Share

May 2, 2009

Carnal Thoughts-20



காமத்தின் நிமித்தம்
பெண் ஆணாலும், ஆண் பெண்ணாலும்
ஒவ்வொரு தனிநபரும் அனுபவப்படுகிற
துயரம், நிராசை, ஏக்கம், கிளர்ச்சி, களிப்பு, மகிழ்ச்சி, பிரிவாற்றாமை போன்றவற்றை பதியும் எந்த படைப்பிலும் , எழுத்தில் வரும்போது இந்த உணர்வுகளின் உக்கிரமான தீர்க்க ஆதாரம் சிறுத்துப்போய் விடும் .
ரொம்பவும் அன்யோன்யமான வர்ணிப்பு விபரம் 'சௌந்தர்யலஹரி'யில் உண்டு.
‘சக்கரமையப்புள்ளி சக்தி உன் முகமாம்
கீழே தக்கதோர் இரு முலைகள்
தாவினால் அழகு யோனி '
காமம் என்னும் சிருங்காரத்தை தி.ஜானகிராமன் சங்கீதமாக்கிய 'மோகமுள் 'ரஸவாதமும் இங்கே நடந்திருக்கிறது.
ஜி. நாகராஜனின் பரத்தமை காதல், நுட்பமாக இந்த மண்ணில்தான் 'குறத்தி முடுக்கு ' என விரிந்திருக்கிறது.
சாரு நிவேதிதா வின் 'ஜீரோ டிகிரி ' கொடுத்த பேரதிர்ச்சி !
தமிழ் உரைநடை இலக்கியத்தில் கு.ப.ரா., தி.ஜா., கரிச்சான் குஞ்சு ,கி.ரா., ஜி.நாகராஜன், ஆதவன், சம்பத், சாரு நிவேதிதா போன்ற அற்புதக் கலைஞர்கள் இந்தக் காமம் என்னும் தன்னியல்பை நேருக்கு நேர் காணத் துணிந்தவர்கள்.

கலாப்ரியா எழுதிய ஒரு கவிதை ‘அவள் அழகாயில்லாததால் எனக்குத் தங்கையாகி விட்டாள்’ என்பதாக வரும். இதன் உளவியல்கூடக் காமம்தான். காமத்தின் சந்தர்ப்பவாதத்தை அழகாகச் சொன்ன கவிதை.
‘அந்தக் கறுப்பு வளையல்காரி குனிந்து நிமிர்ந்து பெருக்கிப் போனாள். அறை சுத்தமாச்சு. மனசு குப்பையாச்சு’, என்று இந்நாய் சிறுவேட்கையைப் பற்றித்தான் கல்யாண்ஜி எழுதினார்.
கல்யாண்ஜியின் இன்னொரு கவிதையில்
பெண்மனம், ‘நான் பழுத்திருக்கும் போது வராமல் உளுத்துப்போனபின் புழுக்கொத்த வரும் மனம் கொத்தி நீ’ என்று விம்மும் !
ஒரு இஸ்லாமியக் கவி பரந்த மனதோடு மிகுந்த அடக்கத்தோடு பாடினான் ‘தேவடியாள் என் தாயாக வேண்டும். நான் தேவடியாள் வீட்டு நாயாக வேண்டும்’ என்று!
'மனித சிந்தனையின் நவீன பகுதியின் மஹா கவிஞன்' என்று சுட்டிக்காட்டப்படும் ஜேம்ஸ் ஜாய்ஸ் தன்னுடைய ‘A Painful Case’என்ற சிறுகதையில் நூறு வருடங்களுக்கு முன்னரே ‘ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வெறும் சிநேகிதம் மட்டும் என்பது இயல்பில்லாதது. ஏனெனில் உடல் உறவு என்பது அங்கு தவிர்க்க முடியாத விஷயம்’ என்று எழுதினார்.
ந.பிச்சமூர்த்தி சொல்கிறார், ‘கேட்பதல்ல காதல், தருவதுதான்’ என்று.
க்ளியோபாட்ரா தன் வாழ்வில் ஜூலியஸ் சீசர் உடன் முன்னர் கொண்டிருந்த உறவின் தன்மை எத்தகையது என்பதை ஆண்டனி அண்ட் க்ளியோபாட்ரா நாடகத்தில் விவரிக்கிறாள் .
My salad days!
When I was green in judgement
And cold in blood!

ஜூலியஸ் சீசர் இவள் மீது செய்தது பாலியல் வன்முறை.
சீசர் இவளுடன் உடலுறவு கொண்டபோது அவள் வயதுக்கு வராதவள். மனமும் பால்மனம் அப்போது.
க்ளியோபாட்ரா காதலுக்கோ காமத்துக்கோ பக்குவமில்லாத பச்சிளம் சிறுமி.
ஷேக்ஸ்பியர்!

3 comments:

  1. but among all Kalyanji's words r touching and easily catchy.

    ReplyDelete
  2. காமத்தை முழுமையாக அனுகாத குனமே தமிழ்மனம், ஏன் இந்திய மனமோ என்று தோன்றுகிறது.

    அது சரி சௌந்தர்யலஹரி-யையும் விட்டுவைக்கவில்லையா நீங்கள்....(பொறாமையா இருக்கு) இப்போதான் Carnal thoughts லைட்டா புரிய ஆரம்பிச்சுயிருக்கு.

    //நான் பழுத்திருக்கும் போது வராமல் உளுத்துப்போனபின் புழுக்கொத்த(wow) வரும் மனம் கொத்தி நீ’
    My salad days!//
    ரிப்பீட்டேய்
    but interesting... continue மகா பண்டிதரே...

    ReplyDelete
  3. nice and nice... very brilliant blog

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.