"The Significant Other" என்ற வார்த்தை ஆங்கில சேனலில் கேட்க நேர்ந்தது.
ராஜநாயஹம் பல வருடங்களுக்கு முன்பு எழுதிய " The Significant Other"
'தழல் வீரம்' நூலில் இடம் பெற்றிருக்கிறது.
வி.என்.ஜானகி - ஜெயலலிதா அரசியல் போட்டியில் Power Monger ஆக ஜெயலலிதா விஸ்வரூபமெடுத்து ‘கட்சி' அவர் கைவசமாக ‘தொண்டர்கள்' காரணமான விஷயம் பற்றி பேச்சு வந்தது. அப்போது இ.பா. சொன்னார். ‘ நம்முடைய கலாச்சாரம்' அப்படி. யாராவது 'ருக்மணி கிருஷ்ணன்' என்று பெயர் வைக்கிறார்களா? ‘ராதா கிருஷ்ணன்' என்ற பெயர்தானே பிரபலம்.
இ.பா. இப்படி ராஜநாயஹத்தை கேட்டார்.
யோசித்துப் பார்க்கும்போது சுவாரசியமாக இருந்தது. ஆமாம் முன்னாள் ஜனாதிபதி முதல் இன்னாள் ஆபீஸ்பாய் வரை ராதாகிருஷ்ணன் என்ற பெயர் அமைந்தவர்கள்தான்.
The other Woman is Always Powerful.
ராதா என்ற அந்தப் பெண் கிருஷ்ணனுக்கு அத்தை முறை. இன்னொருவனின் மனைவி. கிருஷ்ணனை விட ஏழு வயது மூத்தவள். ஆனால் கிருஷ்ணனுக்கு ராதா மேல் தான் ப்ரீதியும் பிரேமையும் மிக அதிகம்.
"ஏகாதசி தோசையும் இளையகுடியா மாகையும்"
ராஜநாயஹத்திடம் கி.ரா சொன்னார். அவரே விளக்கம் சொன்னார்.
ருசி சம்பந்தப்பட்டது. முக்கியத்துவம் குறித்தது.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முடியும்போது அந்த காலத்தில் தோசை சாப்பிடுவார்கள். நல்ல பசியில் இருக்கும்போது சாப்பிடும் தோசை ருசி எப்படி இருக்கும்.
இளைய குடியா - இரண்டாவது மனைவி, அபிமான தாரம்.
மாகை - மாய்கை
அபிமான தாரம் போடும் தலையணை மந்திரம், சொக்குபொடி - இதன் சக்தி, சுவை, முக்கியத்துவம் ..
'என்ன மாயம் போட்டா .. இவன் ஆளே மாறிட்டானே '- கிழவிகள் முனுமுனுப்பு.
...
The other woman is always powerful.
ராதாகிருஷ்ணன்னு தானே பெயர் வச்சுகிறான் . எவனாவது ருக்மிணி கிருஷ்ணன்னு பேர் வச்சிக்கிறானா?
.
ரெண்டாவது பொண்டாட்டி பேரை தான் முதல்ல சொல்ற வழக்கம் இங்கே.
முருகனோட ரெண்டு பொண்டாட்டிங்க
" வள்ளி -தெய்வானை."
https://www.facebook.com/share/p/1CZDgPK4e5/
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.