Share

Feb 9, 2021

ரெண்டாம் ஊழம்



'Aim at heaven and you will get earth thrown in.

 Aim at earth and you get neither'

இது கிறிஸ்தவ நெறியாழ்கை, கோட்பாடு சம்பந்தப்பட்ட விஷயம். 


ராமண்ணா படம் 'உங்க வீட்டுப் பிள்ளை'. கனகசண்முகத்தை இயக்க விட்டு அண்ணா நெறியாழ்கை செய்தார். 


அதில் என்னத்த கன்னையா ஒரு டயலாக் அடிக்கடி சொல்வார். 

"கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு"


துர்வாச முனிவர் ஸ்லோகம் சொல்லியவாறு காட்டில் வந்து கொண்டிருந்திருக்கிறார். 

சேட்டக்கார சிறுவன் பீமன் ஒரு கவட்டையில் கல் வைத்து மரம் ஒன்றிலிருந்த குருவியை குறி பார்த்து வீசியிருக்கிறான். அவன் தம்பி அர்ஜுனன் தானே குறி தவறாமல் அடிக்கக் கூடியவன். 


பீமன் பாவம், குறி தப்பி விட்டது. குருவிக்கு இடப்பக்கமாக கல் 'விஷ்' என்று போனது. 

"ங்கோத்தா, கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு.. ச்சே"


துர்வாச முனி சாந்தமாக பீமனைப் பார்த்து பகர்ந்த வார்த்தைகள் 

"தடிப்பயலே, குருவியை கொல்வது பாவம்டா.. அதோட நீ ஏதோ கெட்ட வார்த்தை சொல்கிறாய். இது தப்பு. " 


பீமன் 'போய்யா' சைகை அவரைப் பார்த்து செய்து விட்டு மீண்டும் குருவியை குறி பார்த்து கவட்டைக்கல் எறிந்திருக்கிறான். குறி தப்பி விட்டது. 


இந்த இடத்தில் வாசகர் ஒரு விஷயத்தை நினைவில் கொள்க. இதுவே அர்ஜுனனாக இருக்கும் பட்சத்தில் குறியும் தப்பாது. 

அதோடு கூட அவன் 

கெட்ட வார்த்தை சொல்பவனும் அல்லவே. 

இந்தக் கதையே நடந்திருக்கப் போவதில்லை. 

அந்தோ! 


இந்த முறையும் பீமன் குறி தவறவே அவன் இயல்பான தன்மைப்படியே இன்னும் அழுத்தமாக, சப்தமாக கத்தியிருக்கிறான். 

"ங்ங்க்க்கோத்தா, 

கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சே.. ச்சை"


துர்வாசருக்கு கண்ணு செவேல்னு ஆயிடுச்சு. 


அந்த கோபக்கார சந்யாசி 'இனி பொறுப்பதில்லை' என்று தீர்மானித்து, 

வானத்தைப் பார்த்து ஒரு பெருங்கூப்பாடு போட்டார் 

    "பகவானே,

 இந்த படுக்காளி குண்டுப்பயல

 ஒடனே துவம்சம் பண்ணு" 


வானத்தில் இருந்து ஒடனே, ஒடனே 

ஒரு பெரும் மின்னலும் இடியும் பலமாக. 


அந்தக் கணத்தில் துர்வாரசர் சுருண்டு விழுந்து கருகிப் போய் விட்டார். 


வானத்தில் இருந்து பலத்த அசரிரி 

" ங்கோத்தா, ச்சே.. கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு "


...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.