Share

Feb 18, 2021

நாகூர் ஹனிஃபா

 “இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை” பாடல் அறியாதவர் கிடையாது.


‘எல்லோரும் கொண்டாடுவோம்,அல்லாவின் பேரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி’ பாவமன்னிப்பு பாடலில் சௌந்தர்ராஜனுடன் சேர்ந்து ‘கறுப்பில்ல வெளுப்பும் இல்லே

கனவுக்கு உருவமில்லே

கடலுக்குள் பிரிவும் இல்லை

கடவுளில் பேதமில்லை’ பாடிய ஹனிஃபா


அவர் பாடிய கழக பாடல்கள் ரொம்ப பிரபலம். 


‘அழைக்கின்றார்,அழைக்கின்றார்,அழைக்கின்றார் அண்ணா’


'ஓடி வருகிறான் உதய சூரியன்'


‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’


திமுக வில் எம்ஜிஆர் இருந்த போது ஆஹா ஓஹோ புகழ் பாட்டையும் ஹனிஃபா உற்சாகமாக பாடியிருக்கிறார். 


‘எங்கள் வீட்டுப்பிள்ளை,

ஏழைகளின் தோழன், 

தங்க குணம் கொண்ட கலை மன்னன்,

 மக்கள் திலகம் எங்கள் எம்ஜியார் அண்ணன்’


எம்.ஜி.ஆர் அதிமுக ஆரம்பித்து பின், 

1973 திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது 

நாகூர் ஹனிஃபா தி.மு.க பிரச்சாரத்தில்

 பாடிய சவால் பாடல்


“நன்றி கெட்ட கிழவனுக்கும் 

நாணயமில்லா குள்ளனுக்கும்

நாங்கள் ஒன்று சொல்லுகிறோம்.

வந்து பாரும், திண்டுக்கலில் நின்று பாரும்


நன்றி கெட்ட மோகனுக்கும் நாணயமில்லா சுப்பனுக்கும்

நாங்கள் ஒன்று சொல்லுகிறோம்

வந்து பாரும், திண்டுக்கலில் நின்று பாரும்”


இந்த பாடலில் குறிப்பிடப்படுபவர்கள்

கிழவன் = எம்ஜியார்


குள்ளன் = மதியழகன் ( எம்.ஜி.ஆர் பிரிந்த போது சட்டமன்ற சபாநாயகர்)


மோகன் = மோகன் குமாரமங்கலம்

( அப்போது மத்திய அமைச்சர் )


சுப்பன் = சி.சுப்பிரமணியம் 

( அப்போது மத்திய அமைச்சர் )


இந்த தேர்தலில் நான்கு முனைப்போட்டி. 

வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் இடம் பெற்ற ஸ்தாபன காங்கிரஸ் மீது கூட மூன்றாமிடம் பெற்ற ஆளும் கட்சி தி.மு.க.விற்கு கோபமில்லை. 


அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அ.தி.மு,க. மீதும் நான்காமிடத்தில் படுதோல்வியடைந்த இந்திரா காங்கிரஸ் மீதும் தான் கடும் வெறுப்பு.


.... 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.