1981
மதுரை கார்ப்பரேசன் கக்கூஸ்களில் சினிமா பாடல் டேப் ரிக்கார்டரில் ஒலிக்கும்.
டவுன் ஹால் ரோடும் மேலமாசி வீதியில் சந்திக்கும் இடத்தில் உள்ள பொது கழிப்பிடத்தில் சத்தமாக பாட்டு சத்தம் கேட்கும்.
தீப்பொறி ஆறுமுகம் மெல்வதற்கு சரியான அவல்.
பொதுக்கூட்ட மேடையில் தீப்பொறி குத்த வக்கிற போஸ் குடுத்து உரத்த சத்தமாக குரல்.
ரெண்டுக்கு போய்க்கிட்டிருக்கிறவன் முக்கிக் கொண்டே கேட்கிறானாம் நேயர் விருப்பம்.
"அண்ணே, அண்ணே அந்த குர்பானி பாட்டு போட்டு விடுண்ணே.. குர்பானி ஜீனத் 'அம்மன்' பாட்டுண்ணே"
கூடியிருக்கிற மொத்த ஜனக்கூட்டமும் குலுங்க குலுங்க சிரிக்கிற காட்சி காலக்கண்ணாடியில் தெரிகிறது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.