத்தவுடன் உடனே,உடனே பிஞ்சாகி பின் காயாகிவிடு்மாம்.
 
இந்தக்காலத்தில் இப்படி இருக்க முடியாது.ஆனால் அந்தக் காலத்தில் நரிக்குறவர் இறந்து யாரும் பார்த்ததே கிடையாது. குறவனகுறத்திக்கு சாவு கிடையாது என நம்பியவர் பலர்.
குறவர்கள் ஊர் ஊராகப் போய் கூடாரம் அமைத்து தங்குவார்கள். குறவர் கூட்டத்தில் யாராவது இறந்து விட்டால் அவர்கள் அழ மாட்டார்கள். சிரமப்பட்டு அழுகையை கட்டுப் படுத்திக்கொள்வார்கள்.ஊராருக்கு தெரிந்து விடக்கூடாதே!எடுத்ததெற்கெல்லாம் ஒப்பாரி வைக்கும் தன்மை கொண்டவர்கள் குடும்ப சாவின்போது அழுகையை அடக்கிக்கொள்வார்கள் என்பது irony!கூடாரத்திற்கடியில் குழி தோண்டுவார்கள். பிணத்தை ரகசியமாக புதைப்பார்கள்.கூடாரத்தைப் பிரித்து காலி செய்து விட்டு வேறு ஊருக்கு சென்று விடுவார்கள்.
..................
எல்லோரும் யோனித்துவாரத்தின் வழி தான் பிறந்தாக வேண்டும். ஆனால் இந்திரன் மட்டும் யோனியிலிருந்து பிறக்க மறுத்து விட்டானாம்.அது அசிங்கமான வழியென்று சொன்னான். அரிதாக அவன் தன் தாயின் பக்கவாட்டிலிருந்து,விலாவிலிருந்து சமாளித்துப் பிறந்து விட்டானாம்.
இதை ராபர்ட்டோ கலாஸ்ஸோ வின் நாவலில் (காலச்சுவடுமொழி பெயர்ப்பு வெளியீடு)படித்தேன்.

 ஒபாமாவுக்கு ஹில்லாரி க்ளிண்டன் போல நிக்சனுக்கு ஹென்றி கிஸ்ஸிஞ்சர்.வயிற்று வலின்னு லீவு போட்டுவிட்டு அமெரிக்கபாணியில் ரகசியமாக சீனாவுக்கு official visit செய்தவர் ! ‘கிஸ்ஸிஞ்சருக்கு நிஜமாக வயிற்றுவலி வந்தால் அடுத்த தடவை என்ன நடந்திருக்கும்’ என்று ஆர்ட் புச்வால்ட் எழுதிய நகைச்சுவைக் கட்டுரை படித்துப் பார்த்தால் சிரித்து வயிறு புண்ணாகி விடும்! 

கிஸ்ஸிஞ்சர் சொன்னது: Power is the ultimate aphrodisiac.
அரிதான பிறவி என்றால் அது தேவ விரதன்  எனப்பட்ட பீஷ்மர் தான்,அதிகாரம், பெண்கள் இவற்றை ஒதுக்கி்ய புராண நாயகன்.

.....

குதிரைக் கொம்பு, புலிப்பால்,கருவாட்டு ரத்தம், கருங்கல் வேர், கொசுமுட்டை இவையெல்லாம் கிடைக்குமா?
புரோக்கர்கள் என்று ஒரு கூட்டம் இருக்கிறது. இவற்றில் எது கேட்டாலும் கிடைக்கும் என்று தான் சொல்வார்கள்.

புரோக்கர் பாணி :’ புலிப்பால் வேண்டுமா? நோ ப்ராப்ளம். இங்கே பக்கத்தில் சத்தியமங்கலம் காட்டுக்குள் போன வாரம் ஒரு புலி குட்டி போட்டிருக்கு. எங்க தெருவிலே வீரமான ஒரு கோனார் இருக்கார். அவரை  கார்லே கூட்டிட்டுப் போய் அந்த புலியோட பாலை கறந்து கொண்டு வந்து நான் தர்றேன். ரெண்டு நாள் பொறுத்துக்குங்க.’

2 comments:

 1. Welcome back !! or rather I am coming back after a long time to check on you and surprised to see new posts. :)

  ReplyDelete
 2. RPR Sir

  (In response to your tweet) I thought it was a thanks to the VeSa pages (http://goo.gl/cpXPq & http://goo.gl/F5n93) I had linked (Thought of your related post) Anyway thank you sir.

  Regards
  Venkatramanan

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.