Share

May 21, 2012

Virginia Woolf

  
Virginia Woolf- arguably the major lyrical novelist in the English Language.

வெர்ஜினியா வூல்ப்  1925 ல் எழுதிய நாவல்
Mrs Dalloway.
1999ல் புலிட்சர் விருது வாங்கிய நாவல்  The Hours.
மைக்கல் கன்னிங்காம் எழுதிய நாவல் The Hours.
இந்தTheHours நாவல் 'மிசஸ் டாலோவே'நாவல்
எப்படி மூன்று வெவ்வேறு தலைமுறை பெண்களை
பாதிக்கிறது என்பதை  மையப்படுத்தி எழுதப்பட்டது, வெர்ஜினியா வூல்ப் அந்த மூன்று பெண்களில் ஒருவர் .
1997 ல் Mrs Dalloway திரைப்படமாக வானசா ரெட்க்ரேவ் முக்கிய பாத்திரத்தில்
நடித்து வெளிவந்தது.
வானசா ரெட்க்ரேவ் எப்போதுமே வித்தியாசமான ரோல் செய்வதில் ஆர்வமுள்ளவர்.
 Django பிராங்கோ நீரோவின் மனைவி. இவர் நடித்த 
Blow up(1966)பார்த்தவர்கள் மறக்கவே முடியாது.
2002 ல்  TheHoursதிரைப்படமாக ஆனபோது
மூன்று பெண்களில் ஒருவராக
 மெரில்  ஸ்ட்ரீப் நடித்தார்.  வெர்ஜினியா வூல்ப் கதாபாத்திரத்தில் நிகோல் கிட்மன் நடித்திருந்தார்.
இன்னொரு படம் பற்றி குறிப்பிட வேண்டும் .
1966 ல் ரிச்சர்ட் பர்டன் -எலிசபெத் டைலர் இணைந்து நடித்த  Who is afraid of Virginia Woolf?
இந்த படத்தில் இந்த பெண் எழுத்தாளர் பெயர் தலைப்பில்
இடம் பெற்றிருந்தது. ஆனால் கதைக்கும் வெர்ஜினியா வூல்ப்க்கும் தொடர்பு கிடையாது.இந்த படத்தில்
ரிச்சர்ட் பர்டனுடைய ஒரு டயலாக் பிரபலம்  “Good,Better,Best,Bested”
....
கன்னத்தில் கைவைத்துக்கொண்டு இருக்கும் வெர்ஜினியா வூல்ப் புகைப்படம் அவள் சோகத்தை சொல்லும். அவளுடைய  ஆங்கில அம்மா இந்தியாவில் பிறந்தவள்.

அம்மாவுக்கு முதல்  கணவன் மூலம் பிறந்த மகன்
half sister வெர்ஜினியாவிடம் செக்ஸ் விளையாட்டு நடத்தியவன்.

Between the Acts
என்ற கடைசி நாவலை எழுதிவிட்டு
தன்னுடைய ஓவர்கோட்டை எடுத்து அணிந்து கொண்டு
அதன் பாக்கெட்களில் நிறையகற்களை நிரப்பிக்கொண்டு
வீட்டுப்பக்கத்தில் உள்ள நதியில் இறங்கி மூழ்கி
தற்கொலை செய்துகொண்டு
இறந்துபோனவள் வெர்ஜினியா வூல்ப் .
  














 


May 17, 2012

ரங்காராவின் குணச்சித்திரம்

நானும் ஒரு பெண்(1963) படப் பிடிப்பின் க்ளைமாக்ஸ் ஷூட்டிங்குக்கு எம்.ஆர் .ராதா சரியான நேரத்தில் வந்து காத்திருந்து பொறுமை இழக்கின்ற நிலை. ரங்காராவ் ரொம்ப தாமதமாக உள்ளே நுழையும்போது ராதா அவர் பாணியிலேயே ரங்காராவ் காதில் விழும்படியே
கமென்ட் அடித்திருக்கிறார்  
" கெட்டவனா நடிக்கிறவன் ஒழுங்கா கரெக்டா நடந்துக்கிறான். நல்லவனா நடிக்கிறவன பாரு . ஒரு ஒழுங்கு இல்ல.படாத பாடு படுத்துறான்."  ரங்கா ராவ் ரொம்ப  மனம் புண்பட்டு இயக்குனரிடம்
''இன்றைக்கு  விடிய விடிய எவ்வளவு நேரம் ஆனாலும் சரி. ஷூட்டிங் வைத்து க்ளைமாக்ஸ் காட்சியை முடித்துக்கொள்ளுங்கள் .எனக்கு உடம்பு சரியில்லை.ஆனால்   அது பற்றி கவலையில்லை." என்று ரோசத்தோடு சொல்லி அதன் படியே நடித்துக்கொடுத்தாராம்.
நானும் ஒரு பெண்ணில் மரணப் படுக்கையில் இருக்கும் ரங்காராவை " அத்தான்... ஒரே ஒரு கையெழுத்து போடு அத்தான்...." 
- ராதா படாத பாடு படுத்துவார்.
..............  

பக்த பிரகலாதா (1967) படத்தில்  ரண்யகசிபு வாக ரங்கா ராவ் நடித்தார். ஷூட்டிங்குக்கு ரங்காராவ் சரியாக
ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் ஏ .வி.மெய்யப்ப செட்டியார் காதுக்கு தகவல் போனது.
'முழுக்க ஷூட்டிங்கில் நடிக்க  மறுக்கிறார். ஒரு நாளில் மூன்று நான்கு மணி நேரம் ஆகிவிட்டால்
கிளம்பி விடுகிறார்.'
செட்டியார் கோபமாகி விட்டார்."நான் இன்று செட்டுக்கு வருகிறேன்.ரங்காராவை பார்த்துக் கொள்கிறேன்"
ஷூட்டிங் ஆரம்பித்து சிலமணி நேரத்தில் செட்டியார் ஆஜர். ரங்கா ராவுக்கு சூட்சுமம் புரிந்து விட்டது. கம்ப்ளைன்ட் ஆகியிருக்கிறது. ஷாட் ப்ரேக்கில்  அவரே செட்டியாரிடம் வந்து அவர் அணிந்திருந்த கவச ஆபரணங்களைஎல்லாம் கழற்றி விட்டு சொன்னார் " மிஸ்டர்  செட்டியார்! இந்த நகைகளை பிடியுங்கள் "
செட்டியார் கையில் வாங்கியிருக்கிறார் . சரியான கனம் ! "இவ்வளவு கனமான நகைகளைப் போட்டுக்கொண்டு புராண வசனமும் பேசி எவ்வளவு நேரம் நான் உழைக்க  முடியும் சொல்லுங்கள்.நான் வீட்டுக்குப் போனபின்னும்
இந்த பாரம் சுமந்த வேதனை என்னை விட்டு நீங்காது " 
செட்டியார் கோபம் பறந்து விட்டது. பரிவுடன் சொன்னாராம்  "நீங்கள் செய்தது சரிதான் "
.......

சந்திர பாபு செட்டில் இருந்தால் எப்போதும் ரெங்காராவிடம் அத்து மீறி விளையாடுவாராம்.
இவரால் தாங்கமுடியாத அளவுக்கு கலாய்ப்பார்.சகிக்க முடியாத அளவுக்கு பாபுவின்  நடவடிக்கை  இருக்கும் போது ரங்காராவ் ரொம்பவே
மூட் அவுட் ஆகிவிடுவாராம். 

May 14, 2012

சாந்தகுமாரி

சாந்தகுமாரி  - பழைய பட ரசிகர்கள் இவரை இப்போது கூட
 நினைவில்  வைத்திருக்க முடியும். ஏனென்றால் அந்தக் காலத்தில்
மிகப் பிரபலமான
இரண்டு படங்களைப் பார்க்காத தமிழர்கள் இருக்கவே முடியாது.
1. சிவந்தமண்(1969 ) 2.வசந்தமாளிகை (1972 )
இந்த இரண்டுப் படங்களிலும் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்தவர் !
சிவந்த மண்ணில் " பாரத் " என்றும் வசந்த மாளிகையில் "ஆனந்த் " என்றும்  கதை  நாயகனை அடிக்கடி   அழைக்கின்ற இவர் குரல் இப்போதும் கூட  காதில் ஒலிக்கும்!

  நெஞ்சில் ஓர் ஆலயம் - கல்யாண்குமாரின் அம்மா.

இவரை ஒரு துணை நடிகை என்று தான்
பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் இவர்
 ஒரு சிறந்த வயலின் கலைஞர்.
 1930களின் துவக்கத்தில் 
D.K.பட்டம்மாள் கர்நாடக சங்கீத கச்சேரிகளில்
இவர் தான்
வயலின் பக்க வாத்தியம் வாசிப்பவராக இருந்திருக்கிறார்.
பட்டம்மாளின் வகுப்புத்தோழி.கர்நாடக சங்கீதத்தில் முதல் வகுப்பில் அப்போது தேறியவர் சாந்தகுமாரி. 
1935 ல்  விதி வசத்தால் நடிகை ஆகியிருக்கிறார். அப்போதே 'சாரங்கதரா '(1935 ) படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
அதே வருடம் மாயாபஜார் என்ற படத்தில் நடித்துள்ளார்.
1936ல் இவர் நடித்து வெளி வந்த' தர்ம பத்தினி' படம் அக்கினேனி நாகேஸ்வர ராவ் ( தேவ தாஸ் ) குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன படமாம்!
 டைரக்டர்  பி,புல்லையா வை காதலித்து
திருமணம் செய்து கொண்டார்.
ஒரு கர்நாடக  சங்கீத வாத்திய  கலைஞர் சினிமாவில் கதாநாயகியாக மாறி
ஒரு பிரபல டைரக்டருக்கு மனைவியாகி 
அதன் பின்
ஒரு மிக சாதாரண
துணை நடிகை!  

வெள்ளாள சுப்பம்மா என்ற இயற் பெயர் கொண்ட
சாந்தகுமாரி மிகச் சிறந்த நடிகரான
எஸ்.வி.ரங்காராவின் உறவினர்.

May 12, 2012

Proud people breed sad sorrows


காஸ் டிமாண்டு,கரண்டு பிரச்னைன்னு பல பல 
சிக்கலில் 
விலைவாசி கவலையில் நொம்பலப் பட்டு குத்துயிரும்
கொல உயிருமா தவிச்சிக்கிட்டு இருக்கும்போது,
 டிவியை போட்டா  
சிவாஜி கணேசன் பெத்த மகன் பிரபு 
 கொப்பளிக்கும் உணர்ச்சியைக் கொட்டி " என் தங்கம்!என் உரிமை!புரட்சி!போராட்டம்!கல்யாண் ஜுவல்லர்ஸ்!"ன்னு தாலிய அறுக்கிறான்..



கார்ட்டூன் பிரச்சையை
கண்டுக்காம இருந்தாலும்
முடியல சாமி..

மம்தா பானர்ஜி இன்னிக்கு கூட  கூந்தல விரிச்சிப் போட்டு,சிலம்பை தூக்கிப் போட்டு  உடைச்சி,
ஒத்த முலையை பிச்சி வீசி "புரபசர் அம்பிகேஷ் மகாபத்ரா ஈமெயிலில் சர்குலேட் செய்த கார்ட்டூன்  எனக்கு விடப்பட்ட ஒரு கொலை மிரட்டல்"ன்னு ஒப்பாரி வைக்குது. The  graphic  used the word “Vanish” which implied “Murder”.







சம கால கார்ட்டூன் படுத்துற பாடு இப்படின்னா அறுபது வருசத்துக்கு முன்னால வெளி வந்த
நேரு-அம்பேத்கர் கார்ட்டூன் பாராளுமன்றத்தையே
ஸ்தம்பிக்க வைக்குது.
“Not only is the Parliament,but the whole country is unhappy.”ன்னு காட்டுக் கூப்பாடு.Proud people breed sad sorrows not only for themselves!



1949ல் சங்கர் பிள்ளை வரைந்த கார்ட்டூன் பள்ளிக்கூட பாடப் புத்தகத்தில் இடம் பெற்றதன் 
காரணமாக
இரண்டு கல்வித்துறை நிபுணர்கள்
NCERTயின் ஆலோசகர்கள் பதவியிலிருந்து 2012ல் ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது.
அந்த இருவரில் ஒருவருடைய அலுவலகம்
புனேயில் அடித்து நொறுக்கப் பட்டுவிட்டது.



We all have an aweful time to be alive.






































 


May 8, 2012

ஈ.வி.கே.சம்பத்

What it might have been?   என்.சி.வசந்த கோகிலம் நல்ல இளமையில் 
இறந்து போகாமல் இருந்திருந்தால் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அந்தஸ்து என்ன?
 அண்ணாத்துரையை  விட்டு ஈ.வி.கே.சம்பத் 
பிரியாமல் இருந்திருந்தால் மு.கருணாநிதியின்  அரசியல் வாழ்வு எப்படியிருந்திருக்கும்?அண்ணா மறைந்த போது சம்பத் தானே  தமிழக முதலமைச்சர் ஆக வந்திருப்பார்.அங்கனமாயின்  எம்ஜியாரின் சரித்திரம் 
எப்படி மாறிப்போயிருக்கும்?!
 சொல்லப்போனால் சம்பத்அல்லவா
அண்ணாத்துரையை விட மிகச்சிறந்த பேச்சாளர் !

"பறக்கின்ற வவ்வால்களே
பறந்து போங்கள்.
நீங்கள் பறந்து போவதற்கு முன்னாலே  என்னுடைய பணிவான விண்ணப்பம். துருப் பிடித்த உங்கள் மூளைக்கு இரண்டு சொட்டு
எண்ணெய் விட்டுப் பாருங்கள்."

 1957ல் காஞ்சியில் அண்ணாத்துரையும்
 குளித்தலையில் கருணாநிதியும் வெற்றி 
பெற்ற போது சம்பத் நாமக்கல் நாடாளுமன்றத்தில்
பெருவாரியான வாக்குகள் பெற்று  மிகப் பெரிய  வெற்றி பெற்றார், ஒரு அதிசயம்.
நாமக்கல் நாடாளுமன்றத்திற்குள் உட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக   தோற்றுப் போனது .ஆனால் சம்பத்
 பாராளுமன்றம் சென்றார் !

சொல்லின் செல்வர் சம்பத்!
"அவர் பொய் சொன்னார் என்று சொல்ல மாட்டேன்.
உண்மைக்கு புறம்பாக பேசியிருக்கிறார் !"

தன்னைப் பேசவிடாமல் அநாகரீகமாக கூச்சலிட்ட மாணவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னார்
 "காட்டுமிராண்டித்தனத்தின் மிச்ச சொச்சங்கள் !"

கண்ணதாசன் சொல்வார் 
"ஜவகர்லால் நேருவின் சிரிப்புக்குப் பின் நான் கண்ட
அழகான சிரிப்பு  என் தலைவன் சம்பத் சிரிப்பு தான். "

"யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியலே.இங்கே அண்டங்காக்கைக்கும்  குயில்களுக்கும் பேதம் புரியலே " சம்பத்தை மனதில் வைத்து எழுதிய சினிமாப் பாடல்.

சிவாஜி கணேசன் " சந்திரமோகன் " நாடகத்தில்  சிவாஜியாக நடிக்கும் முன்
வீர சிவாஜியாக சம்பத் தான் நடித்துக் கொண்டிருந்தார்!

பின்னாளில் "அண்ணன் காட்டிய வழி யம்மா " பாடலில்   சிவாஜி, சம்பத் போலவே உடை உடுத்தி சால்வை போர்த்தி  நடித்திருப்பார் !

1951 ல்  திமுக முதல் மாநில மாநாட்டின் நான்காவது நாள் அண்ணாத்துரை பேசுகிற வேளையில் ஸ்டன்ட் நடிகர்கள் புடை சூழ
எம்ஜியார் திட்டமிட்டு மேடையேறி கூட்டத்தில்
நடிகரை கண்ட பரவசத்தில் அமளி துமளி  ஏற்பட்டு  அப்போதே திமுக தலைவர் அலட்சியப் படுத்தப் பட்ட போது சம்பத் தான்
எம்ஜியாரின்
பகட்டு அரசியல் பாணிக்கு எதிராக அண்ணாத்துரையை
உடனேயே எச்சரித்துள்ளார்!

சம்பத்தை மீறிய,நெடுஞ்செழியனை தாண்டிய  கருணாநிதியின் வளர்ச்சி பற்றி.... கருணாநிதியின் வார்த்தைகளில் "குளவிக்கூட்டின்
புழுப் போல கொட்டப்பட்டு
கொட்டப்பட்டுத்தயாரிக்கப்பட்டவன் நான்!"

அண்ணாத்துரையின் கணிப்பு "வெட்டி வா என்றால்
கட்டி வரும் தம்பி கருணாநிதி! "

இன்னொன்று சொல்வார்கள்
" அண்ணாவின் கை போகுமிடமெல்லாம்
கருணாநிதியின் கண் போகும் !"

  1972ல்  அண்ணாத்துரை உயிரோடு இருந்திருந்தாலும் எம்ஜியார் கணக்கு கேட்டு  வெளியேறி "உண்மை திமுக" என்ற பெயரில் ஒரு கட்சி ஆரம்பித்து
சக்கை போடு போட்டிருப்பார் என்பது சர்வ நிச்சயம். 

May 6, 2012

Sidesplitter

1993 ல் வந்த ஹாலிவுட் படம் Mad Dog and Glory . ராபர்ட் டி நீரோ நடித்த படம். அதில் பில் மர்ரே பிரமாதமாக நடித்திருப்பார்.
சொல்கிற விஷயத்தை புரிந்துகொள்ளாமல்
பதில் தரும்போது அது ஜோக் ஆகிவிடும். ஒருவன் உதவாக்கரைப் பொண்டாட்டியிடம் சலித்துப் போய் கேட்கிறான்.பில் மர்ரே  அதை நடித்துக்காட்டுவார். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி நிலை.
சரியாக சமையல்  செய்யக் கூட  தெரியாத மனைவி.  
I asked my wife ‘Hay! Did you ever hear of cooking and fucking’
She says’ two cities in China?’ 
Beijing மாதிரி Cooking , Fucking கூட  சீனாவின் இரண்டு நகரங்களா?
    ஒருவன் சொல்கிற விஷயத்தை வைத்து அவன் சொல்லாத விஷயத்தையும் தெளிவாக  புரிந்து கொள்ளுவது இன்னொரு வகை.
'காதலா  காதலா படத்தில் 
கமல் : நான் திருட மாட்டேன், சூதாட மாட்டேன்,
பிச்சைஎடுக்க மாட்டேன்.
டெல்லி கணேஷ் :  மொத்தத்தில  சம்பாதிக்க மாட்டேங்கிறே !

May 3, 2012

லெனின் கருப்பன் காலிலும் விழுந்த நரேந்திர மோடி

No man is a hero to his valet! லெனின் கருப்பன்  நக்கீரன்  இதழுக்கு அளித்த பல பல   பேட்டிகளில் சொன்ன  எவ்வளவோ விஷயங்களில்
நான் ரொம்ப ரசித்த விஷயம் :
" நித்யானந்தாவால்   ரொம்பவே ஈர்க்கப் பட்டதால்
 பிசினசை ஓரங்கட்டி வைத்து விட்டு , சொந்த காருடன் நித்யானந்தர் ஆசிரமத்திற்குப் போய்
சேர்ந்தேன்.அவருடைய முக்கிய சீடராக ஆகினேன்.
சொன்னால் நம்ப மாட்டீங்க.குஜராத் முதல்வர்   நரேந்திர மோடி ஒரு முறை ஆசிரமத்திற்கு வந்தப்ப , நித்யானந்தர் காலில் விழுந்ததோடு என் காலிலும்
 விழுந்தார்."
நக்கீரன்  2010 மார்ச்  10  - 13.

.....

நித்யானந்தாவும் மதுரை ஆதீனமும் பின்னிப் படர்ந்துட்டாங்கே . இடுப்புக்கு கீழே இருபத்தெட்டு சுத்து ! இனிமே நித்யானந்தா தும்பிக்கையை  தரையில ஊனி நாலு
காலையும் மேலே தூக்கி சங்கு சக்கரமா  சுத்தினா , மதுரைஆதீனம் அருணகிரி மரத்திலே  வாலை தொங்கப்போட்டு ஊஞ்சல்  ஆடுவான் !  

May 1, 2012

கேளிக்கை



கோவிலுக்குப் போவது, தெய்வ நம்பிக்கை,இவையொட்டிய நெறிமுறைகள்,மத நூல்களை வாசிப்பது எல்லாமே அப்பட்டமாக கேளிக்கை சம்பந்தப் பட்டது தான்.
Entertainment ! - ஜே .கிருஷ்ணமூர்த்தி.

எந்த ஒரு நம்பிக்கையும் கடும் விஷம் - ஓஷோ.
எல்லாம் தெரிந்த விஷயம் தான். ஆனால் பிக்னிக் போவது எவ்வளவு சந்தோசமான விஷயம். அதிலும் பழங்கால, பாரம்பரியமான கோவில்களில் நுழையும்போது ஏற்படும் பரவசம் எனக்கு சொல்லி முடியாது.

தன்னை மிகவும் வாட்டிய 'கடவுள் உண்டா இல்லையா'
 கேள்வியை முன்  வைத்து  தாஸ்தாவ்ஸ்கி ‘Idiot’என்ற ஒரு நாவலே எழுதும்படியானது.

திருப்புல்லாணி  ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் இருந்த போது ஏற்பட்ட  சாந்தம்.
ராமாவதாரத்திற்கு விதை இந்த கோவில். தசரதன் பிள்ளை வரம் கேட்டு இந்த ஆதிகேசவப் பெருமாள் கோவிலில்   வேண்டியதன்  பலனாகத்தான் ராமாவதாரம்! ஐதீகம்!
ராமேஸ்வரம்- ராமர்  பிரம்மஹத்தி தோஷ நிவர்த்திக்காக ஈஸ்வரனை வழிபட்ட ஸ்தலம். சீதை விளையாட்டாக மணலில் பிடித்து உருவாக்கிய லிங்கத்தை வழிபட்ட  ஸ்ரீராமன் ! Playfulness is heaven!


அதிகாலையில் கடலில் நீராடி பின் இருபத்திரண்டு தீர்த்தங்களிலும் குளித்த போது இவ்வுலக நெருக்கடிகளிலிருந்து தப்பிக்கிற ஆசுவாசம் ஏற்படவே செய்தது. எந்த திட்டமிடலும் இல்லாமல் நடந்த இந்த ஸ்நானம் !  ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி தீர்த்தம் தாண்டியபின் சாவித்திரி தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் இம்மூன்று தீர்த்தங்களில் நீராடுவது
 மத நம்பிக்கையை கை விட்டு  விட்டவர் , மத சடங்குகளை கை விட்டவர்  இஷ்டசித்தி அடைவதற்காக! வேறெந்த மதம் இப்படி சலுகைகள் தரும்? நாத்திகனுக்கும் இடம் கொடுக்கும் இந்து மதம். கடவுளை எதிர்த்த பிரகஸ்பதிக்கும் இடம்! நாத்திக சார்வாக ரிஷிக்கும் இடமுண்டு! மாட்டுக்கறி சாப்பிட்ட யக்ஞவல்கியனுக்கும் கூட.



தெய்வ நம்பிக்கையை நான் உதறிய பின் "கோவிலுக்கு போகவேண்டும் " என்று என் மனைவி கேட்டதேயில்லை. போனவாரம் ராமேஸ்வரத்தில் இந்த ஸ்நானம் செய்ய நான் ஒப்புக்கொண்டதற்கு அவள் அடைந்த சந்தோசம்.
  I love the way of grace.



We properly understand the miracle of life when we allow the unexpected to happen.
- Paulo Coelho


http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_26.html