Share

May 4, 2009

இங்கே

அந்த காலத்தில் 1972ல் எம்ஜியார் மதுரை தி .மு .க மாநாட்டில் பேசும்போது 'அலை ஓசை' பத்திரிக்கையை தூக்கிப்போட்டு ' ராணுவத்தையே சந்திக்க தயார் ' என ஆவேசமாக சொன்ன விஷயம் பெரிய நகைச்சுவை யாக பின்னால் அவர் கொஞ்ச காலத்திலேயே அண்ணா தி முக ஆரம்பித்து விட்ட நிலையில் , அதன் பின் அவர் சில வருடங்களில் முதல்வர் ஆன போது' தபால் கார்டு விலை குறைப்பேன்' என்று சொன்ன போது , இப்படி அவர் துக்ளக் சேட்டைகளாக பல விஷயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டதுண்டு.
இப்போது கோவையை ஒட்டி ராணுவத்தோடு பெரியார் தி க , ம தி மு க கட்சியினர் மோதி ராணுவத்தினரை அடித்து , ராணுவ வாகனங்களை சூறையாடி பெரிய யுத்தம் நடத்தி காட்டி விட்டனர் . பதிலுக்கு ராணுவத்தினர் சிலர் அந்த இடத்திற்கு வந்து பத்திரிக்கையாளர்கள் உள்பட பலர் மீது தாக்குதல் நடத்தி யுள்ளனர் . பெ.தி .க ., ம தி முக வினர் பலர் மீதும் ,ராணுவத்தினர் சிலர் மீதும் போலீஸ வழக்கு பதிவு செய்து உள்ளனர் .
...
'திரும்பி பார்க்கிறேன் ' நிகழ்ச்சி ஜெயா டி வி இல் கே .பாலாஜி பேசியதை மறக்க முடியாது . பாலாஜியின் Method of speaking சிலாகிக்க வேண்டிய விஷயம் . You should look gracefully oldஎன்பதை அவருடைய முதிய தோற்றம் சொல்லாமல் சொல்லியது . நாற்பது படங்கள் தயாரித்த பாலாஜி இன்றைய படத்தயாரிப்பு விரையங்களை , நடிகர் நடிகைகளின் கேரவன் வேன் உள்பட வெளிப்படையாக கேள்வி கேட்டார் .
பாலாஜியின் அப்பா கிருஷ்ணமாச்சாரி ஐயங்கார் . கிரிஷ்ணமாச்சாரியின் இரண்டாவது தாரம் மலையாள பெண் . இந்த இரண்டாவது தாரத்தின் மகன் தான் பாலாஜி . இப்படி அபிமான தாரத்தின் மகனாக பிறந்ததால் அனுபவிக்க நேர்ந்த துயரங்களை 'திரும்பி பார்க்கிறேன் ' நிகழ்ச்சியில் பாலாஜி சொன்னார் .
ஜெமினி கணேசனின் உற்ற நண்பர் . நாகேஷ் திரையுலகில் நுழைய காரணமானவர் பாலாஜி . இவருடைய நாடகத்தில் நடித்த ரெஜினா பின் நாகேஷ் மனைவி . படித்தால் மட்டும் போதுமா வில் சிவாஜிக்கு அண்ணனாக ,பலே பாண்டியா வில் கூட சிவாஜியுடன் நடித்திருந்தாலும் ஜெமினி கணேசனின் சிபாரிசில் தான் சிவாஜியை இவர்தயாரிப்பில் நடிக்க வைக்க நெருங்க முடிந்தது .
நடிகராக திரையில் கதாநாயகனாக , இரண்டாவது கதா நாயகனாக , காமெடியனாக , வில்லனாக (Glamour Villain ! ) நடித்தவர் . இவருடைய ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக ,ஸ்பஷ்டமாக இருக்கும்.
நரசுஸ் ஸ்டுடியோவில் தயாரிப்பு நிர்வாகியாய் வேலை பார்த்துக்கொண்டே 'பிரேமபாசம் ' படத்தில் ஜெமினிக்கு தம்பியாய் நடிக்கும்போது ஜெமினி கணேசனின் மூன்றாவது திருமணத்திற்கு உதவியவர் . ஜெமினி -சாவித்திரி சரசத்திற்கு காவல் நின்றவர் பாலாஜி .
ஒப்பனை அறையில் சாவித்திரிக்கு மொக்கை போடும்போது ஜெமினி " டே பாலாஜி ! சாவித்திரி அப்பா வர்ரானா பார்ரா . வந்தா உடனே சிக்னல் கொடு "
வேலாயுதம் தன் இரண்டாவது மனைவியாக நடிகை கே ஆர் விஜயாவை திருமணம் செய்யவும் துணை நின்றவர் தான் பாலாஜி .
பி பி ஸ்ரீனிவாசின் பல ஹிட் பாடல்கள் இவருக்கு கிடைத்தது !
" ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் "
"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ! நெருப்பாய் எரிகிறது "
"பண்ணோடு பிறந்தது கானம் . குல பெண்ணோடு பிறந்தது நாணம் "
" நல்லவன் எனக்கு நானே நல்லவன் "
"பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை "
" ஆதி மனிதன் காதலுக்குப்பின் அடுத்த காதல் இது தான் !"
"உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே நீ சிரிக்காயோ "
" இரவு முடிந்து விடும் . முடிந்தால் பொழுது புலர்ந்து விடும் "
ஜெயலலிதா (போராட்டமான தன் அரசியல் சூழலிலும் )பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் விட்டார் . அந்த கண்ணீர் உண்மையிலே சுத்தமானது . அவர் சொன்னது கூட மிகை இல்லை . அவருடைய அண்ணனை இழந்து விட்டார் .
பாலாஜி பற்றி மறுபக்கமாக சில விஷயங்கள் உண்டு .யாருக்கு தான் அப்படி ஒரு மறு பக்கம் இல்லை ? சொல்லுங்கள் !


...
தமிழ் நாட்டில் கூட நிறைய கோடீஸ்வரர்கள். வேட்பாளர்களில்!கம்யூனிஸ்ட் தென்காசி பொ.லிங்கம் போல ஒன்றிரெண்டு ஏழைகளும் வேட்பாளர்களில் உண்டு தான்.

10 comments:

  1. These 1950s, 1960s, 1970s, 1980s, early 1990s news, events, etc; really fascinating to me, I do not know why, but I like them.

    ReplyDelete
  2. ராஜநாயஹம் சார்,

    என்னுடைய Wordpress வலைத்தளமான http://cinemavirumbi.tamilblogs.com ஏதோ சில தொழில்நுட்பக் கோளாறுகளால் சில நாட்களாக சரிவர இயங்கவில்லை. அது சரியாகும் வரை நீங்களும் மற்ற நண்பர்களும் என்னுடைய மற்றொரு வலைத்தளமான http://cinemavirumbi.blogspot.com க்கு அவ்வப்போது வருகை தரவும்.

    நன்றி!

    சினிமா விரும்பி

    ReplyDelete
  3. Sir,Always the other side is interesting...

    ReplyDelete
  4. மறு பக்கங்களையும் சொல்லலாமே?

    ReplyDelete
  5. ’பண்ணோடு பிறந்தது கானம்’
    தவிர்த்து மற்றவை அனைத்தும் எனது ஆல்டைம் பேவரிட்ஸ்.

    தலைவரின் நகைச்சுவை, தலைவியின் கண்ணீர், MDMK PDK vs ராணுவம், gracefully old, ஏழைவேட்பாளர்.

    சுவையான தோரணம்.

    ReplyDelete
  6. Got this snippet from a website:
    Very few in the Tamil film industry know that Balaji was born in a prominent Tamil Brahmin (Iyengar) family and was the grandson of a very prominent colonial era advocate T. Rangachari.

    ReplyDelete
  7. Balaji's father's name Krishnamachari. Balaji's mother was a keralite- malaiyaali.

    ReplyDelete
  8. Balaji's wife name also Anandavalli looks like Tamil brahmin (malayalees generaly will not have name like this).

    Sudharsan

    ReplyDelete
  9. தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  10. நான் 1940 அல்லது 1950 களில் பிறந்திருக்கக்கூடாதா என்று ஏங்குகிறேன்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.