Share

Jan 8, 2025

நிஷ்காம்யம்

விஷால் 25 படங்கள் முடித்திருந்த போது அதையொட்டி ஏதோ சானலில் 
நிகழ்ச்சி. 
கூத்துப்பட்டறை ந.முத்துசாமியிடம் விஷால் பற்றி பேச வைக்க 
வந்திருந்தவர்கள் கேமரா ஆன் செய்து 
விஷால் பற்றி கேட்ட போது 
முத்துசாமி "யார் தெரியலையே?"

" சினிமா கதாநாயகன். நடிகர் சங்க பதவியில் இருக்கார்.
கூத்துப்படறை ஸ்டூடெண்ட்டா இருந்தவர்."

" யாருன்னே தெரியாது."

மூன்று மாதங்கள் கோர்ஸில் மாணவராக விஷால் இருந்திருப்பார் போல.

.....

விஜய் சேதுபதி பற்றி டி. வி சேனல் நிகழ்ச்சியில் ந. முத்துசாமியிடம் நடிகர் பற்றி அபிப்பிராயம் கேட்க வந்திருந்தார்கள்.

ந. முத்துசாமி: விஜய் சேதுபதி கூத்து பட்டறையில் அக்கவுண்ட்ஸில் வேலை பார்த்தார்.
அவருக்கு அப்பவே கல்யாணமாகி குழந்தையிருந்தது. வேலை வேணும்னு கேட்டார். வேலை பாத்துக்கிட்டே தான் படிச்சாரு.

கேள்வி : அப்ப இவ்வளவு பெரிய நடிகர் ஆவாருன்னு நெனச்சீங்களா?

முத்துசாமி : அப்டியெல்லாம் நெனக்கல.

......

கூத்துப்பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டே முழு நேர நடிகர்களுக்கான பயிற்சியும் பெற்றார். 
சுனாமியின் போது கூத்துப்பட்டறை மாணவராக நாகையில் தெரு நாடகங்களில் நடித்தார்.

ந. முத்துசாமியிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் பிரபலமான நடிகர் ஆன பின்பும் கொண்டிருந்தார். எப்போதும் பேட்டியில் கூத்துப்பட்டறையின் முன்னாள் மாணவர் என்பதை பெருமையோடு குறிப்பிடுகிறார்.

தான் நடித்த படத்தில் கூத்துப்பட்டறை அனுபவங்களை காட்சிப்படுத்திய இருக்கிறார்.

ராஜநாயஹம் அங்கே கோ ஆர்டினேட்டர் ஆக இருந்த 
மூன்று முறை கூத்துப்பட்டறைக்கு விஜய் சேதுபதி வந்திருந்த போது விஜய் சேதுபதியை சந்தித்ததில்லை. வாய்க்கவில்லை.

முத்துசாமியின் டி.வி ரிப்பேர் என்று தெரிய வந்த போது உடனே நல்ல டி.வி. வாங்கிக் கொடுத்திருக்கிறார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.