வேடிக்க - 60
- R.P. ராஜநாயஹம்
R. சுந்தர்ராஜன் self standing ஆக கொடி கட்டி நாலு சில்வர் ஜூபிலி படங்கள் குடுத்தார். சக்கப்போடு
சாமி போட்ட முடிச்சு, ஒயிலாட்டம் காரணமாக தள்ளாட்டம்.
பாக்யராஜிடம் வந்தார். " நான் தற்கொல பண்ணிக்கறத தவிர வேற வழியேயில்ல". சரணாகதி.
உடைந்து போன சுந்தர்ராஜனுக்கு
கை கொடுப்பதற்காக அவர் இயக்கத்தில் படம் தயாரித்து கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொள்கிறார். சில லட்சம் பணம் சுந்தர்ராஜனுக்கு உடனே அட்வான்ஸ் கொடுக்கிறார்.
குஷ்பு கதாநாயகி.
படத்தின் பெயர் " மிஸ் மைலாப்பூர்".
குஷ்புவுடன் போனில் பேசியிருக்கிறார்.
கதாநாயகிக்கு சுந்தர்ராஜன் பேச்சே சுத்தமாக பிடிக்கவில்லை. இவரோடு பேசவே பிடிக்கவில்லை என்பதை பாக்யராஜிடம் குஷ்பு தெரிவிக்கிறார்.
"என்னா வாய்"
இப்படி இன்னும் என்னென்னவோ. தெரியவில்லை.
படம் தயாரிப்பதில்லை என்று முடிவு.
சுந்தர்ராஜனுக்கு கொடுத்த அட்வான்ஸை பழனிசாமி போய் சுந்தர்ராஜனிடம் கேட்கிறார்.
அவர் பதில் " பாக்யராஜ் பணத்த எவ்வளவோ பேர் சாப்பிட்டுருக்காங்க. அந்த தர்ம கணக்கில நான் வாங்குன பணத்தையும் எழுதிக்க சொல்லு. என்னால தரமுடியாது. "
அந்தப் படத்தின் பூஜை இன்விட்டேசன் பின்னால் ராசுக்குட்டி ஷுட்டிங் சமயத்தில் பாக்யா ஆஃபிஸில் கவனிப்பாரற்று கிடந்த மிஸ் மைலாப்பூர் இன்விடேசன்
(பெரிதாக அச்சடிக்கப்பட்ட Grand invitation)
பார்க்க கிடைத்தது. Dropped movie.
சுந்தர்ராஜன் வாய் விசேஷமானது.
ரொம்ப ரொம்ப முன்னால பாக்யராஜ்
" இர்றா, ஒன்ன பாரதிராஜா கிட்ட சேத்து விட்றேன். பொறுமையா இரு"
சுந்தர்ராஜன் சரின்னு தான் சொல்லியிருக்கிறார்.
அந்த நேரம் பாக்யராஜை பார்க்க பாரதிராஜா மாடியேறிப்போனால் அங்க சுந்தர்ராஜன்.
" சார். ஒங்க அந்த படத்ல க்ளைமாக்ஸ் சரியில்ல. அத நானாயிருந்தா வேற மாதிரி பண்ணியிருப்பேன்." இப்படி..அப்படி வளவளப்பு. சுந்தர்ராஜன் வெளக்கெண்ணயால குண்டி கழுவி விட ஆரம்பித்திருக்கிறார்.
பாரதி ராஜா ரூமை விட்டு கிளம்பி கீழே வருகிறார். பாக்யராஜ் எதிரே.
" யோவ் யார்யா அவன் ஒன் ஃப்ரண்டு. என்னா வாயி. ஒக்கார முடியல. எரிச்சல கிளப்புறான். என்னய்யா" கிளம்பி விடுகிறார்.
பாக்யராஜ் மாடியேறி " ஏண்டா, ஒன் வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கவே மாட்டியா? அவருக்கிட்ட உன்ன சேத்து விடலாம்னு நெனச்சா இப்டி கெடுத்துட்டியே"
சென்ற வருடம் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பாக்யராஜ் தலைமையில் பிரசாத் கலர் லேபில் பட்டி மன்றம்.
எங்க டைரக்டர் பாக்யராஜ் அழைத்து அவருடன் போய் வேடிக்க பாத்தேன்.
பாக்யராஜ் சாரை தவிர மற்றவர்கள் சொதப்பல். நெறய நேரம் பேசி பேசி வறுத்து..
சுந்தர்ராஜனும் கட்சியெடுத்து மிக நீண்ட நேரம்.
பட்டி மன்ற நிகழ்வை பாக்யராஜ் எடிட் செய்த போதும் அவர் அழைப்பின் பேரில் 'ரெண்டு நாளு' வீட்டுக்கு போயிருந்தேன்.
டைரக்டர் பாக்யராஜ் வேதனையும் ஆயாசமும் " சப்ஜெக்ட உட்டுட்டு என்னன்னமோ பேசியிருக்கிறானே"