Share

Jun 20, 2021

ஒவ்வொருத்தனும் ரொம்ப பெரிய ஆளுக

 மதுரை கீழ மாரட் வீதியில் மெட்டடோர் வேன் நிற்கும் போது ஏதேனும் ட்ரிப் கிடைக்கும். 

புரோக்கர் பாக்கியம் ட்ரிப் கிளம்பும் முன்னே கமிஷன் வாங்கிக் கொள்வான். 

அப்படி ஒரு முறை மதுரையொட்டிய மலையடிவாரத்தில் இருந்து ஒரு பார்ட்டி. 

நாள் வாடகை இவ்வளவு என்று

 பேசி அனுப்பி வேன் வைக்கப்பட்டது. 


டிரைவர் மூன்று நாட்கள் கழித்து ஒரு நாள் வாடகைக்கும் ரொம்ப குறைவாக மட்டுமே கிடைத்தது என்று வந்து நின்றான். 'பெட்ரோலுக்கு தான் அந்த பணம் அப்பப்ப கொடுத்தாங்கெ. ' 


ஐயப்பன் கோயிலுக்கு இந்த சரக்கு வேனில் 

சாமி கும்பிட பத்து பேர் போயிருக்கிறார்கள். 

மதுரை மலையடிவாரத்தில் இறங்கியவுடன் அவனவன் சொல்லிக் கொள்ளாமல் நழுவிவிட்டானாம். 


போன் வசதி கூட அன்று இல்லாத கிராமம். 


நேரே நானே டிரைவருடன் அங்கு போனேன். 

டிரைவர் சொன்னது உண்மை தான். 

ஒரு ரெண்டு நாள் கழித்து வாருங்கள், பணம் வசூல் செய்து தந்து விடுகிறோம் என்று 

ஐயப்பன் கோயிலுக்கு போய் வந்த சாமிகளின் 

 தலை குருசாமி சொல்லும் போதே அவன் கண்கள் கிடந்து அல்லாடின. 

எல்லா பயலும் கோயில்ல தான் ஒக்காந்திருந்தானுங்க. நெத்தியில பட்டையடிச்சு, நடுவுல குங்குமம் வச்சி,  சூடத்த கொளுத்தி,  தேங்காய ஒடச்சி,  பூஜ, புனஸ்காரம். 


அடுத்த முறை போன போது ஒரு ரெண்டு மணி டைம் கொடுங்க என்றான். 


வேனை மெயின் ரோட்டிற்கு கொண்டு வந்து,  மறுபுறம் இருந்த தெருவில் நிறுத்தி விட்டு 

காத்திருந்த போது தெருவில் வீட்டு முன் ஈசி சேரில் உட்கார்ந்திருந்த ஒரு பெரியவர் அவருக்கு எதிராக இருந்த நாற்காலியில் என்னை உட்காரச்சொன்னார். 

என்ன, ஏது என்று விசாரித்தவர் தன் திருவாய் மலர்ந்தார் : "அய்யோ, சல்லிக்காசு கூட ஒங்களுக்கு கெடைக்காது. 

அவன் பெரிய அயோக்கியன் ஆச்சே. 

நானே பெருந்தொகை கொடுத்து ஏமாந்து நிற்கிறேன். அந்த ஊரே முழுக்க அயோக்கியனுங்க. தெய்வ பக்தி மட்டும் அளவுக்கு அதிகம். 

நான் நீங்க சொல்ற ஆளு கிட்ட சொன்னேன். 

'ஒங்கிட்ட கொடுத்த தொகைக்கு நீ அஞ்சு வட்டி போட்டு அஞ்சு மாசத்துக்கு எடுத்துக்க.  அதோட ஒன் செருப்ப கழட்டி என்ன நாலடி அடிச்சுக்க. குடுக்கறத குடு' ன்னு.  அஞ்சு பைசா கூட என்னால வாங்க முடியல. இவனுங்க எல்லாம் சாதாரண ஆளுக கிடையாது. ரொம்ப பெரியவங்கெ. ஒவ்வொருத்தனும் அஞ்சு பேருக்கு பொறந்தவனுங்க "


...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.