Share

Dec 26, 2021

Rajanayahem's writings on top league

"You are playing in a league that does not recognise you Mr.RPR.

Your writings are really on  top league. Somehow you are ignored by some design, except Charu.(I wonder how someone like you would have been in desolation if not for the new age tech driven social media)"

"Your narrative style is so fluidic and effortless. Makes compulsory reading without the reader realising that he is drowning in a swirling whirlpool... He suffers where you suffered, rejoices in your joys, suffocates in your wealth of experience. Keep going..."

- Sivakumar Viswanathan



Dec 24, 2021

மன்மத லீலை படத்தில் கலைஞர் ரசித்த காட்சி

எமர்ஜென்சி காலத்தில் கலைஞரின் தி.மு.க ஆட்சி
 1976 ஜனவரி மாத கடைசி நாளில் கலைக்கப்பட்டது.

பாலச்சந்தரின் மன்மத லீலை 1976ம் ஆண்டு பிப்ரவரியில் 
வெளி வந்திருந்தது.
கலைஞரிடம் கேட்கப்பட்ட கேள்வி: 
'மன்மத லீலை படத்தில் உங்களுக்குப்
பிடித்த காட்சி எது?'

கலைஞர் தன் பாணியில் சொன்ன சாதுர்யமிக்க ரசமான பதில் :
" பெட்டிசன் மாமா சட்டையைக் கிழித்துக்கொள்கிற காட்சி."

அன்று இந்த பதில் அரசியல் பார்வையாளர்களாலும், தி.மு.க.வினராலும் மிகவும் 
ரசிக்கப் பட்டது.

அந்த நேர அரசியல் சூழல் அறிந்தவர்களால் தான் 
கலைஞரின் பொடி வைத்த 
இந்த பதிலை 
ரசிக்க முடியும்.

மன்மத லீலை படத்தில்
 பெட்டிசன் மாமா ஒய்.ஜி.மகேந்திரன்             தலையில் வைத்திருப்பது 
எம்.ஜி.ஆர் தொப்பி தான்.

Dec 22, 2021

R.P. ராஜநாயஹம் வாழ்வு

"R.P.ராஜநாயஹம் அவர்களின் வாழ்வுதான் என் கனவு...யாருக்கும் வாய்க்காத மனமும் வாழ்வும் அவருடையது ...
ராஜாதிராஜாக்களுக்கும் ..அம்பானி அதானிகளுக்கும் மேலான செல்வந்தர் ..யாரும் செல்வந்தர் ஆகலாம் ..ஆனால் ஒருபோதும் எந்த செல்வந்தரும் R.P.ராஜநாயஹமாக ஒருபோதும் ஆகவே முடியாது .
.எந்த துறவிக்கும் மேலான மனப்பக்குவத்தையும் மனநிறைவையும் உடையவர்...

இழப்பு வருத்தும் போதும்...ஒருவேளை இப்படி நடந்திருந்தால் என்று என் மனம் என்னை துன்பத்தில் பிடித்துத் தள்ளும் போதும் ...வருங்காலம் பற்றிய பயம் என்னைச் பேய் போலச் சூழும் போதும்... இவரின் கைகள் அபயம் தந்து என்னை அரவணைத்து சட்டென்று ஒருநொடியில் என்னை மீட்கும் அதிசயம் பலமுறை நிகழ்ந்துள்ளது..இவரது வாழ்வே எனக்கான செய்தி...எனக்கான பாடம்...

இவரது மனப்பக்குவத்தைப்பெற இடையறாது முயன்று கொண்டே இருக்கிறேன் ..அதுவே என் வாழ்வின் நிறைவும் வெற்றியும் என்று கருதுகிறேன்... 

நன்றி R.P.ராஜநாயஹம் சார்..."

- பரமசிவம்.எஸ்

Dec 21, 2021

ராஜநாயஹத்தின் பார்வை

ராஜநாயஹத்தின் பார்வை வித்தியாசமானது.  
அது கோணலும் இல்லை 
குறும்பும் இல்லை. 
வித்தியாசமான இலக்கியப் பார்வை.
  அவர் விகாரத்திலும் அழகு காண்பார்.  
அழகிலும் விகாரத்தைக் காண்பார்.  

விமர்சனம் என்பது ஒற்றை அடிப்பாதை அல்ல என்பதை
 அவர் எழுத்தில் காணலாம்.  
க.நா.சு. போல தனித்துவம் கொண்டவர் என்பது என் கருத்து.

- கிருஷ்ணமூர்த்தி சுந்தரா

https://m.facebook.com/story.php?story_fbid=3217921225087988&id=100006104256328

Dec 20, 2021

இ.பா. கிருஷ்ணா கிருஷ்ணா நாவல் பற்றி 2005ல் ராஜநாயஹம்

"கிருஷ்ணா கிருஷ்ணா"
('கிருஷ்ண கிருஷ்ணா' அல்ல அல்ல)
இந்திரா பார்த்தசாரதி எழுதிய 
இந்த நாவல் பற்றி R.P.ராஜநாயஹம்            எழுதிய 'லீலார்த்தம்' என்ற தலைப்பிலான கட்டுரை
 2005ம் ஆண்டு 
'பன்முகம்' இலக்கிய இதழில்
வெளி வந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த நாவலைப் பற்றி கமல் பேசியதால் தான் இந்த 2005 பதிவை மீண்டும் இன்று இங்கு பகிர்ந்துள்ளேன்.

கிருஷ்ண லீலைக்கான அர்த்தம்
லீலார்த்தம்

 கமல்ஹாசன் பிக்பாஸில் 
இந்த நாவல் 
தலைப்பு 'கிருஷ்ண கிருஷ்ணா' என்று தவறாக உச்சரித்தார்.
ஆனால் நாவல் பெயர்
 "கிருஷ்ணா கிருஷ்ணா"

லீலார்த்தம்
- R.P. ராஜநாயஹம்

இந்திரா பார்த்தசாரதி தன் படைப்புகளில் 
பாரதி, கிருஷ்ணன், ராமாநுஜர், ஆண்டாள், மகாத்மா காந்தி, ஷேக்ஸ்பியர் அவ்வப்போது பேசுவதை நாம் காணமுடியும். ராமாநுஜர் பற்றி நாடகம் எழுதி ‘சரஸ்வதி சம்மான்' விருது கிடைத்ததை அறிவோம். இப்போது ‘கிருஷ்ணா கிருஷ்ணா' என்று ஒரு நாவல் எழுதி வெளிவந்திருக்கிறது. கிருஷ்ணன் என்ற அரசியல்வாதியை, அவனுடைய லீலைகளை, லீலைகளின் அர்த்தபுஷ்டியை கிருஷ்ணனே ஜரா என்ற வேடனிடம் சொல்லி ஜரா என்ற அந்த வேடன் அந்த லீலார்த்தத்தை நாரதர் என்ற உலகின் Frist Ever journalist இடம் சொல்லி அதை வாய்மொழியாகச் சொல்வதாக ‘கிருஷ்ணா கிருஷ்ணா' நாவல் அமைந்திருக்கிறது. கிருஷ்ண லீலார்த்தம் எவ்வளவு கனமானதாக அடர்த்தியானதாக இப்போதும் சாசுவதத்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றது என்பதை இயல்பாக இ.பா. சொல்லியிருக்கிற நாசூக்கு அவருடைய புத்திசாலித்தனமான எழுத்துக்கு அந்நியமான விஷயமில்லை.

பல வருடங்களுக்கு முன்னர் நான் புதுவையில் இந்திரா பார்த்தசாரதியுடன் இரண்டு வருடம் பழகிய நாட்களில் ஒரு முறை வி.என்.ஜானகி - ஜெயலலிதா அரசியல் போட்டியில் Power Monger ஆக ஜெயலலிதா விஸ்வரூபமெடுத்து ‘கட்சி' அவர் கைவசமாக ‘தொண்டர்கள்' காரணமான விஷயம் பற்றி பேச்சு வந்தது. அப்போது இ.பா. சொன்னார். ‘ நம்முடைய கலாச்சாரம்' அப்படி. யாராவது 'ருக்மணி கிருஷ்ணன்' என்று பெயர் வைக்கிறார்களா? ‘ராதா கிருஷ்ணன்' என்ற பெயர்தானே பிரபலம். யோசித்துப் பார்க்கும்போது சுவாரசியமாக இருந்தது. ஆமாம் முன்னாள் ஜனாதிபதி முதல் இன்னாள் ஆபீஸ்பாய் வரை ராதாகிருஷ்ணன் என்ற பெயர் அமைந்தவர்கள்தான் !. The other Woman is Always Powerful !!

ராதா என்ற அந்தப் பெண் கிருஷ்ணனுக்கு அத்தை முறை. இன்னொருவனின் மனைவி. கிருஷ்ணனை விட ஏழு வயது மூத்தவள். ஆனால் கிருஷ்ணனுக்கு ராதா மேல் தான் ப்ரீதியும் பிரேமையும் மிக அதிகம்.

அவனுடைய அவதாரம் பற்றி பேசப்படுகிற பாகவதம், பாரதம் என்று எந்தக் காவியத்திலும் கிருஷ்ணன் கதா நாயகன் இல்லை. அவன் அரசனாகவும் இல்லை. கிருஷ்ணாவதாரத்தின் முக்கிய எதிரி ஜரா சந்தனை கிருஷ்ணன் கொல்லவில்லை. பீமன் தான் கொல்கிறான். கிருஷ்ண லீலார்த்தம் ஒழுங்கமைவை சீர் குலைத்து விடுகிறது.

பிருந்தாவனப் பெண்களுக்கு கிருஷ்ணனால் கிடைக்கும் விடுதலையுணர்வு, ராதவுடனான Bridal Misticism இவற்றை உணரும்போது தான் கிருஷ்ண லீலார்த்தப் பரிமாணம் புரிகிறது. கிருஷ்ணன் இல்லாது போயிருந்தால் நம் இந்தியக் கலைகள், இசை, நடனம், காவியங்கள் யாவுமே உலர்ந்து போய் ஒரு ‘ Ennui ' கவிழ்ந்திருக்கும்.

வாழ்க்கை எனும் அலகிலா விளையாட்டின் அர்த்தத்தை கிருஷ்ணனின் முரண்பட்ட குணச்சித்திரத்தின் மூலம் நுட்பத்துடனும் ஒரு அலட்சிய பாவத்துடனும் இந்திரா பார்த்தசாரதியே பேசுவது போன்ற நடை. நாவல் ஒரு காவிய சம்பந்தப்பட்டது என்பதற்காக செயற்கை இறுக்கமாக உரை நடையை அவர் அமைக்கவில்லை என்பது வாசகனுக்கு ஆசுவாசம் தருகிறது. நாரதன் ‘ திரிலோக சஞ்சாரி. சகஜமாக Macbeth பற்றி பேசுகிறான். முனிவர்கள், ரிஷிகள் எப்போதுமே Kill - Joys தான் என்கிறான்.

இந்திரா பார்த்தசாரதியின் எழுத்து பற்றி ஒரு ஜோக் இலக்கிய வட்டாரங்களில் உண்டு. ‘இ.பா.வின் நாவலை தமிழில் மொழிபெயர்க்க அவரிடம் அனுமதி வாங்க வேண்டும் ‘ என்று. ஓரளவு ஆங்கில பரிச்சயம். ஓரளவு என்ன நல்ல ஆங்கில அறிவு உள்ளவர்கள் இ.பாவை ரசிக்க முடியும். இந்த நாவலிலும் ஆங்கிலம் எந்த reservation னும் இன்றி இயல்பாக வந்து விழுகிறது. தனித்தமிழ் அன்பர்கள் திசைச்சொற்கள் அதிகமாகயிருப்பதால் முகம் சுளிக்க வேண்டியதுதான் வேறு வழியில்லை.
கலைஞர் மு.கருணாநிதி சமீபத்தில் சென்ற 10.09.2004 முரசொலியில் கிருஷ்ணன், ராதா பற்றி எதிர்மறையாக உடன்பிறப்புக்கு ஒரு கடிதம் எழுதியிருந்த வேடிக்கை வினோதம் பற்றி இலக்கிய உலகம் அறியுமா என்று தெரியவில்லை.

‘கிருஷ்ணன் அடுத்தவன் மனைவி ராதாவுடன் உறவு கொண்டவன். பாஞ்சாலி ஐந்து பேருடன் படுத்தவள். கிருஷ்ணன், ராதா, பாஞ்சாலி ஒழுக்கமில்லாதவர்கள் - துரியோதனன் குடும்பம் கண்ணியமான குடும்பம். அவனுடைய மனைவி பானுமதி ஒரு பத்தினி என்றெல்லாம் கருணாநிதி உடன் பிறப்புக்கு கடிதமெழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதம் எனக்குப் படிக்க வாய்த்தபோது இந்திரா பார்த்தசாரதியின் ‘கிருஷ்ணா கிருஷ்ணா' நாவலுக்கு எழுதப்பட்ட திராவிட இயக்க விமர்சனம் போல தோன்றியது கூட ஒரு Irony தான்.

துரியோதனனும் பீமனும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். இன்னொரு சுவையான தகவல் இந்த நாவலில் தெரிய வருகிறது. இருவருக்கும் உள்ள ஒரு முக்கிய உறவு இருவரும் சகலைபாடிகளும்கூட. பானுமதியின் தங்கை ஜலந்தரா பீமனை மணக்கிறாள். கிருஷ்ணன் தான் இதற்கும் தூது போகிறான்.

கிருஷ்ணன் ஒரு சமுதாயக் கனவு என்பதை நிறுவிக் காட்டுவதில் இந்திரா பார்த்தசாரதிக்கு வெற்றி கிட்டியிருக்கிறது.

கிருஷ்ணன் தன் ஆத்ம அன்பன் பார்த்தனிடம் ‘ எனக்கு எட்டு மனைவியர் உண்டு. ஆனால் ஒரே ஒரு காதலி தான்' என்று அந்தரங்கமான ரகசியத்தை வெளிப்படுத்துகிறான்.

அப்படிப்பட்ட ஒரே காதலி ராதாவைத்தான் தன் அந்திமக் காலத்தில் சந்திக்க விரும்புகிறான். Classical Situation.

ராதாவின் குடிசைமுன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் அவளுடைய பேரப்பிள்ளைகள். ‘ராதா எங்கே' என்று அந்தச் சிறுவர்களிடம் கேட்கிறான். அவர்கள் ‘ராதாப் பாட்டியா ? ' என்று கிருஷ்ணனைக் கேட்கிறார்கள். இவனுடைய அழகு நளினம், குழல் நரைத்து தளர்ந்து கூனி கண்ணில் கைய குடையாக்கி இவனைப் பார்ப்பதை பார்க்கவேண்டுமா ? வேண்டாம். அங்கிருந்து கிளம்பி ஜரா என்ற வேடனை காண வருகிறான். ஜரா தான் கிருஷ்ணவதாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறவன்.

Fate Proves Stronger than Misfortune !

விதி செய்யும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீதுளரோ ?

‘ தந்திர பூமி' கஸ்தூரி. 'சுதந்திர பூமி' முகுந்தன் போன்றவர்களிடம் கூட கிருஷ்ணனின் சாயலைக் காண முடியும். இந்திரா பார்த்தசாரதியின் ‘மாயமான் வேட்டை' நாவலிலும் கிருஷ்ண லீலார்த்தம் விரவிக் கிடக்கும். அவருடைய ‘ ஒளரங்கசீப்' நாடகத்திலும் கூட. Krishna is a colorful, Multi - Dimensional Evergreen Charactor. He is not a Hero. But he is the dominating charactor.

நாம் அனுபவிக்கும் துயரங்கள் தாம் நம் மன வலிமையை நிர்ணயிக்கும் அளவுகோல். மனிதனுடைய பிரச்சினைகள் தீராதவை என்பதில் தான் வாழ்க்கையின் சுவாரசியம் இருக்கிறது.

The Intray is never Finished

http://rprajanayahem.blogspot.com/2020/10/bigg-boss-4-and-c-m-u-s.html?m=0

...................

கிருஷ்ணா கிருஷ்ணா நாவல் – இந்திரா பார்த்தசாரதி.

புதுப்புனல் வழங்கும் பன்முகம் ஏப்ரல் – ஜூன் & ஜூலை – செப்டம்பர் 2005

...

பெரியண்ணனோட குட்டி குட்டி தம்பிங்க

ஆறு, பாறை, முதலையோட ஏரின்னு அலையிற 'டோரா'வோட ஃப்ரண்டு 'புஜ்ஜி'ன்னு ஒரு கொரங்கு.
கார்ட்டூன் பட ஃபேன்ட்டஸி கேரக்டர்களை சந்தோஷமா பாக்கமுடியுது.

முப்பத்தைந்து வருஷத்துக்கு முந்தைய ஒரு பாசப்பாடல் காட்சியில்
ஒரு சொளவு மூஞ்சி நடிகருக்கு -  அறுபது வயசுல மேக்கப் விக்கோட நடிக்கிறவருக்கு ரெண்டு ரொம்ப,ரொம்ப குட்டியான உடன்பிறந்த தம்பிகள்.
 பாக்க எரிச்சல்  வராமலிருக்குமா? 
இதையெல்லாம் சகிச்சிக்கிட்டு தான் இந்த படத்த
 நேரங்கெட்ட மார்னிங் ஷோ,  புழுக்கத்ல மேட்னி ஷோ, 
ஃபர்ஸ்ட் ஷோ, 
தூக்கத்த கெடுக்ற 
செகன்ட் ஷோன்னு பாத்து நூறு நாள் ஓட வச்சிருக்காங்க.

அம்பது வருஷத்துக்கு முன்னயே   எம்.ஜி.ஆருக்கு
 டவுசர் போட்ட தம்பியெல்லாம் சினிமால்ல வந்ததுண்டு.

Dec 13, 2021

பந்த பாசம் - பெரியம்மா

பந்த பாசம்

பெரியம்மா.
91 வயது.
மிகையில்லை.தங்கத்தட்டில் தான் என்னை வைத்து தாங்கியவர்.
முதுமையில் கடுமையான 
ஞாபக மறதி. Dementia.
யாரையும் அடையாளம் காண முடியாத துயரம்.

என் அண்ணன் திருச்சி பிரபல வழக்கறிஞர் பால்ராஜ் இப்போது தன் தாயை எப்படி பேணுகிறார் என்பதை விவரிக்க வார்த்தைகள் கிடையாது.
திருச்சியில் வணக்கத்திற்குரிய பிரமுகர். 

Miracles never cease in this world.
என்னைப் பார்த்தவுடன் பெரியம்மா

"தொரயா? என் பிள்ள தொர, என் பிள்ள" அரற்றிக் கொண்டே என் கன்னத்தைப் பிடித்து கொஞ்சிய போது ... There is no expiry date for her bond and affection.

என் மனைவியிடம் சொன்னார் "தொரய நல்லா பாத்துக்க"


கலங்க வைத்து விட்ட பெரியம்மா.
அழுகையைக் கட்டுப்படுத்த மிகவும் பிரயாசை வேண்டியிருந்தது.
ஏனென்றால் நான் அழுவது என்பது எப்போதும்  பெரும் கதறலாய் வெடித்து விடும்.

படங்களில்
பெரியம்மாவுடன் அவர் மகன் பாலு அண்ணா, நான், என் மனைவி.


மொபைலில் படம் எடுத்தவர் 
பாலு அண்ணனின் திருமதி யோகலட்சுமி.
யோகா அண்ணி

Dec 6, 2021

Natesh's Assessment of R.P. Rajanayahem

Koothuppattarai boss - Artist M.Natesh's
Assessment of
 R.P. Rajanayahem today (06.12.2021)

R.P. Rajanayahem, I think you have started                 a new career in front of the cameras 
for the television channels.
 If you can also perform your experiences in front of the television cameras
 you will very soon become a superstar. 

 Mark this day time and period 
when I say this to you.

........

19.09.2018

Natesh :

By 1990 I was 11 years old in theatre. Kind of knew all techniques to train an actor’s body-voice; but not the mind. I thought that a person with trained skills in all that I know can go on stage, pick up his/her life’s problems and deliver a solo show of good theatre. No text by-hearting, no rehearsals. IT NEVER HAPPENED.

 IN 2018 R.P. Rajanayahem comes on stage         and does exactly that 
28years later!!!!!!!!!!!!!... 
I acknowledged the same day after the show in front of the audience. 
An intelligent, evocative, transformative actor changing roles like a chameleon.

Dec 4, 2021

Kathik Vee's assessment of R.P.Rajanayahem

You certainly have the
 'gift of the gab' RPR, 
when it comes to speaking. 
And, how nicely and aptly the name
 (your college friends use) #Gabie#
  sits here.🙂

And, your well-worded writings are undoubtedly a Reader's delight. 
 Your wit and humour never fail to amaze me.
Take time to live dear RPR, as you have so much to give the World .🙏🙂

https://m.facebook.com/story.php?story_fbid=2941785962701517&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=3203520859861358&id=100006104256328