Share

Dec 31, 2020

சரவணன் மாணிக்கவாசகம் பதிவு

 நண்பன் சரவணன் மாணிக்கவாசகத்தின்

 இன்றைய பதிவு 


"முகநூலை ஆங்கிலப் புத்தகங்களுக்கே பல வருடங்கள் பயன்படுத்தி வந்தேன். அநேகமான ஆங்கிலப் புத்தகக் குழுக்களில் இருந்தேன். புத்தக விமர்சனம் உள்பெட்டி இலக்கிய உரையாடல்கள் என்று காலம் போனது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் தமிழில் எதுவும் படிக்கவில்லை. தமிழுக்கு இந்த முகநூலைப் பயன்படுத்துவதிலும் கூட தயக்கமே இருந்தது. அப்போது நட்பில் இருந்த 90 சதவீதத்திற்கும் மேல் உள்ளோருக்குத் தமிழ் தெரியாது. தோழர் R P ராஜநாயஹத்தின் பிடிவாதமே கடைசியில் வென்றது. அவருக்கு அனுப்பும் சிறுபதிவுகளைப் பார்த்து விட்டு, "எல்லாமே வீணாப் போகுதே, முகநூலில் போடு" என்று விடாமல் சொல்வார். அப்படித்தான் உள்ளே நுழைந்தது. 


இருபதாயிரம் பேருக்கு மேல் இருந்த ஆங்கிலக்குழுவில் குறைந்தது 100 Likes வரும். இங்கே முதல் பதிவுக்கு RPR மட்டுமே Like. அடுத்த பத்து பதிவுகளுக்கு இன்னொருவரும் சேர்ந்து எண்ணிக்கை இரண்டாகியது. ஆரம்பிக்கு முன்னரே பார்ப்பவர் எல்லோருக்கும் நட்பழைப்பு கொடுக்க வேண்டும் என்ற அறிவுரையின் பேரில் Gender bias இல்லாமல் கொடுத்தால் இனம் இனத்துடன் சேரும் என்பது போல அழைத்தஆண்களில் மட்டும் பத்து சதவீதம் என்னை உடனே ஏற்றுக் கொண்டார்கள். பெண்கள் ஒயின் பக்குவமடையும் காலத்தை எடுத்துக் கொண்டு பின் நட்பில் சேர்த்துக் கொண்டார்கள். அப்படியும் Likeகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையில். RPR Moral responsibility எடுத்துக் கொண்டு அவருடைய முகநூல் பக்கத்தில் என் முகநூல் முகவரியைப் போட்டு நன்றாக இருக்கும், படியுங்கள் என்ற விளம்பரம் கொடுத்தார். இன்னொரு நண்பர் முகநூல் என்பது என் வீட்டுக்கு நீ வந்தால் உன் வீட்டுக்கு நான் வருவேன் என்பது போலத்தான் என்று விளக்கம் கொடுத்தார். ஐநூறு நண்பர்கள் சேரும்வரை இதே நிலை தான். அப்புறம் ஒரு ஆறுமாதம் கழித்தே Likes என்பது மதிப்பெண் இல்லை என்ற விஷயஞானம் எனக்கும் கிடைத்தது. 


பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டு அமெரிக்காவில் குடிபுகுந்த பெண் ஒருநாள் திடீரென்று கேட்டார். எல்லாம் பெங்காலிப் புத்தகங்களாகப் படிக்கிறீர்களே, ஆங்கிலத்தில் படிப்பதில்லையா இப்போது என்று. சுவாரசியமான தருணங்கள், சுவாரசியமான மனிதர்களை முகநூல் அருகில் கொண்டு வந்திருக்கிறது. 

சில சின்னச்சின்ன சங்கடங்களைத் தாண்டி குறையென்று சொல்வதற்கு எதுவுமில்லை. தமிழில் புத்தகங்கள் படிப்பது அதிகமாகி இருக்கிறது, ஆங்கிலத்தில் குறைந்திருக்கிறது. 


கலாச்சார இடைவெளி விரிவாகவே உள்ளது. நகைச்சுவை உணர்வு நம்மவர்களுக்கு சற்று குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது. பீடாதிபதிகள் ஆங்கிலத்தில் பெரும்பாலும் கிடையாது. இங்கே மூன்று சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டு விட்டாலே அவரிடம் பெறும் இலக்கிய சான்றிதழை வைத்துத்தான் நமக்கு இலக்கியம் தெரிகிறது என்பது வெளியில் சொல்லமுடியும். ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே என்ற வாக்கில் இங்கே நம்பிக்கை சற்று குறைவு. தன்னை சாஸ்வதம் என்று நம்பும் எழுத்தாளர்கள், தான் மட்டுமே கெட்டிக்காரன் என்று தீவிரமாக நம்பும் முகநூல் பதிவர்கள். 


வருடாந்திரக் கணக்கு எடுப்பது போல் முகநூல் கணக்கில் கூட்டல் கழித்தலுக்குப் பிறகு கடைசியில் கூட்டல்எண்ணே மீதி இருக்கிறது. சிலரது அன்பு உண்மையில் திக்குமுக்காட வைக்கிறது. முகநூலால் என்னைப் பொறுத்தவரை வாசிப்பு குறையவில்லை. ஆனால் படிக்க வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.  பலபல வருடங்களுக்கு முன் நான் படித்து பிரமித்த ஒருவர் இப்போது என்னைப் பார்த்து பிரமிப்பதாகச் சொன்னதைக் கேட்டபிறகு நாளையில் இருந்து முகநூலே வேண்டாம் என்று போனாலும் அசைபோட இதுபோல இனியதாய் விசயங்கள் நிரம்பியிருக்கின்றன."


...

Dec 29, 2020

Sarcasm

 அம்மா வந்தாள் நாவல் முதல் பதிப்பு தீரர் சத்திய மூர்த்தியின் மகள் லட்சுமி கிருஷ்ண மூர்த்தியின் வாசகர் வட்ட வெளியீடு. 

தி. ஜானகிராமன் இந்த நாவலை சிட்டிக்கும், (கலாசாகரம் ராஜகோபாலின் மனைவி) கல்பகம் ஆகிய இருவருக்கும் சமர்ப்பணம் செய்திருந்தார். 


மிக விசேஷமான அம்மா வந்தாள் நாவல்

 மிகுந்த சலனத்தை ஏற்படுத்தியது. 


தி. ஜானகிராமனின்  மூத்த சகோதரர் மிகவும் அதிர்ந்து கோபம் கொண்டார். கரிச்சான் குஞ்சு தரும் தகவல் இது. 


மோக முள்ளை பிரமாதமாக புகழ்ந்த க. நா. சு 

அம்மா வந்தாளை உதட்டை பிதுக்கி நிராகரித்தார். 

தி. ஜா. 'கும்பகோணத்தில் உங்களுக்கு ஒரு அலங்காரத்தம்மாளை இப்ப காட்டட்டுமா?' என்று தன்னை கேட்டதாக க. நா.சு சொன்னார். 


'இருப்பு அல்ல, காரண இருப்பு தேவை' - க. நா.சு. 


டெல்லி ஆங்கில பத்திரிகை Thought. 

அதில் க. நா.சு அம்மா வந்தாளுக்கு எழுதிய விமர்சனத்தின் தலைப்பில் செய்த Sarcasm - 'Janakiraman' s mother '


பத்திரிக்கையில் தொடராக எழுதாததால் முழுமையான நாவலாக அமைந்த நாவல் என்று தனக்கு மிகவும் பிடித்த நாவல் என்று குறிப்பிட்டார். 


எல்லா தமிழ் வாசகர்களையும் சென்றடைந்த பெருமைக்குரிய நாவல் அம்மா வந்தாள். 

ஐம்பது வருடமாகிறது. 

இன்றும் படிக்கும் போது பிரமிக்க வைக்கும் சாதனையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. 


இந்த அற்புதத்தை நிகழ்த்திய மகத்தான கலைஞன் 

தி. ஜானகிராமன். 

'அப்பாவும் காசிக்கு வருவாளா?' என்று அப்பு                      அப்பாவியாக கேட்பதற்கு அலங்காரத்தம்மா பதில் 

"அப்பாவுக்கு எதுக்குடா காசி? அது ஞானசூரியன். "


அப்பு : அப்பா உன்னை விட்டுட்டு இருக்க மாட்டாம்மா 


அலங்காரத்தம்மா பதில் : சரி. அதுக்காக நான் எத்தனை நாள் தான் அவரை வதைச்சிண்டே இருக்க முடியுமா? 


காசிக்கு தண்டபாணி எதுக்குன்னு அலங்காரம் தெளிவா இருக்கா.


முப்பது வருடங்களுக்கு முன்பு சிட்டி என்னிடம் பேசும் போது செய்த ஒரு sarcastic comment. 


' பாவத்த தொலைக்க காசிக்கு போறா அம்மான்னு அப்பு நம்புறான்.அவளோட ஜாயின் பண்ண அடுத்த ஸ்டேஷன்ல சிவசு  காத்திண்டு இருக்கான். 

பாவம் அப்பு '


Sarcasm! 


ஏன் நமக்கு Sarcasm தேவைப்படுகிறது என்பதற்கு ஒரு காரணம் எப்போதோ படித்ததுண்டு. 

Because murder charges are expensive.

மௌத் ஆர்கன்

சிறுவனாய் இருந்த காலத்தில் ஒர் விளையாட்டுப் பொருளாகவே பார்த்த ஒரு வாத்தியம்

 மௌத் ஆர்கன். 

இதை ஒரு விளையாட்டு சாமானாக பயன்படுத்தாத குழந்தைப் பருவம் இருந்திருக்க முடியாது. 

The best selling musical instrument. 


பழைய படங்களில் முக்கிய இடம் பெற்ற 

இசை வாத்தியம். 


'கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்'


'பச்சை மரம் ஒன்று, இச்சைக்கிளி ரெண்டு'


'முத்துச்சிப்பி மெல்ல மெல்ல பிறந்து வரும்'


படங்களில் ஒரு கதாபாத்திரமாக மௌத் ஆர்கன் இடம் பெற்று க்ளைமாக்ஸை கலக்கும். 


'ஆசைமுகம்' எம். ஜி.ஆர் மௌத் ஆர்கன் வாசிப்பார். எம். ஜி. ஆராக மாஸ்க் போட்டு வேஷம் போடும் எஸ். வி. ராமதாஸுக்கு 

இது பின்னடைவை ஏற்படுத்தும். 


'ஷோலே' அமிதாப் பச்சன்

 மௌத் ஆர்கன் தீம் மியூசிக். 


நான் சிறுவனாக இருக்கும்போது பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பையன் எனக்கு சீனியர். பல ராமன். ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என்னிடம் 'ஆறாம் வகுப்பு ரொம்ப கஷ்டம்' என்று பயமுறுத்துவான். 


இவனால் எனக்கு இன்னொரு சிரமமும் ஏற்பட்டதுண்டு. 


Balaraman bought a mouth organ and taught himself. 


இந்த மௌத் ஆர்கன் என்னுடைய பெரிய எதிரி. 


"இப்ப நான் வாசிக்கிற சினிமா பாட்டு என்ன பாட்டுன்னு கண்டு பிடி" என்று மௌத் ஆர்கனை வைத்து வாசிப்பான். 


அவன் மௌத் ஆர்கனில் வாசிக்கிற பாட்டை நாரதர் கேட்டாலும் கண்டு பிடிக்க முடியவே முடியாது. 


நான் எவ்வளவோ பெரு முயற்சி செய்து 'இந்த பாட்டு தானே?' என்பேன். 


'தப்பு, நீ தான்டா தோத்த, 

என்னடா இந்த பாட்டு தெரியலையா? ' என்று நோஸ்கட் செய்வான். 


இந்த பாட்ட கண்டுபிடி. கண்டு பிடின்னு பலராமன் பிடிவாதம் பண்ணிக்கிட்டே இருப்பான். 


பின்னால் நிஜமாகவே மௌத் ஆர்கன் நன்றாக வாசிக்கிற எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன். 


ஒருத்தன் மூக்காலேயே வாசிச்சி அதை

' Nose Organ'  ஆக ஆக்கியிருக்கிறான். 


Mouth Organ - the most voice like instrument. 

A great instrument. 


ஸ்டீவி ஒன்டர். 

பாடகர். 

Talking Book ஆல்பத்தில 'You are the Sunshine of                  my life' 


பார்வையிழந்தவர். பிரமாதமாக பாடுவார். 

ஆனால் பாடுவதைக் காட்டிலும் ஸ்டீவி ஒன்டர்                                               மௌத் ஆர்கன் அற்புதமாக வாசிப்பார் என  சொல்வார்கள்.


https://m.facebook.com/story.php?story_fbid=2961210620759051&id=100006104256328

Dec 28, 2020

ஃப்ளாராவும் பாலியல் தொழிலாளியும்

 


ஓவியன் ரெம்ப்ரான்ட் மனைவி சஸ்கியா. 

மனைவியை தேவதையாக ரெம்ப்ரான்ட் வரைந்தான்.

 Roman goddess Flora. 


'ஹா, கட்டிய மனைவியை பெண் தெய்வமாக காண்பது பொதுப் புத்தியில் உள்ள விஷயம் தானே, இதிலென்ன புதுமை' என்பார்களோ? 


ரெம்ப்ரான்ட் இன்னொரு பிரபல ஓவியம் 

கெட்ட குமாரன் ஒரு பாலியல் தொழிலாளியுடன். 


பைபிள் கதையில் வருகிற Prodigal son. 


 Prodigal son in a brothel house. 


இதில் பாலியல் தொழிலாளியாக  தன் மனைவி சஸ்கியாவையே ரெம்ப்ரான்ட் வரைந்திருக்கிறான்.  

அந்த கெட்ட குமாரனாக தன்னையே வரைந்து கொண்டான். 


https://m.facebook.com/story.php?story_fbid=2960552367491543&id=100006104256328




Dec 27, 2020

Rembrandt 's stolen painting

 Rembrandt 


Jesus calming the storm on the Sea of Galilee


1990ல் மியூசியத்தில் இருந்து 

திருடப்பட்டு விட்ட ஓவியம். 

Stolen from The Isabella Stewart Gardner Museum               in Boston, US

The heist remains unsolved. 

மர்மம் இன்னும் விலகவில்லை. 

Art theft.


https://m.facebook.com/story.php?story_fbid=2960155907531189&id=100006104256328



மார்கழி காணும் டிசம்பரும் ஜனவரியும்

 " ஊர் புகழும் மார்கழியை 

ஏன் டிசம்பர் 

கை விட்டுப் போகிறது?" 


ஞானக்கூத்தன் கவிதை 'பிரிவு' என்ற தலைப்பில். 


மார்கழி தான் டிசம்பரை கை விட்டு ஜனவரிக்கு போகிறது. 


Something very special about December. 

Chillness and Christmas. 

இந்த டிசம்பரில் 'At Christmas I no more desire a rose ' என்றார் ஷேக்ஸ்பியர். 


It's never over though this is December. 

அடுத்த பதினொரு மாதங்கள் காட்டப்போகும் காட்சிகள். 

புதுப் பக்கங்கள் காட்டப்போகும் ஜனவரியின் சித்திரக்கனவுகள். ஜனவரியே கனவுகளின் மாதம். 

People go mad in January. Most common month for madness. 


"மாதங்களில் நான் மார்கழி" - கீதை கண்ணன். 


ஆண்டாள் " மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால், நீராடப்போதுவீர்... 

மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்" 


மார்கழி தான் டிசம்பரை தாண்டி ஜனவரியில்                                    ஆங்கில புத்தாண்டைக் காணும்

 விசேஷ அந்தஸ்து கொண்டிருக்கிறது.

Dec 26, 2020

அம்ரிதா வரைந்த கணவன் ஓவியம்

 அம்ரிதா ஷெர்-கில் தன் கணவனை ஓவியமாக வரைந்தாள். அந்த ஓவியம் இப்போது ஆன்லைன் விற்பனையில் அதிக விலைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 


10.86 கோடி விலை. 

Modern Indian Art online sale. 


அந்த ஓவியத்தில் அம்ரிதாவின் ஹங்கேரிய கணவன் விக்டர் இகன் ஆர்மி 

டாக்டர் யூனிஃபார்மில் இருக்கிறதை பார்க்க முடிகிறது. 


2015ல் அம்ரிதாவின் செல்ஃப் போர்ட்ரயிட் ஓவியம் அமெரிக்கா நியூயார்க்கில் 18.2 கோடிக்கு விற்பனையானது. 


அவள் இறந்து 80 வருடமாகிறது. 


செத்தும் தன் ஓவியங்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். 


இவளை 1913ல்பெற்ற தாய் ஹங்கேரிய யூதப்பெண். பெறுவதற்கு ஒத்துழைத்த அப்பா பஞ்சாப் சீக்கியர்.

ஃபிரான்ஸில் ஓவியம் பயின்ற போது தங்க மெடல் வாங்கியப்பெண்.

தன் இருபத்தொரு வயதில் இந்தியா தான் தன் தேசம் என்ற உணர்வு மேலோங்கி இந்தியா வந்தவள்.பெற்றோர் அப்போது சிம்லாவில்.

லாகூர் வந்தால் ஃபேலட்டிஸ் ஓட்டலில் தங்கி தன் காதல் காளைகளுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு இரண்டு மணி நேர இடைவெளி விட்டு ஒரு நாளில் அஞ்சாறு பேரை எதிர்கொண்ட பெண்.

தன்னையே  ஓவியங்களாக வரைந்து கொண்டவள். 


குஷ்வந்த் சிங் இவளைப்பற்றி : Pandit Nehru was supposed to have succumbed to her charms.

 நிம்ஃபோ மானியாக் என்று அறியப்பட்டவள்.


குளிர்காலத்தில சிம்லாவில ஒருத்தன் டின்னருக்கு கூப்பிடறான். அம்ரிதா போனா அங்க அப்படியே 

படு சூப்பரா 'ரூப்பு தேரா மஸ்தானா பியாரு மேரா தீவானா' இன்ஃப்ராஸ்ட்ரக்சர். ஆனா அவன் வெஸ்டர்ன் கிளாசிக் ரிக்கார்டை போட்டு விட்டுட்டு பேசறான்,பேசறான்...இலக்கியம்..இசைன்னு பேசிக்கிட்டே இருக்கிறான்!...வள,வளன்னு விளக்கெண்ணெய எடுத்து குண்டி கழுவன மாதிரி....ஓலப்பாயில நாய் மோண்ட மாதிரி சல..சலன்னு.... ச்சே..அசமஞ்சம்...பேச்ச நிறுத்துடா டேய்!

இன்னொரு நாள் டின்னருக்கு கூப்பிட்டான்.. இவ போனவுடனே – 

உடனே,உடனே டிரஸ்சை கலட்டிட்டு அம்மணமா கார்ப்பெட்ல படுத்திட்டா!


பிரபலஎழுத்தாளர் மால்கம் மக்கரிட்ஜ் வாலிபனாய் இருக்கும்போது அவனை ஒரே வாரத்தில் சக்கையாய் பிழிந்து குப்பையில் எறிந்த பெருமையும் அம்ரிதாவுக்கு உண்டு. 


வனத்தில மேஞ்ச்சாலும் இனத்தில அடையனும் என்று நினைத்தாளோ என்னமோ தன் தாய் வழியில் சொந்தக்கார டாக்டர் விக்டர் இகன் என்பவனைத்திருமணம் செய்து கொண்டிருக்கிறாள். 


டாக்டர் விக்டர் லாகூரில் ப்ராக்டிஸ் செய்ய ஆசைப்பட்டதால் லாகூரும் அப்போது இந்தியாவில் தானே என்று சிம்லாவிலிருந்து லாகூர் வந்தவள்.

லாகூரில் வக்கீலாக சும்மா ஈயோட்டிக்கொண்டிருந்த குஷ்வந்த் சிங் வீட்டிற்கு வந்து விசாரித்திருக்கிறாள்.“நான் இங்க புதுசா குடி வந்திருக்கேன். இங்க டெய்லர் யாரு, கார்பெண்டர் எங்க இருக்கான்,ப்ளம்பர் வேலைக்கெல்லாம் ஆள் கிடைப்பானா?”

குஷ்வந்த் சிங்கிற்கு ஏற்கனவே இந்தப்பெண் பற்றிய சகலமும் தெரியும்.


பின் சில வாரத்தில் சிம்லா அருகில் உள்ள மசோப்ராவில்  குழந்தையாய் இருந்த ராகுல் சிங்கைப்பார்த்து முகம் சுளித்தாள் “What an ugly little boy!”  . இதனால் கோபப்பட்டு குஷ்வந்த் மனைவி “ இந்த பொட்ட நாய என் வீட்டுக்குள்ள இனிமே விடவே மாட்டேன்”

பதிலுக்கு அம்ரிதா : “இவ புருஷன் குஷ்வந்த என் கூட படுக்க வைக்காம விடமாட்டேன்.”

குஷ்வந்த் ஆசையோடு எதிர்பார்த்திருந்தார்.

ஒரு நாள் அம்ரிதாவின் அப்பா வழி சொந்தக்கார சிங் ஒருவன் குஷ்வந்த் வீட்டிற்கு வந்து :‘ அம்ரிதாவிற்கு ஒடம்பு சரியில்ல. இன்னிக்கு இங்க தங்கிக்கறேன்”

மறு நாள் அம்ரிதா செத்துப்போய் விட்டாள். 


அவளுக்கு கொள்ளி போட்ட அவள் புருஷன் வீட்டிற்கு வந்தவுடன் போலீஸ் அவனை கைது செய்தது. ஹங்கேரி அப்போது ஹிட்லருக்கு சப்போர்ட் என்பதால் பிரிட்டிசார் இங்கே ஹங்கேரியன் டாக்டர் விக்டரை கைது செய்து விட்டது. டாக்டர் விக்டர் ஜெயிலுக்கு போனது ஒரு வகையில் நல்லது தான். ஏனென்றால் இவன் தான் என் மகள் சாவுக்கு காரணம் என்று மாமியார் குற்றம் சாட்டினாள்.

ஆனால் அவள் மரணம் கொலையல்ல. அவளை ட்ரீட் செய்ய மற்றொரு டாக்டரும் வீட்டிற்கு போயிருக்கிறார். டாக்டர் விக்டர் இந்த டாக்டரிடம் உடனெ என் பெஞ்சாதிக்கு என் ரத்த த்தை தரேன் – பிடிவாதம் செய்த போது அந்த டாக்டர் ‘ இருப்பா! ப்ளட் க்ரூப் பாக்க வேண்டாமா?  நான் டயக்னோஸ் செய்து பின் தான் ஒரு முடிவு செய்ய முடியும். குழந்தை வேண்டாம்னு அபார்ஷன் பண்ணியிருக்கிறே...” விவாதம் நடந்திருக்கிறது. ரெண்டு டாக்டர்கள்!விவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே அம்ரிதா மூச்சை நிறுத்தி விட்டாள்.

அவளுடைய மரணம் அசட்டையினாலும், அலட்சியத்தினாலும் தான் நடந்திருக்கிறது.

அம்ரிதா 1941ல்இறந்த போது இருபத்தெட்டு வயது. 


இவளுடைய தங்கை இந்திராவின் கணவர் சுந்தரம் இந்தியாவின் தலைமை தேர்தல் கமிஷனர் ஆக இருந்தவர். மகன் ராகுல் சிங் பதின்பருவத்தில் இருக்கும்போது குஷ்வந்த் சிங் அப்போது அம்ரிதா பற்றி அவர் பாணியில் எழுதியிருந்திருக்கிறார்.ராகுல் சிங்கை அழைத்துக்கொண்டு ஒரு பார்ட்டிக்கு போயிருக்கிறார். அங்கே இந்திராவும் சுந்தரமும் வந்திருக்கிறார்கள். “ நீ எப்படி என் கொழுந்தியா பற்றி இப்படியெல்லாம் எழுதலாம்? எங்க குடும்ப கௌரவம் என்னாவது?” என்று சுந்தரம் கத்த பதிலுக்கு குஷ்வந்த் கத்த, பார்ட்டியை விட்டே குஷ்வந்த் வெளி நடப்பு செய்திருக்கிறார். ஆனால் பலவருடங்கள் கழித்து இவரும் மகனும் இந்திராவை கசவ்லியில் விட்டு விட்டு அனாதையாய் இந்திரா அங்கே செத்து மறு நாள் பால்காரன் கண்டு பிடித்திருக்கிறான்.


சுந்தரத்தின் மகன் விவன் கூட ஓவியர் தான். விவன் குடும்ப கௌரவமெல்லாம் பார்க்காமல் “ என் பெரியம்மா அம்ரிதா ஒரு லெஸ்பியன்!” என்று சொன்னது மற்றொரு Irony.

 


AMRITA’s self-portraits were excercises in “NARCISSISM” – Khushwant Singh


.... 


Painting -  Amrita Sher - Gil's portrait of her husband.



Dec 25, 2020

Christ Child asleep on the cross

 Destined to be crucified 


Christ Child asleep on the cross. 

The another child looking at Child Jesus is

 John de Baptist 


Paintings of 

Murillo Bartolome Esteban - the popular religious painter


https://m.facebook.com/story.php?story_fbid=2957757774437669&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=2958445061035607&id=100006104256328



Madonna and Child Jesus with Anne

 Madonna and Child Jesus with Anne 


Madonna and the Infant stomp on 

the head of a serpent. 


Painting of Caravaggio


"And I will put enmity

Between you and the woman,

And between your seed and her seed;

He shall bruise you on the head,

And you shall bruise him on the heel."

 Gen. 3:15


https://m.facebook.com/story.php?story_fbid=2957765191103594&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=2958445061035607&id=100006104256328


Dec 23, 2020

பெருசுக வசனமெல்லாம் டயலாக்கு

 அந்தக் கால பெருசுக 

வசனமெல்லாம் டயலாக்கு தான். 


1976  'நீதிக்கு தலை வணங்கு' 


வி. எஸ். ராகவன் :"எங்க, என் பிள்ளைன்னு சொல்லாம வாழ்ந்து காட்டு, பார்ப்போம் "


ரோசக்கார பிள்ளை எம்ஜியார் சூளுரை : உங்க பிள்ளைன்னு மட்டும் இல்லப்பா, 

 உங்க அப்பாவோட  பேரன்னு சொல்லாமயும் என்னால வாழ்ந்து காட்ட முடியும். 


1983  'சந்திப்பு' 


விஜயகுமார மண்டி போட்டு ஸ்ரீ தேவியிடம் மன்னிப்பு கேட்கச் சொல்ல சிவாஜி கணேசன் தோரணையாக 

' Sit down ' னு சொல்வார். 

Kneel down தான சொல்லனும்.


.. 

Dec 22, 2020

யார் தான் இந்த குழந்தை



யார் தான் குழந்தை? 

- R.P. ராஜநாயஹம் 


ஜெயகாந்தனும் கண்ணதாசனும் இணைந்து பல அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்ட துண்டு. ஆட்சி கட்டிலில் ஏறியிருந்த தி. மு. க வை இருவரும் காரசாரமாக எதிர்த்தனர். அப்போதெல்லாம் தி. மு. க தொண்டர்களுக்கு ஜெயகாந்தன், கண்ணதாசன் பெயரைச் சொன்னாலே முகம் சுளித்து, எரிச்சல் படுவார்கள். 'குடிகாரப்பயலுக காந்தி கட்சில' என ஏளனம் பேசுவார்கள். இருவரின் வெளிப்படைத் தன்மை தான் இப்படி கிண்டல் செய்ய வழி வகுத்தது. 


ஜெயகாந்தன் நிகழ்ச்சிகளுக்காக செல்லும் போதெல்லாம் கண்ணதாசனுடன் அவருடைய பிள்ளைகளும் வருவார்களாம். 

அந்த பிள்ளைகள் ஜெயகாந்தனுக்கு மிகவும் உவப்பானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். 


கண்ணதாசன் பேசி உரையாடும் போது 'ஜெயா' என்று ஜெயகாந்தனை அழைப்பாராம். 


காமராஜரின் செல்லப்பிள்ளைகளாகவே இருந்தவர்கள். 


காங்கிரஸ் கட்சி 1969ல் உடைந்தது. அப்போது கண்ணதாசன் அடிக்கடி மாறிய விஷயம் காமராஜருக்கு  செய்த துரோகம் தான். காலா காந்தி புண் பட்டுப் போயிருப்பார். 


ஜெயகாந்தன் இந்த துரோகத்தை வெறுத்தார்.


இந்த அரசியல் நிகழ்வு பற்றி ஜெயகாந்தன் 'இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்' தொகுப்பிலேயே வேதனையுடன் குறிப்பிட்டார். 


" கண்ணதாசனை நான் ஒரு குழந்தை என்று நினைத்தேன். ஆனால் அவரோ என்னைத் தன்னை விடவும் ஒரு குழந்தை என்று கருதினார். எனவே, அவர் குழந்தை அல்ல என்று நான் கண்டு கொண்டேன். 


கார்ல் மார்க்ஸ், சே குவேரா வரை கவியுள்ளமும் கவிதை சஞ்சாரமும் கொண்டு மொழிக்காதலர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். 

ஆனால் கண்ணதாசன்? 

போக ப்ரியர், நிலையான புத்தியில்லாதவர்"


‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி’ என்று காமராஜரிடம் சரணாகதி அடைந்தவர் இரண்டு வருடங்களுக்குப் பின், காமராஜருக்கு இக்கட்டான சூழ்நிலையில் ஆதரவாக நில்லாமல் கண்ணதாசன் இந்திரா காங்கிரஸில் இணைந்ததெல்லாம் 

ஜெயகாந்தனை எப்படி வருத்தப்படாமல் இருக்கச் செய்யும்? 


உடன்பாட்டு பதில்களும் எதிர் மறை கருத்துக்களும் எல்லா நிலைப்பாடுகளுக்கும் எப்போதுமே உண்டு. 


...... 


புகைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் ,  இயக்குனர் சி. வி. ராஜேந்திரன், கண்ணதாசன், ஜெயகாந்தன், எம். எஸ். வி

(நன்றி : The Hindu)

Dec 21, 2020

R. P. ராஜநாயஹம் பற்றி பரமசிவம் எஸ்

 பரமசிவம். எஸ் எழுதிய பின்னூட்டம் 


எனது 40 வருட ஆதர்சங்களை விட

 R.P. ராஜநாயஹம் ஏன் இவ்வளவு வசீகரிக்கிறார் என்பதை யோசிக்கிறேன்.


முதலாவது...விஷய ஞானம்.இது நல்ல எழுத்தாளர்களின் பொது அம்சம் எனினும், உலக இலக்கியம், தமிழ் இலக்கியம்,சினிமா, உலக சினிமா,இசை,அரசியல், உலக மற்றும் இந்திய வரலாறு,புராணம்,இதிகாசம், அறிவியல்,இவையெல்லாம் போதாது என்று மிக முக்கியமாக ஜோதிடம் என்று எல்லாத்  தளங்களிலும் சர்வ சகஜமாக நுண்ணிய புள்ளி விவரங்களையும் தேவையான இடத்தில்  எந்த நொடியிலும் சொல்லக்கூடிய  இவரது நினைவாற்றல் வேறு யா....................ருக்குமே அமைந்திடாத ஒன்று.


        கிரிக்கெட் ரசிகர், இசை ரசிகர்,திரைப்பட ரசிகர்களுக்கு நடுவே தம் வாழ்வையே தமக்கான விருந்தாக்கிய மிகச்சிறந்த ரசிகர் ..சலிப்பும் சோர்வும் இல்லை.


எல்லாம் தெரிந்த அகம்பாவம் இல்லை. 

எதுவுமே தெரியாதது போல பாவனை செய்து செயற்கையான அடக்கத்தை முகமூடி ஆக்கி அதையே தனது பிரபல்யத்திற்கான முக்கிய காரணி ஆக்கும் புத்திசாலித்தனமும் இல்லை.


அரைக்காசு உத்தியோகம் என்றாலும் அரண்மனை உத்தியோகம் என்று இருக்கும் காலத்தில்..அரசு வேலைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யச் காத்திருப்போர் மத்தியில்  மிக நல்ல வேலையை மிகச் சாதாரணமாகக் கைகழுவியவர்...


பொருளாதார ரீதியான சமூக அந்தஸ்து,புகழ்,வசதியான வாழ்க்கை போன்ற மனிதனுக்குரிய ஆசைகள் எதுவும் இல்லாத வாழ்க்கையை அதன் போக்கில் ஒவ்வொரு நொடியும் ரசிக்கும் ரசனை மிகுந்த துறவி இவர் ..


சிலரைப் பார்த்து இவர் போல வாழ்க்கை அமைந்து இருக்கக் கூடாதா என்ற எண்ணம் எப்போதாவது வந்து போகும் ..ஆனால் இவரது மனோபாவம் நமக்கு அமைந்து இருக்கக் கூடாதா என்ற ஏக்கம்  ராஜநாயஹம் சாரைப் பார்த்து ஏற்பட்டது...

இந்த எளிய ரசனை மிகுந்த வாழ்க்கை யாருக்கும் அமையாது ..இப்படி எல்லோரும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் உலகத்தில் ஆனந்த வெள்ளத்திற்குப் பஞ்சம் ஏது?


இவரது எழுத்துக்கள் எல்லாமே எவ்வகையிலும் அடங்காத புதுவித இலக்கியம் எனவே எனக்குப்படுகிறது..


மேலோட்டமாகப் பார்த்தால் பொழுது போக்குக்கான எழுத்து என்று தோன்றும் ..ஆனால் அந்த நான்கு வரிகளில் எவ்வளவு உழைப்பும் ஞாபக சக்தியும் ரசனையும் அடங்கிக் கிடக்கிறது என்பதை யோசித்தால் பிரமிப்பு மட்டுமே மிஞ்சுகிறது ..


வலிந்து வெளிப்படுத்தப்படும் ஞானம் அதற்கான மதிப்பை இழக்கிறது ..தானாக வெளிப்படும் ஞானம் அதற்கான மதிப்பைப் பெறுகிறது ..ஆனால் தேடி வந்து புரிந்து கொள்ளப்படும் ஞானம் மிக உயரிய மதிப்பைப் பெறுகிறது ..நீங்கள் எந்த இடத்திலும் உங்களை வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை. உங்களது ப்ளஸ் மைனஸ் இரண்டுமே இதுதான் .. 

இந்த மிக அவசரமாக எழுதப்பட்ட பதிவு..ராஜநாயஹம் சாரைப் பற்றி இன்னும் அறிந்துகொள்ள வேண்டும்.இவரது ஆளுமையை விளக்கவல்லது புத்தகமே...கட்டுரையால் இயலாது...

Paramasivam S


.. 


07.01.2021


Rajanayahem R.p. உங்களது பதிவுகள் தாமாகவே அதற்குரிய மதிப்பைப் பெற்றுவிடுகின்றன .பிரபலம் அடைந்தும் விடுகின்றன ..ஆனால் நீங்கள் பிரபலமடைய வில்லையே? நீங்கள் உங்களை எந்த இடத்திலும் வலிந்து வெளிப்படுத்திக் கொள்வதே இல்லை. இது பிரபல்யத்தையோ பணத்தையோ பெரிதாகக் கருதாத உங்களின் பெருந்தன்மை.  இதைத் தவிர. தங்களின் மேதைமை காரணமாக அமைந்த பரந்த உள்ளம் ஒரு காரணம்.


பணம் மட்டுமே தமக்கான அடையாளமாக எதேச்சையாக அமைந்து அறிவோ அல்லது அறிவின் தேடலோ அமையப் பெறாத சில பேர்  பிரபல்யத்தை அடையத் துடித்தால் என்ன ஆகும் ?இது போன்ற விஷயங்கள் தான் நடக்கும். என் எழுத்தாள நண்பரிடம் ஒருவர் கேட்டாராம். "ஒரே நாளில் நான் பிரபலமாக என்ன வழி?

       "ஏன் பிரபலமாக வேண்டும்?" என்ற எழுத்தாளரின்  எதிர்க்கேள்விக்கு பதிலே இல்லையாம்.


யோசித்துப் பார்த்தால் புகழ் ஆசைதான் காரணம்.


எங்களது கோவில்பட்டி திருநெல்வேலி தூத்துக்குடி ஏரியாவில்  தேங்காயை வைத்துச் செய்யும் சொதி என்கின்ற மிக மிகச் சுவை வாய்ந்த குழம்பு எங்கள் குடும்பங்களில் மிக மிகப் பிரபலம். நண்பர்கள் எங்கள் வீடுகளுக்கு வந்தால் இதை செய்து தரச் சொல்வார்கள். ஆனாலும் பிறரின் வீடுகளில் இதைச் செய்வதே இல்லை ..சொதிக் குழம்பு சாம்பாரைவிட மிகச் சுவை வாய்ந்தது ஆயினும் பிரபல்யம் குறைவு.தங்களைப் போல...


எனவேதான் இந்நிகழ்வுகள் ..தங்களின் பேஸ்புக் பதிவுகள் அனைத்தையும் முறைப்படி புத்தகம் ஆக்குங்கள்.சுஜாதாவின் இடம் காலியாகவே உள்ளது.சொல்லப்போனால் அவரால் தொட முடியாத உயரங்களை உங்களால் தொட முடியும் ..


பிரபலங்களோடு போட்டோ எடுத்து ஒரு போட்டோவில் உலகப்புகழ் அடையத் துடிக்கும் புகழ் வெறியர்கள் அனேகம். (அப்போது அவர்கள் முகத்தில் ஒரு இளிப்பு இருக்குமே... பார்க்க சகிக்காது.)..தங்களிடம் அது கூடக் கிடையாது.சொல்லப்போனால் ஜெமினி கணேசன் அவர்களுடனான போட்டோவில் அவர் முகத்தில்தான் ரசிகக்களை தெரியும்..குருவிமண்டையனுடனும் சரி..ஜெமினிகணேசனுடனும் சரி..அகம்பாவமோ போலியான பணிவோ இல்லாத ஒரே R.P. ராஜநாயஹம் தான்.. 


உங்களின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்யலாம் யாரும்...உங்களைப்போல் ஞாபக சக்தியும் ஞானமும் பல்துறை அறிவும் .வாழ்வை சுமை எனப் பார்க்கும் பொதுப்புத்தி அமைந்த இந்த உலகில் வாழ்வை உங்களுக்கான பரிசாக உங்களுக்கான விருந்தாகக் கொண்டாடும் உங்களைக் காப்பியடித்தல் சிரமம்..


உங்கள் படைப்புகளை முறைப்படுத்துங்கள் சார். அவை மிக மிக மிக மதிப்பு வாய்ந்தவை. ஆனந்தரங்கம் பிள்ளை தான் டைரி எழுதும்போது பின்னாளில் அது தமிழ் இலக்கியத்தின் பொக்கிஷமாகும் என நினைத்துப்பார்த்தா எழுதினார்?அந்தத் தகுதி தங்களின் எழுத்துக்கு உண்டு.


தத்துவம், காதல், அரசியல், வாழ்வியல்,தீவிர இலக்கியம்,அழகியல் எழுதும் எழுத்தாளர்கள் உண்டு.எந்த வகையிலும் சாராத புதிய வகை இலக்கியம் தங்களது எழுத்து.


சினிமா எனும் பூதம் என்னும் புத்தகம் ராஜநாயஹம் என்ற ஞானராட்ஷசனின் பிரம்மாண்டத்தை உணர்த்துவது.அதைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.

 அழகான சிலையாக இருந்தாலும் கருவறையில்இருந்தால் தான் மதிப்பு.இல்லாவிட்டால்  பைரவர்கள் காலைத் தூக்கும் பொருளாகிவிடும்.

உங்கள் உயரத்தை நீங்கள் முதலில் உணருங்கள். உங்களது எழுத்தின் தரத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.அவற்றைப் புத்தகமாக்குங்கள்.இது வருங்கால சந்ததியினருக்குத் தங்களின் கொடையாக என்றென்றும் நிலைத்திருக்கும்.





Dec 20, 2020

பொன்னாடை, மாலை, பூச்செண்டு

 R. P. ராஜநாயஹம் ஏற்கும்

 பொன்னாடை, மாலை, பூச்செண்டு 


பா. அசோக் : யாரிடமெல்லாம் என்னால் கற்றுக் கொள்ள முடிகிறதோ.. 

யாரிடம் என்னால் அய்யம் தெளிவுற முடிகிறதோ.. 

யாரிடம் நான் கெட்ட பெயர் வாங்கக் கூடாது என பயந்து நிற்பேனோ.. 

யாரிடம் என்னா எவ்வித எதிர்பார்ப்புமின்றி அன்பை மட்டும் பெற முடிகிறதோ.. 

அவர்களை என் தந்தைக்கு ஒப்பாகவே அன்பு செய்கிறேன். 

என் ஞான தகப்பன் R. P. ராஜநாயஹம். 


கோபிநாத் :  நான் உங்கள் எழுத்துக்களுக்கு ரசிகன் என்பதும் திருப்பதி லட்டு தித்திக்கும் என்பதும் ஒன்று. 


Prof. Fazlulla Khan : I have known you always to be

  a man with cosmopolitan views. 


Ravikumar M. G. R : சிவாஜிக்கு நடிப்பு.

 உங்களுக்கு எழுத்து. 


Raja Ramasamy : எழுத்தின் சுவாரசியம் உங்களால் புது பரிமாணம் கொள்கிறது. நையாண்டியாக பேசி விடலாம். ஈசி. அதை எழுத்தில் முழுவதுமாக நிரப்புவது மிக கடினம். உங்கள் பேனா செய்கிறது. 

நினைவாற்றல் கடல் நீங்கள். 


Ekambaram : அறிவு களஞ்சியம். 

திரைப்படத் துறையில் எழுதி பட்டம் வாங்காத

 Ph. D. அவர். The ultimate in special writings. 

ஓர் அகராதியை புரட்டினால் எளிதில் ஒரு பொருள் விளங்கும். இவர் எழுத முழு பொருளும் விலாவாரியாய் புரியும்.. எழுத்தின் சர்வகலாசாலை அவர். 

ராஜநாயஹம் வாழும் கலைக்களஞ்சியம். 

பாதுகாக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம். 


Srivathsan : எனக்கு எப்பவுமே நீங்கள் ஓர் ஆச்சரியம். பரந்து பட்ட அறிவு என்று கேள்வி தான் பட்டிருக்கிறேன். ஆனால் அதற்கு நிகழ்கால உதாரணம் நீங்கள் தான் சார் 


Shan Bommiah : கவிதை நடை போங்க.. 


Baskar M : என்ன வகை மனிதர் நீங்கள்? 

ஈஸியாக மறக்க முடியவில்லை உங்கள் பதிவுகளை. பல்கலை ஆய்வரங்கம் நீங்கள். 


Mathi Mathi : சார், நீங்கள் எழுதுவதையெல்லாம் படித்து விட்டு, வெறும் தம்ஸ் அப், ஹாட்டின் மற்றும் லாஃபிங் ஸ்மைலியுடன் react பண்ணி விட்டு போய் விடுவது என்பது எனக்கு பெரும் குறையாகத் தோன்றுகிறது. 


Paramasivam S : நாற்பது வருடங்களாக என் ஆதர்சமாக இருக்கும் எழுத்தாளர்களை விட நீங்கள் என்னை வசீகரிக்கிறீர்கள்.. இவ்வளவு நாட்கள் எப்படி நீங்கள் என் கண்களுக்குத் தட்டுப்படவில்லை?  ஆச்சரியம். 


Vasudevan Kathamuthu 

வாசுதேவன் காத்தமுத்து : ராஜநாயஹம் 

ஒரு களஞ்சியம். 

அதை விட முக்கியம் அவருடைய யதார்த்த குணம். நேர்மை. 

எனக்குத் தெரிந்து சாரு நிவேதிதா தான் அவரை சரியாக கணித்தவர். 

'எல்லாவற்றையும் கொடுத்து விட்டு 

பாரதியைப் போல வாழ்பவர்'.

Dec 19, 2020

The Significant other

 The Significant Other

- R.P.ராஜநாயஹம்


திரையுலகத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அந்தக்கால சங்கீத உலக Gossips. 


ஜி.என்.பாலசுப்ரமண்யம் ’சகுந்தலை’ படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் ஜோடியாய் நடித்த போதே இருவருக்கும் காதல், தொடர்பு என்று சங்கீத உலகம் முணுமுணுத்தது.


'சகுந்தலை 'படத்தில் ஆணழகன் ஜென்டில்மேன்                  ஜி.என் பாலசுப்ரமணியமும்

 இசைக்குயில் எம் .எஸ் சுப்புலக்ஷ்மியும் இணைந்து பாடும் காதல் பாடல்.


எம் எஸ் : பிரேமையில் யாவும் மறந்தேனே


ஜி என் பி : ஜீவனமுனதன்பே


எம் எஸ் : என் அன்பே


ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.


ஜி.என்.பியை அவருடைய சிஷ்யை எம்.எல்.வசந்தகுமாரியுடன் இணைத்தே பேசப்பட்டதுண்டு.


There is an optical illusion about every celebrity.


நாதஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம்பிள்ளைக்கு 

எம்.எஸ் மீது இருந்த sexual obsession. தூக்கிக்கொண்டு போய்விட்டார். 

அப்புறம் தான் கல்கி சதாசிவம் கல்யாணம் செய்து கொண்டார் என்று 

மிகப்பெரியவர்களே இன்று சொல்வதுண்டு.


அந்தக்காலத்தில் Me too பரபரப்பு புகார்களுக்கு முகாந்திரம், மார்க்கமிருக்கவில்லை?


மதுரை மணி ஐயர்.


தி.ஜானகிராமன் இவருடைய ரசிகர். 


இதை திருச்சி ரசிகரஞ்சனி சபாவில் மெம்பராய் இருந்த போது வையச்சேரி தேவாரம் பாலசுப்ரமண்யம் என்னிடம் உறுதிப்படுத்தினார்.


 எனக்கு சிலிர்ப்பாய் இருந்தது. தி.ஜா போலவே எனக்கும் மதுரை மணி ஐயர் பாட்டு 

ரொம்ப பிடிக்கும். 


அவருடைய பாடல் கேசட் இருபதுக்கு மேல் என்னிடம் இருந்தன. அவர் குரலில் வராளி கா வா வா, கரகரப்ரியாவில் சக்கனி ராஜா, மோகனம் கபாலி, சௌராஷ்ட்ரா ராக சூர்யமூர்த்தெ, இன்னும்.. எப்போ வருவாரோ, தாயே யசோதா..இப்படி கேட்க காதுகளுக்கு என்ன பாக்யம்.


மதுரை மணி ஐயர் இந்த பூவுலகில் ஒரு ஐம்பத்தாறு வருடங்கள் தான் இருந்தார்.

 ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கையில் அந்த சாதனை இன்னமும் சுகிர்தமாக, சாசுவதமாக.


பிரபல கல்லூரி முதல்வராய் இருந்த ஒரு மாமி 

ஒரு தகவலை சொன்னார்.

அவர் ரிட்டயர் ஆன பிறகு இன்னொரு தனியார் கல்லூரியில் முதல்வரானார்.

 அவருடைய இளைய சகோதரர் கூட எனக்கு கல்லூரியில் ஆசிரியராய் இருந்திருக்கிறார்.


அந்த கல்லூரி முதல்வரின் பெற்றோர் 

மதுரையில் பெருமாள் கோவில் தெருவில் குடியிருந்திருக்கிறார்கள்.

 குழந்தையாக இருக்கும் காலம் தொட்டு 

மதுரை வாசி அவர்.


 கல்லூரி முதல்வர்  சிறுமியாக ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கிற காலத்தில் அங்கே பக்கத்தில் ஒரு வீட்டில் ஒரு மாமி இருந்திருக்கிறார். அவர் சங்கீதம், பரதநாட்டியம் இவற்றில் தேர்ந்தவர். குழந்தைகளிடம் மிகவும் அன்பாய் இருப்பார். குழந்தையாய் இருந்த இந்த முதல்வருக்கு அந்த பக்கத்தாத்து மாமியை மிகவும் பிடிக்குமாம். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தானே.


ஆனால் ஒரு சிக்கல். பிரின்சிபால் மாமியின் தாயாருக்கு அந்த குறிப்பிட்ட பக்காத்தாத்து மாமியை சுத்தமாய் பிடிக்காதாம். குழந்தையை

 “ எங்கடி போயிருந்தே அபிஸ்டு..சொல்லேன்டி ஜடம்” ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை முகம் கலவரமாகி என்ன சொல்லலாம் என்று தவிக்கும் போதே “வாயில என்னடி பட்சணம் ஒட்டிண்டிருக்கிறது. ஏண்டி அவ ஆத்துக்குத் தானே போயிருந்தே..கிரகசாரம்.” குழந்தை பயத்தோடு தலையை ஆட்டும். உடனே அதன் அம்மா தொடையில் நல்லா கிள்ளி விட்டு 

“ இனிமே அவ ஆத்துப்போவியா? எத்தன தடவ சொல்லியிருக்கேன். போகாதடின்னு..ஏண்டி” என்று மீண்டும் நறுக்கென்று தொடையில் கிள்ளி விடுவாராம்.


நான் கேட்டேன். “  ஒங்க தாயாருக்கு ஏன் அந்த பக்கத்தாத்து மாமி மேல இவ்வளவு துவேசம்”


காலேஜ் பிரின்சிபால்  சொன்னார். “ அந்த மாமி சங்கீத வித்வான் மதுரை மணி ஐயரின் Concubine. மணி ஐயர் அந்த மாமியை வச்சிண்டிருந்தார். His significant other. 


அவ ரொம்ப நல்லவ. எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா என்ன செய்ய. Social Stigma. குழந்தையா இருக்கறச்ச எனக்கு என்ன தெரியும். அப்புறம் ரகசியமா தான் அம்மாவுக்கு தெரியாம தான் அந்த மாமியை போய் பார்ப்பேன். அவ விளயாட்டு ஜாமானெல்லாம் எனக்கு தருவா. பட்சணமெல்லாம் ரொம்ப ருசியாயிருக்கும். நல்லா நெறய்ய கதைகள் சொல்வா. ரொம்ப நல்ல மாமி..”

இதை சொல்லும்போதே கல்லூரி முதல்வரின் கண்கள் குளம் கட்டி விட்டன. 


’’மணி ஐயருக்கு குஷ்டம் உண்டு. அப்படியிருந்தும் எங்க தெருவில் இருந்த பக்கத்தாத்து மாமிக்கு அவர் மீது பிரேமை என்பதை விட பக்தி.. 

ரொம்ப நன்னாயிருப்பா. 

எவ்வளவு பெரிய தியாகம்”


தி.ஜானகிராமன் “மணம்” என்ற ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் என்பது நினைவுக்கு வந்தது.


அந்த ’மணம்’ கதையில் வருகிற நீலா என்ற துணை நடிகை ஒரு  Sex worker.


அவள் ஒரு இரவு இருட்டறையில்  சந்தித்த மனிதர் குஷ்ட ரோகி என்பது மறு நாள் தெரிய வரும்போதே அதிர்ச்சியாகி அருவருப்பினால் தவிப்பாள்.

நீலாவுக்குநெஞ்சை அடைத்து , தொண்டை வலித்து, கண்ணீர் தளும்பி, உதட்டை கடித்து, அழுகை பீறிக்கொண்டு வரும்.

ஒரே ஒரு இரவுக்கே அப்படி.


Madurai Mani Iyer's significant other was a saint, precisely.

மதுர மணி


"அடுக்குக் காசித் தும்பை மலரில் புள்ளிகள் கொண்ட வகை உண்டு. அந்தப் புள்ளிகள் குறைகளல்ல. மலரின் அழகைப் பெருக்குபவை. மணி ஐயரின் கத்தரிப்பு நடை கூட ஒரு தனி அழகாகவே காலப்போக்கில் அமைந்து விட்டது" 


- தி. ஜா 


தி. ஜானகிராமனுக்கு பிடித்த சங்கீத வித்வான்                மதுரை மணி ஐயர் என்பதை நான் தெரிந்து கொள்ள பல வருடங்களாக விசாரித்து, 

திருச்சி ரசிக ரஞ்சனி சபாவில் மெம்பராய் நான் இருந்த போது வையச்சேரி தேவாரம் பாலசுப்பிரமணியம் தான் சொன்னார் : 'ஜானகிராமனுக்கு மதுர மணி ஐயர தான் ரொம்ப பிடிக்கும்.' 


எனக்கும் ஃபேவரிட் மதுரை மணி ஐயர் தான். அதனால் ஆச்சரியம், சந்தோஷம் இரண்டும். 


'நாத லோல' மதுரை மணி ஐயர் பற்றி 

தி. ஜானகிராமன் 1960 ல் எழுதிய கட்டுரை பகுதியாக

உமா சங்கரியின் "மெச்சியுனை..." நூலில் 

இடம் பெற்றுள்ளது. 


தி. ஜா லயித்து எழுதியிருக்கிறார் : "இவ்வளவு சக்தி அவர் சங்கீதத்தில் ஓங்கி நிற்பதன் ரகசியம் என்ன? அவருடைய சுருதி உணர்வும் ஸுஸ்வர கானமும், அழுத்தமாக உள்ளே இழைந்து அமைந்து விட்ட லய உணர்வும் தான்.. 


.. அதன் விச்ராந்தி,  சுருதி, இரண்டிலும் உள்ள நிச்சயமான பிரக்ஞையினால், அவருடைய புகழ் பெற்ற, பிரமிக்க வைக்கிற ஸ்வரகல்பனைகளில் கூட ஒரு அமைதி விரவி நிற்கிறது. 


வெட்டி வெட்டி, கத்தரித்துக் கத்தரித்துப் பாடுகிறார் என்று சிலர் சொல்லலாம். அது ஒரு கலைஞனின் நடை, தனக்காக வகுத்துக் கொண்ட நடை. அது கலைஞனின் உரிமை. ஒரு குறையையே நிறைவாகவும் அழகாகவும் மாற்றி அமைக்கக் கூடிய ஆற்றல் ஒரு மேதைக்கு உண்டு.. 


மதுர மணி ஐயரின் சங்கீதம் உன்னதமானது என்று இன்னொரு வகையிலும் சொல்ல வேண்டும். அது தெய்வத்தின் முன் நிற்கும் ஒரு பரிசுத்த நிலையை, ஒரு ஆனந்த மோன நிலையைப் பல சமயங்களில் உண்டாக்கியிருக்கிறது."


Dec 18, 2020

எடப்பாடிக்கு சிரித்த முகம்

 முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிரித்த முகம். 

  சரி. 


எம்.ஜி.ஆர் மீது சரோஜாதேவிக்கு 

ஏதேனும் கோபம் இருக்குமோ? என்னவோ? 

கோபம் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? 

அதை இவ்வளவு நாள் கழித்து இப்படி காட்டவேண்டுமா? 

எம்.ஜி.ஆர் மாதிரியே தான்                                                                                         எடப்பாடி கூட சிரிக்கிறாராம்.


MEMORY DISORDER?


எம்.ஜி.ஆர் சிரிப்பு பற்றி 1960களில் தமிழ்வாணன் கேள்வி பதிலில் -  ”ஒரு குழந்தை முன் பல புகைப் படங்களைப் போட்டுப்பாருங்கள். அந்த்க் குழந்தை எம்.ஜி.ஆர் படத்தைத் தான் எடுக்கும். ஏனென்றால் எம்.ஜி.ஆரிடம் தான் உண்மையான சிரிப்பு இருக்கிறது.”


M.G.R's Beaming Smile!


மீள் பதிவு 2018 

Dec 17, 2020

கனவில் வரும் ராஜநாயஹம்

 கனவில் வரும் ராஜநாயஹம் 


சென்ற 2019 டிசம்பர் மாதம் 

இத்தாலியிலிருக்கும் ஜெயந்தன் நடராஜா 

எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார். 


"Dear Mr Rajanayahem, 


I had a dream meeting you

 in a temple in India! 


I respect your writing style 

and your knowledge! 


Thank you. 


I don't know why I had this dream! 


Kind regards, 

Jeyandan 


இந்த 2020 டிசம்பரில் 

திருப்பூரில் இருந்து கார்மேக ராஜா சுப்ரமணியம் 

என் பதிவில் எழுதியிருக்கும் கமெண்ட்

   

"நேற்று என் கனவில் வந்தீர்கள் சார். 

பேரரசனுக்கு உண்டான மிடுக்குடன் இருந்தீர்கள் "


...

இவ்விருவரின் ரசிகர்கள்

 கமல் ஈகோ பார்க்காமல் ரஜினியுடன் கூட்டு சேரத்தயார்.

 ரஜினி இன்னும் respond பண்ணவில்லை. 

ஒரு வேளை இருவரும் கூட்டணி அமைத்தாலும் 

இவ்விருவரின் ரசிகர்கள் எப்படி சுமுகமாக ஏற்று இணைந்து தேர்தல் பணியாற்றுவார்களோ? 


என்னுடைய மாப்பிள்ளை ஒருவர்

 ரஜினியின் தீவிர ரசிகர். 

அவரிடம் கிண்டல் செய்ய வசதியாக 

நான் கமலின் தீவிர ரசிகர் என்கிற மாதிரி

 ஒரு முரட்டு முகமூடியை அணிந்து கொண்டு தான் சற்று மிகையான பாவனைகளுடன்

 பேசுவது வழக்கம்.


அப்போது ’மைக்கல் மதன காமராஜன்’ படம் வெளியாகியிருந்தது.


கடை வீதியில் பஸ் ஸ்டாண்ட் ஒட்டி இருந்த அவருடைய கடையில் அவரை சந்தித்த போது

 “ அத்தான், வாங்க, உள்ள வாங்க”


“ மாப்பிள்ள, எங்காளு ( கமல்) படம் ரிசல்ட் பத்தி ஏதாவது கேள்விப்பட்டீங்களா? யாராவது படம் பாத்திருப்பாங்களே” பரிட்சை  ரிசல்ட் கேட்க தவிக்கும் மாணவ சிறுவன் போல நான் கேட்டேன்.


உடனே அவர் முகம் சற்று சோகமாக மாறியது. நான் எதிர் பார்க்கிற நல்ல ரிசல்ட் கிடையாது என்று அர்த்தம்.


ஒரு பெரு மூச்சு விட்டு “ உள்ள வாங்களேன். சொல்றேன்”


நான் சற்று அவசரமாக பதற்றத்துடன் “ என்ன மாப்பிள்ள?” என்றேன்.


”சிவகாசி,ராஜபாளையம் இரண்டு ஊர்களிலும் போய் படம் பார்த்துட்டு வந்துட்டாங்கே…. உங்க ஆளு ஒர்த்தன் (ஒரு கமல் ரசிகன் என்று அர்த்தம்) இப்பத்தான் வந்து அழுதுட்டு போறான்.”

 சற்று நிறுத்தி விட்டு கடைக்கு வந்திருந்த கஸ்டமர்களை கவனிக்க ஆரம்பித்து 

காசு வாங்கிப்போட ஆரம்பித்து விட்டார்.


என்னை அவர் இடையிடையே பார்க்கும்போதெல்லாம் நான் முகத்தில் -----’சீக்கிரம் சொல்லுங்க மாப்பிள்ள’ ------- பாவனையில் தவிக்க ஆரம்பித்தேன்.


கஸ்டமர்களை அனுப்பி விட்டு திரும்பி 

“ எத்தான், நீங்களே சொல்லுங்க…

 ஒர்த்தன் பேரு மைக்கலாம். 

இன்னொருத்தன் பேரு மதனாம்.. இன்னொருத்தன் காமன்..

 நாலாவது ஆளு ராஜனாம்…

 இதெல்லாம் என்ன நல்லாவா இருக்கு? சொல்லுங்க நீங்களே சொல்லுங்க?”


பதில் இப்படி வரவேண்டும் என்பது இந்தக்கேள்வியில் உள்ள கொக்கி - “ ஆமா நல்லாவே இல்லையே ”


நான் பதிலே சொல்லாமல் நகத்தை கடித்தேன்.


அவர் எனக்கு ஆறுதல் சொல்லும் பாவனையில் பெருந்தன்மையுடன் “ எத்தான், ராமராஜன் படம், விஜயகாந்து படம் எல்லாம் ஓடும்போது 

உங்காளு படம் ஓடுனா எங்களுக்கு ( ரஜினி ரசிகர்களுக்கு) என்ன வேண்டாம்னா இருக்கு”


என் கவலையான முகத்தை அவரும் வரவழைத்துக்கொண்ட இறுக்கமான முகத்துடன் பார்த்து சொன்னார் “ உங்காளு சரியில்லை அத்தான். நான் நடு நிலையா சொல்றேன் பாத்துக்கங்க”

நடு நிலையாம். 


அவர் எதிர் பார்த்த படி நான் முகத்தை ரொம்பத்தொங்க போட்டுக்கொண்டு

 “ எனக்கு என்னன்னோ வருது மாப்பிள்ள “


ரஜினி ரசிகரான மாப்பிள்ள “ நீங்க ரஜினி ரசிகரா மாறுங்க அத்தான். என் ஃப்ரெண்ட்ஸ் எத்தன கமல் ரசிகங்க நான் சொல்லி ரஜினி ரசிகரா மாறிட்டாங்கெ தெரியுமா”

“ மாப்பிள்ள, நான் அனுமார் மாதிரி மாப்பிள்ள. மறந்தும் புறம் தொழ மாட்டேன். மாட்டவே மாட்டேன்.”


”புரியலத்தான்…”


”நான் எப்பவும் கமல் ரசிகன் தான். 

மாறவே மாட்டேன்.”


“ ச்சே, உங்களயெல்லாம் திருத்தவே முடியாதுத்தான்..”

என்னுடைய மாப்பிள்ளையாவே இருந்தாலும்         இந்த ரஜினி ரசிகரோட சேந்து நான்                   எப்படிங்க தேர்தல் பிரச்சார வேலை பாக்க முடியும்? 

.. 


..................


Dec 16, 2020

அரசியலுக்கு புது புது வரவுகள்


பெரிய அரசியல் மாற்றம் எல்லாம் திட்டமில்லை போலிருக்கிறது. எம். ஜி. ஆரின் தொடர்ச்சி என்ற தன் பிரமையை கமல் போட்டு உடைத்து விட்டார். 

எம். ஜி.ஆர் மகத்தான தலைவர் என்று ரஜினி ஏற்கனவே சென்ற வருடம் சண்முகத்தின் பல்கலைக் கழகத்தில் புகழ்ந்து தள்ளினார். 


இருவருக்குமே எம். ஜி.ஆர் ஆட்சி பொற்கால ஆட்சி என்ற தீர்மானம் இருந்து கொண்டு தான் இருக்கிறது போலும். 


எம். ஜி. ராமச்சந்திரன் என்ற நடிகர் மீது இவர்களுக்கு சீனியர் என்ற பக்தி இருந்து விட்டுப் போகட்டும். புரிந்து கொள்ள முடிகிறது. 

ஆனால் புரட்சித் தலைவரை அரசியல் சீனியராக, குருஜியாக வரித்துக்கொள்ள முயல்வது

 - முடியுமா என்பது ஒரு பக்கம் இருக்க, 

ரஜினியின் சிஸ்டம், கமலின் நேர்மை பிரச்சாரத்திற்கே எதிரானதாயிற்றே. 

விஜயகாந்த்தின் 'கறுப்பு எம். ஜி.ஆர்' பிரமையின் பிரதிபிம்பம் தானே இது? 


எம். ஜி.ஆர் ஆண்ட காலங்களில் சினிமாவில் கொடி கட்டிக்கொண்டிருந்த ரஜினியும் கமலும் அதன் பிறகும் முப்பது  வருடம் தாண்டி

 தாக்குப் பிடித்த சீரான சாதனையாளர்கள். 


அரசியலில் வெற்றி பெற எம். ஜி.ஆர் நிழல் தேவைப்படுகிறது. 


கமல் ஹாசன் தன் நெருங்கிய நண்பர் ரஜினியோடு ஈகோ பார்க்காமல் சேரத்தயாராக இருக்கிறார். இப்படி சொன்னதில் தன்னுடைய பகுத்தறிவு ஃபர்னிச்சரை தானே உடைத்துக் கொண்டுள்ளார். 

ரஜினி இப்படி கமலோடு சேரத் தயார் என்று மூச்சே விடவில்லை. 

ஆனால் கமல் தான் அடிக்கடி ரஜினி தோள் மீது கை போட முயல்கிறார். 


முழுக்க இடது சாரி தோற்றம் கொண்ட கமல் எப்படி வலது சாரி ரஜினியோடு கொள்கைக் கூட்டணி வைக்க முடியும். 


ஆன்மீக அரசியல் ரஜினி, 

பகுத்தறிவு 'பகல்' கமல் இருவரும் சேர்வதிலே 'அமைப்பை மாற்றுவது' , 'நேர்மை' இவற்றிற்கு என்ன சம்பந்தம் இருக்கிறது. 


இது வரையிலான பொதுவான அரசியல் மந்திரம் - கட்சி கொள்கை வேறு, தேர்தல் கூட்டணி வேறு என்கிற Cliche, அரசியலில் நிரந்தர நட்பு, பகை கிடையாது என்கிற பிரஸ்தாபம் என்பதையெல்லாம் கமலாலும் ரஜினியாலும் மீற முடியாது என்பது தெளிவாகிறது. 


ரஜினி கூற்றின் முடிபு -' எல்லோரும் சேந்து என் தோள்ள வைங்க. இல்லன்னா நான் ஒதுங்கிக்குவேன். ' 

ஓட்டு கேட்கிற சிஸ்டத்தை வினோத பாணியில் மாற்றுகிறார். 


கமல் யாரோடு கூட்டு என்பதற்கு விடை தேடித் தவிக்கிறார். தனியாய் முடியாது தான். 


இதோடு இவர்களின் 'அரசியல் எம். ஜி.ஆர்' பக்தி ஆபத்தானது. 


அது தான் இலக்கு எனில் பத்தாண்டு கால எம்ஜியார் ஆட்சியில் என்னென்னவெல்லாம் காண வேண்டியிருந்தது என்கிற கலக்கம். 


இருவரும் கலைஞர் கருணாநிதி விஷயத்தில் selective amnesia, wilful blindness கொண்டிருக்கிறார்கள். 


Double standard. 


ஒப்பீட்டளவில் கலைஞர் கருணாநிதி

' Very reasonable politician '. 


ரஜினி, கமல் இருவரையும் விட

 ஸ்டாலின் பெரும் தகுதி மிக்கவர். 


பத்தாண்டு காலம் ஆட்சி செய்து விட்ட ஒரு கட்சிக்கு நியாயமாகவே இன்னொரு வாய்ப்பு தமிழகத்தில் கொடுக்கப்படக்கூடாது.

1971 Indo pak war

பங்களாதேஷில் இந்திய லெப்டினன்ட் ஜெனரல் அரோராவிடம் 

பாகிஸ்தான் லெப்டினன்ட் ஜெனரல் நியாஸி படையுடன் சரண் அடைந்தார். 

அரோராவும் நியாஸியும் வெள்ளையர் காலத்தில் ஒருங்கிணைந்திருந்த இந்திய ராணுவத்தில் இணைந்து இருந்தவர்கள். 

டேராடூன் ராணுவ பயிற்சி மாணவர்கள். 


இருவரும் உணர்ச்சி வசப்பட்ட நிலை. 

பழைய நினைவுகளில் மூழ்கினர். பரஸ்பரம் குடும்பம், பிள்ளைகள் ஷேம லாப விசாரணை செய்து கொண்டனர். 


இந்திரா காந்தி உடனடியாக பேசியதை 

ஆல் இண்டியா ரேடியோ ஒலி பரப்பியது. 


She declared 

"Now, Dhaka is a free Capital of a free country "

அப்போது ரேடியோவில் ஜன கரகோஷத்தை கேட்க முடிந்திருக்கிறது. 


ஷேக் முஜிபுர் ரஹ்மான் போராட்டம் 

இப்படி இந்திய உதவியுடன் வெற்றி பெற முடிந்தது. இல்லாமல் சாத்தியப்பட்டிருக்காது. 


மானேக் ஷா ஃபீல்ட் மார்ஷல் ஆனார்.

.. 

Dec 14, 2020

Caravaggio Paintings

 Of course who doesn't like Caravaggio Paintings 


Caravaggio 's "Doubting Thomas" 


' Except I shall see in his hands the print of the nails,              and put my finger into the print of the nails,

 and thrust my hand into his side, I will not believe.'


.. 


Caravaggio painted 

First Pope St. Peter's upside down Crusifixion 


Peter was crucified upside down 

because he felt unworthy to die 

in the same manner as Jesus Christ.


https://m.facebook.com/story.php?story_fbid=2946694318877348&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=2950100395203407&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=2950110028535777&id=100006104256328







ஓவியர் P. கிருஷ்ணமூர்த்தி மறைவு

 ஓவியர் P.கிருஷ்ணமூர்த்தி மறைந்து விட்டார். 


 கிருஷ்ணமூர்த்தி கலை இயக்குனராக ஜி.வி.அய்யரின் ஆதி சங்கராச்சாரியா, மத்வாச்சாரியா போன்ற படங்களில் பணியாற்றியவர்.


 பி.வி.காரந்த், பன்ஸி கௌல் நாடகங்களிலும் 

செட் ப்ராப்பர்ட்டி, ஸ்டேஜ் டிசைன் விஷயங்களை கவனித்தவர். 

பதினைந்து மலையாளப்படங்களின் 

கலை இயக்குனர். 

கேரள அரசின் விருது வடக்கன் வீர கதா 

உள்ளிட்ட படங்களுக்கு பெற்றிருக்கிறார்.


பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள், பாரதிராஜாவின் நாடோடித்தென்றல், 

சுகாசினி இயக்கிய இந்திரா

 போன்ற படங்களுக்கும் 

கிருஷ்ண மூர்த்தி தான் கலை இயக்குனர்.


ந.முத்துசாமி நாடகங்களிலும் கூத்துப்பட்டறையின் ஆரம்ப கால செயல்பாடுகளில் கலை இயக்குனராக பணியாற்றியவர். ’காலம் காலமாக’, ’நாற்காலிக்காரர்’, ’உந்திச்சுழி’ நாடகங்கள்.


சமீபத்தில் மறு பிரசுரமான ’உந்திச்சுழி’ நாடகத்தை ஒரு கற்பனை கதாபாத்திரத்திற்கு – ’சுந்தர ராமசாமியின் கதா பாத்திரம் ஜே.ஜே’ - ந.முத்துசாமி சமர்ப்பனம் செய்திருக்கிறார்.


1980ல் இந்த நாடகம் எக்மோர் மியூசியம் தியேட்டரில் நடந்திருக்கிறது.

 க்ரியா ராமகிருஷ்ணனின் துணைவி விஜயலக்ஷ்மி நடித்தார்.


இந்த நாடகத்தில் முக்கியமான செட் ப்ராப்பர்ட்டி முட்டை! ஒரு பெரிய முட்டை.


ஆர்ட் டைரக்டர் கிருஷ்ண மூர்த்தி மிகுந்த பொறுப்போடு இந்த பெரிய முட்டையை கொசப்பேட்டையிலிருந்து 

எக்மோர் மியூசியம் தியேட்டருக்கு நடந்தே உருட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.


இன்று இதை நினைத்துப் பார்க்கும்போது மலைப்பாய் இருக்கிறது.


கள்ளமின்மையே! உன் பெயர் தான் P.கிருஷ்ணமூர்த்தி!


மியூசியத்திற்குள் முட்டையுடன் நுழைந்த பிறகு தியேட்டருக்குள் அதை கொண்டு வர எப்படியெல்லாம்

 பிரயத்தனப்பட வேண்டியிருந்தது 

என்பதை லலித் கலா அகாடமியில்

 2017 மார்ச் மாத ஆறாம் தேதி மாலை 

ஞாபகமாக விவரித்தார்.                                                              

அன்று கிருஷ்ண மூர்த்தியின் துணைவியார் தங்களின் வறிய நிலை பற்றி உடைந்த குரலில் பேசினார். உறவினர்கள் துரோகம் பற்றி துயரத்துடன் புலம்பினார்.


 கிருஷ்ணமூர்த்தி தன் மடிப்பாக்கம் வீட்டுக்கு 

என்னை வரச் சொல்லி வலியுறுத்தினார். 

எனக்கு கொடுத்து வைக்கவில்லை 


2017, 28 பிப்ரவரி தொடங்கி 6 மார்ச் வரை 

லலித் கலா அகாடமியில்

 அல்ஃபோன்ஸோ,

 P.கிருஷ்ணமூர்த்தி 

இருவரின் ஓவிய கண்காட்சி நடந்தது.


மகத்தான இரு கலைஞர்கள்.

முதல் நாளும், கடைசி நாளும்

 ந.முத்துசாமி, மு. நடேஷ் இருவருடன் போய் இருந்தேன். மறக்க முடியாத நிகழ்வுகள். எம்.டி.முத்துகுமார சுவாமியை சந்திக்கிற வாய்ப்பு லலித் கலா அகாடமியில் கிடைத்தது.

வீர சந்தானத்தையும் அப்போது அங்கே 

பார்த்து பேசினேன். 


 ...............

Dec 11, 2020

தகப்பனுக்கு தாயுமானவள்

 Who was the artist of this painting? 


எப்போதோ யாராலோ வரையப்பட்டிருக்கிறது. 


தண்டனை - பட்டினிச்சாவு. 


சிறையில் தகப்பனைக் காணச் செல்லும் மகள் 

அவனுக்கு தன் தாய்ப்பாலை புகட்டிப்        பசியாற்றுகிறாளாம்.


தன் தகப்பனுக்கு தாயுமானவள். 


Roman Charity picture. 

Simon and Pero


தகப்பன் சைமன். மகள் பெரோ. 


யார் வரைந்த ஓவியம்? 


https://m.facebook.com/story.php?story_fbid=2948414345372012&id=100006104256328




Dec 9, 2020

Gentileschi 's painting

 Female artist Artemisia Gentileschi 's painting 


'Judith slaying Holofernes '

has been considered to be related 

to the "Power of Woman" 


The another woman in the painting is 

Judith' s servant maid. 


Judith - Icon of female rage 


Assyrian king Nebuchadnezzar sent 

his general Holofernes 

to besiege the Jewish city of Bethulia. 

Judith, described as a beautiful young widow, resolves to save her people 

by slaying Holofernes herself.


Judith—Artemisia Gentileschi's alter ego?

திருச்சியின் கலாச்சார அடையாளம்

 மலைக்கோட்டை உச்சி பிள்ளை, 

ஸ்ரீரங்கன் போல இந்த செயின்ட் ஜோசப்ஸ் சர்ச்                          லூர்து மாதாவும் தான் 

திருச்சி நகர கலாச்சார அடையாளம். 


திருச்சி செயின்ட் ஜோசப்ஸ் பள்ளி

 மாணவ பருவத்தில் இந்த சர்ச்

 என் யௌவன நினைவுகளில் 

எத்தகைய இடம் பெற்றிருந்தது. 


எத்தனை எண்ணிலடங்கா முறை இதனுள் புகுந்து புறப்பட்டிருக்கிறேன். 

 

The hymns I sang with an open throat 


அந்த சிலிர்க்க வைக்கும் பவித்ர கீர்த்தனைகள் 


Joy was in my heart when I heard them say 'Let us go to God's  house' 


'Oh come,  let us adhore him'


'Tantum Ergo Sactamentum '


' மாதாவே சரணம், உந்தன் பாதாரம் புவிக்காதாரம்

மாசில் உன் மனமும் யேசுவின் உளமும் 

மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் '


' தியாகத்தின் தருவே, திரு உருவே 

தினம் தினம் நாவில் வரும் அமுதே'


' ஆண்டவரே, நீர் எவ்வளவோ பெரியவர் 

அழகான மகத்வமுள்ளவர்

மகிமை உள்ளவர்' 


ஒரு முறை உச்சியிலுள்ள சிலுவையில் கழுகு சிக்கி சில நாட்கள் தவித்து துடித்து உயிர் விட்டது. அதன் பின்னர் அது அழுகி, மெல்ல மெல்ல காற்றில் ஆடி, ஆடி கொஞ்சம் கொஞ்சமாக, பகுதி பகுதியாக மறைந்தது. சிறுவனாய் கண்ட நிகழ்வு. 


கடந்த காலங்களில் எப்போதெல்லாம்

 திருச்சி மெயின் கார்ட் கேட் சென்றாலும் 

அந்த சிலுவையில் உயிர் நீத்த அந்த கழுகு 

நிழலாடும். 

அண்ணாந்து  சிலுவையை திகைத்துப் பார்த்து நினைவில் திளைத்து நிற்பேன்.


இறந்தவர்களின் உடலை சர்ச்சில் வைத்து பிரார்த்தனை, பூஜை செய்து கல்லறைக்கு 

எடுத்துச் செல்வார்கள். 

குருவானவர்களை கோவிலின் கீழே பாதாள பகுதியில் புதைக்கப்படுவார்கள். 

 கோவிலேயே கூட புதைப்பதை பார்த்திருக்கிறேன். 

 எத்தனையோ சாவு பிரார்த்தனைகளில் நான் சிறுவனாக பங்கேற்றிருக்கிறேன். 


விட்ட குறை தொட்ட குறையாக திருச்சியில் 2001 ம் ஆண்டு கூட என் கிறிஸ்தவ நண்பன் மகன் அகால மரணம் அடைந்த போது பிரார்த்தனை பூஜையில் கலந்து கொண்டு சர்ச்சில் இருந்து உடலை நானும் சுமந்து 

வெளி வந்து கல்லறைக்கு செல்லும் ரதத்தில் வைத்த துயர நிகழ்வு மறக்க முடியாத அனுபவம்

Dec 7, 2020

அமெரிக்கன் கல்லூரி

 மதுரை அமெரிக்கன் கல்லூரி

- R.P.ராஜநாயஹம்


மதுரை என்றால் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில். 


மதுரையின் முக்கிய கலாச்சார 

அடையாள சின்னம் அமெரிக்கன் கல்லூரி.


 கத்தோலிக்க கல்வி  நிறுவனமொன்றில் (செயிண்ட் ஜோசப்’ஸ்) தான் திருச்சியில் பள்ளிக்கல்வி பயின்றேன்.


கல்லூரி வாழ்க்கை மதுரை அமெரிக்கன் கல்லூரி.


தமிழகத்தில் மிகப்பிரபலமான கலைக் கல்லூரிகள் 

சேசு சபை பாதிரிகளால் நடத்தப்படும் 

சென்னை லொயோலா கல்லூரி, 

திருச்சி ஜோசப் கல்லூரி, 

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி போன்றவை.


சி.எஸ்.ஐ ப்ராட்டஸ்டண்ட்களால் நடத்தப்படுபவை மதுரை அமெரிக்கன் கல்லூரி, வேலூர் ஊரிஸ் கல்லூரி முதலியன.


மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிப்பதென்பது ரொம்ப கௌரவமானதாக கருதப்படுகிறது. 


கத்தோலிக்க பாதிரிகள் நடத்தும் கல்லூரிகளுக்கு சற்றும் பிரபலத்தில் இளைத்ததல்ல இந்த ப்ராட்டஸ்டண்ட் அமெரிக்கன் கல்லூரி. 


மதுரை நகரம், மதுரையைச்சுற்றி உள்ள அத்தனை ஊர்காரர்களில் உள்ள இளைஞர்களும் படிக்க ஆசைப்பட்ட கல்லூரி என்றால் 

அது அமெரிக்கன் கல்லூரி.


பொதுவாகவே மதுரையைச்சுற்றி உள்ள ஊர்களில் உள்ளவர்கள் அனைவருமே ‘உங்க ஊர் எது?’ என்றால் ’மதுரை’ என்று தான் சொல்வார்கள். 


’மதுரையில எந்த ஏரியா?’ உடனே  கொட்டாம்பட்டி, விருதுநகர், வாடிப்பட்டி, வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி, கம்பம், உத்தமபாளையம், பண்ணைபுரம் …இப்படித்தான் பதில். 


இன்று வாழ்க்கையைத் திரும்பிப்பார்க்கும்போது எத்தனையோ துயர முள்களால் கிழிக்கப்பட்டு விட்ட இதயம், பெருமைப்படுகிற விஷயம் அமெரிக்கன் கல்லூரி மாணவன் என்பது.


வாஷ்பன், டட்லி, சம்ப்ரோ, வாலஸ் என்று  நான்கு ஹாஸ்டல்கள் கொண்டது. 


கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள கல்லூரி.


தமுக்கம் மைதானம் பக்கத்தில் தான். 


மெடிக்கல் காலேஜ், மீனாட்சி காலேஜ், வக்ஃப்ஃபோர்டு காலேஜ், லேடி டோக் காலேஜ், யாதவா காலேஜ், சட்டக்கல்லூரி இவற்றிற்கு மத்தியில் அமெரிக்கன் கல்லூரி.


அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலத்துறை மிகவும் விசேஷமானது.


ஜோப் டி மோகன் நகைச்சுவை உணர்வு பற்றி 

பேசி முடியாது. 


நான்  ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறையில் ஹேம்லெட் பாடம் எடுத்த போது 

வசந்தன் நினைவு தான். 


 ஷேக்ஸ்பியர் " ஹேம்லெட் " பாடம் வசந்தன் நடத்தினார். ஹேம்லெட் என்றால் வசந்தன் ஞாபகம் தான் இப்போதும் வரும்.


 இரண்டாம் ஆண்டு இதே நாடகத்தை D.யேசுதாஸ் என்ற புரொபெசர் நடத்த வந்தார். அப்போது பொலோநியஸ் காரக்டராகவே அவர் மாறி விடுவார்.


இப்போதும் பொலோநியஸ் பாத்திரம் அவரை(DY )நினைவு படுத்தும்.


மார்க் ஆண்டனி என்றால் பேராசிரியர் ஆர்.நெடுமாறன் தான். 


ஜான் சகாயம் தான் 

மார்லோவின் டாக்டர் ஃபாஸ்டஸ்.


R.P. நாயர் ஒரு இண்டெலக்சுவல்.

அவர் அளவு படித்தவர்கள் அன்று குறைவு.


ஒரு நாள் நாயர் க்ளாசில் என்னை பாடச்சொன்னார். “காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி, மலர்களிலே அவள் மல்லிகை” பாடினேன். 

சொக்கிப்போய் நாயர் எனக்கு ஒரு சலுகை தந்தார். 

அவருடைய வகுப்புகளுக்கு நான் வராவிட்டாலும் கூட அந்த வருடம் முழுவதும் எனக்கு அட்டெண்டன்ஸ் போடப்போவதாக சொன்னார்.


 அந்த சலுகையை நான் அடிக்கடி உபயோகப்படுத்திக்கொண்டேன். 

அதற்காக இன்று வெட்கமும் வேதனையும் அடைகிறேன்.


குணசிங் வகுப்பு ரொம்ப சுவாரசியமாக இருக்கும். அவர் சிரித்த முகத்துடன் வகுப்பு எடுக்கும் அழகு இன்றும் கண்ணுக்குள்ளேயேயே இருக்கிறது.   


 எங்களுக்கு பெருமையான இன்னொரு விஷயம் எங்கள் தமிழாசிரியர் சாலமன் பாப்பையா.

இன்னொருவர் சாமுவேல் சுதானந்தா. 


அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்த போது சேர்மன் பதவிக்குப் போட்டியிட்டு தோற்றேன்.  

ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது என்னால் இன்றும் மறக்கமுடியாத விஷயம் ஒன்று.

 ஓட்டுக் கேட்டு கும்பிட்டு நடந்து வந்து கொண்டிருந்த என்னைத் தூக்கி தன் தோளில் உட்கார வைத்துக் கொண்டு 

நடக்க ஆரம்பித்த ஒரு மாணவன் உண்டு! 

ஒரு முறை அல்ல. இப்படி பலமுறை. 

பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜின்

 அப்பா கஜராஜ். 


அந்தத் தேர்தலில் நான் தோற்றேன்.


தோல்வியடைந்த பின் கண் கலங்கிய நண்பர்களைத் தேற்ற,  நான் பாடிய பாடல்கள் அவர்களை மேலும்  நெகிழ்த்தி விட்டது.


அமெரிக்கன் கல்லூரியில்

 தேர்தலில் தோற்றவன் தான் ஹீரோ!


அந்தக்காலத்தில் மதுரை இளைஞர்களுக்கு fashion அறிமுகப்படுத்துவது அமெரிக்கன் கல்லூரி English department Students தான். 

எங்களைப்பார்த்துத் தான் மாடர்ன் ட்ரெஸ் பற்றி அன்று தெரிந்து கொண்டார்கள். 


 


கல்லூரி கால விளையாட்டுப்பருவம் பற்றி எத்தனையோ நிகழ்வுகள் இன்றும் பசுமையாக இருக்கிறது.


டவுன் பஸ்சில் கல்லூரி நண்பர்களுடன் போய்க்கொண்டிருந்தேன்.

படிக்கிற காலம் கொஞ்சம் வேடிக்கை வினோதம் நிறைந்தது. 


பஸ்சில் மீனாக்ஷி காலேஜ் பெண் ஒருத்தியை பார்த்து சீனி கமன்ட் அடிக்க ஆரம்பித்தான். இவனை கட்டுப்படுத்துவது எப்படி?

 தற்செயலாக ஒரு நல்ல ஐடியா. 


' டே என் சொந்தக்கார பொண்ணுடா. 

பெரியம்மா மகள்.எனக்கு தங்கச்சிடா' என்றேன்.


சீனி பதறிபோய் 'சாரி ..சாரிடா மன்னிச்சிக்கடா' மிரண்டு விட்டான்.அடங்கி விட்டான்.


நாங்கள் அப்போது இறங்க வேண்டிய ஸ்டாப் வந்தது. இறங்கினோம்.


பஸ் புறப்பட்டதும் தான் அவனிடம் சொன்னேன். 'நான் சும்மா தாண்டா மாப்பிள்ளை சொன்னேன். ஒனக்கு எப்படி கடிவாளம் போட்டேன் பார்த்தியா '

சீனி ' டே பச்சை துரோகி, நயவஞ்சகா, 

அந்த பெண் என்னை பார்த்து சிரித்தாள். 

அவள் கூடவே போவதாக இருந்தேன். கெடுத்து குட்டி சுவராக்கி விட்டாயே. என் வாழ்க்கையில் விளையாடி விட்டாயே, சைத்தானே அப்பாலே போ ' என பலவாறு திட்டி தீர்த்து விட்டான்.  


முத்து தான் விழுந்து,விழுந்து சிரித்தான்.

'டே மாப்பிள்ளை, சூப்பர்ரா' என்று 

என்னை பாராட்டினான்.


மற்றொரு நாள். அமெரிக்கன் கல்லூரியில் ஒரு கிளாஸ் கேன்சல் ஆனதால் ’பிளின்ட் ஹௌஸ்’ முன் அமர்ந்திருந்தோம். 

ரவி, முபாரக், அருண், ஜோ, முத்து, 

சீனி எல்லோரும்.


ஒரு டீச்சர் குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்வது கல்லூரியின் முன்பக்கம் தெரிகிறது.

 உடனே சீனிக்கு மூக்கு வியர்த்து விட்டது. 

' டே அந்த டீச்செர் செம பிகர்டா ' என்று ஆரம்பித்தான். நிமிர்ந்து பார்த்தால் பகீர் என்று இருந்தது. 

முத்துவோட அக்கா! உடன் பிறந்த சகோதரி. அவருக்கு என்னையும் நன்கு தெரியும்.


பதறிபோய் நான் ' டே முத்துவோட அக்காடா. " முத்துவும் " டே என் அக்கா " என்கிறான்.


சீனி " கொலைகாரன் ஆயிடுவேண்டா. இனிமே ஏமாற மாட்டேன்." 


கூப்பாடு போட்டு விட்டு ஓடிபோய் ' டீச்சர், சூப்பர் டீச்சர், ஆகா! எனக்கெல்லாம் சின்னபிள்ளையிலே இப்படி சூப்பர் பிகர் டீச்சர் கிடைக்கலையே.டாட்டா டீச்செர் .. அய்யய்யோ டீச்சர் போறாங்களே! ' என்று கண்டவாறு கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விட்டான்.


இந்த அபத்தக்காட்சி முடியும் வரை வேறு வழியில்லாமல் ஆளுக்கொரு மரத்தின் பின்னால் நானும் முத்துவும் ஒளிந்து கொள்ளவேண்டியாதாகி விட்டது. 


அமெரிக்கன் கல்லூரி ’ஒபெர்லின் ஹால்’ முன் எனக்கும் மற்றொரு மாணவனுக்கும் வாய் தகராறு முற்றி கைகலப்பு என்று ஆகிவிட்டது.


என் மீது எந்த தவறும் கிடையாது.

 மதுரையில் அடிக்கடி பார்க்க கூடியது "கஞ்சா குடித்து மெண்டல் ஆவது. " அப்படி ஆனவன். 


என் மீது ஒரு எப்படியோ ஒரு பகையை மனத்தில் உருவாக்கி கொண்டான். Paranoid delusion.


 ஏற்கனவே பேராசிரியர்களின் ஓய்வறைக்கு சென்று பிரச்சினை செய்திருக்கிறான். 

இப்போது என்னிடம்.


இன்று வரை மன நிலை பாதித்தவர்களுக்கும் எனக்கும் ஒத்து போவதே இல்லை.

என்னுடைய ராசி அப்படி.


திடீரென்று அவன் கத்தியை எடுத்து விட்டான்.

மதுரையில் கத்தியை சண்டையில் ஒருவன் எடுத்து விட்டால் மற்றவர்கள் ஒதுங்கி விடுவார்கள். விலக்கி விட மாட்டார்கள்.  


அவன் கத்தியால் குத்த பலமுறை கடுமையாக முயற்சிக்கிறான். ஆனால் நான் பயப்படாமல் அவனை அடிக்கிறேன். லாவகமாக கத்தி குத்திலிருந்து தப்பித்துக் கொண்டே அவனை தாக்குகிறேன்.


விலக்கி விட மாணவர்கள் எல்லோரும் பயப்பட்ட அந்த சூழலில்தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா என்னை பின் பக்கமாக வயிற்றோடு பிடித்து தூக்கி அந்த இடத்தை விட்டு வெளியேறி நடக்கும் போதே எங்கள் ஆங்கில பேராசிரியர் R.நெடு மாறன் அந்த கத்தி வைத்திருந்த மாணவனை இறுக்கமாக பிடித்து கொள்கிறார்.

அவன் வேகம் தணியும் வரை அவர் பிடி தளரவே இல்லை! 


கத்திகுத்து விழுந்து உயிரையே இழந்திருக்க வேண்டிய என்னை அன்று காப்பாற்றியவர்கள் பேராசிரியர்கள் சாலமன் பாப்பையாவும்,நெடுமாறனும் தான். 


என் கல்லூரி காலத்தில் பாப்பையா எனக்கு பக்கத்து தெருக்காரர் கூட. 

அதனால் கல்லூரியில் பார்த்து கொள்வதோடு , ஏரியா வில் லீவு நாளையிலும் ஏ.ஏ.ரோடில் எப்போதும் அவருடன் உரையாடிக்கொள்ள முடியும்.


பெரியகுளத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது பாப்பையா,தமிழ்குடிமகன் எல்லாம் ஒரு வழக்காடு மன்றம் நடத்த வந்தார்கள். 


 பாப்பையா நடுவர். உற்சாகமாக கூட்டத்தில் பேசிகொண்டிருந்தவர் முன் நான் போய் நின்றேன். அவ்வளவு கூட்டத்திலும் என்னை அடையாளம் கண்டு கொண்டு பேச்சை கொஞ்சம் நிறுத்தி என்னை பார்த்து " என்னய்யா இங்கே?" என்றார் . "இங்கே தபால் துறையில் வேலை செய்றேன் அய்யா." என்று நான் சொன்னேன். 

"அப்படியா. ரொம்ப சந்தோசம் யா "- பதிலுக்கு அவர் சொல்லிவிட்டார் அதன் பின் தான் 

பட்டிமன்ற பணியை தொடர்ந்தார்.


எங்கள் ஆங்கிலத்துறை பேராசிரியர் 

R. நெடுமாறன். -  மார்க் ஆண்டனி. 


இரண்டு திரை படங்களிலும்

 தலையை காட்டி இருக்கிறார்.


நெடுமாறன் ஆங்கிலத்தில் பேசி கேட்டால் இவருக்கு தமிழ் தெரியும் என்று யாரும் நம்ப மாட்டார்கள். அமெரிக்க ஆங்கிலம். 

தமிழில் முழங்கும் போது இவருக்கு ஆங்கிலம் தெரியும் என்று நினைத்தே பார்க்க முடியாது.

உச்சரிப்பு அவ்வளவு தெளிவாக இருக்கும்!


ஆர். நெடுமாறன்  மேற்கோள் காட்டிய தமிழ் புதுக்கவிதை ஒன்று.

“வானத்தில் திரியும் பறவைகளை மட்டும் பாடாதீர்கள்

மலத்தில் நெளியும் புழுக்களையும் பாடுங்கள்!”


’மரத்தடி மகாராஜாக்கள்’ என்று கவிதைத்தொகுப்பு  நான் எடிட் செய்து வெளிவந்ததுண்டு. அது அந்தக்காலத்தில் மிகவும் பிரபலம்.


  பாட்டுப்போட்டியில் அமெரிக்கன் கல்லூரியில் பரிசு வாங்கியிருக்கிறேன். 

அனைத்துக்கல்லூரி பாட்டுப்போட்டியிலும் கூட பரிசு வாங்கினேன்.


 கல்லூரி வாழ்க்கை முடியும்போது 

Candle light cermony  நடக்கும்.

 Life is not a bed of roses!

 எல்லோரும் குமுறி குமுறி, தேம்பித்தேம்பி அழுதது இன்றும் மறக்க முடியுமா?


பழைய புராதனமான கோவில்களைப் பார்க்கும்போது எனக்கு எப்போதும் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். சிற்பங்கள், கோபுரம் தரும் பிரமிப்பு மட்டுமல்ல, எத்தனை காலங்களாக எத்தனை ஆத்மாக்கள் தவித்து தங்கள் துயரங்களை சொல்லி புலம்பி அழுது பிரார்த்தித்த இடங்கள்.


அது போல எங்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியின்  நீங்காத நினைவுகள் மாணவர்களின் இதயங்களில்  நூறாண்டு காலத்திற்கும் மேலாக ரீங்காரமிட்டுக்கொண்டு இருந்திருக்கிறது. 

இருக்கிறது. 

இனி வரப்போகிற காலங்களிலும் தான். 


..........



Edward Munch's PUBERTY

 Puberty 


- Edward Munch's popular painting 


"PUBERTY."



Munch in his impressionistic style. 

Look at the collar bone. 


An interesting fact about this painting is

 that it is a duplicate of an earlier work. 

The original was destroyed earlier in a fire.


https://m.facebook.com/story.php?story_fbid=2945328645680582&id=100006104256328



Dec 6, 2020

Rembrandt 's "Bathsheba at her bath"

 Rembrandt 's greatest painting of the nude. 


One of the great achievements of western painting. 


"Bathsheba at her bath"


A moment from the Bible Old Testament story

 in which King David sees Bathsheba bathing and, feels erotic, seduces and impregnates her.


 In order to marry Bathsheba 

 David sends her husband into battle

 and orders his generals to abandon him,

 leaving him to death.


https://m.facebook.com/story.php?story_fbid=2944452752434838&id=100006104256328



Dec 5, 2020

Professor Job D. Mohan

 மதுரை அமெரிக்கன்  கல்லூரியில் 

எங்கள் ஆங்கில பேராசிரியர் ஜோப் டி மோகன் வித்தியாசமானவர். வகுப்பில் தமிழை வினோதமாக பயன் படுத்தி படுத்தியெடுப்பார். Funny professor. 


”வாலறிவன் நற்றாள் தொழார் எனின்.

வாலறிவன்ன்னா என்னா தெரியுமா? தப்பு பண்ணா, சேட்டை பண்ணா  வால அறுத்துடுவான் ஆண்டவன். அதான் வாலறிவன்." 


"நீ ஒரு காது கொண்டு கேட்டால் அது இருக்காது.       இரு காது கொண்டு கேட்டால் அது இருக்கும் "


Protestant = போராட்டம் + ஸ்டண்ட். 


எங்கள் வகுப்பில் ஒரு மாணவன் ரவீந்தர்நாத்.                 ஜோப் டி. மோகன் அட்டெண்டென்ஸ் எடுக்கும் போது    " Rabindernath not Tagore " என்பார். 

ஜோப் டி மோகன் இன்னொரு பஞ்ச்                                          தன் மாணவர்கள் பற்றி -                                                                   "Some of our boys are really wise.                                              Others otherwise."


'நாளை மற்றுமொரு நாளே ' ஜி. நாகராஜனுடன் 

நல்ல நட்பில் இருந்திருக்கிறார். 

ஜி. நாகராஜன் அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர். கம்யூனிஸ்ட் என்பதால் நிர்வாகத்தால் நீக்கப்பட்டார். 

அதன் பிறகும் ஜோப் டி மோகனை சந்திக்க வருவாராம். 

கஸ்டம்ஸ் கலெக்டராக இருந்த                                  எங்கள்  உறவினர்  எம். எஸ். சுப்ரமணியமும்           ஜோப் டி மோகனும் ஒன்றாக படித்தவர்கள்.          வகுப்புத் தோழர்கள். 


My senior Prof. Fazlulla Khan 's comment on this post has been added below :


" Gabie, how are you? Nice to read your post, and happy to see your photos.


To add to our Prof. Job D. Mohan's pearls - in our class one day, he said 'tea and bun' together became 'teabun' , which eventually transformed into 'tiffin'."

... 

Dec 2, 2020

Trevor Howard

 ட்ரவர் ஹாவர்ட் (Trevor Howard)

– ஹாலிவுட் கண்ட சிறந்த நடிகர்களில் ஒருவர்.


  A Supporting actor isn’t just a familiar face who can steal a film. He shows a way for movies to portray real life.


ஃப்ரான்க் சினட்ராவின் Von Ryan Express ல் சிறைப்பட்ட போர்க்கைதியாக இருந்தாலும் 

மிலிட்டரி ஆஃபிசர் பதவியின் கெத்து காட்டிய அவரது நடிப்பு.

”I once told you, Ryan, if only one gets out, it's a victory.”


மார்லன் ப்ராண்டோ Mutiny on the bountyல் கப்பல் கேப்டனாக கடுமையான வில்லன்.

”My point is that cruelty with purpose is not cruelty. Remember, fear is our best weapon.”


Ryan’s daughterல் மிகக் கனிவான பாதிரியாராக ட்ர்வர் ஹாவர்ட்.


“Don't nurse your dreams, Rosy. You can't help having them, but don't nurse them. Because if you nurse your dreams, they tend to come true.”


“I think you have it in your mind that you and Rosy ought to part. Yes, I thought as much. Well, maybe you're right, maybe you ought, but I doubt it. And that's my parting gift to you—that doubt!”


துணை கதாபாத்திரங்கள் எப்போதும் ஒரு திரைப்படத்தில் அதன் தரத்தை விஷேச அளவில் உயர்த்தி விடுபவர்கள்.


ஹீரோவாக இவர் 1945ல் நடித்த “Brief Encounter”.

Extra marital relationship.

சீலியா ஜான்சன் கதாநாயகி. 


டேவிட் லீன் இயக்கம்.


பின்னால் டேவிட் லீன் தான் எத்தகைய சாதனையாளர். 

த பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய், 

லாரன்ஸ் ஆஃப் அரேபியா, 

டாக்டர் ஷிவாகோ என செல்லுலாய்ட் காவியங்கள் இயக்கியவர்.


Brief Encounter

Two strangers, both married to others, meet in a railroad station and find themselves in a brief but intense affair. They know their love is impossible.

”A sudden break now, however brave and admirable, would be too cruel.We can’t do such violence to our hearts and minds.”


Brief Encounter மீண்டும் 1974ல் ரிச்சர்ட் பர்ட்டன், சோஃபியா லாரன் நடிப்பில் டி.விக்காக தயாரிக்கப்பட்டிருக்கிறது.


ராபர்ட் டி நீரோ, மெரில் ஸ்ட்ரிப் 1984ல் நடித்த Falling in Love படம் பார்த்த எவரும் Brief Encounter நினைவில் கொள்ளாமல் இருக்க முடியாது.


.........