Share

Mar 26, 2025

அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் ஜான் சகாயம்

ஜான் சகாயம் இறந்து விட்டாரா?

Dr. Faustus என்றாலே நினைவுக்கு வரும் ஜான் சகாயமா? அடையாளம் தெரியவில்லையே.

"ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை" கட்டுரையில் பேராசிரியர் ஜான் சகாயத்தையும் குறிப்பிட்டிருக்கிறேன்.
"ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் மிகவும் விசேஷமானவர்கள். வசந்தன் தான் எனக்கு ஹேம்லட். நெடுமாறன்தான் மார்க் ஆண்டனி. ஜான்சகாயம் தான் 
டாக்டர் ஃபாஸ்டஸ். 
தமிழ் சாலமன் பாப்பையாவின் வகுப்பைவிட வெளியேதான் அவர் பேச்சு சுவாரசியமாயிருக்கும்."

அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய பேராசிரியர்களில் மறக்கவே முடியாத ஆளுமை.

வகுப்பில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்.
பல முறை கண்டிக்கப்பட்டிருக்கிற ராஜநாயஹம்.

குறும்பு ராஜநாயஹம் பற்றிய
 ஜான் சகாயம் sarcastic satire 
"Gabie , Try to get a degree. You won't be handcuffed when you get a degree."

 ஜான் சகாயமா புகைப்படத்தில்?

வகுப்பெடுக்கும் போது சீரியஸ் ஆக இருக்கிறார் என்று தோன்றியதுண்டு. 
ஆனால் இடையிடையே subjectக்கு relevant ஆக இல்லாவிடினும்  inconsequential remarks he was making as part of a polite lecture.

This 'மல்லிகை மன்னன் மயங்கும்' business 
என்று ஜான் சகாயம் சார் சொன்னது பசுமையாக மனதில் பதிந்திருக்கிறது.

நான் எடிட் செய்த ( A book of blank verses composed underneath a bough,
 edited by Gabie) "மரத்தடி மகாராஜாக்கள்" நூலில் 
என் காதல் வசன கவிதையை('கூடுமானால் இந்த பாத்திரம் என்னை விட்டு விலகட்டும்') வரிக்கு வரி ரசித்து படித்துப் பாராட்டினார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.